Monday, October 17, 2011

படித்ததும் கேட்டதும்...Dennis Ritchie

Dennis MacAlistair Ritchie (September 9, 1941 – October 12, 2011)

டென்னிஸ் மேக் அலிஸ்டர் ரிட்சி இரண்டாம் உலகப் போரின் நடுவே செப்டம்பர் 1941 இல் பிறந்தவர். என்னவோ முகலாய சரிதம் போல ஆரம்பிக்கிறேனே என்று எண்ணாதீர்கள். மெய்யாலுமே அவர் ஒரு கிராண்ட் மொகல் தான் - கணினி உலகைப் பொறுத்தவரை. 
                
கென் தாம்சனுடன் சேர்ந்து அவர் உருவாக்கிய C - என்னும் கணினி மொழி உலகையே மாற்றி அமைத்ததில் முன்னணி இடம் பெறுகிறது. பெரிய சூப்பர் கணினி முதல் கை பேசி வரை இன்று ஒரு சீராக இயங்குகிறது என்றால் காரணம் டென்னிஸின் முயற்சி மட்டுமே.

 
 Steven Paul "Steve" Jobs (February 24, 1955 – October 5, 2011)
ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை டென்னிசுக்கு மீடியா கொடுக்காததன் காரணம் நமக்குப் பிடிபடவில்லை. 
    
அவர் தம் வியாபார வெற்றி இவரது உள்ளுறை மென்பொருளின் முக்கியத்துவத்தை மறைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். 
   
கல்லூரி படிப்பைத் தொடராமல் வியாபாரத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களின் இடையே விஞ்ஞானி குடும்பத்தில் பிறந்து, விஞ்ஞானமும் கணிதமும் படித்து, தந்தையார் வேலை செய்து வந்த பெல் ஆய்வுக் கூடத்திலேயே வேலையில் சேர்ந்து வெற்றிகரமாக டாக்டர் பட்டமும் பெற்று தம் முயற்சிகளை அயராது தொடர்ந்து யூனிக்ஸ் என்கிற பெரிய பெரிய கணினிகளில் காணப்படும் மென்பொருளையும் உருவாக்கிய பெருமை இவரை சேரும்.

சென்ற அக்டோபர் 12 அன்று தம் 70௦ ஆவது வயதில் எப்படி என்று தெரியாமல் காலமானார்.  
                
"I am not now, nor have I ever been, a member of the demigodic party."
"Usenet is a strange place."
"UNIX is very simple, it just needs a genius to understand its simplicity."
"C is quirky, flawed, and an enormous success.
C has "the power of assembly language and the convenience of... assembly language."
==================================================
சுவாரஸ்யக் கண்டுபிடிப்பு.

பழனியிலிருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நான்கு ஈமக்குழியில் தொல்பொருள் ஆராயச்சித்துறையினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று கிடைத்துள்ளது. நான்கு கால்களைக் கொண்ட ஒரு ஜாடியில் நெல்மணிகள் வைக்கப் பட்டிருந்தனவாம். இரண்டு ஈமக்குழியில் கிடைத்த் அந்த நெல்மணிகளை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலடிக் ஆய்வுக் கூடத்தில் காலக் கணிப்பு செய்தபோது இந்த நெல்மணிகள் கி மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளதாம். தானாக விளையும் நெல், பயிர் செய்யப் படும் நெல் ஆகிய இரண்டு வகைகளில் இது பயிர் செய்யப் படும் வகையைச் சேர்ந்ததாம்.(பயிரிடப்பட்ட நெல்) நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்றும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம்.


ஒரு தமிழ்-பிராமி எழுத்து பொறிப்பு இருந்த பிரிமனை ஒன்றில் இருந்ததாம். அதில் எழுதப் பட்டிருந்தது 'வைய்ரா' என்று அறியப் பட்டதாம். (நெல்லை எடுக்காத வைடா என்று அர்த்தமோ..!!)


=========================================

 
சனி ஞாயிறுகளில் 'டைம்ஸ் நவ்' ஆங்கிலச் செய்திச் சேனலில் பிற்பகலிலும், இரவிலும் 'டோட்டல் ரீகால் ' என்றும், 'கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்' என்றும் இரு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள். பழைய ஹிந்திப் பாடல்களை பல்வேறு வகைகளில் வகைப்படுத்தி சில பல வரிகளை ஒளி பரப்பி நம் நினைவுகளைக் கிளறுவார்கள்.

நம்மிடம் உள்ள பாடல்கள்தான். நினைத்தால் முழுப் பாட்டையும் கூட உடனே கணினியிலோ ஐ பாடிலோ ஒலிக்க வைத்துக் கேட்க முடியும். ஆனாலும் பிட்டு பிட்டாக அந்த நிகழ்ச்சியில் பல மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்கும்போதும், அது சம்பந்தப் பட்ட விவரங்களை அதில் சம்பந்தப் பட்டவர்கள் சொல்லும்போதும் சுவாரஸ்யமாக ரசிக்க முடிகிறது.

அதில் பலப்பல பழைய ஹிந்திப் பாடல்களை அலசி ஆராய்ந்து பல்வேறு விவரங்கள் சொல்லும் ஒருவரின் பெயர் கணேஷ் அனந்தராமன். தமிழர். ஹிந்திப் பாடல்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்று இந்தத் துறையில் பி ஹெச். டி வாங்கியிருப்பார் போலும்.
---------------------------------------------
இன்றைய செய்தித் தாளைப் பார்த்தபோது 'கண்ணதாசன் நினைவு நாள்' என்று விளம்பரம் பார்க்க நேர்ந்தது.


