புதன், 16 டிசம்பர், 2009

ஒரு நாள் போட்டியும், ஒரு நாய்க்குட்டியும்...


நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் ரன் மழை. சேவாக்கை விட தில்ஷான் அதிக ரன் எடுத்திருந்தும் வெற்றி பெற்ற அணி என்ற ஒரே காரணத்திற்காக சேவாக்குக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் தந்தது என்ன நியாயமோ? ஆனால் இந்த அளவு நானூறு ரன்களைத் துரத்தி வந்த சாதனை ஒரு புறம் என்றால் எனது மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் நெஹ்ராவுக்குதான்... கடைசி ஓவரில் பதினோரு ரன் தேவை என்ற நிலையில்,  இன்றைய T20 காலத்தில் எதுவும் சாத்தியம் என்ற நிலையில்,  பதட்டமில்லாமல் பந்து வீசி,  நோ பால்,  வைட் பால் விட்டுத் தராமல்,  கடைசி பந்தில் நான்கு அடித்தால் கூட மேட்ச் 'டை' ஆகிவிடும் என்ற நிலையிலும் அழகாக வீசியதால்...தோனி Cool கேப்டன் பட்டம் பெற்றவர். ரவி சாஸ்திரி இப்போதும் அவர் அபபடி இருந்ததாகப் பாராட்டியது சரி என்று படவில்லை. சேஸ் செய்ய முடியாது என்று இறுமாந்திருந்த நானூத்தி பதினாலை அவர்கள் துரத்து துரத்து என்று துரத்தி மூன்று ரன்னில் கோட்டை விட்டார்கள் என்றாலும் அந்தக் கடைசி பத்து ஓவர்களிலும் கேட்ச்கள் மிஸ் ஆன போதும் தோனி முகத்தில் டென்ஷனை காண முடிந்தது. இவ்வளவு பெரிய இலக்கு எடுத்தும் மூன்றே ரன்னில்தான் ஜெயிக்க முடிந்தது என்பது ஒரு இறக்கம் (அதுதான் ஆட்டத்தின் விறுவிறுப்பு என்பார்கள்) என்றால், அதே நிலையில் அவ்வளவு பெரிய இலக்கை விரட்டி அதே மூன்று ரன்னில் வெற்றியைக் கோட்டை விட்ட இலங்கை அணிக்கு எப்படி இருந்திருக்கும்?
*** *** ***
நேற்று மாலை என்னால் ஒரு மரணம் நிகழ்ந்தது மனதை வெகுவாகப் பாதித்தது. 

மழை விடாமல் பெய்துகொண்டிருக்க வெளியில் கிளம்பாத என்னை விதி டியூப் லைட் வாங்க வெளியில் கிளம்ப வைத்தது. குடையுடன் கிளம்பி சென்ற பாதி வழியில் சிறிதும் பெரிதுமான முனகல்களுடன் ஒரு அழகான நாய்க் குட்டி என் காலைத் தஞ்சம் அடைந்தது. சாதாரணமாக நம்மைக் கண்டு தயங்கித் தயங்கி ஓடி, பின் நெருங்கி வந்து விளையாட்டு காட்டும் நாய்க் குட்டி மழையில் நனைந்து குளிரின் காரணமாக நடுங்கிக் கொண்டு ஆதரவுக்காக என்னிடம் வந்து நின்றது.
 
வெள்ளையும் பிரௌனும் கலந்த அந்த அழகான கொழு கொழு நாய்க் குட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு மழையில் நனையாத இடமாக அதை விடலாம் என்று இடம் தேடினேன். என்னுடன் ஒண்டிக் கொண்ட அந்த நாய்க் குட்டி பாதுகாப்பான இடம் கிடைத்து விட்டதாக நம்பி முனகல்களை நிறுத்தி ஒண்டிக் கொண்டது. எங்கள் ஏரியாவில் ஏற்கெனவே இரண்டு மூன்று நாய்கள் உண்டு. ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவை. அதில் ஒன்று போட்ட குட்டிகளை இரண்டுமாய் மற்ற வெளி நாய்களிடமிருந்து ட்ராஃபிக் கான்ஸ்டபிள்  போல பாதுகாத்து அழைத்துச் செல்லும். இந்த நம்பிக்கையில் இந்த நாய்க் குட்டியை இந்த ஏரியாவில் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் விடலாம் என்று பையனிடம் தந்து, கட்டிட ஓரமாக எங்காவது விடுமாறு சொல்லி விட்டு,  கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது அந்த கோரம் நடந்து முடிந்திருந்தது.


