சனி, 25 செப்டம்பர், 2010

ஹரியுடன் நான்...NO HURRY!!

ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பு ஏதுமின்றி சாதாரணமாக அணுகும்போது சிறிய விஷயம் கூட நன்றாக இருக்கிறது. எதிர்பார்ப்புடன் அணுகும்போது ஏமாற்றம் வருவதுண்டு. எம் எஸ் வி கேபி பெயர்கள் பார்த்து முதல் நாள் பார்த்த நிகழ்ச்சி முதல் ரகம். இரண்டாம் நாள் எதிர் பார்ப்பு ஓவராகி விட்டதோ என்பது போல சிறு ஏமாற்றம். மனதைப் பொறுத்ததுதானோ...!

அதே போல இந்த இரண்டாம் நாள் பதிவும் ஏமாற்றம் தந்து விடுமோ என்னமோ..? ஆயிரக் கணக்கான ரசிகர்கள் (ஒரு பதிவர் கமெண்ட் போட்டால் அது ஐநூறு ரசிகர்களுக்கு சமம்...!! அநன்யா, Chitra, கீதா சந்தானம் மூன்று பேர் சேர்த்தா ஆயிரம் தாண்டாதா என்ன?!!) பதிவுல ரெண்டாம் நாள் மூணாம் நாள் நிகழ்ச்சியையும் கவர் பண்ணிடுங்களேன் என்று சொன்னதால அதைப் பற்றி இன்றும் எழுதுகிறோம்... (பதிவுத் தலைப்புக்கு சான்ஸ் தந்ததற்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு ஏதோ போனால் போகிறது என்று எழுதுவது போல அலட்டலைப் பாரு என்கிறீர்களா)
இனி இரண்டாம் நாள் நடந்தது பற்றி பகிர்வுகள்... (டிவியில், மற்றும் யூ குழாயில் பார்க்கிறோமே இது எதற்கு என்கிறீர்களா...பார்க்கப் பொறுமை மற்றும் நேரம் இல்லாதவர்களுக்குதான்...)

ரவி ஷங்கர் பாடியது யேசுதாஸ் பாடிய அவள் ஒரு தொடர்கதை படத்தின் "தெய்வம் தந்த வீடு" பாடல். எஸ் பி பி தான் பாடிய பாடல்களையே கூட தானே மேடையில் பாடும் போது எக்ஸ்ட்ரா சங்கதிகள் போடுகிறேன் பேர்வழி என்று ஏதேதோ மாதிரி எல்லாம் இழுத்துப் பாடுவார். ஒரிஜினலை ரசித்த நம் காதுகளுக்கு அது ஒரு மாதிரி இருக்கும். அது போல இவர் இந்தப் பாடலில் சில இடங்களை இஷ்டத்துக்கு வளைத்துக் கொண்டார். முதல் நாள் பாடிய அனைவருமே நன்றாகப் பாடினார்கள். இவர் சற்று...

அவ்வப் போது ஹரிஹரன் எம் எஸ் வீயை நாற்காலியில் சுழன்று திரும்பிப் பார்த்துக் கொள்வார் அவர் எப்படி ரசிக்கிறார் என்று...

இந்தப் பாடலைப் பற்றி கேபி, யேசுதாஸ் ஆரம்பக் காலங்களில் பாடிய பாடல் என்றும் எம் எஸ் வி 'இவர் நல்லாப் பாடுவார் இவரைப் பாட வைக்கிறேன்' என்று சொன்னதாகவும், பின்னாளில் யேசுதாஸ் எங்கு கேபியைப் பார்த்தாலும் இந்தப் பாடல் தன் இசை வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று சொல்வார் என்றும் சொன்னார். எம் எஸ் வி இதை சோதனையான பாடல், கேபி ரொம்ப சோதித்தார் என்றார். ஹரிஹரன் பாட்டுல பிடிப்பு இல்லாமல் பாடியதாக விமர்சனம் செய்து குரலை எறியச் சொன்னார்!!! ( Voice throw பண்ணி பாடணும்!)

