Tuesday, June 26, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்

புத்தகங்கள் 
ரிஷபன் 

விரட்டிக் கொண்டு வந்த நாய் அதன் எல்லையோடு நின்று குரைத்து வழியனுப்பியது.

'பயப்படாதே.. நேராப் பார்க்காதே.. உன்னை ஸ்மெல் பண்ணிரும்.. நிதானமா நடந்துரு'

சுதந்திரன் சொல்லியிருந்தார்.  அந்த நாளில் யாரும் வாங்கத் தயங்கிய ப்ளாட். ' சொன்னா நம்ப மாட்டே' ரகம். வாங்கிப் போட்டிருக்கிறார்.

வீட்டில் ஏதோ ஒரு சண்டை. அண்ணன் தம்பிக்குள். உடனே முடிவெடுத்து ஒரு ஹால், ஒரு பெட்ரூம், ஒரு கிச்சன், பாத் ரூம் டாய்லட் என்று கட்டிக் கொண்டு போய் விட்டார்.

காம்பவுண்டு கூட பிறகுதான் கட்டினாராம். ஒரு போனஸ்லப்பா.. உன்னால நம்ப முடியுதா.. இப்போ ஒரு செங்கல் கூட வாங்க முடியாது.

அந்த நகரின் எல்லை இவர் ப்ளாட். பின்னால்  ஒரு மேடு. சாலை. ஏறி இறங்கினால் காவிரி.

' வெள்ளம் எப்போ வரும்னு தெரியாது. நான் சொல்றது அப்போ.. 77ல வெள்ளம் வந்தப்போ நாங்க மாடில. எல்லா சாமானும் அவுட். பத்து நாளாச்சு.. அதோ காம்பவுண்டைப் பாரு.. தண்ணி நின்ன சுவடு ஒண்ணு விட்டு வச்சிருக்கேன்..'

அதன் பிறகு பணம் கிடைத்தபோது மாடியில் டிட்டோ ஒரு போர்ஷன்.. வாடகைக்கு விடும் உத்தேசம் இல்லை. ஹாலில் ராக்குகள். புத்தகங்கள். எதைப் பற்றிக் கேட்டாலும் பதில். 

அறிமுகமானதே அதில் தான். இவன் தேடிய புத்தகம் அவரிடம் இருக்கலாம் என்று ஒரு நண்பன் சொல்ல.. தொடர்பு கொண்டு பேசி.. வாங்க.. காப்பி போட்டுக்குங்க.. அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டார்.

நண்பன் இவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் அவன் கண்கள் ஜொலிக்கும். புத்தக ஆர்வலன் அவனும். ஏதேதோ பேர் சொல்லி அது படிச்சுருக்கியா, இது படிச்சுருக்கியா என்று கேட்கும்போது பொறாமை வரும்.

'எப்படிடா இவ்வளவும் படிச்சே'

சிரித்தான்.

' சென்னை டூ டெல்லி போய்ட்டு அடுத்த ரயில்ல திரும்பி வந்தேன். அந்த நாலு நாளும் வாசிப்புத்தான். அவ்ளோ சேர்ந்து போச்சு வாங்கினது'

அந்த நிமிடம் அவன் மனசுக்கு நெருக்கமானான். இருவரும் சந்தித்தால் புத்தகப் பேச்சுத்தான்.

சுதந்திரனைப் பற்றி அப்படித்தான் தெரிய வந்தது. அவரிடம் இல்லாத புத்தகங்களே இல்லை என்பது இன்னொரு ஆச்சர்யம். சம்பளத்தில் பெரும்பகுதி புத்தகம் வாங்குவதில். மாடி முழுக்க புத்தகங்கள். 

பார்த்தே தீர வேண்டும் என்கிற வெறி கிளர்ந்தது. கிளம்பி வந்தாச்சு. சொல்லியிருந்த அடையாளங்களைப் பின்பற்றி .. இதோ.. வீடு வரை வந்தாகிவிட்டது.

" வாங்க"

கணீர்க் குரலில் வரவேற்பு. சுதந்திரன் அவரே ஒரு படைப்பாளி போலத் தெரிந்தார். சொன்னதற்கு சிரித்தார்.

" எழுதியதே இல்லை"

"ஏன்"

" வாசிக்கவே நேரம் போதவில்லை"

" ம்ம்"

" காபி.. டீ .. ?"

" மாடிக்குப் போகலாமே"

சுதந்திரன் அவனைப் பார்த்துச் சிரித்தார். சரிதான்.. 

ஒரு நூலகத்தில் தான் சாத்தியம். அதுவும் ஒழுங்காய்ப் பராமரிக்கப்படும் நூலகம்.

எல்லா வார/ மாத இதழ்களும்.. முதல் இதழிலிருந்து. பெயரே கேள்விப்படாத.. கொஞ்ச காலமே வெளிவந்த.. இதழ்கள். சர்ச்சைக்கு உள்ளாகி, கடைகளில் கிடைக்காத இதழ்கள். 

" சேர்க்க ஆரம்பிச்சப்போ இதோட முக்கியத்துவம் தெரியாமத்தான் ஆரம்பிச்சேன். அப்புறம் தான் எனக்கே ஒரு ஈர்ப்பு.. இதைப் பத்திரப்படுத்தத்தான் ரொம்ப பாடுபட்டேன்."

பூச்சி அரிப்பு பாதிப்பு இல்லாமல் இருக்க அவர் செய்தவை பெரிய கதை.

" ஆயிரம் சொல்லுங்க. ஒரு புத்தகத்தைக் கையில் பிடிக்கிற மகிழ்ச்சி.. இந்த நவீன காலத்தில் கிடைக்கல எனக்கு"

வியப்போடு பார்த்தான். 

Image result for a man reading books in a library images

" இங்கேயே இருந்துடலாம் போலத் தோணுது"

" ம்ம்" சிரித்தார்.

அவன் தேடி வந்த புத்தகத்தை எடுத்து வைத்திருந்தார்.  பரவசமாகி அப்படியே கீழே அமர்ந்து விட்டான்.  பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். நேரம் போனதே தெரியவில்லை.


Image result for a man reading books in a library clip  art imagesவந்து சாப்பிட அழைத்தார். எளிமையான சமையல். ருசி. 

" உணவு தேவைக்குத்தான்" என்றார்.

அன்றிரவு வரை வாசிப்பில். அங்கேயே புத்தக ரேக்குகளின் நடுவில் தூங்கினான். கனவில் புத்தக வரிசை.

மறுநாள் கிளம்பும்போது..

" தனியாவா இருக்கீங்க.."

"ம்ம்.. காப்பி எடுத்துக்கலியா"

" வேணாம். படிக்கணும்னு தோணினா இங்கே வந்துடறேன். உங்களுக்கு சிரமம் இல்லியே"

சிரித்தார் சம்மதமாக.

அரை மனதாய்க் கிளம்பினான்.

பேருந்தில் அமர்ந்ததும் நண்பனுக்கு போன்.

" என்னடா ஹேப்பியா"

" ம்ம்.. பாவம் டா .. தனியா இருக்கார்."

" மனைவி.. மகன் உண்டுடா"

" என்ன .."

" இவரோட புத்தக வெறி அவங்களுக்குப் பிடிக்கல. நல்லா எழுதுவார்.. உன்கிட்ட எழுதறதில்லேன்னு சொல்லி இருப்பாரே"

" ஆ..மா"

" ஒரு தடவை.. அவர் மனைவி.. அவர் எழுதின எல்லாத்தையும் நடு ஹால்ல வச்சு கொளுத்திட்டாங்க. அன்னிக்கு எழுதறதை விட்டவர் தான். அவங்களும் சண்டை போட்டு பிரிஞ்சு போயிட்டாங்க.. இத்தனைக்கும் வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல அவருக்கு.  குடும்பத்துக்கு செய்ய வேண்டியதை சரியாத்தான் செஞ்சார்.  மாடி போர்ஷனை வாடகைக்கு விடச் சொன்னாங்க. இவருக்கு அதுல விருப்பமில்ல"

திக்கென்றிருந்தது கேட்க.

" மகனைப் பார்க்கணும்னு தோணிச்சுன்னா ..  போவார்.  வாசல்ல நிக்க வச்சு பேசி அனுப்பிருவாங்களாம். "

" அடக் கடவுளே"

" அவரே ஒரு வித்தியாசமான மனிதர் தான்.. அவருக்குப் பிறகு இந்தப் புத்தகங்களைப் பராமரிக்க ஆள் தேடறார்"

பஸ் ஹார்ன் சத்தமாய் ஒலித்தது.

' நீ எப்பவும் உசுரோட இருப்பியா.. நீ சேர்த்து வச்ச புக்கையும் வச்சு கொளுத்தறேன் பார் ஒரு நாள்..'

அவர் மனைவி சொன்னாராம்.. ஒரு நாள்.  சொல்லும்போதே அவன் குரல் நடுங்கியது.

நண்பன் சொன்னது சரியாய்க் காதில் விழவில்லை..ஹாரன் ஒலியில். திருப்பிக் கேட்க தைரியமில்லை மனசில்.

130 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

ஹை நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ...

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

துரை செல்வராஜூ said...

அப்போதே நினைத்தேன்... - இன்று ரிஷபன் ஐயா அவர்களது கதை வரக்கூடும் என்று!..?

ஸ்ரீராம். said...

வாங்க கீதா, இனிய காலை வணக்கம்.

துரை செல்வராஜூ said...

புத்தகம் போல ஒரு கதை..
கவிதை என்றும் சொல்லலாம்!...

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார்.. இனிய காலை வணக்கம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹையோ மனசு பதறிவிட்டது. இப்படியுமா...மனசு என்னவோ செய்துவிட்டது. வாசிப்பு தவறா...புத்தகம் சேர்ப்பது தவறா...அவர் எதுவும் செய்யலைனா ஓகே...அஅவர் எழுத்தையும் நசித்துவிட்டு...

ரிஷபன் அண்ணா மனதை நொறுங்க வைச்சுட்டீங்க...எதிர்பார்க்காத முடிவு...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா காணும்? துரை அண்ணா நானும் நினைச்சேன் இன்று ரிஷபன் அண்ணாவின் கதைதான் வரும் என்று....

கீதா

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் பானு அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

மனம் கதையையே சுற்றி வருது...இப்படியும் நடக்கும் தான்....எனக்குத் தெரிந்தே ஒருவர் இருக்கார். அவருக்கும் கிட்டத்தட்ட இதே. பிரச்சனை ஒரு காலத்தில் எழுந்த போது அவர் குடும்பம் என்று சென்றதால் தன் ஆர்வத்தை எல்லாம் முடக்கிக் கொண்டுவிட்டார். எனக்குத் தெரிந்து ஆணும் உண்டு பெண்ணும் உண்டு. பெரும்பாலும் பெண்களுக்குத்தான் இப்படியான பிரச்சனைகள் எழும். இப்பிரச்சனையின் புள்ளியியலில் ஆண்கள் குறைவாக இருக்கலாம்...அதுவும் எந்தவிதக் கெட்டபழக்கமும் இல்லாத தன் கடமைகளைச் செய்த ஒரு மனிதருக்கு....இப்படியா மனம் கலங்கியடித்துவிட்டது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நாம் யதார்த்தத்தில் எத்தனையோ புகழ்வாய்ந்த எழுத்தாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே....பல கெட்டபழக்கங்களுக்கும் ஆளாகி ஆனால் அதே சமயம் குடும்ப சகிதமாகவும்...ம்ம்ம்ம் புரிதல் இல்லாத துணை என்றால் கஷ்டம்தான்...அது கணவனுக்கு என்றாலும் சரி மனைவிக்கு என்றாலும் சரி....கொடூரம் இது...என்னவோ இந்தக் கதையின் நாயகன் மனதைக் கலக்கிவிட்டார்...எனக்கும் அந்தக் கடைசி வரிகள் கண்ணில் படவே இல்லை....

ரிஷபன் அண்ணா கதை அருமை

கீதா

Geetha Sambasivam said...

மனதைக் கலங்கடித்த கதை. இன்னிக்குச் சீக்கிரமா வழக்கம் போல் எழுந்துட்டேன். ஆனால் எ.பி.க்கு வரத் தோணலை! அங்கேயே என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்திலேயே இருந்தேன். அது வேறே ஐடி! அப்புறமாச் சில, பல மடல்கள் பார்த்துட்டு இந்த ஐடிக்கு வந்தப்புறம் தான் நினைப்பு வந்தது. அப்போ மணி ஆறேகால் ஆயிடுத்து. அதனால் தான் தாமதம்.

Geetha Sambasivam said...

எங்க வீட்டிலேயும் இம்மாதிரிப் புத்தகப் பைத்தியங்கள் உண்டு. என் தாத்தா (அம்மாவின் அப்பா) எங்க பெரியப்பா (அப்பாவோட அண்ணா) பெரியப்பா பெண் (அக்கா) என் சொந்த அண்ணா, தம்பி! இதில் அண்ணாவின் சேமிப்புப் பலரையும் கோபம் அடைய வைச்சிருக்கு. மன்னிக்கும் கொஞ்சம் வருத்தம் தான். மன்னி அதிகம் புத்தகம் படிக்க மாட்டார். எப்போதாவது தான். ஆனால் அண்ணாவின் புத்தகங்கள் இரண்டு வருடங்கள் முன்னர் கரையானுக்கு இரை ஆனதில் எல்லோருக்குமே வருத்தம்! என்னிடம் அவ்வளவெல்லாம் கிடையாது! கடந்த ஐந்து வருடங்களில் நண்பர்களால் கொடுக்கப்பட்ட சில பயணக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் தான் புதிய சேமிப்பு. நான் வாங்குவதே இல்லை! :( வாங்க முடியாது! :)))))

Geetha Sambasivam said...

