சண்டிகார் : ஜலந்தர் கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர் ஒருவர், சிட்டுக் குருவிகளுக்காக கூடுகளை உருவாக்கி, வினியோகித்து வருகிறார்.
நகரங்கள் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலும், தற்போது மொபைல்போன் கோபுரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, சிட்டுக்குருவி, தேனீக்கள் உள்ளிட்ட உயிரினங்களை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக, சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில், சிட்டுக் குருவிகள் 70 முதல் 80 சதவீதம் வரை அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
சிட்டுக் குருவிகள், வயல்காட்டில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் கூடுகட்டி வாழ்பவை. தற்போது, விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் உருவாகி வருவதால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கும் இடமில்லாமல் போகின்றன. இதை கருத்தில் கொண்டு, சமூக ஆர்வலர்கள் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர். ஜலந்தரில், கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் சந்தீப் சாகால், மரத்தாலான சிட்டுக் குருவிகளின் கூடுகளை உருவாக்கி, பறவை ஆர்வலர்களுக்கு வழங்கி வருகிறார். இதுவரை 350 க்கும் மேற்பட்ட கூடுகளை செய்து, அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: பஞ்சாபில், மொபைல்போன் டவர்களால் சிட்டுக்குருவி இனம் தற்போது, அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர, தற்போது, விவசாயத்தில், பூச்சிக்கொல்லி உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை உண்ணும் பறவைகளும் அழிகின்றன. மேலும், பறவைகளுக்கு இயற்கையான வசிப்பிடங்கள் கிடைப்பதும் வெகுவாக குறைந்து வருகிறது.எனவே, சிட்டுக் குருவிகளுக்காக, மரத்தாலான கூடுகளை நானே செய்து, பறவையின ஆர்வலர்களுக்கு அளித்து வருகின்றேன். இதை வாங்கி, வீடுகளிலோ, தோட்டங்களிலோ வைக்கும் போது, சிட்டுக்குருவிகள் வந்து அதில் தங்கும். அவற்றிற்கு பாதுகாப்பான இருப்பிடம் கிடைக்கும்.இதை நானே செய்ய கற்றுக்கொண்டு, வாரத்திற்கு 10 கூடுகள் வரை செய்து தருகிறேன்.மேலும், சிட்டுக் குருவிகள் அழிவு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சந்தீப் சாகால் கூறினார்.
(நன்றி - தினமலர் 27 -9-2010)
How to build a bird box for house sparrows
Where have all the sparrows gone? It's hard to imagine that this once common British bird is in serious decline in some parts of the country, particularly in London. Nationally there has been a 50% fall in sparrow numbers since 1979.
Sparrows often nest under the eaves of houses but many modern houses are not 'sparrow friendly'. This bird box will help reverse the decline. | Sparrows are gregarious birds. This home made nest box uses 12mm exterior plywood and will accommodate up to three breeding pairs of house sparrows. |
A cutting plan can be found and printed by clicking here. Picture 1, above, shows what looks basically like a book rack, with 3 separate compartments. A roof overhang at the sides and front (picture 2) helps to help keep the interior dry. The small batten part way up the side gives the young birds a chance for a peek at the outside world before making that all important first flight. Waterproof wood glue and number 4 brass screws were used to secure the panels. The front is fixed with screws only, to enable the box to be cleaned out at the end of the season.
The 32 mm holes accommodate house sparrows, tree sparrows and nuthatches. Keep the hole near the roof to deter predators and drill a couple of small holes in the base of each compartment to keep the nest dry. Water-based wood stain can be used to enhance and protect the nest box, but on the outside of the box only. Try also to keep any preservative away from the entrance hole. Fenceguard and Sadolin Classic are recommended by the manufacturers as being suitable products. Cuprinol TimberCare (for use on rough sawn timber) is also safe to birds when dry.
vaalga antha nalla ullam
பதிலளிநீக்குநல்ல சேவை. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குசிறுவயதில் எங்கள் வீட்டு உள்திண்ணையின் இரண்டு தூண்களுக்கு நடுவே ஒரு பலகை அமைத்திருந்தார்கள் சிட்டுக் குருவிகளுக்காக. அவற்றின் சங்கீதத்தைக் கேட்டு வளர்ந்த எனக்கு இப்போது அவை காணக் கூட கிடைப்பதில்லை:(!
நல்ல மனம் வாழ்க.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவிஞ்ஞான வளர்ச்சியால் எத்தனை இயற்கை அழிவுகள்.கவலையாக இருக்கிறது !
பதிலளிநீக்குநேத்திக்கு படம்,
பதிலளிநீக்குஇன்னிக்கு பாடம்..
ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..
(சிட்டுக்குருவி )
நல்ல பகிர்வு
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குரொம்ப அவசியமான விஷயம். காக்கா கூட குறைஞ்சிண்டு வருது.
பதிலளிநீக்குபத்து நாள் செல்போன் பேசுவதில்லை, கார் டூவீலர் உபயோகிப்பதில்லை என்று ஏதாவது சுயக்கட்டுப்பாட்டுத் தீர்மானம் செய்து நிறைவேற்றுவோமா? மாட்டோம். குருவி சாகிறது என்று வருத்தப்படுவோம். Hypocrisy is modern virtue.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குசிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
பதிலளிநீக்குசெல்லமே ஒருகூடு கட்டிப்போடு
உலகம் முழுதும் திரிந்து பறந்து
உறங்கவே ஒரு கட்டில் போடு..
உணவு தானியம் தட்டில் போடு
I remember reading this some years back
பதிலளிநீக்குhttp://www.newsweek.com/2008/06/14/stung-by-bees.html# (Chinese can afford to do hand pollination and may be Indian as well ! But !)
Each specimen has a role to play and continues the ecological balance in the world for us as well.
I am not sure what are all the impact we will have with Sparrow's disappearing in the world !!
மோ சி பாலன் - நல்ல கவிதை!
பதிலளிநீக்குநாங்க சொல்ல நினைத்ததை,
நான்கு வரிகளில் நறுக என்று
சொல்லிவிட்டீர்கள்!
எங்கள் எண்ணங்களை எழுப்பியதற்கு "எங்கள்"க்கு நன்றி. தூங்கி எழுந்ததும் ஒன்றரை பல்லவியும் சேர்த்து mosibalan.blogspot -இல் பதிந்துவிட்டேன். நிச்சயம் விரைவில் ஒரு கூடு கட்டிவிடுவேன்.
பதிலளிநீக்கு