அடுத்து கார்த்திக் பாடிய சிவ சம்போ பாடலும் சுமார் ரகம்தான் என்றாலும் எம் எஸ் வி சொல்லும்போது தான் பாடியதற்கு முன் இவர் பாடியதைக் கேட்டிருந்தால் இவரையே பாடச் சொல்லியிருப்பேன் என்று சொன்னதற்கு கார்த்திக் கீழே தரையைத் தொட்டு வணங்கி நன்றி சொன்னார். கேபி சொல்லும்போது ஒவ்வொரு பாடலும் இசைவடிவம் பெற பல நாட்கள், ஏன் மாதங்கள் கூட ஆகும்போது இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் ஒரு வாரத்தில் போட்டதாகச் சொன்னார். அபூர்வ ராகங்கள் கூட ஒரு இசைப் படம் என்றாலும் வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு ம்யுசிகல் படம் எடுக்க நினைத்து எடுத்த படம், என்றும், கமலுக்கு எஸ் பி பி குரல் என்றால் ரஜினிக்கு எம் எஸ் வி குரல் நன்றாகவே பொருந்திப் போனதாகச் சொன்னார்.இதற்குதான் This is not my film...it is your film visu என்றார்.

எம் எஸ் வி சுவாரஸ்யத் தகவல்கள் சொன்னார். சில பழைய மெட்டுகளின் தழுவல்களில் பாடல்கள் வேண்டுமென டைரக்டர் கேட்டாராம். எங்கேயும் எப்போதும் பாடலை அதே ராகத்தில் "கத்தாழைக் காட்டுக்குள்ள விறகொடிக்கப் போனாளாம்" என்ற நாட்டுப் புறப் பாடல் சாயலில் அமைத்ததையும், சம்போ சிவ சம்போ பாடலை மலையாளப் பாடல் ஒன்றின் சாயலில் அமைத்ததையும் சொன்னார். இது மாதிரி தழுவி எடுக்கும் பாடல்கள் பற்றி இளையராஜாவும் அவரும் அடிக்கடி பேசிக் கொள்வார்களாம்.

நேற்று முழுவதும் பேசாத சரத்தும், ஜேம்ஸ் வசந்த்தும் இன்று பேசினார்கள். ஒரு இசை மேதையின், இயக்குன இமயத்தின் அருகில் ஒரே வரிசையில் அமர நேர்ந்த பெருமையை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். ஜேம்ஸ் முப்பது வருடங்களுக்கு முன் இசையமைக்கப் பட்ட பாடல் இன்றும் கல்லூரிகளில் பாடப் படுவதின் ஆச்சரியத்தைப் பேசினார். சரத்தும் ஆமோதித்தார். எம் எஸ் வி இசை கேரளாவிலும் பெரிய ஹிட் என்றும், அவர் இசையில் உயிர், soul, உண்மை இருக்கிறது என்றார். அவர் அருகில் அமர்ந்துள்ள பெருமை, போதை மயக்கமாய் இருக்கிறது என்றார்.
அடுத்த வந்த செண்பகராஜ் 'ராகங்கள் பதினாறு' பாடலை நன்றாகவே பாடினார். நமக்குப் பிடித்தால் ஹரிஹரனுக்கு பிடிக்கவில்லையே. ஆரம்ப ஆலாபனையில் தப்பு செய்து விட்டதாகச் சொன்னார். காலப்ப்ரமாணம் என்ன என்று கேட்டார். பிராக்டீஸ் செய்யும்போது ஸ்லோ வாகச் செய்யச் சொன்னார். அப்போதுதான் 'சங்கதிகள்' சரியாக வரும் என்றார்!
எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.

கேபி ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் விசு, இது மிகவும் மென்மையான பாடல், மறக்க முடியாதது என்றார்.

ஜேம்ஸ் வசந்த் எம் எஸ் வீயிடம் இது மாதிரி பாடல்களுக்கு ட்யூன் போட்ட அனுபவத்தை கேட்டார்(இந்தப் பாடலில் வரும் 'சங்கதிகள்' நீங்களே சொல்லிக் கொடுத்து பாடகர் பாடியதா, அவரின் சொந்தக் கற்பனையா என்று). எம் எஸ் வி 'ட்யூன் போட்டவுடன் மறந்துடணும், அப்போதுதான் அதன் சாயல் மற்ற பாடல்களில் தெரியாது என்றார். மற்றபடி பாடலைப் பொறுத்து பாடகரை தெரிவு செய்வார் என்று சொன்னார்.

