சனி, 5 டிசம்பர், 2009

மனைவி அமைவதெல்லாம்...


நண்பர் மணிக்குமார் பூனாவிலிருந்து அனுப்பிய 'முன்னேற்றப்பட்ட' (அதுதாங்க...Forwarded..!) மின்னஞ்சலில் இருந்தவற்றைக் கீழே தந்திருக்கிறேன். இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! நீங்களும் படித்திருக்கலாம்...இல்லன்னா இங்கே...
இவை நகைச்சுவைக்காக மட்டும்...!

 • உங்கள் மனைவியை ஒருவன் கடத்தி விட்டால் அவளை அவனிடமே விட்டு விடுவதுதான் அவனைப் பழிவாங்குவதற்கு சிறந்த வழி!
 • திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது...ஆனால் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்!
 • திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. நல்ல மனைவி கிடைத்தால் நீ சந்தோஷமாக இருக்கலாம். இல்லை என்றால் தத்துவ வாதி ஆகி விடலாம்!
 • பெண்கள்..... பெரிய விஷயங்களுக்கு நம்மை ஈர்த்தாலும் அதை சாதிக்க விடாமல் தடுப்பவர்களும் அவர்கள்தான்..!
 • என்னால் பதிலளிக்க முடியாத பெரிய கேள்வி..."ஒரு பெண் எதை விரும்புகிறாள்?"
 • வார்த்தைகளில் பேசினால் பாராக்களில் பதில் சொல்வாள் மனைவி..!
 • நீண்ட வருடங்களாய் பிரியாமல் இருக்கும் ரகசியம் கேட்கிறார்கள்....வாரத்துக்கு இருமுறை நானும் மனைவியும் வெளியில் எங்காவது ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறோம்....மெழுகுவர்த்தி வெளிச்சம், ரம்மியமான இசை, மெல்லிய பேச்சுக்கள்....அவள் சனிக்கிழமைகளில் போவாள்...நான் ஞாயிறுகளில்...!
 • நம் கணக்கில் உள்ள பணத்தை e banking ஐ விட வேகமாக Transfer செய்யும் முறைக்குத் திருமணம் என்று பெயர்!
 • திருமணத்தில் இரண்டுமுறையும் தோற்றவன் நான். ஒருத்தி என்னை விட்டு விட்டு சென்று விட்டாள்...இன்னொருத்தி போக மாட்டேன் என்கிறாள்..!
 • திருமண வாழ்வு வெற்றி பெற இரண்டு யோசனைகள்....1) நீங்கள் தவறு செய்யும்போது ஒத்துக் கொண்டு விடுங்கள். 2) உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது மெளனமாக இருந்து விடுங்கள்!
 • உங்கள் மனைவியின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ள ஒரு வழி அதை மறந்து விடுவதுதான்...
 • திருமணத்திற்கு முன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நான் நினைத்ததை எல்லாம்...!
 • நானும் என் மனைவியும் இருபத்திரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம்....பிறகு நாங்கள் சந்தித்தோம்!
 • ஒரு நல்ல மனைவி என்பவள் எப்போதுமே அவள் கணவனை மன்னித்து விடுவாள்....அவள் தவறு செய்யும்போது...
 • தினசரியில் மனைவி வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவன் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றான்...எல்லாவற்றிலும் ஒரே வரி..."என்னுடையதை எடுத்துக் கொள்"
 • அவன் : "என் மனைவி தேவதை..." இவன் : "நீ கொடுத்து வைத்தவன்...என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்..."

  21 கருத்துகள்:

  1. /என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது,/

   இப்படி ஒன்று சொன்னதற்கே தங்கமணியிடம் இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பவர்,எங்க வால்பையன்!

   இங்கே இவ்வளவு தைரியமாகப் பதிவு போட்டவர் கதி என்ன ஆகப் போகிறதோ?!

   பதிலளிநீக்கு
  2. கிருஷ் சார்,
   அவர் எங்கே இங்கே வந்து பார்க்கப் போறார் என்கிற தைரியம்தான்...மேலும் முதலிலேயே பாதுகாப்பு வரிகளைப் போட்டுக் கொண்டுதானே போட்டிருக்கோம்....!!

   பதிலளிநீக்கு
  3. அத்தனை விஷயங்களையும் ஒத்துக்கொள்ளவேண்டும்போலவே இருக்கிறது.ஏனென்றால் சிலவற்றோடு நான் அப்படியில்லை என்று சொல்லிக்கொண்டாலும் பொதுவாகப் பெண்களின் இயல்பைப் பதிந்திருக்கிறீர்கள்.சில எங்கள் நாட்டோடு பொருத்தமில்லாமல்தான் இருக்கிறது.