மனம் கனத்துப் போய் விட்டது. குடும்பத்தையே துறக்கும் அளவுக்குப் புத்தகக் காதல்! ஆனால் மனைவி கணவனைப் புரிந்து கொள்ளவே இல்லை. புரிந்து கொண்டிருந்தால் இப்படிப் பிரிவு ஏற்பட்டிருக்காது.

Geetha Sambasivam said...

//காம்பவுண்டு கூட பிறகுதான் கட்டினாராம். ஒரு போனஸ்லப்பா.. உன்னால நம்ப முடியுதா.. இப்போ ஒரு செங்கல் கூட வாங்க முடியாது.//
நாங்க வீடு கட்டின படலம் நினைவில் வருகிறது. ஜன்னல் கதவுகள், வீட்டுக்குள் அறைக்கதவுகள், குளியலறைக்குக் கூடக் கதவு போடாமல் தான் வீட்டைக் கட்டிக் கொண்டு கொல்லைக் கதவு, வாசல் கதவு, பக்கவாட்டுப் பகுதிக்குக் கதவு என மூன்று கதவுகளையும் போட்டுக் கொண்டு குடித்தனம் போனோம்.

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா எனக்கும் புத்தகம் சேர்க்கும் ஆர்வம் அதிகம். எங்கள் வீட்டில் மூன்று பேருக்குமே இருந்தாலும் ஒவ்வொருவரது ஆர்வமும் வேறு வேறு. அவர்கள் இருவருக்கும் முடிந்தது.

எனக்கு வாங்க முடியாது என் ஆர்வம் வேறு என்பதால். நண்பர்கள் தருவது யாரேனும் வேண்டாம் என்று போடுவதை..இப்படி. என் மாமனாரின் கலெக்ஷனை எடுத்து வந்திருக்கேன். இன்னும் இருக்கா என்று பார்க்கணும். பராமரிப்பதுதான் மிகவும் கடினம். நானும் மகனும் அடிக்கடி சொல்லுவது...வீட்டில் நூலகம் என்று ஒரு அறை ஒதுக்க வேண்டும். என்று....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எ.பி.க்கு வரத் தோணலை! அங்கேயே என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்திலேயே இருந்தேன்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காலையிலேயே சாப்பாடா எபிக்கு வராம...காப்பி கூட ஆத்தலையா...அதான் இங்க காபி வரவே இல்லை...துரை அண்ணா பாவம் காபிக்குக் காத்து காத்து காபியோடு கதையை வாசிக்கலாமுனு பார்த்துவிட்டுப் காபி கிடைக்காமல் கதை வாசிச்சுட்டுப் போய்விட்டார்....ஹா ஹா ஹா

கீதா

Geetha Sambasivam said...

காஃபி எல்லாம் சீக்கிரம் ஆத்திக் கஞ்சிக்கடமையும் முடிஞ்சு தான் கணினிக்கே வருவேன். இதிலே மாற்றமே இல்லை. அங்கே அதிரடி, பக்கத்தை மாத்தணும்னு அதிரடியா உத்தரவு போட்டிருக்காங்க. வந்திருக்கிறதே இன்னிக்குத் தான் முதல் முறை! அதிலே ஆயிரம் குத்தம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதான் என்ன பண்ணலாம்னு பார்த்துட்டு இருந்தேன். இப்போ உட்கார முடியாது நாழியாகும்னு தோணியதாலே அந்த ஐடியை விட்டுட்டு இங்கே வந்தேன். :))))

கரந்தை ஜெயக்குமார் said...

கதையாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில், புத்தகத்தின் அருமை தெரியாத குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் வீட்டில் மூன்று பேருக்குமே இருந்தாலும் ஒவ்வொருவரது ஆர்வமும் வேறு வேறு. அவர்கள் இருவருக்கும் முடிந்தது.//

ஹோ! வேர்டில் அடிக்கும் போது முடியாது என்பது கை தவறி முடிந்ததுனு வந்துருச்சு... காப்பி பண்ணும் போது மௌஸ் சில வரிகளை விட்டுருது....என் அம்மா, அப்பா, நான். அம்மா அப்பா என் பாட்டி (அப்பாவின் அம்மா) எல்லாரும் வாசிப்பார்கள். ஆனால் புத்தகம் வாங்க முடியாத நிலை. அப்போதும் சரி அதன் பின்னும் சரி. பாட்டியும் அவரது அக்காவும் தங்கையும் அக்காவின் பெண்ணும் கூட நிறைய வாசிப்பார்கள். அவர்கள் எக்சேஞ்ச் மேளா நடத்திக் கொள்வார்கள். அப்படி வந்ததை என் அம்மா அப்பா வாசிப்பார்கள். விவரம் வரும் வயதில் நான் அம்மாவின் அம்மா வீட்டில் வளர்ந்ததால் வாசிப்பு மிகவும் கடினம் கள்ளத்தனமாகத்தான். பாட்டி செம கண்டிப்பு. படிப்பு மட்டும் என்று....பொட்டலம் கட்டி வரும் பேப்பரைக் கூட வாசிக்கும் ஆர்வம் உண்டு..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்னிக்குத் தான் முதல் முறை! அதிலே ஆயிரம் குத்தம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! //

ஹா ஹா ஹா ஹா பூஸாராச்சே!!! நானும் ஒரு சில வாசித்த நினைவு. கருத்திட்டிருக்கேனா என்று தெரியவில்லை. அப்போதுதான் ப்ளாக் தொடங்கிய புதிது.....எங்கள் தளத்தில் சேர்க்காமல் விட்டுவிட்டேன்...அந்தத் தளத்தை சேர்த்துவிடுகிறன்...

கீதா

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

மனதைக் கலங்கடித்த கதை. என் உறவினர் ஒருவர் - சுதந்திரப் போராட்டத் தியாகி - வீடு நிறைய புத்தகங்கள் அவரிடம் உண்டு - எனக்குக் கூட பள்ளி காலத்தில் ஒரு டிக்‌ஷனரி பரிசு தந்தார் - அவர் அலமாரியிலிருந்து. நிறைய வார இதழ்கள், நாவல்கள் என சேர்த்து வைத்திருந்தார். அவர் இறந்த போது நான் தில்லியில். அவரது வாரிசுகள் பெரும்பாலான புத்தங்களை “குப்பை” எதற்கு என பழைய பேர்ப்பர் காரருக்கு போட்டு விட்டார்கள்! எத்தனை இழப்பு என்று எனக்குத் தோன்றியது. இப்பவும் மறக்க முடியாத இழப்பு அது.

Anuradha Premkumar said...

எதார்த்தம்....

வல்லிசிம்ஹன் said...

இப்படியுமா மனிதர்கள். என்ன ஒரு ஆங்காரம். அறிந்து
கொள்ளாத மனுஷியுடன் குடித்தனம் செய்வது மிகக் கடினம்.

இந்தக் கொடூரத்தை எப்படித் தாங்கிக் கொண்டார் அந்த மனிதர்.
மனம் ஆறவே இல்லை.
எங்கள் வீட்டில் அனைவரும் புத்தகப் பிரியர்கள்.
அதனால் யாருக்கும் தொந்தரவில்லை.

இனிவாங்குவேனா தெரியாது. ஒவ்வொரு கண்டத்திலும்
இருபது புத்தகங்களை விட்டு வைத்திருக்கிறேன்.

வீட்டில் இருக்கும் புத்தகங்களைப் படித்து முடிக்கவே
இன்னும் காலம் ஆகும்.
என்னவோ சொல்கிறேன்.
இந்தக் கதையின் பாதிப்பிலிருந்து மீள. ஷாக் கொடுத்திருக்கிறார் ரிஷபன் ஜி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல கதை. புத்தகங்கள் படிக்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்குமே வந்து விடாது. அப்படி வந்த ஒரு மனிதரின் மனதை புரிந்து கொள்ளலாமல், அவர் மனதை துன்புறுத்துகிற மாதிரி அவர் எழுதியதை கண் முன்னையே இழக்கச் செய்த வலியை நானும் உணர்ந்தேன். கதையின் நகர்வு, எளிமையான சுருக்கமான எழுத்து மிக அருமையாக இருக்கிறது. நல்லதொரு புத்தகத்தை படித்த உணர்வும் எழுந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஒவ்வொரு முறை ரிஷபன் அண்ணாவின் கதையை வாசிக்கும் போதும் இப்படி எழுதக் கற்கணும் என்று நினைத்து முயற்சியும் செய்வதுண்டு. ஷார்ட்டான உரையாடல்களை. ஒரு சில சமயங்களில் கதை தொடங்கும் போது முடிகிறது ஆனால் கதை போகும் போது உரையாடல்கள் நீண்டு விடுகிறது பல இடங்களில்...உணர்ச்சிகளைக் கூட ஒரு வார்த்தையில் அல்லது ஒரு வரியில் அடக்கிவிடுகிறார் ரிஷபன் அண்ணா....அகத்தியர் சிறிய கமண்டலத்திற்குள் கங்கையை வைத்திருந்தது போல்! தன்னுள் முழு சமுத்திரத்தையும் அடக்கிக் கொண்டது போல்...

கீதா

KILLERGEE Devakottai said...

அவரைப் போன்றவர்கள் இந்த சமூகத்தில் நிறையப்பேர் வாழ்கின்றனர் பெரும்பாலும் நடைபிணமாய்...

இதை கதையாக நினைக்க இயலவில்லை காரணம் நானும்கூட இவர் ஜாதிதான்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இந்த சமூகபார்வையில் வேறானவர்களே... ஆகவே இவரைப் போன்றவர் தனது துணையை தேர்ந்தெடுத்து, காதலித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இணைந்தால் வாழ்க்கையில் இவ்வழி சந்தோஷத்தை தரலாம் ???

ஆனால் விதி ?

என்னை சிறு வயதிலிருந்து ஆதரவாய் பக்குவப்படுத்தி இருந்தால் இந்நேரம் நானும்கூட எழுத்தாளனாய் பிரகாசித்து இருப்பேன்.

இன்று முதல் நபராக வந்து படித்து விட்டேன். மனம் கனத்து விட்டது ஆகவே... இப்பொழுது கருத்திடுகிறேன்.

கதை சொன்ன.... மன்னிக்கவும், வாழ்வியல் உண்மையை சொன்ன திரு. ரிஷபன் ஸார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி - கில்லர்ஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாழ்வியல் கூறு ஒன்றினை மையமாக வைத்து கதை தந்த திரு ரிஷபனுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

// அகத்தியர் சிறிய கமண்டலத்திற்குள் கங்கையை வைத்திருந்தது போல்! /

நல்ல உவமை கீதா... ரசித்தேன்.

ஸ்ரீராம். said...

// ஆகவே இவரைப் போன்றவர் தனது துணையை தேர்ந்தெடுத்து, காதலித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இணைந்தால் வாழ்க்கையில் இவ்வழி சந்தோஷத்தை தரலாம்//

கில்லர்ஜி.. அப்போ புத்தக விஷயத்தில் ஒத்த கருத்தாயினும் பிற விஷயங்களில் ஏதாவதொன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால்....?

ஸ்ரீராம். said...

// எங்கள் வீட்டில் அனைவரும் புத்தகப் பிரியர்கள்.
அதனால் யாருக்கும் தொந்தரவில்லை.//

எங்கள் வீட்டில்... அதாவது இப்போதைய என் வீட்டில் அப்படி இல்லை வல்லிம்மா...

வருத்த்த்த்த்த்...தமான விஷயம்.

ஸ்ரீராம். said...

// அவர் இறந்த போது நான் தில்லியில். அவரது வாரிசுகள் பெரும்பாலான புத்தங்களை “குப்பை” எதற்கு என பழைய பேர்ப்பர் காரருக்கு போட்டு விட்டார்கள்!//

கொடுமை வெங்கட்.

G.M Balasubramaniam said...

ஒரே ஒரு நிகழ்வு கதையாக்குவதுரிஷபனுக்குத்தான் சாத்தியம் கரந்தையில் நண்பர்ஹரணி வீட்டில் இம்மாதிரி புத்தகங்கள் ஒரு பெரிய ஹாலை அலங்கரிப்பதுகண்டிருக்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

என்னை சிறு வயதிலிருந்து ஆதரவாய் பக்குவப்படுத்தி இருந்தால் இந்நேரம் நானும்கூட எழுத்தாளனாய் பிரகாசித்து இருப்பேன்.//

இதை எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் ஜி. சிலருக்குச் சிறு வயதிலிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும், வழிகாட்டல் கிடைக்கும் ஆனால் அவர்கள் செல்லும் பாதை வேறு விதமாக இருக்கும். கிடைக்காமல் போகும் பாதை தெரியாமல் அல்லது தெரிந்தாலும் திறமைகள் வெளிப்படாமல் போகும் இப்படியான முரண்கள் தான் வாழ்க்கை. ஒரு சிலருக்கே நன்றாக அமையப்பெறும்.