அடுத்து ஹரிணி பாடிய அனுபவி ராஜா அனுபவி பாடலான 'முத்துக் குளிக்க வாரீகளா' பாடல். நன்றாகப் பாடினார் என்றாலும் நாட்டுப்புறப் பாடல் போன்ற ஸ்லேங் என்பதால் ஒரு மாதிரி வாயை வைத்து உச்சரித்தார் என்று பட்டது. கிட்டத்தட்ட அதையே ஹரிஹரனும் சொன்னார். கேபி தூத்துக் குடி பாஷையில், திருநெல்வேலி ஸ்லேங்கில் பாடல் அமைய வேண்டும் என்று விரும்பியதைச் சொன்னார். மெஹ்மூத் இந்தப் பாடலை ஹிந்தியில் எடுக்க விரும்பி ஒரிஜினலை மரியாதை செய்யும் விதமாக தமிழ் வரிகளையே ஹிந்திப் பாடலின் வரிகளாக அமைத்ததைச் சொன்னார். மேலும் இந்தப் படம் தான் அவரும் எம் எஸ் வீயும் இணைந்த முதல் படம் என்றார்.

எம் எஸ் வி, ஆர் டி பர்மன் இந்தப் பாடலைப் பாராட்டியதையும், அந்த நேரம் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த எம் ஜி ஆர் 'என்ன செய்கீறீர்கள்' என்று தொலைபேசி, விஷயம் கேள்விப் பட்டு பாடலைக் கேட்க விரும்புவதாகச் சொல்லி, கேட்டு, பாராட்டியதைச் சொன்னார்.

இன்றைய நிகழ்ச்சியின் கடைசிப் பாடலாக வந்தது பார்க்கின்ற வகையில் கவிதையாக வந்த பார்கவி பாடிய அவள் ஒரு தொடர்கதை பாடல் 'கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்' பாடல். எல்லோரையும் போலவே எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நன்றாகவே பாடினார். ஹரிஹரன் சரணத்தில் தவறு செய்ததாய் சொன்னார். கேபி சொல்லும்போது பொதுவாகவே எல்லா பாடல்களும் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார். குறைகளை நிபுணர்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். இயக்குனர் வசந்த்துடன் கலந்துரையாடி கோல்டன் பீச் கட்ட ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் எடுத்ததாகவும், முதன்முறை அங்கு எடுக்கப் பட்ட காட்சிகள் என்றும் சொன்னார். பல நடிகர்களை தான் முதன்முறை நடிக்க வைத்தது போல கோல்டன் பீச்சையும் தான்தான் முதலில் உபயோகப் படுத்தியதாகச் சொன்னது ரசனை. எம் எஸ் வி பேசும்போது கவிஞர் எப்போதும் கேட்கும் 'சப்தத்துக்கா சந்தத்துக்கா' கேள்வி பற்றி சொன்னார். இந்தப் பாடல் வரிகளாய் எழுதப் பட்டு பின்னர் அதற்கேற்ப இசை வடிவம் கிடைத்ததாகச் சொன்னார்.

பொதுவாக,

பாடல்கள் பாடப் படும்போது பாலச்சந்தர் லேசான திறந்த வாயுடன் கவனித்து ரசிப்பது ரசனை. அவர் பாடல்களை யார் பாடினாலும் எம் எஸ் வி பாடுவது போலவே கேட்கும் என்பதால், குறை சொல்லத் தோன்றாமல் ரசிப்பதாகச் சொன்னார். அவள் ஒரு தொடர்கதை தனது மாஸ்டர் பீஸில் ஒன்று என்று சொல்லி விட்டு மற்றவர்கள் அப்படிச் சொல்வார்கள் என்றார்.

