ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஞாயிறு 339 :: படிப்படியாக & ஞாயிறு 340 :: இரவின் மௌனம்

ஞாயிறு 339:
எல்லோரும் படிப்படியாக முன்னேற எங்கள் வாழ்த்துகள்! 
(போன வாரம் போட்டிருக்கவேண்டியது. ஆனா பாருங்க சென்னையில் என்னுடைய பழைய லாப்டாப் படம் சேர்க்க மறுத்துவிட்டது!) 
   

ஞாயிறு 340 :: இரவின் மௌனம் ! 
    


மேற்கண்ட இரண்டு படங்களையும் இணைத்து, கருத்துரை எழுதுங்கள். சிறந்த கருத்துரை கூறுபவருக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு காத்திருக்கின்றது! 

     

21 கருத்துகள்:

  1. படி படியாக முன்னேறுவதுதான் நல்லது. முன்னேற்றம் வேண்டும் என்றால் சில நேரங்களில் மெளனமும் நல்லது.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் வைத்து இருக்கும் பதில் இரவில் படி ஏறும் போது கவனம் தேவை என்பதா?

    பதிலளிநீக்கு
  3. படி படியாக முன்னேறியும் நிலாவை ரசிக்கலாம்...!

    பதிலளிநீக்கு
  4. நிலவின் மௌனம் சொல்லியது. உன் அகக்கண்களைத் திறந்து வைத்துக் கொள். வாழ்வின் இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்! படிப்படியாய் படியேறி (என்னை) வெற்றிப் பாதையை அடையாலாம்!"

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இரண்டு படங்களும் அருமை. வெற்றிக்கான பாதை.. நம்பிக்கை ஒளி..!

    பதிலளிநீக்கு
  6. (முயற்சிப்)படியில் (நம்பிக்)கை வைத்து ஏறினால் நிலவும் வசப்படும்.

    பதிலளிநீக்கு
  7. படியேறியும் நிலவை தரிசிக்கலாம், பங்களாவுக்கு அருகில் நின்றும் நிலவை தரிசிக்கலாம் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. படிப்படியாக முன்னேறியும் இருட்டாய்த்தானே இருக்கிறது அதுவும் மௌனமாய்

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான படங்கள்..... இரண்டுமே அழகு.

    பதிலளிநீக்கு
  10. எல்லா இரவும் முடியும்..தொடர்ந்து விடியும்.

    மேலே மேலே முன்னேறினாலும், இறங்கிவந்துதான் ஆகவேண்டும்.

    வாழ்க்கையே ஒரு வட்டம்தான்.

    பதிலளிநீக்கு
  11. படியில் ஏறி நிலாவைப் பிடிக்க முடியாது நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. படிப்படியாய் முயன்றால்
    வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான்..

    பதிலளிநீக்கு
  13. ஆலயம் தொழ உயரும் படிக்கட்டுகள்..

    நீல வானில் நீந்தும் முழு நிலவில்
    அற்புதமான ஆண்டவன் தரிசனம்..!

    பதிலளிநீக்கு
  14. படிப்படியாக முன்னேறியும் பழைய நிலைக்கே வந்தது நிலா!

    பதிலளிநீக்கு
  15. எண்ணப் படியேறி எண்ணப்படி விண்ணையும் தொடலாம்!

    பதிலளிநீக்கு
  16. எல்லோருடைய கருத்துரைகளும் அருமையாக உள்ளன. எல்லோருக்கும் எண்பது மதிப்பெண்களுக்கு மேலே. முதல் மதிப்பெண் பெறுபவர் தில்லையகத்து கீதா.

    பதிலளிநீக்கு
  17. தி கீதா அவர்கள் தன்னுடைய அல்லது தன் குடும்ப உறுப்பினர் (யாருடையது என்ற விவரம் தேவையில்லை) ப்ரீ பெய்ட் அலைபேசி எண்ணை kggouthaman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவம் . அந்த ப்ரீ பெய்ட் எண்ணுக்கு நூறு ரூபாய்க்கு 'டாப் அப்' செய்கிறோம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. ஓ மை காட்! பரிசா! எனக்கா!!!!!?? சொக்கா சொக்கா நீ எங்க இருக்க!! நீ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததற்குப் பரிசு!!! அஹஹஹ்ஹ

    மிக்க நன்றி கௌதம்ஜி...இதுவே பரிசுதான் ஜி. மகிழ்வாக இருக்கின்றது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!