இப்போது நீங்கள் எழுத்தாளர்தான் கில்லர்ஜி.! இல்லை என்று சொல்றீங்களா? இங்கு வலையில் எழுதினாலும் எழுத்தாளர்தா புத்தங்கள் பல எழுதினால்தான் எழுத்தாளர் என்ற எண்ணம் வேண்டாம். என்ன அதில் ஒரு ரீச் இருக்கும், பலருக்கும் தெரியவரலாம் உண்மைதான் ஆனால் . வலையில் எழுதுவதும் உங்களுக்கு அடையாளம்தான். எனவே தொடர்ந்து எழுதுங்கள்.

கீதா

ஸ்ரீராம். said...

// என்னை சிறு வயதிலிருந்து ஆதரவாய் பக்குவப்படுத்தி இருந்தால் இந்நேரம் நானும்கூட எழுத்தாளனாய் பிரகாசித்து இருப்பேன்./

பழைய கதையை விடுங்கள் கில்லர்ஜி... இப்போது பழக்கலாமே... கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு அவ்வப்போது கதை அனுப்புங்களேன்...

KILLERGEE Devakottai said...

ஸ்ரீராம். said...

//கில்லர்ஜி.. அப்போ புத்தக விஷயத்தில் ஒத்த கருத்தாயினும் பிற விஷயங்களில் ஏதாவதொன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால்....?///

இதற்காகவே ''இவ்வழி'' என்று குறிப்பிட்டேன் அதாவது இப்படிப்பட்ட எண்ணமுள்ளவர் என்பது துணைவிக்கு முன்கூட்டியே அறிய வாய்ப்புண்டு. ஆனால் காதல் என்பது எல்லோருக்கும் அமைவதில்லையே.....

KILLERGEE Devakottai said...

ஸ்ரீராம். said...

//பழைய கதையை விடுங்கள் கில்லர்ஜி... இப்போது பழக்கலாமே... கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு அவ்வப்போது கதை அனுப்புங்களேன்...///

''முயல்''கிறேன் ஜி ''ஆமை'' வேகத்தில்...

Thulasidharan V Thillaiakathu said...

// அகத்தியர் சிறிய கமண்டலத்திற்குள் கங்கையை வைத்திருந்தது போல்! /

நல்ல உவமை கீதா... ரசித்தேன்.//

மிக்க நன்றி ஸ்ரீராம்.

கீதா

நெ.த. said...

மனசைப் பதறச் செய்யும் கதை. இதை இரண்டு முறை வாசித்துப்பார்த்தேன். (இரண்டாவது தடவை சிறிது நேரம் கழித்து).

மனிதர்களில், இவன் செய்வது சரி, அவன் செய்வது தவறு என்று சட்டுனு சொல்லிட முடியாது. மோசமானவர்கள் மிக மிகக் குறைவு. மற்ற எல்லோரும் நல்லவராக இருக்கணும் என்றுதான் வாழ்க்கையில் முயற்சி செய்யறாங்க.

குடும்பம் என்பது, தனித் தீவு அல்ல. அங்கு எல்லோருக்கும் இடம் இருக்கணும். சமயத்தில் மற்றவர்களுக்குப் பிடிக்காததை, நாம் நம் முழு நேரத்தையும் செலவழித்துச் செய்யமுடியாது, அது எவ்வளவு நல்லதாக இருந்தபோதிலும். அதனால்தான், 'கால் கட்டு' என்றே பெயர். நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது.

மற்றவர்கள் வெறுக்கும்படி, புத்தகங்கள் மீது சுதந்திரன் கொண்ட காதல், செலவழித்த நேரம், செலவழித்த பணம் ஆகியவைகளை எப்படி ஜஸ்டிஃபை செய்ய இயலும்?

கோவிலுக்குச் செல்லுதல் அல்லது தியானம் அல்லது ஆன்மீகத்தில் ஈடுபடுதல், சமூக சேவை போன்ற அனைத்தும் மிக நல்ல செயல்கள்தான். ஆனால் எப்போ அது, குடும்பத்தில் உள்லவர்களுக்குப் பிடிக்காமல் போகிறதோ (எப்போ அப்படி நடக்கும்? மற்றவர்களுக்கு ஸ்பேஸ் இல்லாமல் அல்லது அவர்களது எதிர்பார்ப்புகளைச் செய்யாமல் இருக்கோமோ அப்போ அவங்களுக்குப் பிடிக்காது), அப்போது அதை கணிசமான அளவில் குறைத்துக்கொள்ளவேண்டும், முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால். இதைச் செய்யத் தவறினால், பிளவு தவிர்க்கமுடியாது.

கதாசிரியர் வெளிப்படையாகச் சொல்லாதபோதும், எப்போது, மகனைப் பார்க்கச் சென்றாலும், வெளியிலேயே வைத்துப் பேசிவிட்டு அனுப்பிவிடுகிறார்களோ அப்போதே அவ்வளவு வெறுப்பை சுதந்திரன் சம்பாதித்துவைத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். தவறு சுதந்திரன் மீதுதான் என்று எனக்குப் படுகிறது. இதை ஜட்ஜ்மெண்டல் மனநிலையில் சொல்லவில்லை.

குடும்பம், சமூகம் என்பது கட்டுப்பாடுகள் கொண்டது. அத்துடன் ஒத்துத்தான் வாழமுடியும்.

Bhanumathy Venkateswaran said...

இது கதை அல்ல, நிஜம் என்று அறிவு சொல்கிறது, அப்படி இருக்கக் கூடாது என்று மனம் விரும்புகிறது. இதுதான் கதாசிரியரின் வெற்றி.

எண்பதுகளின் துவக்கத்தில் ஸ்ரீரங்கம் ஜேசீஸில் எழுத்தாளர் விக்கிரமனுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள். அப்போது ஸ்ரீரங்கம் ஜேசீஸ் தலைவராக இருந்தவரையும் கௌரவித்தார்கள்.(அவர் பெயர் மறந்து விட்டது). அவர் நிறைய புத்தகங்கள் வாங்குவாராம். மனைவியின் நகையை அடகு வைத்து கூட புத்தகங்கள் வாங்கியிருக்கிறாராம். அவர் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த பொழுது,"வீட்டு செலவுக்குனு வைத்திருக்கும் பணத்தை எல்லாம் புத்தகங்கள் வாங்கி விடுவார். வீட்டில் இதனால் சண்டையெல்லாம் வரும். கஷ்டமாகத்தாங்க இருக்கு." என்றார்.

நெ.த. said...

எஸ். ராமகிருஷ்ணன் அவரது தேசாந்திரி (?) கட்டுரையில் அவரது அனுபவமாக ஒன்றை எழுதியிருப்பார். புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் ஆசையில் ஒரு பண்ணையார் வீட்டுக்குச் சென்றபோது, அவரது வாரிசுகள், அப்பா காசை விரயமாக்கி இந்தப் பொருள்களையெல்லாம் வாங்கியிருக்கிறார் என்பதுபோல் வெறுப்புடன் பேசுவதைப் பதிவுசெய்திருப்பார். அதாவது, வாங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு, அவரது குடும்பத்தினருக்குச் சுத்தமாகத் தெரியவில்லை என்பதையும், புத்தகங்களின் மீது அவர்களது அப்பா கொண்ட ஆசையை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் சொல்லியிருப்பார்.

அந்த அனுபவத்தைப் படித்தபோதும் இந்தக் கதையைப் படித்தபோது தோன்றிய அதே உணர்வைப் பெற்றிருக்கிறேன்.

இதற்கு மாறுதலாக இன்னொன்றைக் கேட்டிருக்கிறேன். பாலகுமாரன், எழுத்து ஆசை நிரம்பியிருந்தது, ஆனால் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரது இரு மனைவிகளும், நாங்கள் சம்பாதிப்பதே வீட்டிற்குப் போதும், சாதாரணமாக சாப்பிடுவதே போதும், வீண் ஆடம்பரங்கள் தேவையில்லை, நீங்கள் வேலையை விட்டுவிட்டு உங்கள் ஆசையான எழுத்துத் தொழிலைப் பாருங்கள், வீட்டில் உட்கார்ந்து நாவல் போன்றவைகளை எழுதுங்கள், உங்கள் சந்தோஷம்தான் முக்கியம் என்று சொன்னார்களாம். அவர் வேலை பார்க்காமல் வீட்டில் முழு நேரமும் உட்கார்ந்து எழுத்துத் தொழிலைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று ஒருபோதும் அவரது மனைவிகள் வருத்தமோ கவலையோ பட்டதில்லை, சொல்லிக்காண்பித்ததில்லை, வீட்டு வேலைக் கவலைகளில் தன்னை ஈடுபடுத்தியதில்லை என்று பதிவு செய்திருக்கிறார். (காலம் அவரை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தது, நிறைய எழுதி நிறைவாக சம்பாதித்தார் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். இருந்தாலும் ஆரம்பத்திலும் எப்போதும் உத்வேகமாக இருந்தது அவரது குடும்பம்)

இது எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அது அபூர்வம். பெரும்பாலான வீடுகளில் சுதந்திரனுக்கு நடந்ததுதான் நடக்கும்.

நெ.த. said...

புத்தகங்களின் அருமையை சுதந்திரனின் குடும்பம் புரிந்துகொள்ளவில்லையே என்று நிறையபேர் எண்ணுகின்றனர். அப்படி அல்ல.

உண்மையிலேயே ஒரு பொருளின் மதிப்பு, அதை வைத்திருப்பவருக்கோ அல்லது அதைப்போன்ற சிந்தனை உள்ளவர்களுக்கோதான் தெரியும்.

எனக்கு பொக்கிஷம் என் தந்தை எழுதிய ஒரு பேப்பராக இருக்கலாம், அல்லது அவர் எழுதிய கடிதமாக இருக்கலாம் அல்லது அவர் அணிந்திருந்த ஒரு சிறிய மாலையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அதன் மீதுள்ள மதிப்பு மற்றவர்களுக்கு இருக்கணும்னு கட்டாயமில்லை.

என் பசங்க எனக்கு கையால எழுதிய கடிதம் (undertaking etc.) எனக்கு பொக்கிஷம். ஆனால் அவர்களது ஆக்கங்கள் (சில பல ஓவியங்களோ அவர்களது கதைப் புத்தகங்களோ) எனக்கு அதே உணர்வைக் கொடுப்பதில்லை.

நான் பொக்கிஷம் என்று நினைக்கும் பல பொருட்கள் நேரடியாக, என் காலத்துக்குப் பிறகோ அல்லது என் பதவி போகும்போதோ (அதாவது என் வாரிசுகளோ அல்லது என் மனைவியோ இன்'சார்ஜ் ஆக குடும்பத்துக்கு ஆகும்போது), குப்பைக்கூடைக்குத்தான் போகும். இதுதான் யதார்த்தம்.

ஒரு தடவை, கோமதி அரசு மேடத்திடம், நான், 'பைண்டு செய்த பத்திரிகையில் வெளிவந்த நாவல்கள் நான் வாங்கிக்கொள்ள ஆசை' என்று சொன்னபோது, 'உணர்வோடு ஒவ்வொரு வாரமும் கிழித்து பைண்ட் பண்ணி வைத்திருக்கும் நாவலை' யார் தருவார்கள் என்று சொன்னார். ஆனால் அப்படி பொக்கிஷமாக வைத்திருப்பவரின் காலத்திற்குப் பிறகு, அதே உணர்வில் அந்த புத்தகங்களைப் பிறர் பார்க்க இயலாது.

அதிகமாக எழுதிவிட்டேனோ?

ரிஷபன்'ஜி அவர்களின் கதை எப்போதும்போல் அருமை. வித்தியாச வித்தியாசமாக, உணர்வுபூர்வமாக, 'வளவள வென இல்லாமல் தேவையான உரையாடல்களோடு மட்டும்' எழுதியிருக்கிறார். பாராட்டுகள்.

ஞானி:) athira said...

அழகிய கதை.. வாசிப்பது நல்லதே.. ஆனால் சிலர் ஓவரா வீடு முட்ட புத்தகம் சேர்ப்பார்கள்.. வீட்டுப் பொருட்கள் வைக்கவே இடமிருக்காது ஆனா புத்தகம் ஒன்றும் எறியாமல் சேர்ப்பார்கள்.. ஏதும் லைபிரரிக்குக் குடுக்கலாம் என்பது என் கருத்து... சில முக்கிய நினைவான புத்தகங்களை மட்டும் சேர்க்கலாம்.

Geetha Sambasivam said...