பின்னணி இசை ஒலிக்கும்போதும் சரி, பாடும் போதும் சரி எம் எஸ் வி தலையை ஆட்டிக் கொண்டே ரசிப்பது ரசனை.
பாடப் படும் பாடல்கள் யார் எப்படிப் பாடினாலும் அது பெரிதில்லை. ஒரிஜினலை மனதில் நினைவு படுத்துவது தான் பெரிய விஷயம். இதில் சாய்ராம், அப்பாதுரை கருத்து ஆமோதிக்கப் படுகிறது. (சாய்ராம்.. எங்கள் ப்ளாக்குக்கு வெளியிலிருந்து தரும் ஆதரவை விலககிக் கொள்வதாகச் சொன்னது ஏனென்று தெரியவில்லை) எம் எஸ் வி பாலச்சந்தர் காம்பினேஷன் தான் முக்கியம். கேபி யேசுதாஸ் எஸ் பி பி பாடுவதை விட எம் எஸ் வி பாடுவதுதான் நன்றாக இருப்பதாகக் கூறுவதை அவர் ரசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். "நீ பாடுவது போல அவர்கள் பாடலையே விசு.." என்பாராம்.

ஹேமா சொல்வது போல நான் இந்த நிகழ்ச்சியை தவறாது பார்ப்பதில்லை என்பதற்கு பின்னோக்கி சொன்ன காரணமும் ஒன்று. சும்மா கடினமாக நடுவர்கள் பேசுவது பார்க்கும் நமக்கு சங்கடமாக இருப்பது போலத் தோன்றும். இதை விட ஆசியா நெட்டில் ஐடியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரம்மாதமாய் இருப்பதாய் தோன்றுகிறது. மிகத் திறமையான பாடகர்கள். உஷா உதூப், சரத் என்ற நடுவர்கள்... Hindhi Zee டிவியில் வரும் ச ரி க ம ப என்ற நிகழ்ச்சியும், ஸ்டார் பிளஸ் (?) டிவியில் வரும் சோட்டே உஸ்தாத் நிகழ்ச்சிகள் கூட ரசனையாக உள்ளன..

இந்த நிகழ்ச்சிக்கு இடையில் ஆசியா நெட்டில் பார்த்தபோது உஷா உதூப் உற்சாகமாக ஏதோ "பாப்பா பாப்பா சூ சூ சூ.... ஹவ் டூ யூ டூ" என்று பாட, ஸ்வேதா உட்பட்ட அனைவரும் ஆடிக் கொண்டிருப்பது பார்க்க முடிந்தது.

21 கருத்துகள்:

 1. எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.


  .....இவரின் தன்னடக்கம் கண்டு, இவரின் மேல் மதிப்பு மேலும் கூடுகிறது.

  பதிலளிநீக்கு
 2. சாய் ப்ளாக் என்னாச்சு?

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 3. சாய் எதனால் இந்த திடீர் மாற்றம்? வலை உலக நட்புகளைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டு திடீர் என்று எல்லாவற்றையும் டிஸ்மாண்டில் பண்ணியதற்கு என்ன காரணம்? உள்ள(த்)தைச் சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 4. பாடுபவர்களின் குறைகளைப்பற்றி எனக்கு அவசியமில்லை, அதான் நிகழ்ச்சி பார்ப்பதை விட இந்தக்கட்டுரை படிப்பதை சுவாரஸ்யமாக நினைக்கிறேன். ’பொதுவாக’வில் உள்ள தகவல்கள் சுவையாக இருந்தன. ஆஃப்க்கோர்ஸ், நல்ல ஒரு ஃப்ளாஷ்பாக் காட்சிகள். மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
 5. //..
  எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.


  .....இவரின் தன்னடக்கம் கண்டு, இவரின் மேல் மதிப்பு மேலும் கூடுகிறது.// ஸேம் பின்ச்!

