புதன், 19 அக்டோபர், 2011

எட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை

கே வி தொடர்கிறார்: 

பாட்டுச் சத்தம் சட்டென்று நின்றவுடன், நான் முழுவதுமாக விழித்துக் கொண்டேன். அந்தப் பழைய மர மேசை மீது ஓர் உருவம் - அதுவும் பெண்ணுருவம் - ஒரு கண்ணாடி டம்ளரில் நீல நிற திரவம் ஊற்றப்படும் பொழுது எப்படி மெது மெதுவே அது டம்ளரின் வடிவத்தைப் பெறுமோ அதே வகையில் யாரோ நீர் வார்ப்பது போல - உருப் பெற்றது. என் கை டார்ச் விளக்கை எடுக்க விரைந்த போது, அந்த உருவம், "வேண்டாம் கே வி. விளக்கு - வெளிச்சம் எல்லாம் என்னைக் காணாமல் செய்துவிடும்." என்றது. 
  
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'என்னுடைய பெயர், இந்த ஆவி உருவில் இருக்கும் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?' என்று நினைத்துக் கொண்டேன்.  

"தெரியும். ஆவியுலகில் இந்த உலகில் உள்ள எல்லா பாசிடிவும் நெகடிவ்; இங்கு உள்ள எல்லா நெகடிவ்களும் ஆவியுலகில் பாசிடிவ்."
    
'அப்படி என்றால்?' என்று நினைத்துக் கொண்டேன். 
  
"அப்படி என்றால், இங்கே பகல் - அங்கே இரவு. இங்கே ஸ்தூல சரீரம்; அங்கே சூக்ஷ்ம சரீரம். இங்கே ஒலி; அங்கே எண்ண அலைகள். இங்கே மொழி - அங்கே மௌனம் - இப்படி எல்லாவற்றுக்குமே எதிர் மறை விஷயங்கள்."  

"அப்படியானால் ...." என்று பேச ஆரம்பித்த என்னைப் பார்த்துக் காதுகளைப் பொத்திக் கொண்டது அந்த உருவம். 
  
"தயவு செய்து எதுவும் பேச வேண்டாம். சிறிய ஒலி கூட எனக்கு பெரும் சத்தமாகக் கேட்கும். எனன கேட்க வேண்டும் என்றாலும், மனதினுள் நினைத்தால் போதும்; நான் பதில் சொல்வேன். நீங்க படுத்திருப்பது இரும்புக் கட்டில். அதனுடைய இயற்கையான அதிர்வு அலைகள், உங்கள் எண்ண அலைகளை எனக்குத் துல்லியமாக அறிவிக்கக் கூடியது. இவ்வளவு ஏன்? என் உருவத்தைப் பார்த்தவுடன் நீங்க மனதினுள் நினைத்தது 'இந்தப் பெண் பார்ப்பதற்கு, நான் ப்ளேனில் பயணம் செய்யும்பொழுது பார்த்த விக்ரமாற்குடு தெலுங்குப் படத்தின் கதாநாயகி போல இருக்கின்றாளே!' என்றுதானே?' 

'ஆமாம்' என்று நினைத்துக் கொண்டேன்.

"சரி. இனிமேல் நான் மட்டும்தான் பேசுவேன். நான் இன்னும் ஐம்பத்து மூன்று நிமிடங்கள்தான் இங்கு இருக்க அனுமதி இருக்கின்றது. சுப்ரீம் ஆவியிடம் அனுமதி பெற்று வந்துள்ளேன். சரியாக ஒரு மணி ஏழு நிமிடம் ஆகும் பொழுது மறைந்து போய்விடுவேன். எனக்கு ஓர் உதவி நீங்க செய்தே ஆகவேண்டும். அது எனன, ஏன் என்று சொல்லப் போகின்றேன். நான் பேசுவதைக் கேட்டால் போதும். நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது - குறுக்கே எந்த எண்ணமும் வேண்டாம். ஏதேனும் சந்தேகம் வரும்பொழுது, வலது கால் விரல்களை அல்லது கைக் கட்டை விரலை அசைத்தால் போதும். புரிகிறதா?"
  
'புரிகிறது. ஆனால் நான் இங்கே வந்திருப்பது என் ஆபீஸ் பிரச்னையைத் தீர்க்க - அதை விட்டு, கண்ட கண்ட ஆவிகளிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தால் என் கதி என்னாவது?' என்று நினைத்துக் கொண்டேன். 

