வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஆவிகள் உண்டா இல்லையா?

                                 
சமீபத்திய 'வாசகரின் ஜீரணம்' (ஹி ஹி -  ரீடர்ஸ் டைஜஸ்ட் அக்டோபர் இதழ்) பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டிருந்த போது - கிடைத்த தகவல் இது: 
    
ஆவிகள் இருக்கின்றன என்று நம்புகின்றீர்களா? என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டு - உலக நாடுகளில் ஒரு சர்வே செய்திருக்கின்றார்கள். அதில், ஆமாம் - ஆவிகள் இருக்கின்றன - நான் நம்புகிறேன் என்று கூறியவர்கள் விவரம்: 

மலேசியா :                        57%
அமெரிக்கா (யு எஸ் ):    47%
கனடா :                               43%
பிலிப்பைன்ஸ்:                43%
ஆஸ்திரேலியா:             39%
ரஷ்யா:                               39%
ஸ்பெயின்:                        39%
இந்தியா:                            37%
இங்கிலாந்து (யு கே):     37%
சீனா:                                    31%
மெக்ஸிகோ:                    28%
ஜெர்மனி:                           24%
நெதர்லாண்ட்ஸ்:            23%
பிரேசில்:                             21%
பிரான்ஸ்:                           20%
தென் ஆப்ரிக்கா:              17% 
    
வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால், நாங்க மாயாவுக்கு  அந்தத் தகவலைச் சொல்கிறோம். (அல்லது அவரே இங்கு படித்துத் தெரிந்து கொள்ளட்டும்!) 
            

18 கருத்துகள்:

 1. //"ஆவிகள் உண்டா இல்லையா?"//

  நிச்சயமா இருக்குசார்..

  இல்லேன்னா எப்படி இட்லி, இடியாப்பம் கெடைக்கும்..

  பதிலளிநீக்கு
 2. "ஆவிகள் உண்டா இல்லையா?"

  நான் பார்த்ததில்லை..

  பதிலளிநீக்கு
 3. எனக்கு தெரிஞ்ச ஒரே ஆவி ஆனந்த விகடன் தான்...

  பதிலளிநீக்கு
 4. நான் இருக்கும் வீட்டு வழி கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட கல்லறை வீடுகள்.8 வருடங்களாக எப்போதும் இரவு 10 மணியளவில்தான் வேலை முடிந்து வருகிறேன்.கண்டால் நிச்சயமாய் சொல்கிறேன் !

  பதிலளிநீக்கு
 5. இருக்கு. . . . ஆனா இல்ல!
  கடவுளையும் ஆவிகளையும் ஆபத்து நேரங்களைத் தவிர வேறு எப்போதும் நம்புவதில்லை.

  பதிலளிநீக்கு
 6. ஆவிளெல்லாம் கிடையாது

  அது ஒரு பிரம்மை

  பதிலளிநீக்கு
 7. இதுவரை எனக்கு எந்த அனுபவமும் ஏற்பட்டதில்லை. ஆனால் ஆவிகள் இருப்பதாக பிறர் சொல்லும் கதைகளையும், அவர்களுக்கு ஏற்பட்டதாக
  சொல்லும் அனுபவங்களையும் மிகவும் விரும்பி கேட்பேன், படிப்பேன். இதை பற்றி ஆராய, தெரிந்து கொள்ள ஆவல் அதிகம்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டாவது படத்தில் பிட்சா பெட்டிக்கு மேலே ஒரு பிசாசு உருவம் தெரிகிறதே!

  பதிலளிநீக்கு
 9. ஆவிகளை நானும் பார்த்ததில்லை சகா. . .

  பதிலளிநீக்கு
 10. hai மதன் ஒரு கேள்வி கேட்பார், யோவ், இந்த ஆவிகலெல்லாம் எப்படியா சட்டை துணி போட்டுகிட்டு வருது... சட்டைக்கு எல்லாம் ஆவி இருக்கான்னு?

  பதிலளிநீக்கு
 11. இந்த ஆவிக்கு உருவம் கிடையாது;சக்தி ஜாஸ்தி;இந்தபலத்தால்
  ட்ரெய்னையே ஓடவைத்thaar ஜேம்ஸ்வாட்;நீராவிதான்!

  பதிலளிநீக்கு
 12. இந்தியாவில் சராசரி குறைவுதான்.சுவாரஸ்யமான தகவல்.

  பதிலளிநீக்கு
 13. "...ஆவியுலகில் இந்த உலகில் உள்ள எல்லா பாசிடிவும் நெகடிவ்; இங்கு உள்ள எல்லா நெகடிவ்களும் ஆவியுலகில் பாசிடிவ்."

  (சென்ற எட்டெட்டு ப:3-யில்)

  //வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால், நாங்க மாயாவுக்கு அந்தத் தகவலைச் சொல்கிறோம்.//

  'சொல்கிறோம்' பாசிடிவ்னா, ஆவியுலகிற்கு அது 'சொல்லமாட்டோம்' இல்லையா?..
  அதனால், சொல்வதாயிருந்தால்,
  'சொல்வோம்'ங்கறதை 'சொல்ல மாட்டோம்' என்று மாற்றி விடுங்கள்..

  எதற்கும் மீடியத்தையும் ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டு செய்யுங்கள்..

  //(அல்லது அவரே இங்கு படித்துத் தெரிந்து கொள்ளட்டும்!) //

  :)

  பதிலளிநீக்கு
 14. என்ன இந்த ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டுவிட்டீங்களா? போட்டோவைக் காணுமே

  பதிலளிநீக்கு
 15. ஞாயிறு 120 - படம் பார்க்கவில்லையா நீங்க? காலை ஐந்து ஐம்பத்து நான்குக்கே பதிவிட்டு விட்டோம். எங்கள் ப்ளாக் தலைப்பில் ஒரு முறை கிளிக்கி, அல்லது ரெஃப்ரெஷ் செய்து பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 16. ஆவிகள் இல்லை என்றால் பல சுவாரசியங்கள் இல்லை. எனவே ஆவி அவசியம் இருந்தே ஆக வேண்டும். ஆவியின் உடை எப்படி ஆவியாகாமல் தரித்து நிற்கிறது என்பதை அந்த ஆவிகளே விளக்கினால் தான் உண்டு!

  பதிலளிநீக்கு
 17. நன்றி மாதவன்.

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  நன்றி நாஞ்சில் பிரதாப்.

  நன்றி ஹேமா.

  நன்றி HVL,

  நன்றி வைரை சதிஷ்.

  .நன்றி மீனாக்ஷி.

  நன்றி மாயா

  நன்றி பிரணவன்.

  நன்றி சூர்யஜீவா.

  நன்றி லலிதா மிட்டல்.

  நன்றி சண்முகவேல்.

  நன்றி அமைதிசாரல்.

  நன்றி ஜீவி

  நன்றி கீதா சந்தானம்

  நன்றி அனானி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!