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி எங்கள் ப்ளாக். கே.பீ. படங்களில், எம்.எஸ்.வீ. இசை ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய வரப்ரசாதம். தொலைக்காட்சியில் இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். நடுவரில் சரத் அவர்கள் எம்.எஸ்.வீயை பற்றி மனம் நெகிழ்ந்து பேசியதை கேட்ட போது கண் கலங்கி விட்டது. கே.பீ. அவர்கள் 'ஏழு ஸ்வரங்களுக்கு' பாடலை கண்ணதாசன், எம்.எஸ்.வீ. அவர்கள் கூட்டமைப்பின் உச்சம் என்றபோது, இந்த பாடலை கேட்ட பலமுறை எனக்கும் இதே கருத்து தோணி இருக்கிறது. வாணி ஜெயராம் பாடிய பாடல்களிலேயே மிக சிறந்த, அபூர்வமான பாடல் என்று இதையும் 'மல்லிகை என் மன்னன்' என்ற பாடலையும் கூறலாம். இந்த இரண்டும் தேவகானங்கள். பாடியவர்கள் எல்லோருமே மிக அருமையாக பாடி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல. இது போல பல தொலைக்காட்சி இசை நிகழ்சிகளில் இளைஞர்களும், சிறுவர்களும் அந்த காலத்து பாடல்களை எல்லாம் மிக அற்புதமாக பாடுகிறார்கள். இவர்களின் திறமைகள் மிகவும் வியக்க வைக்கிறது.

  பதிவில் உங்கள் வர்ணனையும் கலக்கல்!

  பதிலளிநீக்கு
 7. //RVS said... சாய் ப்ளாக் என்னாச்சு?//

  //எங்கள் said...சாய் எதனால் இந்த திடீர் மாற்றம்? வலை உலக நட்புகளைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டு திடீர் என்று எல்லாவற்றையும் டிஸ்மாண்டில் பண்ணியதற்கு என்ன காரணம்? உள்ள(த்)தைச் சொல்லுங்கள்!//

  Nothing

  பதிலளிநீக்கு
 8. பெரியவர்கள் இருவர் முகங்களும் பழைய நினைவுகளைக் கிளறியபடி எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள்.பாடியவர்கள் அத்தனை பேரையுமே பாராட்டலாம்.

  பதிலளிநீக்கு
 9. இந்த நிகழ்ச்சியின் மைய ஈர்ப்பு எம்எஸ்வி. கேபியின் வயதுக்கும் வெற்றிக்கும் கொடுக்கும் மதிப்பை விட பன்மடங்கு எம்எஸ்வியின் திறமைக்குக் கொடுப்பவன் நான். இவர்களையெல்லம் 'சகாப்தம்' என்று சொன்னது மிகச்சரி. சகாப்தங்கள் முடிந்து விடும் என்று நினைக்கும் பொழுது கனக்கிறது. எம்எஸ்வியை பார்த்ததும் சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசனைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. last man standing (?) எனும் ஒரு வித வக்கிர வேதனையோடு பார்த்தேன். கேபி தமிழில் பேசக்கூடாதோ?

  இந்த நிகழ்ச்சியே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.. இதைவிட உஷா உதுப் நிகழ்ச்சி நீங்க பிரமாதமென்றாலும் சரி தான். உஷா உதுப் கச்சேரி ஒன்று சில வருடங்களுக்கு முன்... ரொம்ப வேதனைங்க, வேணாம்.

  பதிலளிநீக்கு
 10. நாகேஷ் இன்னொரு சகாப்தம்.. இந்த நிகழ்ச்சி பார்த்த போது அவர் நினைவும் வந்தது. முத்துக்குளிக்க வாரீகளா பாட்டை நாகேஷை விட்டால் வேறு எவராலும் அப்படி நடித்துக் கொடுத்திருக்க முடியாது. கேபி லக்கி. நாடகம் போல் வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்தும் வந்து வசனம் பேசிவிட்டு போவது போல் படமெடுத்தவருக்கு அராஅ பெரிய வெற்றியையும் அந்தஸ்தையும் கொடுத்தது. நாகேஷ், எம்எஸ்வி, மனோரமாவின் உழைப்பை படம் முழுவதும் உணர முடியும். அந்தப் பாடலுக்கு முன்னால் சினிமா கொட்டகையில் வசனமில்லாமல் நாகேஷும் மனோரமாவும் காதலிப்பது கேபி டச்! கேபி வளர ரொம்ப நாளனது என்பது என் அபிப்பிராயம்.

