Friday, March 30, 2012

மலரே, மலரே தெரியாதோ!

    
சாலையில் நடந்து செல்லும்போது இந்த மலர் கண்களைக் கவர்ந்தது. இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ஒரு நாள் கேமிராவுடன் சென்று படம் பிடித்தேன். விஷ மலர் என்று சந்தேகம்! ஏன் என்றால், இதை எடுத்த பிறகு கேமிரா வேலை செய்யவில்லை! என்ன கோளாறு என்று பார்க்க வேண்டும்!  


மலர்கள் பெரிய கனம் இல்லை. ஆனால் செடியில் மலர்ந்திருக்கும்போது நாணம் கொண்ட நங்கை போல தலை குனிந்தே இருக்கின்றன மலர்கள்! 


செடியில் மலர்களைப் படம் பிடிக்கும்போது கூட இருந்த குப்பைகளை ஒதுக்கிப் படம் பிடித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது! 


இதுதான் அந்தச் செடி. 


தெரிந்தவர்களிடம் இது என்ன செடி, என்ன பூ என்றெல்லாம் கேட்டபோது ஒருவருக்கும் சொல்லத் தெரியவில்லை. காய்களைப் பாருங்கள், நட்சத்திரம் போல், பட்டை பட்டையாக சிறிய சைஸில்


ஒருவர் மட்டும் முதலில் பூவை மட்டும் பார்த்து விட்டு "மூக்குத்திப் பூ மாதிரி இருக்கிறது...காய்களைச் சமைப்போம்" என்றார்! அப்புறம் செடியைப் பார்த்து விட்டு தான் சொன்ன பதிலில் இருந்து பின் வாங்கி விட்டார்! 


தலை குனிந்திருக்கும் மலர்களின் அழகு சரியாகத் தெரியாதலால், மலர்களை கையிலும் மஞ்சத்திலும் கிடத்தி அதன் அழகைக் காட்ட முயன்றிருக்கிறேன்!  பாமரேனியன் நாய்க்குட்டி முகம் மாதிரி இல்லை? மஞ்சள் மலரின் நடுவே இருக்கும் அந்த மெரூன் கலர் மகரந்தங்கள்தான் கண்களைக் கவரும் அழகு! என் கேமிராவில் அது துல்லியமாகப் பதிவாகவில்லை என்று தோன்றுகிறது. நேரில் இன்னும் அழகு. ஆமாம்...இது என்ன செடி, என்ன பூ? "நேரில் பார்த்த உங்களுக்கே தெரியவில்லை, படம் காட்டி கேட்டால் யாரால் சொல்ல முடியும்" என்றாள் மனைவி. 


"உனக்குத் தெரியாதும்மா....சொல்லிடுவாங்க பாரு" என்று சொல்லியிருக்கிறேன்! 

26 comments:

Geetha Sambasivam said...

தூதுவளை மாதிரி இருக்கு. கொஞ்சம் கிட்டத்தில் பார்த்துட்டு வரேன்.

Geetha Sambasivam said...

என்னோட ஓட்டு தூதுவளைக்குத் தான். மூக்குத்திப் பூ இல்லை.

Geetha Sambasivam said...

போட்ட ஓட்டை வாபஸ் வாங்கிக்கறேன். தூதுவளைப் பூ கத்திரிப் பூ மாதிரி இருக்குமேனு இப்போத் தான் நினைப்பு வந்தது. இது பூ மனசிலே இருக்கு. அந்த உள்ளே மகரந்தம் பக்கத்திலே இருக்கு பாருங்க அரக்குக் கலரிலே, பூவின் இதழ் படம் வரைந்து பாகம் குறிக்கறச்சே வரைஞ்சிருக்கேன். என்ன பூ?

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்??? வெண்டைச் செடி மஞ்சளாய்த் தான் பூக்கும். வெண்டைச் செடி தானே? ம்ம்ம்ம்ம்ம்???????????????????? இப்போக் காய்கறித் தோட்டம் போட்டே பல வருடங்கள் ஆனதிலே சிலது நினைவில் இல்லை. :(( வெண்டைச் செடிதான்னு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

தூதுவளை கொடிரகம். செடி இல்லை. அதனால் அது நிச்சயமா இல்லை. அநேகமா வெண்டை தான்.

Anonymous said...

இது ஹைபிஸ்கஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு செடி (hibiscus family)
plus 1 படிக்கும்போது பாட்டனி வகுப்பில் ஹெர்பரியம் செய்ய ஒட்டிய நினைவு .இதனை மலரோடு எடுத்து அழுத்தி வைத்து பிறகு கிளாஸ் போட்டோ ஃபிரேமில் போட்டு வையுங்க மிக அழகாக இருக்கும்

Anonymous said...

Hibiscus esculentus is okra ..
so its confirmed that these flowers belong to vendai family

தமிழ் உதயம் said...

மலரே மலரே...
மலர் பெயர் தெரியாதே.

Geetha Sambasivam said...

ஹைபிஸ்கஸோ, லோபிஸ்கஸோ, பாடனி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் வெண்டைக்காய்ப் பூ இப்படித் தான் இருக்கும்னு தெரியும். ஓக்ரா என்றாலும் வெண்டை தானே. :)))))))

meenakshi said...

