திங்கள், 21 டிசம்பர், 2009

உள் பெட்டியிலிருந்து...4

இறந்தபிறகு சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று விரும்புவதை விட, வாழும்போது நாம் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுதல் நன்று.

உங்களை நேசியுங்கள் . புரிந்துகொள்ளும் உணர்வோடு வாழுங்கள். கனவுகளைக் காதலித்து, எளிமையை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் பெருந்தன்மையை மணம் புரிந்து போலி கௌரவத்தை ரத்து செய்யுங்கள்.

கோபத்தில் பேசப்பட்ட ஒருவார்த்தை ஆயிரம் அன்பான வார்த்தைகளை அர்த்தமற்றதாக்கி விடும்.

வேகமாகச் செல்பவர்களை எனக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான் அவர்களை முந்த நினைக்கிறேன்!

மிகவும் விரும்புபவர்களைதான் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அவர்களை புரிந்து கொள்ள அதுவேயும் காரணமாகிறது.

ஆழமான உணர்வு மௌனமாகவும், ஆழமான அன்பு பொறாமையாகவும் வெளிப் படுகிறது. நாம் தொலைத்த பிறகுதான் அந்தப் பொருளின் மதிப்பு தெரிகிறது.

தோல்வி துரத்துகிறது என்றால் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

மற்றவர்கள் எந்த விஷயத்துக்காகவாவது குறைகூறினால்,புண்படுத்தினால்,கவலை வேண்டாம். எல்லா ஆட்டத்திலும் பார்வையாளர்கள்தான் கூச்சலிடுவார்கள்...ஆட்டக்காரர்கள் அல்ல.

புத்திசாலித்தனம் என்பது பெரிய பெரிய விஷயங்களைப் பேசுவது அல்ல, சிறிய விஷயங்களைக் கூடப் புரிந்து கொள்வதுதான்.

வாழ்க்கை என்பது எளிதுதான். மற்றவர்களை நேசிப்பதும் எளிதுதான்...சிரிப்பது என்பதுகூட மிக எளிதுதான்...வெற்றி என்பதோ மிக மிக எளிதுதான்... எது கடினம்? எளிமையாக இருப்பதுதான்...!

நம் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம் தேடினால் தனிமைப் படுத்தப் படுவோம். நம்முள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை கண்டுகொண்டால் தனிமையிலும் மகிழ்ச்சிதான்... *****

தோல்வி என்பது முடிவல்ல. மறுபடி சரியாகத் தொடங்க ஒரு வாய்ப்பு

10 கருத்துகள்:

  1. ஸ்ரீராம்!சொன்ன விதம், சொல்லியிருப்பது அருமை!

    பதிலளிநீக்கு
  2. முதல் வோட் நீங்கதானா சார்...நன்றி...

    பதிலளிநீக்கு
  3. ம் நல்ல பகிர்வு..சொன்ன விதம் நன்று...

    பதிலளிநீக்கு
  4. தோல்வி துரத்தினால் படுதோல்வியைச் சந்திக்கலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. புத்திசாலித்தனம் என்பது சிறிய சிறிய விஷயங்களை 'கண்டுக்காமல்' விடுவது; பெரிய பெரிய விஷயங்களை 'கண்டுகொண்டும்' விடுவது. :)

    பதிலளிநீக்கு
  6. //கோபத்தில் பேசப்பட்ட ஒருவார்த்தை ஆயிரம் அன்பான வார்த்தைகளை அர்த்தமற்றதாக்கி விடும்.//

    நம்ம மொத்த வாக்கியமே அதாங்கறேன் !

    பதிலளிநீக்கு
  7. //மிகவும் விரும்புபவர்களைதான் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அவர்களை புரிந்து கொள்ள அதுவேயும் காரணமாகிறது.//

    மிகச்சரியான கருத்து ஸ்ரீராம் இதுபோல நிறைய பிடிச்சுருக்கு இந்த பகிர்வு மனசைவிட்டு அகலாது...

    பதிலளிநீக்கு
  8. அத்தனையும் மிகவும் வாழ்வியலுக்குப் பொருத்தமானவைகளே.எனக்கு மிகவும் தேவையானவைகள்.
    எடுத்துக்கொண்டேன்.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. //மற்றவர்கள் எந்த விஷயத்துக்காகவாவது குறைகூறினால்,புண்படுத்தினால்,கவலை வேண்டாம். எல்லா ஆட்டத்திலும் பார்வையாளர்கள்தான் கூச்சலிடுவார்கள்...ஆட்டக்காரர்கள் அல்ல//

    தல.... இது போன்ற "எங்கள்"-ன் பதிவுகள் ரொம்ப புடிக்கும். எல்லாம் மிக அருமையான, வாழ்வியல் தத்துவங்கள்.

    அதில் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. :-)

    பதிலளிநீக்கு
  10. நன்றி புலவன் புலிகேசி..

    தோல்வி துரத்தினால் படுதோல்வி...
    தோல்வியைத் துரத்தினால் வெற்றி கண்ணில் படுமோ என்ற ஆதங்கம்தான் துரை சார்...

    காமராஜரின் வாரிசாகி விட்டீர்கள் சாய்...

    நன்றி வசந்த்...உங்கள் ஆதரவு தொடரட்டும்...

    நன்றி ஹேமா...

    சுனாமி ரோஸவிக், இன்னும் முன்னரே உங்களை எதிர்பார்த்தோம்....!.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!