  பதிலளிநீக்கு
 11. 'மதுரையில் பறந்த மீன் கொடியை' யாராவது பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்த இன்னொரு பாடல் 'வான் நிலா நிலா அல்ல'. ஒருவேளை புதைந்திருந்து நான் பார்க்காமல் விட்டிருந்தால் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 12. அப்பாதுரை சார்,
  'மதுரையில் பறந்த மீன் கொடியை' - அருமையான கல்யாணி ராகப் பாடல்.
  ஆம் பாடியவர்கள் மறந்துவிட்டார்கள்.
  'வான் நிலா நிலா அல்ல பாடல்', சனிக்கிழமை நிகழ்ச்சியில் (25-09-10) பாடப்பட்டது. எங்கள் திரை இசை விமரிசகர் விமரிசனத்துடன் அல்லது அதற்கு முன்பாக சுட்டி தருகிறோம்.

  பதிலளிநீக்கு
 13. Durai,

  I guess we were gifted that we lived in the same era as Sivaji Ganesan (Not just Sivaji !! as I do not want future search in Google to pull my writing quoting Rajinikanth), MGR, Nagesh, MSV, TMS, KB and several others who gave us stunning performance from 60's.

  When KB talked about Thirunelveli slang and the song. I just could not stop thinking about my eternal favorite Nagesh sir. In fact TMS's song Madras Nalla Madras also is a great number in this.

  What a variation between both the Nagesh starting from lighting the lamp with left hand ! In fact when his mother says change hands, he will but still scratch the match by moving the box on the left hand !! Only he can do that.

  We did land on a comedy DVD of Nagesh recently. You should see some of his stunners in that. I will send a copy to you if I can cut one

  We are gifted to have lived around the same time this real Thirai Ulaga Jambhavan's lived.

  Talking about old songs, I was delighted when Adithya came forward and asked for my entire old tamil song dump for his iPod !!

  பதிலளிநீக்கு
 14. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் சுட்டியினால் இந்த நல்ல நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்க முடிந்தது. நன்றி. சில பாடல்களைக் கேட்கும்போதும், MSV, KB இருவரின் கருத்துப் பரிமாற்றங்களைக் கேட்கும்போதும் கண் கலங்கிவிட்டேன். குறிப்பாக 'ராகங்கள் பதினாறு' பாடலுக்கு 'நல்ல பாட்டு. இன்னும் நல்லா இசை அமைச்சிருக்கலாம். என்னால் முடிஞ்சது இவ்வளவுதான்' என்ற MSV யின் கருத்தைக் கேட்டு அவரின் தன்னடக்கத்தைக் கண்டு வியந்துபோனேன். இனிமேல் அகராதியில் தன்னடக்கம் என்பதற்கு MSV என்று பொருள் போடலாம் போலும்.
  சாய்ராம், இவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. வைபவிகூட இவரின் பல பாடல்களைத் திரும்ப திரும்ப போடச் சொல்லி ரசிக்கிறாள் என்றால் பாரேன்!!.geetha

  பதிலளிநீக்கு
 15. //கிட்டத்தட்ட அதையே ஹரிஹரனும் சொன்னார்.// முத்துக்குளிக்க வாரிகளா பாட்டை அந்தப்பெண் மைக்கை ட்ரம்பெட் போல வைத்துக்கொண்டு பாடுவதாக குற்றம் சாட்டினார். அதனால் தான் பாட்டை ரசித்து பாடமுடியலையாம்! It is a Fun song, you must enjoy the tune ன்னு ஹரி சொன்னார். எனக்கென்னம்மோ பிடிச்சு தான் இருந்தது. செண்பகராஜும் அக்னி சாட்சி பாட்டை மிக அருமையாக பாடிய பையனையும் குறை கூறியது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கலை. ரெண்டு இமயங்களையும் அவர்களது கண்கள் பாடல்களை கேட்ட வண்ணம் பின்னோக்கி பயணித்ததையும் துல்லியமாக காண முடிந்தது. இந்த பகுதியை படித்திருந்தாலும், பார்க்கும்போது ஒரு வித நெகிழ்வும் அவர்கள் அடைந்த புகழும் அந்த நினைவுகளும் நம்மை ஆட்கொள்கின்றன என்றே சொல்லவேண்டும். மறுபடியும் நன்றி!

