செவ்வாய், 29 டிசம்பர், 2009

Promising Talent.இந்த இசை விழாவில் ஒரு புது முகம் கச்சேரி செய்து கவர்ந்தார்.  பார்கவி கணேஷ் என்ற இந்த சிறுமிக்கு மிஞ்சிப் போனால் 14 வயது இருக்குமோ என்னவோ!  ஆனால் நல்ல குரல் வளம். நல்ல பாடாந்திரம். காலப் பிரமாணம். கற்பனை.  என்ன பாடினார் என்று சொல்லி உங்களை அலுக்க வைக்க மாட்டேன்.  அனாலும் சாவேரி ஹேமவதி போன்ற ரகங்களை சிறப்பாகப் பாடினார் என்று சொல்லியே ஆகவேண்டும்.  அவளது சகோதரன்  வயலின் வாசித்து களை கட்டச் செய்தான்.


கொஞ்சம் மூக்கால் பாடுவதை சரி செய்து கொள்ளலாம்.


அமெரிக்காவில் இருந்து கொண்டு சங்கீதம் பயின்று கச்சேரிக்குப் பின் அமெரிக்காவுக்கு போவதாக பிற்பாடு தெரிந்து கொண்டேன்.  வெளிநாட்டில் இருந்து கொண்டு இவ்வளவு நேர்த்தியாக இசை பயின்ற இந்த பாடகிக்கு நம் பாராட்டுகள். 
(Interested people who want to hear one hour concert of Selvi Bhargavi Ganesh, may please send their mail id to engalblog@gmail.com to get the MP3 file from us.)

14 கருத்துகள்:

 1. கூகிள் செய்து பார்க்கும்பொழுது, இவர் கிளீவ்லாண்ட் இசைப் போட்டிகளில்கூட அதிகம் பங்கேற்று நிறைய பரிசுகள் வென்றிருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் நிறைய புகழ் இவர் அடைய எங்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நமக்கு அம்புட்டு இசை ஞானம் இல்லீங்கோ..

  அந்த அக்காக்கு வாழ்த்து சொல்லிடுங்கோ.. :-)

  பதிலளிநீக்கு
 3. ///அமெரிக்காவில் இருந்து கொண்டு சங்கீதம் பயின்று கச்சேரிக்குப் பின் அமெரிக்காவுக்கு போவதாக பிற்பாடு தெரிந்து கொண்டேன்.///

  வெளிநாட்டில் இருந்தாலும் நம் பாரம்பரியத்தை விடாமல் கற்றுக்கொள்பவர்கள் வணக்கத்திற்குரியவர்களே!
  நல்ல செய்தி அளித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி கடைக்குட்டி.

  நன்றி heyyram.

  பதிலளிநீக்கு
 5. ஏன் சகோதரருக்கு மட்டும் 'அன்' விகுதி?

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. சாய்ராம், கர்நாடக சங்கீதம் பிடிக்காதவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. விருப்பம் உள்ளவர்கள் விரும்பினால் அனுப்பி வைக்கிறேன் என்றுதானே கூறி இருக்கிறார்கள். 'ஐயோ வேண்டாம் சாமி', என்று நீங்கள் விளையாட்டாக கூறி இருந்தாலும், படிக்கும்போது இந்த வார்த்தை மனதை நெருடுகிறது. உங்கள் மகனின் வயலின் இசையையும் நாளை 'எங்கள் ப்ளாக்' அவர்கள் இது போல் விரும்புபவர்களுக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா! தயவு செய்து நான் எழுதியதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

  பார்கவி கணேஷ் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள். மேடை கச்சேரியில் மிகப் பிரபலமான ராகங்களைப் பாடுவதோடு, அதிகம் பிரபலமாகாத ராகங்களை சிறப்பாக பாடுவது என்பது இன்னும் சிறப்புதான்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் அந்தச் சிறுமிக்கு.

  இங்கும் எங்கள் குழந்தைகள் எங்கள் பாரம்பரியக் கலைகளில் முன்னேறி வருகிறார்கள்.பெற்றோர்களும்
  ஊக்கம் கொடுக்கிறார்கள்.
  சந்தோஷமாயிருக்கிறது.

  ஓ...என் பெயர் இராகத்திலும் பாடினாரா ?அதுக்காக இன்னொரு பாராட்டும் என் கை தட்டலும்.

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. ஹேமா,
  சொந்த நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் தாய் நாட்டின் இது போன்ற பாரம்பரியக் கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்று படுகிறது...

  பதிலளிநீக்கு
 11. நன்றி மீனாக்ஷி,
  நீங்கள் சொல்வதுபோல அதிகம் பிரபலமாகாத ராகங்களைப் படடுவது சிறப்புதான்...
  ----------------------------

  சாய்,
  உங்கள் மகன் வயலின் கற்றுக் கொள்கிறாரா? எப்போது அரங்கேற்றம்?

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. பார்கவி கணேஷ் இசைத்துறையில் வளர்க!
  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!