வியாழன், 2 செப்டம்பர், 2010

ஆசிரியர்கள் தினம்


செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர்கள் தினம். 

வாசகர்கள் யாவரும், அவர்களுடைய ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில், அவர்களைக் கவர்ந்தவர்களைப் பற்றியும், அவர்களிடம் தாங்கள் கண்ட சிறப்பு அம்சங்களையும், கருத்துரையாகப் பதியுங்கள்.

மிகவும் நீண்ட பதிவாக இருந்தால், அதை 
engalblog@gmail.com  
மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

இதை நம் கல்விக் கண்களைத் திறந்து வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கு நம்முடைய மதிப்பையும், மரியாதையையும் தெரியப்படுத்த ஓர் அரிய வாய்ப்பாக எடுத்துக் கொண்டு எங்கள் ப்ளாக் மூலம் நம் ஆசிரியர்களின் அருமை, பெருமைகளை வலை உலகில் உலாவ விடுவோம். 
      

15 கருத்துகள்:

 1. உண்மையிலேயே பெருமைப்பட தக்க ஒரு காரியத்தை எங்கள் பிளாக் செய்துள்ளது.

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டை அரசினர் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இந்திரமோகன், மங்கலமன்னன், சுந்தரேசன், வேதவல்லி,... இவங்களுக்கு ஒரு ஜே போட்டுக்குறேன்.

  பதிலளிநீக்கு
 3. காரைக்கால் நிர்மலா ராணி பள்ளிக்கூட ஐந்தாம் வகுப்பு மறந்து போன கண்க்கு டீச்சருக்கும் ஒரு ஜே.
  தமிழில் எழுதப் பழகிக் கொடுத்த ஜெயின் காலேஜ் அரசனுக்கும் ஒரு ஜே.

  பதிலளிநீக்கு
 4. எனக்கும் பாடம் சொல்லி கொடுக்க முடியும் - அதற்கு அப்புறமும் அவர்கள் தொடர்ந்து ஆசிரிய வேலையில் தங்கள் கடமையை செவ்வன செய்ய முடியும் என்று காட்டியவர்கள்: St.Ignatius Convent Higher Secondary School's nuns and teachers and the faculty of Sarah Tucker College . அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 5. கணக்கில் மக்காய் இருந்தபடியால் மற்ற அனைத்து பாடங்களிலும் (எஸ்.வி. சேகர் நாடகம் ஒன்றில் சொல்லியது போல்) டமால் நான்.

  என்னை பத்தாம் வகுப்பில் "திரு குமாரசுவாமி" என்ற கணக்கு வாத்தியாரிடம் ஒரு நாள் போலே டுஷன் என்று ஒரு சின்ன சைக்கிளில் doubles அழைத்துப்போன "ஆனந்தன்" என்ற என் நண்பன் திரு குமாரசுவாமி அளவு கடவுள். (கிழக்கு அண்ணாநகர் முதல் அமைந்தக்கரை வரை)

  அதுவரை பாகற்காயை விட கசந்த கணக்கு போக - எல்லா பாடங்களிலும் நல்ல ஒரு ஈர்ப்பு வந்து பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் கணக்கில் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் வாங்கியதற்கு அந்த ஆசானே / ஆனந்தனே காரணம் !! ஷெனாய் நகர் திரு.வி. கா என்ற அரசு பள்ளியில் வேலைபார்த்த அவர் தான் எனக்கு பிடித்த வாத்தியார்.

  அதே போல், மயிலாப்பூர் "பி.எஸ். higher செகண்டரி" பள்ளியின் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என்று இரண்டிலும் புலமை கொண்ட சிம்ம குரலோன் "திரு. ஸ்ரீனிவாசராகவன்" என்ற குடுமி வாத்தியார். அவர் "ராமாயணம் - வாலியின் மறைவு மற்றும் தாரா அழுகை என்று அவர் எடுத்த கிளாஸ் அற்புதம்.

  - சாய்

  பதிலளிநீக்கு
 6. என்,ஆசிரியர் குமார் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. பெரியகுளம் தங்கம் முத்து தொழில்நுட்பக்கல்லுரியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்
  என் கெமிஸ்ட்ரி ஆசான் ஆசாத் அவர்களுக்கும் டெக்னிக்கல் ட்ராயிங் ஆசான் அஜீஸ் அவர்களுக்கும் மனமார்ந்த சிறப்பு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 8. அக்ஷ்ராப்பியாசம் பண்ணி வைத்த கோபாலக்ருஷ்ண சாஸ்த்திரிகள் (வாத்யார்) ஆரம்பித்து கல்லூரி வரை என்னை சகித்துக்கொண்ட அனைத்து வாத்தியார்களுக்கும் ஒரு வானளாவிய நன்றி. இதை ஒரு பதிவா போடட்டுமா? நல்ல இருக்கும் போலருக்கே...