நெ.த. சொல்லி இருப்பது சரிதான் ஒரு கோணத்தில். இதையே வாட்சப்பிலும் சொன்னேன். ஆனால் அங்கே தமிழ் எழுத முடியாமையால் விளக்கமாகச் சொல்ல முடியலை! சுதந்திரனின் குடும்பத்தார் பார்வையில் அவங்க செய்தது சரி என்றாலும் அதற்காகக் கொளுத்தும் அளவுக்கெல்லாம் மனைவி போயிருக்க வேண்டாம். குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு தானே புத்தகங்களையும் சேமித்திருக்கார்? கவனிக்கலைன்னா குறை சொல்லி இருக்கலாம். இருந்திருந்து மாடி போர்ஷனை வாடகைக்கு விடலைங்கறதுக்காகவெல்லாம் கோவிச்சுக்கறதா? வேணாக் கீழே ஒரு அறையில் உங்க புத்தகங்களை வைச்சுக்கோங்க என்றானும் சொல்லி இருக்கலாம். அல்லது மாடியில் ஒரு அறையைப் புத்தகங்களுக்கு ஒதுக்கிட்டு மற்ற இடங்களை வாடகைக்கு விடச் சொல்லி இருக்கலாம். மனைவி கணவனுக்கு இது விருப்பம் என்று தெரிந்து கொண்டு வேறெந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்று புரிந்து கொண்டு அனுசரித்துப் போயிருக்கலாம். இப்போவே நம்ம ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்கார் என்னிடம். உன்னோட புத்தகங்களுக்கு உயில் எழுதி வைச்சுடுனு! ஏற்கெனவே வரிசை கட்டி நிக்கறாங்க எனக்குக் கொடு, உனக்குக் கொடுனு! யாருக்குனு உயில் எழுதறது? :)))))) ஆனால் எனக்கப்புறம் படிக்க இல்லை இல்லை, புரட்டிக் கூடப் பார்க்க ஆள் இல்லை! :))))

Geetha Sambasivam said...

அதிரடி, ஞானி, தமிழ்ப் புலவி, எங்க அண்ணா வீட்டைப் பார்த்திருக்கணும். வைக்க இடமில்லாமல் புத்தகங்கள் தரையிலும் சோஃபாவிலும், நாற்காலிகளிலும் இருக்கும். வீட்டின் மூலைகளில் புத்தகக் குவியல்!இப்போ அவற்றில் கால் பங்கு இருந்தால் பெரிசு!

Thulasidharan V Thillaiakathu said...

//பழைய கதையை விடுங்கள் கில்லர்ஜி... இப்போது பழக்கலாமே... கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு அவ்வப்போது கதை அனுப்புங்களேன்...///
//

ஹையோ ஸ்ரீராம் அடுத்து கருத்தாகப் போடனும் என்று நினைத்து "கில்லர்ஜி கே வா போ க தான் இருக்கே எபியில். இதழ்களுக்கு என்றில்லை இதற்கும் எழுதலாமே. இதழ்கள் போல் வெளிவராமல் போகாது.!!!!!!..வெளியிட்டு எத்தனை கருத்துகள் வருது பாருங்க" என்று எழுதியதை போடுவதற்குள் கண் அசந்துவிட்டேன் உட்கார்ந்தே....

கீதா

ஞானி:) athira said...

@கீசாக்கா
//அங்கே அதிரடி, பக்கத்தை மாத்தணும்னு அதிரடியா உத்தரவு போட்டிருக்காங்க. வந்திருக்கிறதே இன்னிக்குத் தான் முதல் முறை! அதிலே ஆயிரம் குத்தம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதான் என்ன பண்ணலாம்னு பார்த்துட்டு இருந்தேன். //

எங்கள்புளொக்கில் .. இடது பக்கம் “சாப்பிட வாங்க” என இருந்துதா.. அட ஓ சா:) என ஓடி வந்தால் அதுதான் கீசாக்கா பக்கத்தில விட்டுது ஹா ஹா ஹா:)).. போன வேகத்தில என் மனதில் தோன்றியதை ஜொள்ளிட்டேன்.. ச்ச்ச்சும்மா நானும் புளொக் எழுதுறேன் என எழுதாமல் கொஞ்சம் ரசனையோடு அழகுபடுத்தி வீட்டுக்கு பூமரம்.. அசோகா:) எல்லாம் வச்சால் வருவோருக்கு மனதுக்கு இதமா இருக்குமெல்லோ கர்ர்ர்ர்:))

ஞானி:) athira said...

//Geetha Sambasivam said...
அதிரடி, ஞானி, தமிழ்ப் புலவி, எங்க அண்ணா வீட்டைப் பார்த்திருக்கணும். வைக்க இடமில்லாமல் புத்தகங்கள் தரையிலும் சோஃபாவிலும், நாற்காலிகளிலும் இருக்கும். வீட்டின் மூலைகளில் புத்தகக் குவியல்!இப்போ அவற்றில் கால் பங்கு இருந்தால் பெரிசு!//

கீசாக்கா இதில கொஞ்ச விசயம் இருக்கு.. அதாவது வீட்டுக்குள் புட்த்ஹகம் குமியலாக சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனாஆஆஆஆஆஆஆஆஆஆ...

இருபாலாரிலும் சிலரின்[கணவன் அல்லது மனைவி] பழக்க வழக்க த்தால் தான் எரிச்சல் .. வந்திடுது.

எனக்கு தெரிஞ்சு ஒரு நண்பி புலம்புவா.. தன் கணவர் எப்ப பார்த்தாலும் ஃபோனும் கையுமாகவே இருப்பாராம்.. கதைப்பாராம் வேலை செய்து கொடுப்பாராம் ஆனா ஃபோனைப் பார்த்தபடி.. பாத்ரூமுக்குள்கூட ஃபோனோடு இருப்பாராம் ஃபேஸ் புக் படுத்தும் பாடு.. அப்போ மனைவிக்கு எரிச்சல் வருமோ வராதோ?

புத்தகம் படிப்போர் ஃபோனிலே பேசுவோரிலும் இக்குறை இருப்பின் அது வீட்டிலுள்ளோருக்கு எரிச்சலைத்தான் குடுக்கும்.

யாருமிலா நேரம், பயணங்களில்.. எங்காவது வெயிட்டிங் ஏரியாவில் இப்படி புத்தகம் படிப்போராயின் கணவனோ மனைவியோ ஒத்துப் போவார்கள்.... ஆனா சிலர் எல்லோரும் குடி இருக்கும்போதும்.. எந்நேரமும் புத்தகமும் கையுமாக.. இரு இதை முடித்து விட்டு வருகிறேன் என, ஏதோ எக்ஸ்சாம் க்கு படிப்பதுபோல இருப்போரும் உண்டு .. அப்படியான வீடுகளில் புத்தகத்தையோ.. ஃபோனையோ எடுத்துக் கொழுத்தத்தானே மனம் வரும்... அதை ஆரும் புரிவதில்லை.. என் புத்தகத்தை ஏசுகிறார்கள் என்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

நெ.த. said...

//ஃபோனையோ எடுத்துக் கொழுத்தத்தானே மனம் வரும்// - இதுதான் இயல்பான மனநிலை. இதைப் பற்றி என் அனுபவத்தை எழுதத் துணியலை. நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் சிலர் செய்யும்போது அவ்வளவு வெறுப்பும், ஆத்திரமும், கோபமும் வரும். இதில் புத்தகங்கள் என்ன, செல்போன் என்ன, கடவுள் படங்கள் என்ன.. அனைத்தும் ஒன்றுதான்.

கீசா மேடத்துக்குத் தெரியாதா? தியாகையர் எப்போதும் ராமர் சிலையை வைத்துப் பூஜித்துக்கொண்டிருந்ததால், ராமர் சிலையையே ஆற்றில் அவரது அண்ணா வீசி எறிந்துவிட்டார் என்று..

ஞானி:) athira said...

@கீசாக்கா
// இப்போவே நம்ம ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்கார் என்னிடம். உன்னோட புத்தகங்களுக்கு உயில் எழுதி வைச்சுடுனு! ஏற்கெனவே வரிசை கட்டி நிக்கறாங்க எனக்குக் கொடு, உனக்குக் கொடுனு! யாருக்குனு உயில் எழுதறது? :)))))) ஆனால் எனக்கப்புறம் படிக்க இல்லை இல்லை, புரட்டிக் கூடப் பார்க்க ஆள் இல்லை! :))))//

என் அபிப்பிராயம் நீங்க படித்து முடித்திட்டால், ஓவராக இருபின்.. அதை விரும்புவோருக்கு இப்பவே குடுத்து அவர்கள படித்து ஆனந்தப் படுவதைப் பார்த்தால் அதிலும் ஒரு மகிழ்ச்சிதானே?.. எதுக்கு அடுக்கி அடுக்கி வச்சிருக்கிறீங்க?:).. நான் அடுக்கி வச்சிருக்கிறேன்ன் பிக்கோஸ் அது ஒரு 10/15 புத்தகங்கள்தான் இருக்கும் .. இன்னும் வாசிச்சு முடிக்கவில்லையாக்கும்:))... ஹா ஹா ஹா. அது தவிர.. விகடன் குமுதம் ஒரு 15/20 வச்சிருக்கிறேன்ன் அதுவும் இடைக்கிடை திறந்து பார்ப்பதுண்டு:)). கிடைக்கும் நேரத்தில் ஏதாவது எழுதத்தோணும்.. இல்லை எனில் கொம்பியூட்டரில் இருக்கிறேன்ன் அப்போ எப்போ புத்தகம் படிப்பது ஜொள்ளுங்கோ?:))

ஸ்ரீராம். said...

// என் அபிப்பிராயம் நீங்க படித்து முடித்திட்டால், ஓவராக இருபின்.. அதை விரும்புவோருக்கு இப்பவே குடுத்து அவர்கள படித்து ஆனந்தப் படுவதைப் பார்த்தால் அதிலும் ஒரு மகிழ்ச்சிதானே?.. எதுக்கு அடுக்கி அடுக்கி வச்சிருக்கிறீங்க?://

அதிரா.... ப்ராக்டிகலா சொல்றீங்க... நானும் நிறைய சேர்த்துதான் வச்சிருக்கேன். கொடுக்கும் பக்குவம் எனக்கு வரவில்லை.

ஞானி:) athira said...

@நெ.த//

நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் சிலர் செய்யும்போது அவ்வளவு வெறுப்பும்//

இந்த வசனம் என்னைப்பொறுத்து தப்பு என்பேன். அதாவது எனக்குப் பிடிக்கவில்லையாயினும் என் கணவருக்குப் பிடிச்சிருந்தால் அதுக்காக ஒத்துப் போகத்தானே வேணும், ஆனா நான் சொல்ல வந்தது.. ஒரு விசயத்தில் சிலர் எந்நேரமும் பைத்தியத்தனமாக இருக்கும்போதுதான் அது எரிச்சலைக் குடுக்கும்... இப்போ என்னைப்போல குடும்பப் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.. புளொக் எழுதுகிறோம் என்பதற்காக.. எல்லோரும் வீட்டிலிருக்கும் விடுமுறையிலும் கரெக்ட்டா சமையல், ரீ போட்டுக் குடுத்தால் அது போதுமோ?.. கூடி இருக்கும்போது அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. எதுக்கு முக்கியத்துவம் குடுக்கிறொம் என்பதைப் பொறுத்தே, அடுத்தவருக்கு எரிச்சல் ஆரம்பமாகும் ஹா ஹா ஹா..:))...

Thulasidharan V Thillaiakathu said...

நெத உங்க கருத்துக்கு பதில் சொல்ல நினைத்து வந்தால் ஹையோ கீதாக்கா ஹைஃபைவ்!! ஹைஃபைவ்....அப்படியே அப்படியே சொல்லிட்டீங்க கீதாக்கா மிக்க நன்றி எனக்கு அடிக்கும் வேலை விட்டது...ஹா ஹா ஹா
அதோடு சேர்த்து .....
கொஞ்சமேனும் புரிதல் வேண்டும் நெல்லை. அது இல்லை என்றால் அது கணவன் ஆனாலும் சரி, மனைவி ஆனாலும் சரி பல சமயங்களில் குறிப்பாக 50 ஐ எட்டும் நிலையில் வாழ்வில் ஒரு சலிப்பு வரத்தான் செய்யும். இத்தனை குடும்பத்திற்குச் செய்தும் நம் தனிப்பட்ட ஆசை இப்படி முடங்கிப் போகிறதே என்று. குடும்பம் என்பது மிக முக்கியம் தான் அதற்காக நமது தனிப்பட்ட ஆசையையும் ஒரேஅடியாகத் தொலைத்து வாழ்வது என்பது பலருக்கும் மன ரீதியான பிரச்சனைகளைக் கொண்டுவருகிறது. இது வாசிப்பு புத்தகம் என்றில்லை. பிற தொழிகள், பிற திறமைகளுக்கும் அடங்கும். சிலர் அட்ஜஸ்ட் செய்து இயந்திர கதியில் வாழ்வார்களாக இருக்கலாம்...ஆனால் சிலருக்கு மன அயற்சி தோன்றுகிறது. அப்படி சப்போர்ட் கிடைக்காத போதுதான் சில கணவன்மார்களும் சரி மனைவிமார்களும் சரி தடம் புரண்டு போகும் நிலையும் ஏற்படுகிறது. இப்படியான அனுபவங்களை நான் பலரிடமும் கேட்டிருக்கிறேன். ஏன் கணவன் மனைவி இருவருமே கவுன்ஸலிங்கிற்கு வருவார்கள். ஒரு சிலரை மீண்டும் சேர்த்து வைக்க முடிந்திருக்கிறது. ஒரு சிலர் அப்படியும் பிரிந்தும்....கணவன் மனைவி என்றில்லை, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் என்றும்....என் தூரத்துச் சொந்தம் ..கணவன் மனைவி இருவருமே கவுன்ஸலர்கள்.

