வியாழன், 27 அக்டோபர், 2011

உள் பெட்டியிலிருந்து 10 11

                   
அதெல்லாம் மறந்துடுங்க....!

பிரிந்து போன நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
கண்களுக்குள்
வந்து கொண்டுதான்
இருக்கின்றன
கனவுகளாக அல்ல,
கண்ணீராக...   
-------------------------------------------- 
இயல்பியல் சுவை
 மேலுலகத்தில் ஐன்ஸ்டீனும் நியூட்டனும் ஒளிந்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். நியூட்டன் ஒளிந்து கொள்ள வேண்டும். ஐன்ஸ்டீன் பிடிக்க வேண்டும். நியூட்டன் எங்கும் சென்று ஒளியாமல் ஐன்ஸ்டீனுக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டார்.

ஐன்ஸ்டீன்: "நியூட்டன்... உங்களைக் கண்டு பிடித்து விட்டேன்..."

நியூட்டன்: " நான் நியூட்டன் இல்லை. உங்களிடமிருந்து ஒரு மீட்டர் ஸ்கொயரில் நான் நிற்பதால் நான் நியூட்டன்/மீட்டர் ஸ்கொயர். எனவே நான் பாஸ்கல்"

ஐன்ஸ்டீன்: "செத்தும் சாவடிக்கிறீங்களே பாஸ்..."
------------------------------------  
சமூக சேவை

டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ்புக், ரேஷன் கார்ட், பாஸ்போர்ட்ஸ்.சர்டிபிகேட்டுகள் என்று எதை கண்டெடுத்தாலும் அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டு விட்டால் போதுமாம். அது சம்பந்தப் பட்டவரிடம்  சென்று சேர்ந்து விடுமாம்.  
*** *** ***
ஆதார் (12 இலக்க) எண் குறித்து பழைய பதிவு ஒன்றில் எழுதி இருந்தோம். ஆதார் படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவம்: ஆதார்    

கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு கிளிக்கிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். -
---------------------------------------
கதாநாயகராஜகம்
சீன நண்பனைப் பார்க்கச் சென்றான் அவன். சீனன் அவனைப் பார்த்து தீனமாக 'ஹூங் சூங் கியாங்' என்று ஏதோ சொல்லிட்டு செத்து விட, அதற்கு அர்த்தம் கண்டு பிடித்து அவன் கடைசி ஆசையை நிறைவேற்றி விடத் தீர்மானிக்கும் அவன் அலைந்து திரிந்து அர்த்தம் தேடி கடைசியில் சீனாவுக்கே சென்று அர்த்தம் தெரிந்து கொண்டான். என்ன தெரியுமா....?
    
"ஆக்சிஜன் டியூப் மேலேருந்து காலை எடுடா *#@&*@$*&@௩-௯+%@#..."
-----------------------------------------   
டெக்னாலஜியின் உச்சம்
   
மகனுக்கு அப்பாவின் ஈ மெயில்.
  
"அன்பு மகனே...! நலமா...? நானும் உன் அம்மாவும் நலம்... நாங்கள் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறோம்... தயவு செய்து கம்பியூட்டரை அணைத்துவிட்டு, கீழே இறங்கி வந்தால் நாம் நம் இரவு உணவை சாப்பிடலாம். நானும் உன் அம்மாவும் சாப்பிடாமல் காத்திருக்கிறோம்..."
-------------------------------------------------    
சிக்கலான கேள்விகளுக்கு புத்திசாலி பதில்கள்...  
    
திப்பு சுல்தான் எந்தப் போரில் இறந்தார்?
அவரின் கடைசிப் போரில்.

சுதந்திரப் பிரகடனம் எங்கு கையெழுத்திடப் பட்டது?
அந்தப் பக்கத்தின் அடியில்.

விவாகரத்தின் முக்கியக் காரணம் என்ன?
திருமணம்!  
-------------------------------------------    
இலவசமாய்க் கிடைப்பது...
விமான நிலையத்தில் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தவனிடம் நெருங்கிய ஒருவன், "ஒரு நாளைக்கு எவ்வளவு புகைப்பீர்கள்?"

"ஏன்?"

"இப்படித் தொடர்ந்து புகை பிடிக்கிறீர்களே... இதை நிறுத்தினால், யார் கண்டார்கள், இதோ எதிரில் நிற்கிறதே இந்த விமானம் ஒரு நாள் உங்களுக்குச் சொந்தமாகலாம்"

"விமானம் உங்களுடையதா?

"இல்லை..."

"உங்கள் அறிவுரைக்கு நன்றி... ஆனால் அந்த விமானம் என்னுடையதுதான்.."

(இ க நீ ) தேவை இல்லாத அறிவுரை உடல்நலத்திற்கு தீங்கானது!
-----------------------------------------------  
        

17 கருத்துகள்:

 1. ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்திருக்கேன். எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அனைவரும் நலமா ?

  பதிலளிநீக்கு
 2. உள் பெட்டியில் சுவைக்க நிறைய சுவைகள் உள்ளன.

  பதிலளிநீக்கு
 3. ஹா.ஹா....உள் பெட்டி சுவாரசியமா இருக்கு.
  அதிலும் ஐன்ஸ்டீனும் நியூட்டனும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. அசத்தல் முதல் கவிதையிலிருந்து கடைசி கலாய்த்தல் வரை அத்தனையும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. Good from inbox, but I wud like to point out one thing.