மலர்கள் என்றுமே அழகுதான், மனதிற்கு இனிமைதான்.
இது என்ன செடி, என்ன பூ? எனக்கு தெரியாது. எனக்கு எல்லாத்தையும் ரசிக்க மட்டும்தான் தெரியும். நீங்க விடையை சொல்லும்போது நான் தெரிஞ்சுக்கறேன். :)

Anonymous said...

yellow mallow/Hibiscus pentaphyllus/
Hibiscus caesius //

நீங்க எடுத்தது இது தான் என்று நினைக்கிறேன் yellow mallow

மூன்று அனானி பதில்களும் என்னுடையதே .

எங்கள் ப்ளாக் said...

ஒரு அனானி சொன்னது:
மூன்று அனானி பதில்களும் என்னுடையதே!
ஆஹா இப்போ முழுவதும் வெளங்கிடிச்சு. மூன்று அனானிகளும் ஒருவரே! இந்த நான்காவது அனானிதான் யார் என்று தெரியவில்லை!

Geetha Sambasivam said...

மூன்று அனானிகளும் ஒருவரே! இந்த நான்காவது அனானிதான் யார் என்று தெரியவில்லை! //

பயங்கர புத்திசாலித்தனமா இருக்கீங்களே? இன்னிக்கு வெள்ளிக்கிழமையா இருக்கிறதாலே சுத்திப்போட்டுடறேன். :P:P:P:P:P

ராமலக்ஷ்மி said...

நானும் இந்த மலரை இப்போதுதான் பார்க்கிறேன். zoom செய்யாமல் மிக நெருக்கத்தில் கேமராவைக் கொண்டு சென்று பூவை எடுக்கும் போது macro mode-ல் வைத்து எடுத்துப் பாருங்கள். துல்லியமாக இருக்கும்.

ஜீவி said...

"'பூக்களின் புலம்பல்'- ன்னு ஒரு கவிதை படிச்சிருக்கீங்களோ?.."

"ரொம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது. முந்தா நாள் படிச்சதே ஞாபகத்திலே இல்லே. ரொம்ப நாளைக்கு முன்னாடிப் படிச்சதைப் பத்தி சொல்லவே வேண்டாம்."

"எனக்குக் கூட சட்டுன்னு ஞாபகத்திலே வர்லே.. யாராவது சொல்லிடுவாங்க, பாருங்க..."

அமைதிச்சாரல் said...

ஹை.. எங்கூர்ல மழைக்காலங்கள்ல காடு,மேடு,ரோட்டோரங்கள்ன்னு ஊரு முழுக்க பூத்துக் குலுங்கும் இந்தப்பூ.. மழையும் குளிரும் முடிஞ்சு கோடை ஆரம்பிச்சுருச்சு இல்லே.. இப்போ ஆளுசரத்துக்கு வளந்த செடிகள் எல்லாம் குச்சி குச்சியா நிக்குது...

"THESPESIA LAMPAS"ன்னும் "ராண் பிண்டி"ன்னும் இது சொல்லப்படுது. பிண்டின்னா வெண்டைக்காய்ன்னு எல்லோருக்கும் தெரியும்தானே. மராட்டியில் "ராண்" என்றால் காடு என்று அர்த்தம். ஆக இது காட்டு வெண்டைக்காய்ங்கோ :-))

sathish krish said...

எனக்கு தெரியலரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

ஹேமா said...

ஊரில பாத்திருக்கேன்.ஆனா தெரில !

Geetha Sambasivam said...

ம்ம்ம்??? அமைதி "காட்டு வெண்டை"னு எழுதி இருக்காங்க. அதுக்காகப் பொற்காசுகளைக் குறைச்சுடாதீங்க. உள்ளது உள்ளபடி ஒரு குந்துமணி குறையாமல் வந்து சேரணும். :))))))

Geetha Sambasivam said...

வடை எங்கே? சே, விடை எங்கே?? காத்துட்டு இருக்கோம்ல! :))))

எங்கள் ப்ளாக் said...

அமைதிச் சாரல் சொன்ன வடை ஸாரி விடை சரியாக இருப்பதாகத் தெரிகிறது. எங்களுக்கு நிஜமாவே தெரியாமத்தான் கேட்டோம்!
பதில் சொல்வார் என்று எதிர்பார்த்த ராமலக்ஷ்மியே கேள்வியை சாய்ஸில் விட்டு விட்டார்!!!!

அமைதிச்சாரல் said...

ஆஹா.. கரகோஷம் இங்கே வரைக்கும் கேக்குதே.

நன்றி.. நன்றி,, நன்றி.. :-)

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை?? வெண்டைனு முதல்லே சொன்னது நான்! பொற்காசுகள் அமைதிக்கா! :P:P:P:P

:)))))) உங்கள் ப்ளாகில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போறேன்.

எங்கள் பிளாக் said...

ஆமாம் இல்லே...! :))
ஆஹா...பொற்காசுகளில் உங்களுக்கு பாதி தந்தோம்.......உள்ளிருப்புப் போராட்டம்னு சொல்றீங்க......அப்பாவி ரெசிப்பி இட்லி இருக்கு சாப்பிடறீங்களா...

Geetha Sambasivam said...

அப்பாவி ரெசிப்பி இட்லி இருக்கு சாப்பிடறீங்களா... //

கல்லைத் தான், மண்ணைத்தான், உண்ணக் கற்பித்தானோ அந்த ஈசன்??

ஹிஹிஹி, அப்பாவி இட்லியைக் குடிச்சுட்டுப் போராடுவோம். வெற்றி நமதே.

ஸ்ரீராம். said...

ஓ... இந்த அனானி மர்மம் இப்போதுதான் விளங்குகிறதா? நீங்கள்தானா அது ஏஞ்சல்?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!