எனவே கொஞ்சமேனும் புரிதல் அவசியம்.

கீதா

Geetha Sambasivam said...

//கீசா மேடத்துக்குத் தெரியாதா? தியாகையர் எப்போதும் ராமர் சிலையை வைத்துப் பூஜித்துக்கொண்டிருந்ததால், ராமர் சிலையையே ஆற்றில் அவரது அண்ணா வீசி எறிந்துவிட்டார் என்று..// அப்படினு பரவி விட்டது. ஆனால் இது உண்மை இல்லை! :))))

புத்தகங்களைக் கொளுத்துவதும், கிழித்துப் போடுவதும் நானும் அனுபவிச்சிருக்கேன். இங்கே சொல்ல வேண்டாம்னு தான் சொல்லலை! பக்கத்து வீட்டுப் புத்தகம்! அதைக் கிழிச்சும், எரிச்சும் போட்டிருக்காங்க! :( அதையும் மீறித்தான் புத்தகம் படித்தல் (யாருக்கும் தொந்திரவில்லாமல் தான்) புத்தகம் சேர்த்தல், (முக்கியமான புத்தகங்கள் மட்டும்)

ஞானி:) athira said...

//அதிரா.... ப்ராக்டிகலா சொல்றீங்க... நானும் நிறைய சேர்த்துதான் வச்சிருக்கேன். கொடுக்கும் பக்குவம் எனக்கு வரவில்லை.//

கட்டாயம் கொடுக்கோணும் என்றில்லை ஸ்ரீராம், நான் சொல்வது தேவையில்லாமல் இடத்தை மினக்கெடுத்திக் கொண்டும், வீட்டிலுள்ளோருக்கு எரிச்சலைக் குடுக்கும் விதமாக அடுக்கி வச்சிருப்பதைக் காட்டிலும்.. நமக்கு நன்கு பிடித்ததை செலக்ட் பண்ணி வச்சுக் கொண்டு மிகுதியை லைபிரரி அப்படிக் குடுக்கலாமெல்லோ..

Geetha Sambasivam said...

//என் அபிப்பிராயம் நீங்க படித்து முடித்திட்டால், ஓவராக இருபின்.. அதை விரும்புவோருக்கு இப்பவே குடுத்து அவர்கள படித்து ஆனந்தப் படுவதைப் பார்த்தால் அதிலும் ஒரு மகிழ்ச்சிதானே?.. எதுக்கு அடுக்கி அடுக்கி வச்சிருக்கிறீங்க?:).. // அடுக்கி வைக்கும் அளவுக்குப்புத்தகங்கள் இல்லை! :))))

Geetha Sambasivam said...

//கூடி இருக்கும்போது அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. எதுக்கு முக்கியத்துவம் குடுக்கிறொம் என்பதைப் பொறுத்தே, அடுத்தவருக்கு எரிச்சல் ஆரம்பமாகும் ஹா ஹா ஹா..:))...// நூற்றுக்கு நூறு சரி! அதிரடியைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வீடு, வீட்டு மனிதர்கள், வீட்டு வேலைகள் அதற்குப் பின்னர் தான் யாருக்கும் தொந்திரவு இல்லாத நேரம் ஆன மதியம் 1 மணியில் இருந்து 3 அல்லது நாலு மணி வரை! மற்ற நேரங்களில் கணினியைத் திறந்தாலும் பெரும்பாலும் சொந்த வேலைக்காக இருக்கும். அல்லது முக்கியமான மடல்கள் இருக்கானு பார்க்க! என்னிக்காவது இரவு எட்டு மணிக்கு மேல் கணினியைத் திறக்க நேர்ந்தால் வந்த வேலையை முடித்த பின்னர் கொஞ்சம் அக்கம்பக்கம் மேய்வேன். ஏனெனில் அது என் நேரம்!

Thulasidharan V Thillaiakathu said...

படித்து முடித்து சேர்ந்ததை தனக்கு வயதான போது எல்லோருக்கும் யார் யாருக்கு எது இன்ட்ரெஸ்டோ அப்படி கொடுத்துவிட்டார். இது நல்லது என்று தோன்றியது எனக்கு. அவர் இப்போது இல்லை...

கீதா

Geetha Sambasivam said...

எனக்குப் பிடிக்காத வழக்கத்தை என் கணவர் செய்தால் எனக்குப் பிடிக்கலை என்பதோடு நிறுத்திக் கொள்வேன். அதன் பின்னர் அதைத் தொடர்வதும், தொடராமல் இருப்பதும் அவர் இஷ்டம்! அதே போல் தான் அவருக்கு நான் ப்ளாக் எழுதுவது பிடிக்கலைனா நான் எப்போவோ நிறுத்தி இருப்பேன். ஆனால் அதன் மூலம் எனக்கு மனசளவிலும் மாறுதல் கிடைப்பதை அறிந்து கொண்ட அவர் இதைத் தடுத்ததில்லை. இன்று என்னுடைய வலை உலக நண்பர்கள் பலரும் அவருக்கும் நண்பர்களே! இங்கே யாரேனும் வந்தால் அவர்களை அவரே விரும்பி வீட்டுக்கு அழைக்கவும் சொல்லுவார்.

Thulasidharan V Thillaiakathu said...

//கூடி இருக்கும்போது அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. எதுக்கு முக்கியத்துவம் குடுக்கிறொம் என்பதைப் பொறுத்தே, அடுத்தவருக்கு எரிச்சல் ஆரம்பமாகும் ஹா ஹா ஹா..:))...// //

யெச்சு ஹைஃபைவ் அதிரா

கீதா

Geetha Sambasivam said...

//நமக்கு நன்கு பிடித்ததை செலக்ட் பண்ணி வச்சுக் கொண்டு மிகுதியை லைபிரரி அப்படிக் குடுக்கலாமெல்லோ..// அதே, அதே, சபாபதே! சென்னை அம்பத்தூரில் இருந்து கிளம்புகையில் எனக்குப் பிடித்த புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு பல புத்தகங்களையும் என் தம்பியிடம் லென்டிங் லைப்ரரிக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டேன். அதில் சித்தப்பா கொடுத்த ஜெயமோகன் புத்தகங்கள் மட்டும் ஒரு பத்துப்பதினைந்து இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

ச்ச்ச்சும்மா நானும் புளொக் எழுதுறேன் என எழுதாமல் கொஞ்சம் ரசனையோடு அழகுபடுத்தி வீட்டுக்கு பூமரம்.. அசோகா:) எல்லாம் வச்சால் வருவோருக்கு மனதுக்கு இதமா இருக்குமெல்லோ கர்ர்ர்ர்:))//

கரீக்டு அதிரா....இதுக்கும் ஹைஃபைவ்! எதையும் நாம் கொஞ்சம் ரசனையோடு செய்யும் போது அது நம் மனதை அப்படியே ஆனந்தபப்டுத்தும்...மொனொடொனி இருக்காது....எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது.......

கீதா

Geetha Sambasivam said...

என்னைப் பொறுத்தவரை புடைவைகளே அதிகம் இருந்தால் தானம் செய்து விடுவேன். அம்பத்தூரிலும் அப்படிக் கொடுத்திருக்கேன். இங்கேயும் கொடுத்திருக்கேன்! கொடுத்துக் கொண்டும் இருக்கேன். ஒரு அளவுக்கு மேல் நமக்குத் தேவை இல்லையே! சின்ன வயசில் இருந்தே துணிகள், நான் படித்த புத்தகங்கள் னு கொடுத்தது உண்டு. நான் இந்த வருஷம் படிக்கும் புத்தகம் அடுத்த வருஷம் அதே வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் கொடுத்துடுவேன்.

ஞானி:) athira said...

//ஸ்ரீராம். said...
// எங்கள் வீட்டில் அனைவரும் புத்தகப் பிரியர்கள்.
அதனால் யாருக்கும் தொந்தரவில்லை.//

எங்கள் வீட்டில்... அதாவது இப்போதைய என் வீட்டில் அப்படி இல்லை வல்லிம்மா...

வருத்த்த்த்த்த்...தமான விஷயம்.//

ஹா ஹா ஹா இதில் வருத்தப்பட என்ன இருக்கு:) நான் ஒரு தெக்கினிக்கி:) ஜொள்றேன்ன்.. அதாவது ஒரு புத்தகம் வாசித்து முடிச்சால்.. ஒரு தோடு வாங்கித்தருவேன்:)) ரெண்டு புத்தகம் வாசித்து முடித்தால் ஒரு டயமனட் நெக்லெஸ்:)) இப்படி ரேட் பேசி வாசிக்கப் பண்ணலாமே:)).. ஹா ஹா ஹா.

இதில இன்னொரு பிரச்சனை.. என் கணவரும் ஒரு புத்தகப் பிரியர்.. அவரது குணம் லைபிரரியிலோ பழைய கடையிலொ வாங்குவதில்லை.. தேடி பார்க்க அலுப்பு:).. எல்லாமே ஓன்லைனில்:)).. ரகசியமாக ஓடர் பண்ணிப்போட்டு.. எனக்கு ஐஸ் வைப்பார்ர் பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் என்ன வேணும் சொல்லுங்கொ வாங்கி வருவேன் ஆனா இன்று ஒரு பார்சல் வரும் வாங்கி வைக்கோணும் என்பார்ர்:) இப்படி பெமிஷன் கேட்கும்போது எப்படி கோபிப்பது?:)... இன்னொன்று 20 பவுண்டுகள் குடுத்து வாங்கினால் அதை இருபது நாளாவது வைத்துப் படிக்க வேண்டாமோ?:) இரண்டு நாளில் முடிச்சிடுவார்:)) .. என்னை ஆரும் பேய்க்காட முடியாதெல்லோ?:).. இவர் ஒழுங்கா வாசிச்சாரோ இல்ல மேலோட்டமோ என இடைக்கிடை செக் பண்ணுவேன்ன்:)) நடு நடுவே எடுத்து கேள்வி கேட்டுப் பார்ப்பேன் கரெக்ட்டாப் பதில் சொல்லித் தப்பிடுவார் ஹா ஹா ஹா:)... இப்போ என்னைப் பாருங்கோ பொன்னியின் செல்வனை ரெண்டு வருசமா வச்சு வாசிக்கிறேன்ன்..:) அப்போ குடுத்த காசுக்கு ஒரு பெருமை எல்லோ ஹையோ அதாரது கலெடுக்கிறது:)) ஹா ஹா ஹா ஆண்டவா விரைவில பாகம் ஒன்றாவது முடிச்சிடோணும்:))

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் உங்களுக்கு வயசாகிடுச்சா?!! வயசாகலை ஸ்ரீராம்....புத்தகம் கொடுப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கு ஸ்ரீராம்....அதுவரை எஞ்சாய்!!!!

கீதா

KILLERGEE Devakottai said...

நமது நூலை கொடுப்பது முக்கியமல்ல, வாங்கும் நபர் அதை பொக்கிஷமாக நினைப்பவராக இருப்பது அவசியம்.

அப்படி இல்லாதபோது நூலகத்துக்கு கொடுத்தாலும் நமது பேரும் இருக்கும், மேலும் பலர் படிப்பார்கள்.

Geetha Sambasivam said...

அதிரடி, நானும் அப்படித் தான்,புத்தகத்தை ஒரே நாள் அல்லது இரண்டே நாட்களில் முடிச்சுடுவேன். அப்புறமாப் புரட்டிப்பார்த்து ரிவிஷன் கொடுப்பேன்.

பொன்னியின் செல்வனைக் குறைந்தது லக்ஷம் முறை படிச்சிருப்பேன். நீங்க இன்னும் ஒருமுறை கூடப் படிக்கலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஞானி:) athira said...

//Geetha Sambasivam said...
என்னைப் பொறுத்தவரை புடைவைகளே அதிகம் இருந்தால் தானம் செய்து விடுவேன்.//

கீசாக்கா புடவைகள் இப்போ ஒருதடவை மட்டுமே உடுக்கிறார்கள்.. 2ம் தடவை உடுத்தால் அருகில் இருப்பவர் கேட்கிறாராம் இது அன்றைய கல்யாண வீட்டுக்கு கட்டிய சாறி எல்லோ என ஹையொ ஹையோ அதனாலேயே கட்டியதை திரும்பக் கட்டுவதில்லை...

அதாவது சொந்த பந்தத்துக்குள் திரும்ப கொண்டாட்டம் எனில் ஒரே சனம் தானே திரும்ப வருவார்கள் அப்போ கட்ட முடியாது.. ஆனா சொந்தத்தில் ஒருக்கா.. நட்புக்குள் ஒருக்கா இப்படிக் கட்டலாமாம்:))

ஏன் கீசாக்கா? சாறிகளைக் குடுத்திடுறீங்க? அப்படியே நகைகளை அதிராவுக்குக் குடுக்கலாமெல்லோ?:)

ஞானி:) athira said...

