சனி, 20 நவம்பர், 2010

வாழ்க்கை




   கவிதை 

* வெய்யில் 'அடிக்குது',

மழையும் பெய்யுது
-- அப்பா பாடுவது !
அடுத்த வரி ...
'பிரசுரத்துக்கு ஏற்றதல்ல'..!
    
* பால்கனியில் நின்று பார்க்கிறேன் !
வெய்யிலை உரசி வெள்ளிச் சரங்கள்
வாழ்க்கைக் கற்றுத் தரும் பாடம்
இயற்கையைத் துணைக்கழைத்து -



* "இன்பமும் துன்பமும்
இயற்கையின் நியதி'
T M S குரல் கேட்கிறது.
இது வந்தால்
அதுவும் வரும்.
புரிந்ததுதானே...
* பால்கனியில் நின்று பார்க்கிறேன்.
வெயிலோடு மழையும்...
தொடுவானத்தில்
வண்ண வளைவு...



* இயற்கையை ரசிக்கும் மனம்
வாழ்க்கையை?
அசலை?
பெருமூச்சு
ரொம்பச் சுலபம்.





  ... பா ஹே.
          

15 கருத்துகள்:

  1. இந்த அளவு எவ்வளவோ தேவலை. கவிதை எழுத முடிகிறது. படம் பிடித்துப் போட முடிகிறது. போகப் போக வாழ்க்கையின் போக்கும் புரியாமையும் இயற்கையையும் ரசிக்க விடாமல் செய்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. அடுத்த கட்டம், வெறுக்க வைக்காமல் இருந்தால் சரி என்று ஆகிவிடுமோ என்று.
    ஆரம்ப வரிகளில் குறும்பு கொப்பளிக்கறது என்றால், ஓ.. அந்த வானவில் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான வரிகள்! அழகான படங்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  3. /வாழ்க்கையை?
    அசலை?
    பெருமூச்சு
    ரொம்பச் சுலபம்./

    அது அது:)

    பதிலளிநீக்கு
  4. super, Sriram / kgg . Pictures are very fine.. voted in indli.

    I made 100th post.. please read it leisurely..

    madhavan73.blogspot.com

    thanks.

    பதிலளிநீக்கு
  5. ஹைக்கூ கவிதை. இனி நிறைய கவிதைகளை எதிர்பார்க்கலாமா.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் கவிதையாக இருந்தன. கவிதை?

    பதிலளிநீக்கு
  7. படங்கள் கவிதையாக இருந்தன. கவிதை?

    பதிலளிநீக்கு
  8. தமிழ் மணத்தில் எங்கள் பிளாக்கை இணைப்பதில் உங்களுக்கும் சிக்கல் இருக்கா. எனக்கு இருக்கிறது. தீர்வு ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  9. மழை வெயில் புயல் இடி மின்னல் எல்லாமே வேணுங்கறீங்க வாழ்க்கைல... (எனக்கு டிஎம்எஸ் இருந்தா போதும்னு தோணுது சில சமயம்)

    பதிலளிநீக்கு
  10. அதான் காலைல ஒரு ப்ளாகும் படிக்க முடியலிங்களா தமிழ்!

    பதிலளிநீக்கு
  11. வாழ்க்கையைக் குட்டிக் குட்டியாச் சொன்னது அருமை.படங்களும் ஒரு துண்டுப் பாடலும் நல்லாயிருக்கு !

    பதிலளிநீக்கு
  12. படங்கள் மிக அருமை.
    // இயற்கையை ரசிக்கும் மனம்
    வாழ்க்கையை?//
    ரசிக்கற மாதிரி இருந்தா ரசிக்கலாம். பாட்டை முழுசா போட்டிருக்க கூடாதா? எவ்வளவு நாளாச்சு எங்கள் ப்ளாக்ல மெல்லிசை பதிவு வந்து. கிஷோர் குமார் பாடல் பற்றி எழுத போறதா, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப....... நாளைக்கு முன்னாடி சொன்னதா எனக்கு ஞாபகம். சொன்னீங்கதானே! :)

    பதிலளிநீக்கு
  13. மழைக்காலத்துக்கு ஏற்ற பதிவு. மழை போல் விட்டு விட்டு வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. //அப்பாதுரை said... மழை வெயில் புயல் இடி மின்னல் எல்லாமே வேணுங்கறீங்க வாழ்க்கைல... (எனக்கு டிஎம்எஸ் இருந்தா போதும்னு தோணுது சில சமயம்)//

    அதே அதே - சபாபதே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!