  // நான் நியூட்டன் இல்லை. உங்களிடமிருந்து ஒரு மீட்டர் ஸ்கொயரில் நான் நிற்பதால் //

  Distance between two objects is represented in one dimension only.. (m, inch, etc) not in 2-d plane (eg area in square metre)

  May be Newton drew a box (square or rectangle) with unit area around him, so he become Pascal.

  பதிலளிநீக்கு
 6. //"செத்தும் சாவடிக்கிறீங்களே பாஸ்..."//

  செத்த பிறகும் சாகடிக்கிரீன்களே பாஸ்...

  அனைத்தும் சூப்பர்
  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 7. தேவையில்லாத அறிவுரை உடல்நடத்திற்குக் கேடு...நல்லது.கவிதையையும் ரசித்தேன் !

  பதிலளிநீக்கு
 8. மாதவன்! ஜோக் படிச்சா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது! ஆராயாம அனுபவிக்க இதோ இன்னும் ஒரு ஜோக்: 'நீங்க ஒத்த வெடி வெடிச்சிருக்கலாம்; ஆனா பித்த வெடி வெடிச்சிருக்கீங்களா?' எங்கே, ஜோரா கை தட்டுங்க பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
 9. உள்பெட்டி விஷயங்கள் சிரிக்க வைத்தன குறிப்பாக நியூட்டனும், இமெயிலும் .

  பதிலளிநீக்கு
 10. "அன்பு மகனே...! நலமா...? நானும் உன் அம்மாவும் நலம்... நாங்கள் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறோம்... தயவு செய்து கம்பியூட்டரை அணைத்துவிட்டு, கீழே இறங்கி வந்தால் நாம் நம் இரவு உணவை சாப்பிடலாம். நானும் உன் அம்மாவும் சாப்பிடாமல் காத்திருக்கிறோம்...",.////

  ரெம்ப கொடுமை. விஞ்ஞானம் செய்த தீமை.

  பதிலளிநீக்கு
 11. //ரெம்ப கொடுமை. விஞ்ஞானம் செய்த தீமை.//

  விஞ்ஞானம் செய்த உதவியால் தான் அவர் இங்கிருக்கிறார் இன்னது செய்து கொண்டிருப்பார் என்றறிந்து அவரிடம் காத்திருப்பதை தெரிவிக்க முடிந்தது இல்லாவிட்டால் எத்தனா நம்பர் கடையில் அல்லது வழியில் உருண்டு கிடைப்பாரோ ?

  பதிலளிநீக்கு
 12. //May be Newton drew a box (square or rectangle) with unit area around him, so he become Pascal.//

  Do you think Einsteen would have missed the transition of [Newton into met square] his playmate into Pascal ?

  பதிலளிநீக்கு
 13. ஐன்ஸ்டீனும், நியூட்டனும் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 14. இலவசமாய்க் கிடைப்பது பிடித்திருக்கிறது
  :-)

  பதிலளிநீக்கு
 15. உள் பெட்டியிலிருந்து ரிலீஸ் செய்தவை நல்லாவேயிருக்கு, குறிப்பா சமூக சேவை!

  சைனா ஜோக்கை நான் சூரியாவின் ஏழாம் அறிவு கதையாகவும், விமான ஓனர் விஜய் மல்லையா என்றும் SMS ஜோக்குகளில் படித்திருந்தேன்!! :-))

  பதிலளிநீக்கு
 16. வருக எல்கே...அனைவரும் நலமே.

  நன்றி ரத்னவேல் அய்யா..

  நன்றி வல்லிசிம்ஹன்.

  நன்றி RAMVI

  நன்றி shanmugavel.

  நன்றி மாதவன்.

  நல்ல திருத்தம் சூர்யஜீவா.சரிதான். நன்றி.

  நன்றி ஹேமா.

  நன்றி geetha santhanam

  நன்றி தமிழ் உதயம்

  நன்றி HVL.

  நன்றி பாலராஜன்கீதா.

  நன்றி middleclassmadhavi. வரும் குறுஞ்செய்திகளில் சுவாரச்மானவற்றை எடுத்துப் போடுவது வழக்கம். நீங்கள் இந்த ஜோக்கை வெவ்வேறு வடிவங்களில் கேள்விப் பட்டிருக்கலாம்.

  மாதவன்.. மொழி பெயர்ப்பில் முழி பிதுங்கிய எஸ் எம் எஸ் அது. ஒரிஜினலாக அதை அனுப்பியவருக்கு அனுப்பினோம். . அவர் அவருக்கு அனுப்பியவருக்கு அதை ஃபார்வேர்ட் செய்திருக்கிறாராம். அவரும் அவருக்கு அதை அனுப்பியவருக்கு....சரி விடுங்க...பதில் வந்தால் சொல்றோம்.
  இவர்கள் விளையாடியபோது பேசிக் கொண்ட வார்த்தைகள் கீழே வரும்போது ஏதாவது சில வார்த்தைகள் டவர் கோளாறால் விடுபட்டிருக்குமோ என்னமோ...!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!