//Geetha Sambasivam said...
அதிரடி, நானும் அப்படித் தான்,புத்தகத்தை ஒரே நாள் அல்லது இரண்டே நாட்களில் முடிச்சுடுவேன். அப்புறமாப் புரட்டிப்பார்த்து ரிவிஷன் கொடுப்பேன். //

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆனா நானும் சில புத்தகம் பல தடவைகள் ரிப்பீட்டில் படிச்சிருக்கிறேன்.. இன்னும் படிப்பேன் அதுபற்றி இப்போ பேசமாட்டேன்ன் புளொக்கில் எழுதோணும் என இருக்கிறேன்ன்..

///பொன்னியின் செல்வனைக் குறைந்தது லக்ஷம் முறை படிச்சிருப்பேன். நீங்க இன்னும் ஒருமுறை கூடப் படிக்கலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

அது என்னமோ கிசாக்கா சாவதற்குள் படிச்சு முடிக்கோணும் எனக் கங்கணம் கட்டியிருக்கிறேன் ஆனா வாசிக்க மனம் பொறுமை இழக்குது.. எனக்கு அரச கதைகள் பெரிசா பிடிக்காது.

Geetha Sambasivam said...

//கீசாக்கா புடவைகள் இப்போ ஒருதடவை மட்டுமே உடுக்கிறார்கள்.. 2ம் தடவை உடுத்தால் அருகில் இருப்பவர் கேட்கிறாராம் இது அன்றைய கல்யாண வீட்டுக்கு கட்டிய சாறி எல்லோ என ஹையொ ஹையோ அதனாலேயே கட்டியதை திரும்பக் கட்டுவதில்லை...// அப்போ ஒரு தரம் கட்டிட்டுத் தூக்கிப் போட்டுடுவாங்களா? ஙே!!!!!!!!!!!!!!!!!! :)))) 2 தரம் என்ன பத்துத் தரம் கூடக்கட்டி இருக்கேன்! சாரிகளை ஏன் கொடுக்கிறேன் என்றால் என்ன சொல்வது? இல்லாதவங்களைப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமா இருக்கும். அவங்களுக்கும் நல்ல சேலை உடுத்த ஆசை இருக்குமே! கொஞ்சமானும் நல்லா இருக்கும் புடைவைகளைத் தான் கொடுக்க வைச்சிருப்பேன். கிழிந்தோ, பழசோ ஆனால் அதைக் கொடுப்பதில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா இன்னுமா பொன்னியின் செல்வன் தொடரலை....ஆஆஆஆ எப்படி க்கீழே வைத்தீர்கள்!!! நான் அந்தப் புத்தகத்தை என் கல்லூரி சேர்ந்த சமயத்தில் என் கஸின் லைப்ரரியிலிருந்து எடுத்துவ் அந்திருந்தாள் நானும் என் பெரிய கஸினும்தான் வாசிப்போம். அவள் வாசித்தால் பாட்டி ஒன்றும் சொல்ல மாட்டார் ஏனென்றால் அவள் பயங்கர ப்ரில்லியன்ட். எப்பவும் ஃபர்ஸ்ட். நானோ படு வீக் படிப்பில். மதில் மேல் பூனையாகப் பாஸாவேன். சில சமயம் ஃபெயிலும் ஆவேன். அதனால் நான் வாசித்தால் பாட்டிக்குக் கோபம் வரும். விடுமுறையில் கூட ஹிந்தி வகுப்பு அது இது என்று சேர்த்துவிடுவார் என் மாமா எங்கள் எல்லோரையும். ஆனால் எனக்குப் பிடித்த பாட்டு, புத்தகம் வாசிப்பது மட்டும் கூடாது என்பார்கள் அதனால் நான் கள்ளத்தனமாகப் புத்தகம் வாசிப்பேன் அப்படித்தான் பொசெவும் வாசித்தேன். கீழே வைக்கவே மனசு வராது. அப்பத்தான் பாட்டி கூப்பிடுவாங்க..என்னை வந்து அடுப்பு சாணி போட்டு மெழுகு, முற்றம் ப்ளீச்சிங்க் போட்டு க்ளீன் பண்ணு என்று. கோபம் வரும் ஆனால் பாட்டி சொல்லைத் தட்ட முடியாது. செய்யணும்..

அப்படிச் செய்யும் போது வந்தியத்தேவன், குந்தவை எல்லாம் மனக்கண்ணில் வந்து போவார்கள்...அப்படி வாசித்து முடித்துவிட்டேன்...

கீதா

ஞானி:) athira said...

//கரீக்டு அதிரா....இதுக்கும் ஹைஃபைவ்! எதையும் நாம் கொஞ்சம் ரசனையோடு செய்யும் போது அது நம் மனதை அப்படியே ஆனந்தபப்டுத்தும்...மொனொடொனி இருக்காது....எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது.......

கீதா//

என் கருத்தும் அதுதான் கீதா.. 1-செய் அல்லது செத்துப்போ:), 2-செய்வன திருந்தச் செய்:)) இது இரண்டும் எனக்கு இருக்கோணும்:))

ஞானி:) athira said...

கீசாக்கா.. எனக்கு இங்கு சாறி கட்டும் சந்தர்பம் இல்லை... கனடா போனால் மட்டுமே கட்டுவேன். அங்குள்ளோரின் புலம்பலே இது.. உண்மையில் விலை கூடிய சாறிகளை எல்லாம்.. ஒவ்வொரு இடத்துக்கு மட்டுமே கட்டுகிறார்கள்.. இப்போ நெருங்கிய உறவில் கட்டினால் பின்பு நட்புக்குள் புன்பு கொயிலுக்கு இப்படி ஒரு தடவை பார்த்தோரின் கண்ணுக்கு தெரியாமல் கட்டிவிட்டு, பின்பு உறவுக்குள் பரிமாற்றம்[சகொதரத்துக்குள்] செய்வோரும் உண்டு.. முடிவில் ஊருக்கு அனுப்பப்படுகிறது:)) ஹா ஹா ஹா.. நாடு ரொம்பக் கெட்டுப் போச்சு கீசாக்கா:))

ஸ்ரீராம். said...

// ஸ்ரீராம் உங்களுக்கு வயசாகிடுச்சா?!! வயசாகலை ஸ்ரீராம்....புத்தகம் கொடுப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கு ஸ்ரீராம்....அதுவரை எஞ்சாய்!!!!//

இது நல்லாயிருக்கு கீதா... கேட்பதற்கு திருப்தியாயிருக்கு!

ஸ்ரீராம். said...

// நமது நூலை கொடுப்பது முக்கியமல்ல, வாங்கும் நபர் அதை பொக்கிஷமாக நினைப்பவராக இருப்பது அவசியம். //

கில்லர்ஜி.. நமக்கு வேண்டாம்னு அதைக் கொடுத்த பிகு அவர் அதை என்ன செய்தால் என்ன என்பது ஒரு கேள்வி... மேலும் அப்படி நினைப்பவர்கள்தான் உங்களிடம் புத்தகம் கேட்பார்கள்.

ஸ்ரீராம். said...

// பொன்னியின் செல்வனைக் குறைந்தது லக்ஷம் முறை படிச்சிருப்பேன்.//

கீதாக்கா... கர்ர்ர்ர்ர்ர்ர்... பேய்காட்டுவதற்கு ஒரு அளவு இருக்கோணும்... என்ன அதிரா!

ஸ்ரீராம். said...

அதிரா..

// அதாவது ஒரு புத்தகம் வாசித்து முடிச்சால்.. ஒரு தோடு வாங்கித்தருவேன்:)) ரெண்டு புத்தகம் வாசித்து முடித்தால் ஒரு டயமனட் நெக்லெஸ்:)) இப்படி ரேட் பேசி வாசிக்கப் பண்ணலாமே:)).. ஹா ஹா ஹா.//

அவங்க புத்தகமே படிக்க வேணாம்!!! அது சரி, ஒரு சுவாரஸ்யத்துக்காகக் கேட்கிறேன்.. உங்க பாஸ் என்ன மாதிரி புத்தகங்கள் வாங்குவார்? எல்லாம் வேலை சம்பந்தமான புத்தகங்களோ? என்னென்ன புத்தகங்கள்?

ஞானி:) athira said...

@ கீதா, இலங்கையில் இருந்தபோது சில கடைகளில் வாடகைக்கு, மற்றும் லைபிரரியில் என எடுத்து வந்து நிறையக் கதைகள் வாசித்திருக்கிறேன் ஆனா பொன்னியின் செல்வன் அப்போ படிக்க நினைக்கவில்லை ஆசை மட்டும் இருந்தது:)).. நானும் ரெளடிதான்:) ரேஞ் க்கு .. நானும் பொன்னியின் செல்வன் வாசிச்சிட்டேன் எனச் சொலோணும்:) சொல்லுவேன் ஒருநாளைக்கு:)).. அது என்னமோ பொ.செ மட்டும் தொடர்ந்து வாசிக்க முடியுதேயில்லை.. :(

ஸ்ரீராம். said...

// நானும் பொன்னியின் செல்வன் வாசிச்சிட்டேன் எனச் சொலோணும்:) சொல்லுவேன் ஒருநாளைக்கு:)).. அது என்னமோ பொ.செ மட்டும் தொடர்ந்து வாசிக்க முடியுதேயில்லை..//

அதிரா... முடியலைன்னா விட்டுடுங்க... சங்ககாரா வாசிச்சிருக்கீங்களோ? சாண்டில்யன் கதைகள் வாசிச்சிருக்கீங்களோ? விக்ரமன்? ஜெகசிற்பியன்?

ஞானி:) athira said...

//ஸ்ரீராம். said...
// பொன்னியின் செல்வனைக் குறைந்தது லக்ஷம் முறை படிச்சிருப்பேன்.//

கீதாக்கா... கர்ர்ர்ர்ர்ர்ர்... பேய்காட்டுவதற்கு ஒரு அளவு இருக்கோணும்... என்ன அதிரா!///

ஹா ஹா ஹா ஒரு வருடத்தில 365 நாட்கள்.. அப்போ லட்சம் நாட்கள் எனில் எத்தனை வருடம் எடுக்கும்?:) பொன்னியின் செல்வன் எனில் எப்படியும் ஒரு 15 வயதின் பின்பே வாசிக்கும் ஆர்வம் வரும்.. இப்போ கணக்கெடுத்தால் கீசாக்காவுக்கு எப்படியும் 90 வயசு தாண்டுதே ஹ ஹா ஹா:)) யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈ.. இனி கொயந்தை எனச் சொல்ல முடியாது:)).

Angel said...

//ஆயிரம் சொல்லுங்க. ஒரு புத்தகத்தைக் கையில் பிடிக்கிற மகிழ்ச்சி.. இந்த நவீன காலத்தில் கிடைக்கல எனக்கு"
//

அப்படியே வழிமொழிகிறேன் .ஒரு புது புத்தகத்தை வாங்கி வீட்டின் விருப்பமான இடத்தில ஒரு காபி ப்ளஸ் பிடித்த ஸ்னாக்ஸ்சுடன் அமர்ந்து புத்தகத்தை திறந்து கண்ணை மூடி புது பேப்பர் வாசனையை முகர்ந்து முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கிராறாற்போல் வருமா ??


ஞானி:) athira said...

@ஸ்ரீராம்

//எல்லாம் வேலை சம்பந்தமான புத்தகங்களோ? என்னென்ன புத்தகங்கள்?//
அது ஸ்ரீராம் நோர்மல் கதைப்புத்தகம் போலில்லாமல்.. வேலையுடன் தொடர்புடைய கதைகள்.. அதிகம் பழைய நாட்டுச் சரித்திரங்கள்/ யுத்தங்கள்.. வேல்ட் வோர்.. வாழ்க்கை முறைகள்.. .. [கூடுதலானவை எதையாவது ஆராட்சி செய்வதைப்போலவே இருக்கும்.. கர்ர்ர்ர்:)]... ஹா ஹா ஹா.

ஸ்ரீராம். said...

// விருப்பமான இடத்தில ஒரு காபி ப்ளஸ் பிடித்த ஸ்னாக்ஸ்சுடன் அமர்ந்து புத்தகத்தை திறந்து கண்ணை மூடி //

ஏஞ்சல்.. அப்புறம் எப்படி வாசிக்கிறது?!! அப்படியே தூங்கிடலாம்!

ஸ்ரீராம். said...

அதிரா..

// வேலையுடன் தொடர்புடைய கதைகள்.. அதிகம் பழைய நாட்டுச் சரித்திரங்கள்/ யுத்தங்கள்.. வேல்ட் வோர்.. வாழ்க்கை முறைகள்.. ../

வேலையுடன் தொடர்புடைய என்றால் மருத்துவப் புத்தகங்களோ? பழைய நாட்டு சரித்திரங்கள், யுத்தங்கள் சுவாரஸ்யமாய் இருக்கும்!

ஞானி:) athira said...

@ஸ்ரீராம்
அதிரா... முடியலைன்னா விட்டுடுங்க... சங்ககாரா வாசிச்சிருக்கீங்களோ? சாண்டில்யன் கதைகள் வாசிச்சிருக்கீங்களோ? விக்ரமன்? ஜெகசிற்பியன்?//

இல்ல ஸ்ரீராம்.. இன்னும் கொஞ்சக் காலம் போனால் பிள்ளைகளுக்கு ஸ்கூல் படிப்பு முடிஞ்சிட்டால் எப்படியும் நேரம் கூடுதலாகக் கிடைக்குமெல்லோ அப்போ வாசிக்கலாம் என நினைக்கிறேன்:)).