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 9. நாகப்பட்டினம் தேசிய ஆரம்பப் பள்ளியில், எல்லா ஆசிரியர்களும், வகுப்புக்கு பிரம்புடன் வந்து கண்டிப்பு காட்டிய நாட்களில், என்றும் புன்னகையுடன் வகுப்பு நடத்திய, பிரம்பையே தொடாமல் பாடம் நடத்திய திரு ராஜாராமன் என்னும் ஆசிரியரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றார், என்னுடைய அண்ணன்களில் ஒருவர்.

  பதிலளிநீக்கு
 10. ஐந்தாம் கிளாசில் ஆங்கிலம் ஏ பி சி டி படிக்க ஆரம்பித்து, ஆறாம் கிளாசில் ஆங்கிலப் பாடத்தில் ஒன்றுமே புரியவில்லையே என்று திகைத்திருந்த எனக்கு, ஆங்கிலப் பாடத்தில் ஒரு சுவாரஸ்யம் கொண்டுவந்த, போர்டு ஹை ஸ்கூல் நஞ்சநாடு (ஊட்டி அருகில்) ஏழாம் வகுப்பு ஆசிரியர் திரு அட்டிபாயில் நஞ்சன். (இந்த ஸ்கூலில் அந்தக் காலத்தில் படித்தவர்கள் யாராவது இந்தப் பதிவைப் படிப்பார்களா என்று தெரியவில்லை.)

  பதிலளிநீக்கு
 11. நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில், முதலாம் ஆண்டில் பௌதிகம் கற்றுக் கொடுத்த திரு வாஞ்சிநாதன், பொறியியல் படிப்பில் இன்டஸ்ட்ரியல் எஞ்சிநீரிங் திறம்பட சொல்லித்தந்த திரு ஜே கோவிந்தராஜுலு, ஹீட் எஞ்சின்ஸ் (தெர்மோ டைனமிக்ஸ்) பாடம் நடத்திய திரு இராமநாதன் ஆகியோரை அடிக்கடி நினைவு கூர்வது உண்டு. மிகச் சிறந்த ஆசிரியர்கள்.

  பதிலளிநீக்கு
 12. மிகவும் அருமையான பதிவு. ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்ல எங்களுக்கும் ஒரு வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி. எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த எல்லா ஆசிரியர்களுக்குமே என் வணக்கத்தையும் நன்றியையும் இந்த பதிவின் மூலமும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  குறிப்பிட்ட சில ஆசிரியர்களை பற்றி சொன்னால் கூட இந்த பின்னூட்டமே ஒரு பதிவாகி விடும். அதனால் இரண்டு பேரை மட்டும் சொல்கிறேன்.

  வசந்தா டீச்சர். சென்னையில், என்னுடைய தொடக்கப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். அழகும், கம்பீரமும் கொண்டவர். மிகவும் கண்டிப்பானவர். முதல் வகுப்பு படித்தபோது பள்ளி ஆண்டு விழாவுக்கு நடனமாட, ஒவ்வொரு வகுப்பாக வந்து சில மாணவிகளை தேர்வு செய்தபோது, என்னையும் தேர்வு செய்தார். அன்றிலிருந்து நடுநிலை பள்ளி வரை, அவர் நடத்திய அத்தனை நடன நிகழ்சிகளிலும் நானிருந்தேன். இசையை எனக்கு அறிமுகப் படுத்தியதே இவர்தான். அதற்கே இவரை வணங்க வேண்டும்.

  உஷாராணி, தமிழாசிரியர். சாரதா வித்யாலயா பள்ளியில், என்னுடைய பிளஸ் 2 படிப்பில் தமிழ் வகுப்பு நடத்தியவர். இவரையும் என்னால மறக்க முடியாது. மிகவும் சிறப்பாக தமிழ் சொல்லி கொடுத்தார் என்பதற்காக மட்டுமல்ல, தமிழில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று எனக்கிருந்த தீராத காதலை மேலும் வளர்த்தவர். கிடைத்த சந்தர்பத்தில் எல்லாம் என்னிடம் தமிழ் மொழியின் அழகை பற்றி பேசியவர்.

  பதிலளிநீக்கு
 13. அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்களும் நன்றியும்

  முசிறி மாதா பள்ளியில் துவக்க வகுப்புகள் எடுத்த அனைவரையும்,

  திருச்சி தேசிய கல்லூரியில் பி.பி.ஏ படித்த போது ஆங்கில வகுப்பெடுத்த ராவ், எனது தந்தையாருக்கு வகுப்பெடுத்து எனக்கும் சொல்லித்தந்த பி.ராஜகோபாலன், மிலிடரி சர்வீசில் ஒரு கால் இழந்து பொருளாதாரம் சொல்லித்தந்த சி.எஸ்.வீ அவர்கள், நியூரான்களை தூண்டிய இவர்களை மறக்க முடியுமா ?

  நன்றி எங்கள் பிளாக்

  விஜய்

  பதிலளிநீக்கு
 14. ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் : இதே தலைப்பில், எனது எண்ணங்களை ஒரு பதிவிட்டுள்ளேன்.... நேரமிருந்தால் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும்.
  http://madhavan73.blogspot.com/2010/09/blog-post.html

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!