"உங்கள் பிரச்னையைத் தீர்க்க எனக்கு வழி தெரியும். கவலை வேண்டாம். உங்கள் பிரச்னையைத் தீர்க்க 'ராமாமிர்தம்' உங்களுக்கு உதவுவார். ராமாமிர்தம் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது போதும். நாளை உங்கள் அலுவலகத்தில் இந்தப் பெயர் உடைய நபர் பற்றி விசாரியுங்கள். மேற்கொண்டு இதில் எந்தத் தகவலும் கொடுக்க சுப்ரீம் ஆவி இப்பொழுது மானசீகமாகத் தொடர்பு கொண்டபோது, மறுத்துவிட்டது." 

'சரி' என்று நினைத்துக் கொண்டேன். 

ஆவி சொன்ன கதை: 

என் பெயர் மாயா. தந்தை பெயர் கோவிந்தராஜன். தாயார் நான் பிறந்தவுடனேயே புண்ணியலோகம் நோக்கிப் பயணம் செய்துவிட்டார்கள். ஊர் தஞ்சைக்கு அருகே வல்லம். பிறந்த தேதி 8 - 8- 1970 (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு. இறந்தது 8 - 8 - 2006. காலை 8 மணி, எட்டு நிமிடம் ஆகும் பொழுது . .....

(தொடரும்) 




22 கருத்துகள்:

  1. கதைக்குள்ள கதையா?

    மி.ம.மோ.[ஆவி விஷயங்கள்] +விக்ரமும் வேதாளமும்[கதைக்குள் கதை]

    சேர்ந்த ரீமிக்ஸா?

    பதிலளிநீக்கு
  2. மாயா சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நாள்,மாத,வருட தேதிகளின் கூட்டுத் தொகை ஆறாக இல்லாமல், அவற்றையும் எட்டாக அமைத்திருந்தால் இன்னும் கொஞ்ச குழப்பங்களைக் கூட்டியிருக்கலாம்!

    மணி,நிமிடங்களையும் சேர்த்துக் கூட்டி எட்டு ஆனாலும் சரியே. எப்படியோ எல்லாவற்றின் கூட்டுத் தொகை எட்டு. இதெல்லாம் கதையை முடிக்கும் பொழுது பின்னாடி எங்காவது கை கொடுக்கும்!

    பதிலளிநீக்கு
  3. ஜீவியை எப்படியெல்லாம் யோசிக்க வச்சிருக்கீங்க?!

    தொடருங்க.

    பதிலளிநீக்கு
  4. ஆவி தான் எட்டெட்டு கதை சொல்லுதா?

    பதிலளிநீக்கு
  5. மனிதர்களுக்குதான் எப்பவுமே ஏதோ ஒரு பிரச்சனைல மனசு உழன்று கொண்டே இருக்கும்னா ஆவிகளுக்கு கூடவா. அங்கேயும் அதிகாரம் பண்ண ஒருத்தரா. சுவாரசியமா இருக்கு கதை. நீங்க என்ன மனசுல நெனச்சாலும் அது எனக்கு தெரிஞ்சுடும்,
    நான் பதில் சொல்வேன்னு சொல்லிட்டு, சந்தேகம் வந்தா கால் கட்டை விரலையோ, கை கட்டை விரலையோ அசைத்தால் போதும் சொல்றதே, ஏன்?

    பதிலளிநீக்கு
  6. ஆவியிடம் மனதில் நினைத்து பதிலளிப்பது புதுசா இருக்கு! அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க!

    பதிலளிநீக்கு
  7. //.... நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது - குறுக்கே எந்த எண்ணமும் வேண்டாம். ஏதேனும் சந்தேகம் வரும்பொழுது, வலது கால் விரல்களை அல்லது கைக் கட்டை விரலை அசைத்தால் போதும். புரிகிறதா?...//

    மீனாக்ஷி கேட்ட கேள்விக்கு - பதிவாசிரியரின் பதில்:
    மாயா சொல்வது: 'நான் பேசும்பொழுது குறுக்கே எந்த எண்ணமும் வேண்டாம்....'
    சந்தேகம் ஏதாவது மனதில் எழும் பொழுதே - கைக் கட்டை விரல் அல்லது கால் விரல்களை அசைத்தால்,
    மாயா தன கதையை நிறுத்தி - சந்தேகம் என்ன என்று எண்ண அலைகளைப் புரிந்துகொண்டு பதில் சொல்வார்.
    மாறாக, மாயா பேசப் பேச, மனதில் ஏதாவது எதிர் கேள்விகள் கேட்டால்/நினைத்தால், மாயாவின் கதைப் போக்கு தடைப் படும்.
    அதைத்தான் மாயா (வின் ஆவியுருவம்) சொல்லியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டைக் குறும்பன்19 அக்டோபர், 2011 அன்று 9:16 PM

    அடுத்து, கதை சொல்லப் போவது ராமாமிர்தமா?