சங்ககாரா- இது இப்போதான் கேள்விப்படுகிறேன். சாண்டில்யன் சிலது படித்திருக்கிறேன்ன்.. பார்த்தீபன் கனவும் பாதிக்குக் கிட்ட படிச்சிருக்கிறேன் முடிக்கவில்லை:(.

நான் பெரிதாக நிறையப் புத்தகங்கள் படிக்கவில்லை ஸ்ரீராம்.. படித்து முடிக்கும் காலத்திலேயே இண்டநெட் வரத் தொடங்கி விட்டது.. அதனால கொம்பியூட்டரிலேயே கவனம் திரும்பி விட்டது அதுதான் உண்மை.

வெளி நாட்டுக்கு வந்து தனிமை அதிகமானபோது... இங்கு தமிழ்ப்புத்தகக் கடைகள் இருக்கவில்லை.. அப்போ நெட்டில் தேடுங்கோ தமிழில் கதைக்கலாம் எனக் கணவர் சொல்லித்தந்தார்.. பயந்து பயந்து கால் வைத்தேன்.. அப்படியே சில காலம் நெட்டில் வாழ்கை ஓடி புளொக் ஆரம்பமாகி:)).. இதில் எங்கே புத்தகம் படிக்க நேரம்?:))

ஞானி:) athira said...

//வேலையுடன் தொடர்புடைய என்றால் மருத்துவப் புத்தகங்களோ? //

அதேதான் ஸ்ரீராம்..

ஞானி:) athira said...

//ஸ்ரீராம். said...
// விருப்பமான இடத்தில ஒரு காபி ப்ளஸ் பிடித்த ஸ்னாக்ஸ்சுடன் அமர்ந்து புத்தகத்தை திறந்து கண்ணை மூடி //

ஏஞ்சல்.. அப்புறம் எப்படி வாசிக்கிறது?!! அப்படியே தூங்கிடலாம்!///

ஹா ஹா ஹா:))

நெ.த. said...

@ கீதா ரங்கன் - //புத்தகம் கொடுப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கு ஸ்ரீராம்....அதுவரை எஞ்சாய்!!!! // - இது அவ்வளவு அர்த்தமுள்ளதாத் தெரியலை (நானும் புத்தகத்தைக் கொடுக்க ரொம்பவும் யோசிப்பேன்). நமக்குத் தேவையில்லாதபோது, அந்தப் புத்தகங்களை வாங்கிக்கொள்ள யார் இருப்பா? நான் ஒரு புத்தகத்தை இரண்டு அல்லது மூன்று முறை வாசிப்பேன் (நல்லா இருந்தா. ஒவ்வொரு முறைக்கும் சில மாதங்கள்/வருடம் இடைவெளி இருக்கும்). அதனாலதான் உடனே கொடுக்க மனம் வருவதில்லை.

எனக்கு ஒரு ஐடியா இருக்கு. ஒரு புத்தகத்தை வாசித்தவுடன், வாங்கின விலைக்கு பாதியில் அதில் ஆர்வம் உள்ள அடுத்தவர்களிடம் கொடுத்துவிடலாம் இதனால் இன்னொருவருக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும், நம்மிடமும் அதிகம் சேராது.

நான் வொரேஷியஸ் ரீடர். 4 வாரத்துக்குள் 1500 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். அதற்குள் ஒருமுறை படித்துமுடித்துவிட்டேன். கட்டுப்படியாகுமா?

ஞானி:) athira said...

//ஸ்ரீராம். said...
// ஸ்ரீராம் உங்களுக்கு வயசாகிடுச்சா?!! வயசாகலை ஸ்ரீராம்....புத்தகம் கொடுப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கு ஸ்ரீராம்....அதுவரை எஞ்சாய்!!!!//

இது நல்லாயிருக்கு கீதா... கேட்பதற்கு திருப்தியாயிருக்கு!//

ஹா ஹா ஹா கீசாக்காவுக்கு வயசானால்தானே ஸ்ரீராமுக்கு வயசாகும்:)) அதனால என்ன கவலை:)).. இதேபோல அஞ்சுவுக்கு வயசானால் தான் அதிராவுக்கு வயசாகும்:))

Angel said...

/அதிரா... முடியலைன்னா விட்டுடுங்க... சங்ககாரா வாசிச்சிருக்கீங்களோ? சாண்டில்யன் கதைகள் வாசிச்சிருக்கீங்களோ? விக்ரமன்? ஜெகசிற்பியன்?//

கர்ர்ர் அவங்க 16 வயசுக்கேற்ற மாதிரி ஜெமோ ,ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஹாரு :)), இப்டிலாம் கேட்கணும்


ஞானி:) athira said...

//நான் வொரேஷியஸ் ரீடர். 4 வாரத்துக்குள் 1500 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். அதற்குள் ஒருமுறை படித்துமுடித்துவிட்டேன். கட்டுப்படியாகுமா?//

உண்மையில் நெ.தமிழன் புத்தகங்களுக்கு அதிக பணம் செலவாகுது.. 10 ரூபா 20 ரூபாதானே என நினைச்சாலும் ஒரு வருடத்தில் கணக்குப் பார்த்தால் நிறையப் பணம் தானே... ஆனா என்ன பண்ணுவது விருப்பம் எனில் வாங்கத்தானே வேணும்..

விற்க முடிஞ்சால் விற்கலாமே.. ஆனா சும்மா வாங்கத்தான் ஆட்கள் இருப்பார்கள்.. காசுக்கு எனில் யாரும் முன்வரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்ன்.. இங்கு பெரும்பாலும் சரட்டிக்கே கட்டிக் குடுக்கிறோம்.. குடுக்கிறார்கள். வெளிநாடுகளில் ஃபோன் கூட அப்படித்தானே ஆகிடுது... எதுவும் வாங்கும்போது ஆனைவிலை.. ஆனா விற்கும்போது பூனை விலைகூடக் கிடைக்காது.. அப்போ அதை விட சும்மா குடுத்திடலாம் என நினைப்பேன்.

இப்போ மூத்தவர் தான் ஈபே மூலம் சில ஃபோன்கள் விற்றார்:)).. அது மினக்கெட்டுச் செய்யோணுமெல்லோ. அதிலும் ஒரு ஐ ஃபோன் 200 பவுண்டுகளுக்கு ஒருவர் வாங்கினார்.. ஆனா அது ஏதோ அட்ரஸ் கோளாறாம்..நமில் தப்பில்லை.. அவருக்கு போய்க் கிடைக்கவில்லை.. அதனை பேபால் பொறுப்பெடுத்து.. மகனுக்கும் 200 பவுண்டுகள்.. அந்த வாங்கிய நபருக்கும் 200 பவுண்டுகள் ரிட்டேர்ன் குடுத்தார்கள்.

ஞானி:) athira said...

//Angel said...
/அதிரா... முடியலைன்னா விட்டுடுங்க... சங்ககாரா வாசிச்சிருக்கீங்களோ? சாண்டில்யன் கதைகள் வாசிச்சிருக்கீங்களோ? விக்ரமன்? ஜெகசிற்பியன்?//

கர்ர்ர் அவங்க 16 வயசுக்கேற்ற மாதிரி ஜெமோ ,ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஹாரு :)), இப்டிலாம் கேட்கணும் ///
ஐயா சாமீஈஈஈஈஈஈஇ ஆபத்து ஜெட் ல வந்து கொண்டிருக்குதே:)) இவ எப்போ இந்நேரம் வந்தா:)) என் ஆட்டம் இங்கு தாங்க முடியாமல் போய்த்தான்:) அவசரமாக் களம் குதிச்சாவோ:))

https://tse3.mm.bing.net/th?id=OIP.H8C5JhCjKGKzxGrT0pw1xwHaE7&pid=15.1&P=0&w=275&h=184

Angel said...

மனதை என்னென்னமோ செய்த கதை ரிஷபன் சார் .
இப்படியும் சிலர் இதில் அதீத புத்தக காதலர்னு அவரை நோவதா இல்லை அன்பில்லாத குடும்பத்தை சொல்வதா .
விட்டு கொடுத்திருக்கலாம் னு மனசு சொன்னாலும் அந்த மனைவியின் இடத்தில இருப்போருக்கு தான் அந்த வலி புரியும்


Angel said...

KILLERGEE Devakottai said...
நமது நூலை கொடுப்பது முக்கியமல்ல, வாங்கும் நபர் அதை பொக்கிஷமாக நினைப்பவராக இருப்பது அவசியம்//

அதே தான் மிக சரியா சொன்னீங்க .

Angel said...

@ மியாவ் புக்ஸ் உங்க வீட்டில் எங்க வீட்டில் பேனாக்கள் ,விதவிதமான வாட்ச்சுகள் அப்புறம் ஆக்க்ஷனில் மூட்டை மூட்டையா பொருட்கள் :) அப்புறம் ராயல் மின்ட் சுவினியர் /
souvenir.. :))
நான் ஒன்லி ஜங்க் மட்டுமே சேர்ப்பேன் :)

கோமதி அரசு said...

காலையிலேயே படித்து விட்டேன். ஆனால் பின்னூட்டம் எழுத முடியாமல் மனம் கனத்து போனது.
புத்தக சேகரிப்பு என்பது வீட்டில் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பு இருந்தால் தான் சாத்தியம் இல்லையென்றால் புத்தகங்கள் எல்லாம் குப்பை இடத்தை அடைத்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்வார்கள்.
உறவில் விரிசல் வரும்படியாக புத்தக வாசிப்பு இருக்க வேண்டுமா என்று நினைக்க வைக்கிறது கதை.

புத்தகங்கள் படித்து விட்டு அதை எடுத்து பழையபடி அடிக்கி வைக்க வில்லையென்றால் எங்களுக்குள் சண்டை வரும். எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் எனக்கு. மேஜை மீது பத்து புத்தகம் ஷோபா மீது பத்து புத்தகம் என்றால் கோபம் வரும்தான்.

கணினி வந்த பின் புத்தகம் வாங்குவது குறைந்து இருக்கிறது. மூன்று பீரோ புத்தகம் தான் எங்கள் வீட்டில் இப்போது.

எப்போதும் ரிஷபன் அவர்கள் கதை மனதை எதோ செய்யும் இந்த கதையும் அப்படித்தான்.


Angel said...

100 :)

ஞானி:) athira said...

மீ 101 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:))

https://media.giphy.com/media/33OrjzUFwkwEg/giphy.gif

Angel said...

ஹாஹ்ஹா :) பாருங்க மக்களே மியாவ்க்கு 101 ஆம் :)

Angel said...

ஒரு வயதான பெரியவர் மியூசிக் என்றால் உயிர் அவருக்கு ,அவர் ஆலயத்தில் வாசிக்காத இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இல்லை எனலாம் .தானே மியூசிக் நோட்ஸை கையால் எழுதி அப்புறம் இசை சம்பந்தமான பல புத்தகங்கள் அவர்கிட்ட இருந்த்தது .அவர் பிள்ளை களில் ஒருவருக்கும் இசை ஞானம் இல்லை என்பது வேதனை .அவர் இறந்த பின்னர் அத்தனை புத்தகத்தையும் எங்கோ வேறு ஆலயத்துக்கு இலவசமாக கொடுத்திருக்காங்க .அவரின் மற்ற பிள்ளைகளிடமும் விசாரித்திருக்கலாம் கொடுக்குமுன் அவரது பேரப்பிள்ளைகளில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பின்னாளில் இசைஞானமுடன் இருக்கிறது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை .கடைசியில் ஆலயத்திலிருந்து அது பேப்பர் கடைக்கு போனதாம் :(

அதனால் இந்த கதையில் சுதந்திரன் தானே ஒரு நல்ல முடிவெடுத்து நல்லதொரு வாசிப்பார்வம்மிக்கவரிடம் தனது பொக்கிஷங்களை கொடுப்பது மேல் .இல்லைனா :(

Angel said...

@நெ.த//

நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் சிலர் செய்யும்போது அவ்வளவு வெறுப்பும்//

இந்த வசனம் என்னைப்பொறுத்து தப்பு என்பேன். அதாவது எனக்குப் பிடிக்கவில்லையாயினும் என் கணவருக்குப் பிடிச்சிருந்தால் அதுக்காக ஒத்துப் போகத்தானே வேணும்//

அதேதான் நானும் சொல்வது .வாழ்வது கொஞ்சம் காலம் இதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதில் தவறில்லை
ஒரு தாய் அடம் பிடிவாதம் போன்ற கோபாக்கினைகளுடன் அவற்றை பார்த்து வளரும் குழந்தைகளும் பின்னாளில் அதைத்தான் செய்யும் .
சுதந்திரனின் மனைவி சாதக பாதகங்களை அழகா சொல்லியிருந்தார்னா அல்லது சுதந்திரன் தந்து மனைவிக்கு தான் புத்தகங்கள் மீது வைத்த காதலை தெளிவுபடுத்தியிருந்தார்னா வாழ்க்கையை நன்கு வாழ்ந்திருக்கலாம் .

Geetha Sambasivam said...

