ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஞாயிறு - 118


 ராமலக்ஷ்மி said...
அருமையான படம்.

“வடக்கு வாசல்” சிற்றிதழில் வெளியான என் ‘ஒரு நதியின் பயணம்’ எனும் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது:

தன்னிலே நீந்தும் கயல்களை ரசித்துத்
தழுவியபடி ஊற்றெடுத்து ஓடும்
நதிக்குத் தெரிவதேயில்லை
எங்கே பாதை விரியும்
எங்கே குறுகிச் சுழியும்
எங்கே திருப்பம் எங்கே வளைவு
எங்கே பாறை எங்கே பள்ளம்
எங்கே குபீரென விழ நேரும்
எதுவாயிருக்கும் சென்று சேருமிடம்

எவையும் தெரியாமலே தேடாமலே
தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
அனுபவத்தில் அதுவாகக்
கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
பயணிப்பதாலேயே

எதிர்வரும் எத்தடையையும்
எதிரே பாரா
எவ்வகை வீழ்ச்சியையும்
கடக்கிறதோ அநாயாசமாய்
தயக்கங்கள் ஏதுமின்றி

எச்சுழலையும் எச்சூழலையும்
எந்நிலையிலும் எம்முனையிலும்
சவாலாகவே சந்தித்தபடி?
எங்கள் : நன்றி ராமலக்ஷ்மி அவர்களுக்கு! 

21 கருத்துகள்:

  1. 'Men may come, Men may go, But, I am going on for ever'
    from the literal work named 'The Brook'

    பதிலளிநீக்கு
  2. அருமையான படம்.

    “வடக்கு வாசல்” சிற்றிதழில் வெளியான என் ‘ஒரு நதியின் பயணம்’ எனும் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது:

    தன்னிலே நீந்தும் கயல்களை ரசித்துத்
    தழுவியபடி ஊற்றெடுத்து ஓடும்
    நதிக்குத் தெரிவதேயில்லை
    எங்கே பாதை விரியும்
    எங்கே குறுகிச் சுழியும்
    எங்கே திருப்பம் எங்கே வளைவு
    எங்கே பாறை எங்கே பள்ளம்
    எங்கே குபீரென விழ நேரும்
    எதுவாயிருக்கும் சென்று சேருமிடம்

    எவையும் தெரியாமலே தேடாமலே
    தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
    எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
    அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
    பயணிப்பதாலேயே

    எதிர்வரும் எத்தடையையும்
    எதிரே பாரா
    எவ்வகை வீழ்ச்சியையும்
    கடக்கிறதோ அநாயாசமாய்
    தயக்கங்கள் ஏதுமின்றி

    எச்சுழலையும் எச்சூழலையும்
    எந்நிலையிலும் எம்முனையிலும்
    சவாலாகவே சந்தித்தபடி?
    ***

    பதிலளிநீக்கு
  3. நதிக்கு இருக்கும் முக்கிய பங்கு, அது இது தான் வழி என்று செல்லாமல்... புது வழியை தேர்ந்தெடுத்து செல்கிறது... அதனுடன் செல்லும் கரடு முரடான கற்களை ஒழுங்குபடுத்தி அழகாக்கு கிறது.. நீர்வீழ்ச்சியாய் வீழ்ந்தாலும் தேங்கி நிற்காமல் எழுந்து ஓடுகிறது...

    பதிலளிநீக்கு
  4. அருமை.சிறப்பான கவிதையும் கிடைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. முதலில் புகைப்படத்தை ரசித்தேன். இப்போது ராமலெஷ்மி அவர்களின் கவிதையை. பெருமைக்கு பெருமை சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  6. படமும் அழகு. ராமலக்ஷ்மியின் கவிதை அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  7. நீரின் இயல்பு பள்ளம் நோக்கிப் பாய்தல். அல்லது தன் வேகச்சுழற்சியில் மேட்டையும் மோதித் தகர்த்து அதனைப் பள்ளமாக்கி அதனூடேப் பாய்தல்..

    கம்பனின் காவிய வரிகள் நினைவுக்கு வருகிறது. எத்தகைய பரதன் என்று குறிப்பிடும் பொழுது சொல்கிறார்:

    'தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
    பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும் பெயரானை,
    எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
    வள்ளலையே அனையானை, கேகயர் கோன் மகள் பயந்தாள்.

    பதிலளிநீக்கு
  8. நதி பாடம் சொல்லி தருகிறது மனிதனுக்கு....

    பணிவாய் இரு....
    ஒழுங்காய் இரு....
    எல்லாம் சமனாய் எடுக்க பழகு....
    மன்னித்து மறக்க கற்றுக்கொள்....
    தன்னலம் விடு.....
    நல்லவை தந்துவிடு....
    தூய்மையை உணர்த்திவிடு...

    என்று நதியை கவிதை வரிகளிலேயே பிரவாகம் எடுத்து எங்கள் மனதையும் நிறைத்துவிட்டீங்க ராமலக்‌ஷ்மி...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

    அன்பு வாழ்த்துகள் உங்கள் பகிர்வு மின்னிதழில் வந்தமைக்கு...

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. முதல் கமெண்ட்டுக்கு முந்திய middleclassmadhavi க்கும்,

    பாராட்டிய வைரை சதிஷுக்கும்,

    வரிகள் 'கோட்' செய்த மாதவனுக்கும்

    படத்தையும், கவிதையையும் ரசித்த தமிழ் உதயத்துக்கும்

    சந்தேகம் கேட்ட பத்மநாபனுக்கும்

    அழகிய கவிதையைப் பகிர்ந்த ராமலக்ஷ்மிக்கும்

    அழகிய கருத்தைச் சொன்ன suryajeeva வுக்கும்

    கவிதையில் மகிழ்ந்த shanmugavel க்கும்

    படத்தையும் கவிதையையும் ரசித்துள்ள RAMVI, மற்றும் வல்லிசிம்ஹனுக்கும்

    கம்பனின் சிறந்த வரிகளைச் சொல்லி படத்தை ரசித்துள்ள ஜீவிக்கும்

    நதி மனிதனுக்குச் சொல்லும் பாடத்தை எடுத்துச் சொன்ன மஞ்சுபாஷிணிக்கும்,

    எங்கள் நன்றி...நன்றி....நன்றி!

    பதிலளிநீக்கு
  11. கவிதையைப் பதிவிலேயே இணைத்துக் கெளரவப் படுத்தி விட்டீர்கள். மகிழ்ச்சி:)! தங்களுக்கும் கவிதையைப் பாராட்டியிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றியும்!!

    பதிலளிநீக்கு
  12. நதியின் சிறப்பே அதுதானே.. புதுப்புனல், புது வழிகள்,

    படமும், ராமலஷ்மியின் கவிதையும் ஜூப்பரு :-)

    பதிலளிநீக்கு
  13. good poemm..
    ஒரு வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது. அருமை.
    வேதா. இலங்காதிலகம்.
    http.//www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. கவிதை நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  15. கவிதை ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. பாதை வகுத்துக் கொண்டே பயணம் செய்ய சிலரால்தான் முடியும். பலருடய வாழ்கை இந்த நதி போலத்தான், எப்போது விழும், எப்போது எழும், எப்போது அமைதி பெரும் என்று தெரியாமலே ஓடிக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. நன்றி...நன்றி...

    அமைத்திசாரல்.

    கவிதை (கோவைக்கவி)

    அப்பாதுரை.

    மீனாக்ஷி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!