  பதிலளிநீக்கு
 16. //சாய்ராம், இவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. வைபவிகூட இவரின் பல பாடல்களைத் திரும்ப திரும்ப போடச் சொல்லி ரசிக்கிறாள் என்றால் பாரேன்!!.geetha //

  உண்மை கீது. என் பெரியவருக்கும் / சிறியவருக்கும் எம்.பி.த்ரீ பிளேயர் வாங்கி கொடுத்தது தவறோ என்று தோன்றுகிறது. போன வாரம் ஏ.ஆர்.ரெஹ்மான் இசை நிகழ்ச்சி இங்கே நெவார்க், நியூ ஜெர்சியில் போனோம். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கு அவர்களை சந்தோஷமாக பார்த்ததில் சந்தோஷம் !

  நான் லண்டனில் இருந்தபோது துரை வந்திருந்தான். அவன் லேப்டாப்பில் இருந்து பழைய தமிழ் பாடல்கள் சுருடின்னோம் ! அப்போது ஆதித்யாவுக்கு ஆறு / ஏழு வயசு இருக்கும். அவன் கணனியில் தங்களிஷீல் எழுதியிருந்த தமிழ் பாடல்களை ஆதித்யா படித்தது சிரிப்பாக இருக்கும். துரை நினைவிருக்கின்றதா ?

  இப்போது எல்லா பாடல்களும் அவன் பேசியது போல் தான் பாடுகின்றார்கள் !!

  தமிழ் பாட்டா அல்லது ஆங்கில மற்றும் ஸ்பானிஷ் பட பாடல்களா என்றும் தோன்றும் அளவு தமிழ்ப்பாடல்கள் மிக்ஸ் வேறு ? கொடுமை.

  நேற்று ஆதித்யா ஆனால் சொன்னான் - அப்பா நான் அடிக்கடி "தொட்டால் பூ மலரும் பாடல் கேட்ப்பேன்" என்று. சூப்பர் பாட்டு என்று. அது போதும்.

  வைபவிக்கு புது பாடல்களை அறிமுக படுத்தாதே !!

  - சாய்

  பதிலளிநீக்கு
 17. அநன்யா மஹாதேவன் said...

  //முத்துக்குளிக்க வாரிகளா பாட்டை அந்தப்பெண் மைக்கை ட்ரம்பெட் போல வைத்துக்கொண்டு பாடுவதாக குற்றம் சாட்டினார்//

  எனக்கு என்னவோ ஹரிஹரனுக்கு ஏற்கனவே அவ்வளவாக சான்ஸ் இல்லாமல் கார்த்திக், நரேஷ் ஐயர், ப்ளேஸ் என்று பலர் வந்துவிட்டதால் - கடுப்பு போலிருக்கு. எங்கே இவர்களும் வந்துவிடுவார்களோ என்று

  பதிலளிநீக்கு
 18. //அப்பாதுரை said...இந்த நிகழ்ச்சியின் மைய ஈர்ப்பு எம்எஸ்வி. கேபியின் வயதுக்கும் வெற்றிக்கும் கொடுக்கும் மதிப்பை விட பன்மடங்கு எம்எஸ்வியின் திறமைக்குக் கொடுப்பவன் நான். இவர்களையெல்லம் 'சகாப்தம்' என்று சொன்னது மிகச்சரி.//

  மீனாக்ஷி

  சில பல வருடங்களுக்கு முன் "பூத்தூரிகை" ப்ளாகில் அப்பாதுரை நீங்கள் எம்.எஸ்.வி ஒரு சாகப்தம் என்றதற்கு இல்லை என்று சொன்னதாக நினைவு !!

  நாராயணா நாராயணா !!

  - நாரதர் சாய்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!