சிலர் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார்கள்.
சிலர் என்ன subject கொடுத்தாலும் அதில் உடனே பேசத் தொடங்கி விடுவார்கள்.
சிலர் பேசவே மாட்டர்கள்.
என்ன subject கொடுத்து இரண்டு நாள் Time கொடுத்தாலும் ஒன்றும் பேச வராது சிலருக்கு
எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசுவார்கள் சிலர். எதிராளி இன்னதுதான் பேசப் போகிறார் என்று தாமாகவே ஒன்றை நினைத்து அதற்கு பதிலும் இடைவிடாமல் பேசத் தொடங்கி விடுவார்கள்.
Subject எதுவும் இல்லாமலேயே பேசுவார்கள் சில பேர்.
Subject இல் பேசுவதாக நினைத்து சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள் சிலர்.
பேச ஆரம்பித்து இல்லாத பதிலை உருவாக்கி வாதம் செய்து சண்டையாக மாற்றுவார்கள் சிலர்.
பேசவே பயப்படுவார்கள் சிலர்.
மௌனம் சம்மதமா மௌட்டீகமா என்று தெரியாத அளவு மெளனமாக இருந்து குழப்புவார்கள் சிலர்.
நாம் பேசுவது ஒன்று அவர்கள் அர்த்தம் எடுத்துக் கொள்வது ஒன்று என்று ஆகி மனவருத்தம் அடைவார்கள் சிலர்.
வேலை நேரத்தில் பேசுவார்கள் சிலர்.
வெறுப்பு ஏற்றுவதற்காகவே பேசுவார்கள் சிலர்.
காயப் படுத்துவார்கள் சிலர், தடவிக் கொடுப்பார்கள் சிலர்.
பேச்சு....பேச்சில்தான் எத்தனை வகை...
ஸ்ரீராம், நீங்க இதுல எந்த ஜாதி என்பது உலகத்துக்கே தெரிந்து போய்விட்டது.
பதிலளிநீக்குஹூம் நான் சொல்வதற்கு (பேச) ஒன்றும் இல்லை!
பதிலளிநீக்கு:: மௌன விரதன்::
சும்மா ஒரு article விஷயம் இல்லாமல் எழுத முடியும் போது விஷயம் இல்லாமல் பேசவும் முடியும்..
பதிலளிநீக்குஒளவை - X பாடினார் ] ஜாதி இரண்டொழிய வேறில்லை - இணையத்தில் இட்டார் பெரியோர் - இடாதார் படித்துப் போபவர் என்று, முன்னூட்டம் இட்டுப் பெரியவர் ஆகிவிட்டீர்கள்[..
பதிலளிநீக்குபேசுவது பெரும்பாலும் பேசுபவருக்கு மட்டுமே ரசிக்கும் என்று தோன்றுகிறது. பலமுறை நான் ரொம்ப (?) முக்கியமான விஷயத்தைச் சொல்ல முற்படும்போது என்னை சட்டை செய்யாமல் வேறு யாரோ ஒருவர் எதோ பற்றிப் பேசிக்கொண்டிருக்க நானும் விடாமல் கிடைத்த இடை வெளியில் என் முக்கியமான விஷயத்தைச சொல்லிவிட முயற்சிப்பதுண்டு. அப்போதெல்லாம் அடுத்து ஒருவர் தாம் சொல்ல இருப்பதை சொல்ல ஒரு இடைவெளிக்குக் காத்திருக்கிறார் என்பதை நான் பன்முறை கவனிக்கத் தவறி விடுவேன். எழுத்தாளர் சுஜாதா தம் அனுபவம் ஒன்றை சுவையாகச் சொல்லி இருக்கிறார். அதாவது: "நேர் காணலில் கேள்வி கேட்பவர் நான் அளிக்கும் பதிலை கவனிப்பதே இல்லை. கேள்வி கேட்பது அவர் கடமை. அந்தக் கேள்வி அவர் முன்னமே தயாரித்து வைத்தது அல்லது எல்லாரிடமும் கேட்கப் படும் வாடிக்கையான கேள்வி. எனவே கேள்வியைக் கேட்டு முடித்ததும் அவர் தம் அடுத்த கேள்வி பற்றி யோசித்து அதை எப்போது கேட்கலாம், இந்த ஆள் எதாவது இடைவெளி தருவானா என்று பார்த்துக் கொண்டிருப்பார். இதுதான் வழக்கம். " கோட்டுக் குறியினுள் இருந்தாலும் வார்த்தைகள் சுஜதாவினுடையவை அல்ல. சாராம்சம் தான் அவர் சொன்னது.
பதிலளிநீக்குபேச்சு பேச்சாத்தான் இருக்கணும் - BLOG ஆ வரக்கூடாது! புரிஞ்சுதா?
பதிலளிநீக்கு:: வைகைப்பயல்::
இதுதான் பேசியே (எழுதியே) கொல்லர்துன்னு சொல்லுவாங்களா?
பதிலளிநீக்கு"இதுல நான் சொல்றதுக்கு இப்போ ஒன்னும் இல்ல"!
- ரசிச்சேன்.
ஆதிமனிதன் - நீங்க என்ன நாலு மாசத்துக்கு முன்னாடி பதிவுக்கு எங்களை ரீ வைண்டு பண்ணி விட்டுட்டீங்க!
பதிலளிநீக்குபேச்சை ஆராய்ந்த பேச்சு அருமை.
பதிலளிநீக்கு