@ஶ்ரீராம், @ அதிரா, படிப்புக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை! :)))) நான் பள்ளியில் சேர்ந்ததுமே எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். 2 வது படிக்கும்போதே ஆனந்த விகடனில் அப்போது வந்து கொண்டிருந்த சித்திரத் தொடர்களை எல்லாம் படிச்சிருக்கேன். குமுதத்திலேயும் சித்திரத் தொடர்கள் வரும். "புதிருக்குப் பெயர் ரஞ்சனா!" என்றொரு சித்திரத் தொடர் அப்போது விறுவிறுப்பாக வந்து கொண்டிருந்தது. டாக்டர் கீதா, துப்பறியும் சாம்பு எல்லாம் விகடனில் வந்த சித்திரத் தொடர்கள்!இதைத் தவிரவும் அப்போது வந்து கொண்டிருந்த குழந்தைகள் பத்திரிகையான கண்ணன், மஞ்சரி, கலைமகள் ஆகியவையும் படித்திருக்கிறேன். 3 ஆவது படிக்கும்போது "பொன்னியின் செல்வன்" முதல் பாகம் படிச்சேன். புரிஞ்சதோ புரியலையோ தப்பில்லாமல் படிப்பேன். ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் பரஞ்சோதி முனிவரின் "திருவிளையாடல் புராணம்" படிச்சிருக்கேன். ஆகப் பொன்னியின் செல்வன் லக்ஷம் முறைனு நான் சொன்னது பொய்யில்லை. கல்கியின்"அமரதாரா" 5 ஆம் வகுப்புப்படிக்கையில் தான் படிச்சேன். எட்டு வகுப்பு முடியறதுக்குள்ளே பொன்னியின் செல்வன் முழுதையும் முறையாவது படிச்சிருப்பேன். சாண்டில்யனின் "யவன ராணி" நான் பள்ளி மாணவியாக இருந்தப்போத் தான் வந்தது. அதையும் அப்போது படிச்சிருக்கேன். அதில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு பள்ளியில் பாடத்துக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தி இருக்கேன். நெ.த. சொன்ன மாதிரி நானும் அதிகம் படிப்பேன். இப்போத் தான் கண் பிரச்னை, அதிகம் படிக்கக் கூடாது என்பதால் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்றாலும் அவ்வப்போது படிக்காமல் இருப்பதில்லை.

ஞானி:) athira said...

//Angel said...
@நெ.த//

நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் சிலர் செய்யும்போது அவ்வளவு வெறுப்பும்//

இந்த வசனம் என்னைப்பொறுத்து தப்பு என்பேன். அதாவது எனக்குப் பிடிக்கவில்லையாயினும் என் கணவருக்குப் பிடிச்சிருந்தால் அதுக்காக ஒத்துப் போகத்தானே வேணும்//

அதேதான் நானும் சொல்வது .வாழ்வது கொஞ்சம் காலம் இதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதில் தவறில்லை //

அல்லோ மிஸ்டர்:)) அந்த.. உங்கட கணவர் ஆசைப்பட்ட கூட்டுக் குடும்ப மட்டர் என்னாச்சூஊஊ?:))..

ஹையோ ஆண்டவாஆஆஆஆ சுனாமி கம்மிங்:))... பீஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா கொஞ்சம் வந்து குறுக்கே நில்லுங்கோ:) உங்களுக்குப் பின்னால ஒளிக்கிறேன்ன்ன்:))..

Geetha Sambasivam said...

//செல்வன் முழுதையும் முறையாவது// 4, 5 முறையாவது னு வந்திருக்கணும். "4" "5" ஐ முழுங்கிடுச்சு போல! :)))))

ஞானி:) athira said...

//Geetha Sambasivam said...
@ஶ்ரீராம், @ அதிரா, படிப்புக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை! :)))///

நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ இந்த சமாளிப்புக்கேசன் எல்லாம் ஒத்துக்க மாட்டோம்ம்.. படிப்பு வேறு பொன்னியின் செல்வன் வாசிப்பது வேறு:)) அதை எப்படி லக்‌ஷம் தரம் வாசிச்சீங்க?.. ஹையோ இண்டைக்கு நான் எல்லாப் பக்கத்தாலயும் அடி வாங்கப் போறேன்ன்ன்ன்ன்:))

ஞானி:) athira said...

இன்னொன்று கீசாக்கா எனக்கும் ஒரு 5,6 அ 7 வயசிருக்கும்.. முதன் முதலில் அப்பா “அம்புலிமாமா” புத்தகம் வாங்கித்தந்தார்ர்.. அது கையில் கிடைச்சதும் அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.. அதை தடவி மணந்து பார்த்து... திரும்பத்திரும்ப படங்கள் பார்த்து வாசித்து.. ஆவ்வ்வ்வ் மறக்க முடியாத தருணங்கள்..

Geetha Sambasivam said...

அட! அதிரடி, ஆமால்ல! அம்புலிமாமாவும் அப்போப் படிச்சிருக்கேன். பள்ளி விட்டு வந்தாப்புத்தகமும் கையுமாத் தான் இருப்பேன். இதனாலே என் அப்பா பள்ளி ஆசிரியர்களிடம் போய் வீட்டில் பாடமே படிப்பதில்லை. நல்லா அடிச்சுப் படிக்கச் சொல்லுங்கனு சொல்லி இருக்கார். :))))))

Angel said...

//அல்லோ மிஸ்டர்:)) அந்த.. உங்கட கணவர் ஆசைப்பட்ட கூட்டுக் குடும்ப மட்டர் என்னாச்சூஊஊ?:))..//

இந்தமாதிரி ஒரு அசம்பாவிதத்தை அவர் கேக்கலேயே மேடம் மியாவ் ஆசைப்பட்டது வேறு ஒருவர் இவர் இல்லை :)
எனக்கு இன்னிக்கு எங்கேயோ வசமா ஆப்பு வெயிட்டிங் :) குடை பிடிச்சிட்டு போறதா இல்லை முகத்தில் மரு ஒட்டிக்கிட்டு போறதன்னு தெரிலையே :)


Angel said...

@அதிரா அண்ட் கீதாக்கா .என் பொண்ணுக்கு இந்த சித்ர கதாஸ் ரொம்ப பிடிக்கும் 10 வயசில் வாங்கின அத்தனையும் இன்னும் வச்சி வச்சி படிக்கிறா :)

ஞானி:) athira said...

//மேடம் மியாவ்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ மேடம் இல்ல கன்னீஈஈஈஈஈஈஈஈஈஈ ஹையோ நான் இப்போ ராசியைச் சொல்லல்லேஏஏஏஏஏஎ:))..

கீசாக்காவும் மீயும் ஒரே ராசி ஆக்கும்:)) கீசாக்கா ஓடி வந்து உங்கட ராசி என்ன எனச் சொல்லுங்கோ:))

Angel said...

ஹலோ யாராச்சும் யவன ராணி எப்போ வருஷம் வந்ததுன்னு சொல்லுங்களேன் :)

கோமதி அரசு said...

1960ல் வந்தது சாண்டில்யன் கதை குமதத்தில் வந்தது அப்போது சிறிமி கதை படிக்கவில்லை, அம்மாபைண்ட் செய்து வைத்து இருந்ததை படித்தேன், 70 ல்

Angel said...

thanks Gomathy akka :)

R Muthusamy said...

புத்தகம் படிப்பது சுகம் என்றால் படித்த புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பதும் இனிய அனுபவம்தான். புத்தகங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டால் திண்டாட்டம்தான். புத்தகம் சேர்ப்பதும் ஒரு கலைதான். இது என் மனதைத் தொட்ட கதை.

காமாட்சி said...

புத்தகங்களுக்காக குடும்பத்தில் விரிசல். கஷ்டம். அனுசரணை இல்லாத கணவனும், மனைவியும். ரிஷபன்கதை. மனதை என்னவோ செய்தது. அன்புடன்

ஏகாந்தன் Aekaanthan ! said...

டெல்லி உஷ்ணத்தில் திக்குமுக்காடிக்கொண்டிருப்பதால் லேப்டாப்பைத் தொடவில்லை. மாலை நேரத்தில்தான் எட்டிப்பார்த்தேன். ரிஷபன் சாரின் கதை. கதையைப் படிக்குமுன், கருத்துக்காட்டுக்குள் நுழைந்து திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.

வெளியே வந்தவுடன், கதைக்குள் செல்வேன்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

படித்தேன்.

ரிஷபன் சார் வார்த்தைச் சிக்கனம் காட்டுபவர். ஆனால் சுருக்கென்று வாசகரின் மனதுக்குள் விஷயத்தை ஏற்றிவிடுவார். திறன். Simply gripping.

preetha said...

கனமான கதை. ச்ச எப்படி சொல்ல மனசு வருதோ. புத்தகம் பொகிஷம்

ரிஷபன் said...

மிரண்டு தான் போயிருக்கிறேன்.. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் கருத்திட்டு .. ஹப்பா.. திணறிவிட்டேன் படிக்க.

எல்லோருக்கும் நன்றி. வாழ்க்கையில் விமர்சனங்களைக் கடக்காமல் வாழ இயலாது.

நான் கேள்விப்பட்டது என்னைப் பாதித்ததால் எழுதி விட்டேன். வேறெதுவும் செய்ய இயலாததால்.

அன்பு நன்றி.

மொபைல் சிக்கல். இப்போது தான் வாசிக்க முடிந்தது.

middleclassmadhavi said...

கதையின் தாக்கம், கமெண்ட்களின் தாக்கம் - அதனால் தாமதம்..
நான் ஒரு புத்தகப் புழு..பல ஞாபகங்களைத் தூண்டிய கதை!
மனதைத் தொட்ட கதைக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

கதை மிக மிக அருமை ரிஷபன் சார். மனதை என்னவோ செய்துவிட்டது முடிவு வாசித்ததும். இதில் முக்கால்வாசியேனும் சில குடும்பங்களில் நடக்கிறது. குடும்பம் பிரிந்துவிட்டதே என்ற வருத்தம் வந்தது. புரிதலும், கணவன் மனைவிக்குள் விளக்கங்களும், பேச்சுகளும், கலந்தாலோசித்தலும் இருந்திருந்தால் முடிவு இப்படி ஆகியிருக்காதோ என்றும் தோன்றியது.

நல்ல அருமையான தெளிவான கதை சார். பாராட்டுகள்

துளசிதரன்

(ஸாரி எபி. நேற்றே துளசி கொடுத்திருக்க நான் இன்றுதான் பார்த்தேன். போட விட்டுவிட்டேன். தாமதமாகப் பதிகிறேன். கீதா)

ரிஷபன் said...

அன்பு நன்றி..

ரிஷபன் said...

அன்பு நன்றி

Asokan Kuppusamy said...

கண் வலி ஆதலால் தாமதம் புத்தக கதை அருமை பாராட்டுக்குரியது

வை.கோபாலகிருஷ்ணன் said...

வழக்கம்போல் மிகவும் அருமையான எழுத்துநடை.

கடைசி பத்துவரிகள் என் மனதைக் கலங்கடித்து விட்டன ..... இதெல்லாம் வீட்டுக்கு வீடு நடந்துவரும், மிகச்சாதாரண உலக யதார்த்தம் மட்டுமே என்பதை அனுபவபூர்வமாக அடியேன் உணர்ந்திருப்பினும் கூட.

அடியேனின் எழுத்துலக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.com/2013/03/1.html

\\ அதுபோல ஒருவர் ஒருசில பொருட்களை மிகவும் பொக்கிஷமாக நினைக்கக்கூடும். அதே பொருட்கள் மற்றவர்களுக்கும் பொக்கிஷமாக நினைக்கத்தோன்ற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறு.

உதாரணமாக என் படைப்புகள் வெளியான பத்திரிகைகள், நான் வாங்கிய பரிசுகள், நான் எழுதிய நூல்கள், எனக்குத்தரப்பட்ட சான்றிதழ்கள், எனக்கு பிறரால் எழுதப்பட்ட பாராட்டுக்கடிதங்கள், நான் பெற்ற விருதுகள், பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், என்னைப்பற்றி செய்தித்தாளில் வந்த செய்திகள் முதலியவற்றை நான் எப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவது உண்டு. ஓரிரு பெரிய பெட்டிகள் நிறைய அவற்றை சேர்த்து வைப்பதும் உண்டு.

என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான்.

ஒவ்வொருவர் டேஸ்ட் [ருசி] ஒவ்வொருவிதமாக இருக்கும்.எல்லாவற்றையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். \\

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.com/2013/03/1.html

தலைப்பு: ’பொக்கிஷம்’ பகுதி-1 of 12

The Very Valuable Comments by My Dear RISHABAN Sir:


ரிஷபன் March 15, 2013 at 6:02 PM

எங்கள் பொக்கிஷம் நீங்கள்தான் ஸார் !

-=-=-=-=-=-

அதற்கு என் பதில்:

வை.கோபாலகிருஷ்ணன் March 16, 2013 at 10:20 PM

ரிஷபன் March 15, 2013 at 5:32 AM

வாருங்கள், வணக்கம் சார்.

//எங்கள் பொக்கிஷம் நீங்கள்தான் ஸார் !//

அடடா, இதுபோல எதையும் ஒரே வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்லணும் என்று தான் நானும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது போல முடியவில்லையே, குருநாதா!

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், சார்.

தயவுசெய்து தொடர்ந்து வருகை தாருங்கள், சார்.

அன்புடன்
வீ.........ஜீ
[ VGK ]

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!