24 - 6 - 1927 ------------------ 17 - 10 - 1981

சென்ற முறை தனிப்பதிவே போட்ட நினைவு. இப்போது கவிஞரை நினைவு படுத்த ஒரு பாடல் பகிர்வு.

                             
படங்கள் : நன்றி கூகிள், (ஜோரிகேரளா.காம்), ஆச்சார்யா ஹோம்,
                        

18 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான தொகுப்பு. ரிட்சி பற்றிய பகிர்வு நன்று. நெல்மணி விவரங்கள் ஆச்சரியம்.

கவியரசரின் பாடலுக்கு நன்றி.

suryajeeva said...

பகிர்வுக்கு நன்றி

வைரை சதிஷ் said...

அருமையான தொகுப்பு

பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

நெல்மணிச்செய்தி அருமை.கவிஞரின் தத்துவப் பாடலுக்கு நன்றி !

HVL said...

//
இது பயிர் செய்யப் படும் வகையைச் சேர்ந்ததாம்.(பயிரிடப்பட்ட நெல்) நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்றும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம்.
//
Surprising!

middleclassmadhavi said...

நல்ல தொகுப்பு; Times Now-ல் Amazing Indians என்றொரு ப்ரொக்ராமும் வருகிறது - சாதித்துக் கொண்டிருக்கும் சாதாரண இந்தியர்களைப் பற்றி...

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

நெல்மணி ஆராய்ச்சி .. பெருமை தரக் கூடிய விஷயம்.
டென்னிஸ் ரிட்சி பற்றிய விபரங்கள் எனக்கு புதுசு.
சலிக்காதவை கவிஞரின் பாடல்கள் .
பகிர்வுக்கு நன்றி

shanmugavel said...

சுவாரஸ்யமான தகவல்கள்.நன்றி.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

என்ன? 'சி' யைக் கண்டுபிடித்தவர் செத்துப் போயிட்டாரா? அப்போ மீதி இருபத்தைந்து எழுத்துகளையும் கண்டுபிடித்தவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா?

பத்மநாபன் said...

சி..மொழி சிகரமாக அமைத்த டென்னிஸ்..

கல் தோன்றா காலேத்தே..நெல் தோன்றிய வரலாறு...

கவியரசு நினைவுப் பாடல் என நல்ல தொகுப்பு...

Madhavan Srinivasagopalan said...

//குரோம்பேட்டைக் குறும்பன் said...
என்ன? 'சி' யைக் கண்டுபிடித்தவர் செத்துப் போயிட்டாரா? அப்போ மீதி இருபத்தைந்து எழுத்துகளையும் கண்டுபிடித்தவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா?//

நண்பர் கௌதமனின் பஸ்ஸில் படித்துவிட்டு காப்பியடிக்கும் கு.குவை வன்மையாக கண்டிக்கிறேன்..

kggouthaman said...

மாதவன் சார்!
என்னுடைய கண்டனங்களை, நான் அவருக்கு ஏற்கெனவே மெயில் மூலமாகத் தெரிவித்துவிட்டேன். பாவம் கு கு. எல்லா திசைகளிலும் இருந்து கண்டனங்கள் வந்தால், மிகவும் நொந்து போய்விடுவார்!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இரவில் பொதிகை பாருங்கள் அருமையான பாடல்களை தொகுத்து வழங்கும் பெண் அழகா சொல்வார்:)

அப்பாதுரை said...

எனக்கும் அதேதான் தோணிச்சு... kgg பஸ்ஸினார்னா விட்டுற்றதா? குகு வாழ்க.. குகு வாழ்க.. நாளைய முதல்வர்..

அப்பாதுரை said...

தனக்குத் தானே அஞ்சலி எழுதிக்கொண்டவர்களில் கவியரசும் ஒருவர். (எங்கேயோ படித்தது)

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அப்பாதுரை வாழ்க! நான் முதல்வரானால், அப்பாதுரைதான் நிதியமைச்சர், கட்சிப் பொருளாளர்!

எங்கள் said...

நன்றி ராமலக்ஷ்மி...

நன்றி சூர்யஜீவா

நன்றி வைரை சதீஷ்.

வருக ஹேமா...நீண்ட விடுமுறையை முடித்துக் கொண்டு கவி படைக்க வந்து விட்டீர்கள்...நலம்தானே...

நன்றி HVL.

நன்றி middleclassmadhavi. நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி பார்த்திருக்கிறோம்.

நன்றி சிவகுமாரன்....நீண்ட நாட்களுக்குப் பின் வருகை...நலம்தானே..

நன்றி சண்முகவேல்.

நன்றி குரோ.குறு.எங்கள் ஆசிரியரிடமிருந்தே எடுத்திருந்தாலும் கமெண்ட் ரசிக்க முடிகிறது.

நன்றி பத்மநாபன்.

நன்றி மாதவன். குரோம்பேட்டைக் குறும்பனை மாட்டி விட்டுட்டீங்க...குரோ.குறு அட்லீஸ்ட் ஒரு "நன்றி கௌதமன்' ஆவது சேர்த்திருக்கலாம்....

நன்றி தேனம்மை....பார்க்கிறோம். குறிஞ்சி மலர் போல வருகிறீர்கள்...

நன்றி (குரோ.குறு கட்சியின் பொருளாளர்/நிதியமைச்சர்) அப்பாதுரை.

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!