பையன் கையில் நாய்க் குட்டியைப் பார்த்ததுமே அருகில் வந்து குலைத்து பயமுறுத்தத் தொடங்கின இரண்டு நாய்களும்.  இவன் எங்கே தன்னை இவை குதறி விடுமோ என்று பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து குட்டியைக் கீழே விட, அந்த இரண்டும் பிறந்து முப்பது, அல்லது  நாற்பது நாட்களே ஆகியிருக்கக் கூடிய அந்தக் குட்டியை குதறி துவம்சம் செய்து போட்டு விட்டன. இதை நேரடியாகப் பார்த்த இரண்டு பையன்களும் மனைவியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என் மனமும் கனத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. என்ன விதியோ அது என் கையில் வந்து தஞ்சம் கேட்டது? ஒரு குழந்தையின் மரணம் போல அது என்னை படுத்துகிறது...

19 கருத்துகள்:

 1. அந்த குட்டி நாய் மூஞ்சும், நீங்க சொன்ன விதமும் என்னை கனக்க செய்ததது..

  பதிலளிநீக்கு
 2. பிஞ்சு குழந்தைகளின் முகத்தில் சோகத்தை பார்ப்பது மிகவும் கொடுமை. இந்த பிஞ்சு குழந்தையின் சோக முகமும், இதன் அகோரா மரணமும்.........அம்மா, அது எவ்வளவு துடிச்சிருக்கும்! நெனச்சே பாக்க முடியல, ரொம்ப வருத்தமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. அய்யோ கொடுமைங்க.புகைப்படம் வேற கலங்கடிக்குது.

  பதிலளிநீக்கு
 4. :(
  ரொம்ப பாவமுங்க...இன்னைக்கு நான் வரும்போது என் கண் எதிர்ல ஒரு டாடா சுமோ குட்டி நாய் மேல ஏத்திட்டு நிக்காம போய்டுச்சு... ரத்தத்தை பார்த்த உடன் தலை லேசா சுத்திச்சு....

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் கலையரசன், ராமலக்ஷ்மி, மீனாக்ஷி, வானம்பாடிகள், கிருத்திகா!
  நம் கண் எதிரே நிகழ்கின்ற மரணங்கள் - நம் மனதை உலுக்கி, நிஜ உலகம் என்பது இவ்வளவுதானா என்றும், ஏன்? என்றும் ஆதங்கப்பட வைத்துவிடுகின்றது.

  பதிலளிநீக்கு
 6. அது என்னமோ உண்மைதான் எங்கள்...! இதில் இரண்டு விஷயங்கள் சொல்லப் பட்டுள்ளன. முதலாவது கிரிக்கெட் பற்றி...சாதாரணமாக கிரிக்கெட் பற்றி நிறையப் பேசும் மக்கள் இதில் அதைப் படித்தார்களா என்றே தெரியாத அளவுக்கு நாய்க் குட்டியின் மரணம் பற்றி மட்டும் பேசுகிறார்கள்...நான் கிரிக்கெட் பற்றி பேச வந்தேன்...வெட்கமாக இருந்ததால் விட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. ரவிச்சந்திரன், நான் இரண்டையும் பேசப்போகிறேன் !!

  - கிரிக்கெட் - இன்னுமா அந்த கருமத்தை பார்க்கிறீர்கள் ? 1980 ஏன் அதற்கு மேலும் வரை கிரிக்கெட் உலகையே ஆண்ட மேற்கு இந்திய தீவு அணி போல் எந்த ஒரு நாடும் தனித்து யாரையும் பயம் காட்ட முடியாமல் போய்விட்டது. நல்ல வெற்றிக்கு பின் மீண்டும் மிக பெரிய சரிவு என்று consistency இல்லாமல் ஒரு தினுசாக போய்க்கொண்டிருக்கின்றது ! அதேபோல் என்னவோ பத்தாம் வகுப்பில் மதிப்பெண் போல் வாங்குவது போல் 400 / 500 என்று ரன் குவிப்பதால் பௌலர் நிலைமை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. ஏதோ முத்தையா முரளிதரன் போல் சிலர் ரன்கள் அளிக்காமல் பெயர் எடுப்பதால் பிழைத்தது !!