   என்றாலும் எல்லாரும் என்னைப்
   போல இல்லை.ஸ்ரீராம்.கௌதம் நல்லா இருக்கு உங்களுக்கு.

   வால்பையன் அடிக்கடி தங்கமணிகிட்ட வாங்கிக்கிறார்.சிலநேரங்களில் மட்டுமே ஒத்துக்கொள்கிறார்.
   கேட்டுப்பாருங்க.

   பதிலளிநீக்கு
  4. நல்ல வேளை! என் மனைவி எங்கள் பிளாக் படிப்பதில்லை. இல்லையேல் மணிக்குமார் மெயில் ஐடி கேட்டு, சுடச் சுட ஏதாவது அனுப்பியிருப்பார்!

   பதிலளிநீக்கு
  5. சும்மா நகைச்சுவைதான் ஹேமா..

   நம் நாட்டுப் பெண்கள் அப்படி இல்லை. கணவர்களும் அப்படி இல்லை....சரியா?

   பதிலளிநீக்கு
  6. எல்லாமே சுவாரசியமா இருக்கு. சரிங்க, 'கணவன் அமைவதெல்லாம்' ..... இது எப்ப வரும்? படிக்க ஆவலா இருக்கேன்.!

   //இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! //
   வெளி நாட்டுக்காரங்க தைரியமா வெளில சொல்றாங்க. நம்ப ஊர்காரங்க மனசுக்குள்ளேயே சொல்லிப்பாங்க. அவ்வளவுதான் வித்யாசம். இதை நீங்க நகைசுவைக்காக மட்டும்னு போட்டதால நானும் விவாதம் பண்ண விரும்பல.

   பதிலளிநீக்கு
  7. மனசை திறந்து சொல்லியிருகிரீங்க. நன்றி.

   பதிலளிநீக்கு
  8. நல்ல துணை கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் நாம், நல்ல துணையாக இருக்க முயற்சித்தால் போதும்.

   பதிலளிநீக்கு
  9. முதல் காரணமே சிரிப்பை வரவழைக்கிறது ஸ்ரீ

   பதிலளிநீக்கு
  10. மனசைத் திறந்து இல்லை நிலாமதி,

   மெய்லை திறந்து சொல்லி இருக்கோம்...!

   பதிலளிநீக்கு
  11. கணவன் அமைவதெல்லாம்...சீக்கிரமே போட்டுடுவோம் மீனாக்ஷி...
   நம்ம ஊர்க்காரங்க பயந்தவங்க வெளில சொல்ல மாட்டாங்கன்னு சொல்றீங்க...அவங்க மனசுக்குள்ளே சொல்லிக்கறதை எப்படிக் கண்டு பிடிச்சீங்க...

   பதிலளிநீக்கு
  12. முயற்சிதான் பண்ண முடியும்கறீங்களா தமிழுதயம்

   பதிலளிநீக்கு
  13. முதல் விஷயத்துக்கு வோட்டுப் போட்டுட்டீங்களா வசந்த்...

   பதிலளிநீக்கு
  14. போங்கசார் தப்புத்தப்பா சொல்லுறிங்கள்
   உங்க அனுபவம் உது
   எனக்கோ................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????????????????????????????????

   பதிலளிநீக்கு
  15. //இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... !//
   நம்ப ஊர்ல இப்படி யாரும் சொல்ல மாட்டாங்கன்னு நீங்க சொன்னது ஒரு யூகம்தானே! நம்ப ஊர் காரங்க மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. எனக்கும் அதே யுகம்தான். அதே நம்பிக்கைதான் கொஞ்சம் பேராவது இப்படி சொல்வாங்கன்னு.

   பதிலளிநீக்கு
  16. தியாவின் பேனா....
   உங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...

   பதிலளிநீக்கு
  17. மீனாக்ஷி,
   யாரையாவது ரெண்டு பேர் சொல்லி மாட்டி விடுவீங்கன்னு பார்த்தோம்...

   பதிலளிநீக்கு
  18. யாரை மாட்டிவிடணும்னு நைசா சொல்லுங்க, மாட்டி விட்ருவோம்! :)

   பதிலளிநீக்கு
  19. //தினசரியில் மனைவி வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவன் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றான்...எல்லாவற்றிலும் ஒரே வரி..."என்னுடையதை எடுத்துக் கொள்" //

   :-)))))))))))

   பதிலளிநீக்கு
  20. adhiran அப்ப நீங்களும் நாங்க ரசிச்சதை ரசிச்சிருக்கீங்க!

   பதிலளிநீக்கு
  21. Thanks to Sriram for this nice translation. From comments, I came to know that "Romba Peru Pathikka Pattu Irrukkanannu."

   பதிலளிநீக்கு

  இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!