    பதிலளிநீக்கு
  9. அது சரி, மனசில் எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கும் வித்தையையும் ஆவி சொல்லிக் கொடுக்குமா. என்ன செய்து கொண்டிருந்தாலும் மனசு அதுபாட்டுக்கு ஒரு சைட் ட்ராக்கில் யோசித்துக்கொண்டிருக்கிறதே

    பதிலளிநீக்கு
  10. ஆவியெல்லாம் கதை சொல்லுது சினிமாவிலமாதிரி !

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை சார்!

    அவங்க (எங்கள்) இன்னும் இது பத்தி யோசிச்சதாகத் தெரியலலையே?..

    குறைந்தபட்சம் 8+8=16 அதிகபட்சம் 8x8=64 க்ளூகளுக்குள் இந்தக் கதையை சிறைபடுத்தினால் நன்றாக இருக்கும். (பி.தே மற்றும் ம.தே) யில் மாற்றம் செய்தால், இன்னும் இரண்டு எட்டுகள் வேறே நோகாமல் கிடைக்கும். போதாக்குறைக்கு மாயா சம்பந்தப்பட்ட தவிர்க்கவே முடியாத தேதிகள் வேறே இந்த இரண்டும்!
    பாக்கலாம்; ஏதாவது அந்தத் தேதிகளில் மாற்றம் செய்கிறார்களா என்று பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  12. Nothing is better than nonsence. your outputs may be excelent and let your team has very very good people, Rich & talented I realy, realy don't want anything from your hand Mr.Gowthaman

    This may not be the right place to say this. searched for the Lily teacher post. Couldn't catch.

    Thanks Much to Ramanarishi.

    -Thavala

    பதிலளிநீக்கு
  13. அனானி கமெண்ட் படிச்சுட்டு - நல்ல பத்தமடைப் பாயைத் தேடிக் கொண்டிருக்கின்றேன் - (சுரண்டுவதற்கு!)

    பதிலளிநீக்கு
  14. அதீதம் அறிமுகத்திற்கு - அறிமுகப் படுத்திய / ஆவன செய்தோருக்கு, எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க Lalitha Mittal, பதிவாசிரியர் மனசுல என்ன இருக்குன்னு அவருக்குத்தான் தெரியும்..! நாங்களும் ஆவலோட வெயிட்டிங் ...

    வாங்க ஜீவி சார்...பதிவாசிரியரும் உங்கள் கருத்தைப் படித்திருப்பார்...என்ன செய்யறார்னு பார்ப்போம்!

    வாங்க அப்பாதுரை...ஆவியை விட்டுட்டு ஜீவியை பார்க்கறீங்க....

    நன்றி சூர்யஜீவா..

    வாங்க ராம்வி...சொல்லுவது ஆவியா அப் பாவியா (சே..தெரியாமல் நடுவில் ஒரு ஸ்பேஸ் விழுந்துட்டுது....எப்படி...நாங்கள் இல்லைப்பா...ஆவியோட வேலையாதான் இருக்கணும்..) என்று ப.ஆ. தான் சொல்லணும்!!

    நன்றி மீனாக்ஷி..

    வாங்க middleclassmadhavi...

    நன்றி குரோ.குறு,

    வாங்கா கீதா சந்தானம்...நாம எல்லாம் ந.வெ படித்து ரொம்பவே யோசிக்கிறோம்....யோசனையே இல்லாமல் மனம் சும்மா இருக்க முடியுமா..கஷ்டம்தான்.

    வாங்க ஹேமா...ஆவிக்கு எதிர்காலம் இருக்கானு தெரியலை...கடந்த காலம் இருக்கே...!

    வாங்க அனானி....கே ஜி கெளதமனை நல்லாவே குழப்பி பாயைப் ப்ராண்ட வச்சிட்டீங்க...மறுபடி வந்து விளக்கம் சொல்லக் கூடாதா...

    நன்றி ராமலக்ஷ்மி.... நீங்கள் சுட்டித்தான் அதீதத்தில் 'எங்கள்' அறிமுகம் பார்த்தோம்.

    நன்றி சண்முகவேல்..

    நன்றி வைரை சதிஷ்.

    பதிலளிநீக்கு
  16. விக்ரம், விக்ரம், விக்ரம், வேதாள், வேதாள், வேதாள்னு பாடிட்டே படிக்கலாம் போலிருக்கே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!