  - நாய்க்குட்டி - மனுஷ ஜென்மங்களை தவிர மற்ற எல்லாவகை உயிரனங்களும் தான் பெற்ற குட்டிகளை பிரசவித்த உடன் ஒன்றையோ இரண்டையோ தின்று விடுவது இயற்கை என்றாலும், இது பெரிய நாய்களின் குட்டியா என்று தெரியாவிட்டாலும் அந்தோ பரிதாபம். அதே நாய்க்குட்டியின் போட்டோவா ?

  அது சரி, எங்கள் ப்ளாகில் நான்கு ஐந்து பேர் இருப்பதால் யார் எழுதியது என்று சொன்னால் நன்றாக இருக்கும். சிலவற்றில் எழுதியவரின் பெயர் பார்த்திருக்கின்றேன். கே.ஜி.ஜி பெங்களூரில் இருப்பதால் மற்றும் சென்னையில் மழை என்று கேள்விப்பட்டதால் கொஞ்சம் confusion !!

  - Sai

  பதிலளிநீக்கு
 8. ஐயோ...மனம் கனத்துப் போகிறேன்.உயிர்...!

  பதிலளிநீக்கு
 9. மனம் வலிக்க செய்து விட்டீர்கள்...எங்கள் வீட்டு "குட்டி" இறந்த போது கிட்டத்தட்ட ஒரு வாரம் யாருமே சரியாக சாபிடவில்லை..தூங்கவில்லை..அம்மா அழுது கொண்டே இருந்தார்..

  பதிலளிநீக்கு
 10. எனக்கும் கிரிக்கட்டுக்கும் கொஞ்சம் தூரம்.
  பாவம் அந்த நாய்க்குட்டி. நாய்குட்டிகளடோ அன்பை ஒருமுறை நாய் வளர்த்திருந்தா எல்லாரும் உணருவார்கள். ரொம்ப பரிதாபமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. // அது சரி, எங்கள் ப்ளாகில் நான்கு ஐந்து பேர் இருப்பதால் யார் எழுதியது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.//

  ஆமாம் - அதைச் சொன்னா எங்களுக்கும் உதவியா இருக்கும்!
  விரல்களால் வம்படிக்கிறவர்கள் யாரும் வாயைத் திறக்காமல் மௌனவிரதம் இருக்கிறார்களே!

  பதிலளிநீக்கு
 12. ஹேமா - ஐந்து வார்த்தைகளில் ஒரு கவிதை? சபாஷ்!

  பதிலளிநீக்கு
 13. சுரேஷ் சார் - மனதை தேற்றிக் கொண்டுவிட்டோம் - உங்க மாதிரி வாசகர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளால்.

  பதிலளிநீக்கு
 14. புலவன் புலிகேசி - செல்லப் பிராணிகள் வளர்ப்போர் எல்லோருக்குமே - இது ஒரு தவிர்க்கமுடியாத இம்சை. மனிதர்களின் வாழ்நாளைவிட பல பிராணிகளின் வாழ்நாள் குறைவாக இருப்பதுதான் காரணம்.

  பதிலளிநீக்கு
 15. // ரோஸ்விக் said...
  எனக்கும் கிரிக்கட்டுக்கும் கொஞ்சம் தூரம்.//
  ரோஸ்விக் - எங்களில் ரொம்பப் பேருக்குக்கூட - கிரிக்கட் பற்றி ஒன்றும் தெரியாது, அதிக தூரம்!சங்கீதம் தெரியாமையே நாங்க சங்கீத விமரிசனம் செய்வதுபோல, கிரிக்கட் தெரியாமலேயே - நாங்க அவங்க போடற கோல் பத்தி எல்லாம் எழுதி எங்க அறிவுத் திறனை (பூதக் கண்ணாடிகொண்டு) காட்டிக்கொள்வோம்!

  பதிலளிநீக்கு
 16. I have played enough cricket for years and hence hate it now in current format. Especially when there is no absolute leader !

  - Sai

  பதிலளிநீக்கு
 17. Please see this kid who is 4 yrs and his range of cricket shots

  http://www.facebook.com/video/video.php?v=103144776367435


  I was amazed by looking at this kid

  He surely has great future

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!