காலையில் நாட்காட்டியில், நேற்றைய தினத்தாளை, இன்று காலையில் கிழித்தவுடன், கிழிக்கப்பட்டக் காகிதத்தை, ஒவ்வொருவர் மிகவும் விசித்திரமான வகையில் பயன் படுத்துவார்கள்.
என்னுடைய தந்தை, தினமும், கிழிக்கப்பட்ட தேதிக் காகிதத்தில்தான், பல் தேய்க்க கரிப்பொடி + உப்பு கலவையை எடுத்துக் கொள்வார். பல் தேய்க்கும் பொழுது அவர் எழுப்புகின்ற விசித்திர சத்தங்களை இன்றும் என் தம்பி மிமிக்ரி செய்வது உண்டு.
என்னுடைய அண்ணன் (அப்பா மதுரை ஆடிட் சென்ற நாட்களில்) அந்தக் காகிதத்தை விசிறி மடிப்பாக மடித்து, அதில் ஆங்கில எழுத்து W வடிவில் வரும் வகையில் செய்வார். சில சமயங்களில், நான் கேட்டுக் கொண்டதற்காக கப்பல், கத்திக் கப்பல், பறக்கும் கப்பல் - என்று ஏதாவது செய்து கொடுப்பார்.
இப்பொழுதெல்லாம், நான் பெரும்பாலும், கிழிக்கப்பட்டக் காகிதத்தை (அதாவது நேற்றைய தினத்தாளை) ஆதியோடு அந்தமாக இன்றைக்குத்தான் படிப்பேன். அதில் நேற்றைய தினத்திற்குப் போட்டிருந்த ராசி பலன் சரியாக இருந்ததா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்பேன். தொண்ணூறு சதம் சரியாக இருக்காது. ஆனால் நேற்றைய பலன் இன்றைக்கு ஐம்பது சதவிகிதம் சரியாக அமைவது உண்டு! இன்றைய ராசி பலனை - இன்று படிக்க மாட்டேன்! நாளைதான்!
நேற்றைய தினத் தாளை - கிழித்து, இன்று படித்து ஆராய்ச்சி செய்த பொழுது, தினப் பலனை விட, அதில் இருந்த ஒரு வரி அறிவுரை, என்னைப் பெரிதும் கவர்ந்தது!
"ஆனி அடியிடாதே, கூனி குடிபோகாதே." இதற்கு என்ன பொருள் என்று சட்டென்று விளங்கவில்லை. வாசகர்கள் இதன் பொருள் உரைத்தால் (குறும்புத் தனமான விளக்கமாகக் கூட இருக்கலாம்) மிகவும் நன்றி உடையவனவாக இருப்பேன்.
நுட்பமான விஷயமாக இருக்கலாம். எனக்கும் தெரியவில்லை.
பதிலளிநீக்குஆடிக் காற்று புரட்டாசி ஐப்பசி மழை என்பதால் அஸ்திவாரம் தோண்டி ஆரப் போட முடியாது என்பதால் ஆனி அடியிடதே என்றும் "கூனி குடி போகாதே " என்றால் இப்போது இருப்பதை விட தாழ்ந்த நிலையில் இருக்கும் இடத்துக்கு குடி போய் உன் கௌரவத்தை தொலைக்காதே என்றும் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆடிப்பட்டம் தேடி விதை. தெரியும். ஆனிமாதம் அடி இடாதே. புரியவில்லை.
பதிலளிநீக்குஅடுத்த வரிக்கும் பொருள் கண்டிப்பாக இருக்கும்.
மண்டையில் இடிக்குமே அந்த மாதிரி ,உயரம் குறைவாக இருக்கும் வீட்டுக்குக் குடி போகாதேயா.
குடி பக்கம் போகாதேயா:)
// ஆனி அடியிடாதே //
பதிலளிநீக்குஅனேகமா டெனன்ட்டால பாதிக்கப் பட்ட ஆளு இப்படி சொல்லிருப்பாரு போல..
(வாடகை) வீட்டில் ஆதிகமா ஆ(னி)ணி அடிக்காதே..
சரி தான்... உங்களுக்கே தெரியலன்னா எனக்கு எங்க தெரிய போகுது
பதிலளிநீக்குஎச்சூச் மி!
பதிலளிநீக்குஇது ஆக்சுவலா 'ஆணி அடியிடாதே; கூனி குடி போகாதே!' என்று சொல்லப் பட்டதாகும். இது ரோடு ஓரத்தில் பஞ்சர் ஒட்டுபவருக்கு சொல்லப்பட்டது. அவர் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதற்காக, ஆணிகளை கடைக்கு அருகே வாகனங்களின் டயருக்கு அடியில் இட்டு, டயர் பன்ச்சர் ஆனவுடன் டியூப் ஒட்டிக கொடுத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது. ஆணி அடியிட்டு, திருட்டுத் தனம செய்வதை யாராவது பார்த்துவிட்டால், அவர்கள் அடிக்கிற அடியில் முதுகு வளைந்துவிடும்; அதற்குப் பிறகு அங்கு கடை நடத்த முடியாமல், வேறு எங்காவது கூனிக் குறுகி குடி போக வேண்டியதுதான். ஆகவே, 'ஆணி அடியிடல் வேண்டாம், கூனிக் குறுகி வேறு இடத்திற்கு குடி போக வேண்டாம்' என்று சொல்லி இருக்கின்றார்கள்!
நான் இதை கேள்விபட்டதில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு//Anonymous said...//
இவர் சொன்னது சரி எனப்படுகிறது.
என்னன்னு அறியக் காத்திருக்கிறேன் நானும் !
பதிலளிநீக்குஎனக்கும் புரியவில்லை.குரோம்பேட்டைக்காரர் ஏதோ சொல்றாரே!அனானிமஸ் விளக்கம் சரி என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குகூனி குடி போகதே என்றால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் இன்னொருவரை அண்டி வாழதே என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த பதிவுக்கு நான் போட்ட கமெண்டை காணுமே! காக்கா உஷ்ஷா!
பதிலளிநீக்குmeenakshi has left a new comment on your post "தேதியும் சேதியும்":
பதிலளிநீக்குகூனி குடி போகதே என்றால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் இன்னொருவரை அண்டி வாழதே என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்.
இதை சொல்கிறீர்களா? இதை நாங்க யாரும் காக்கா உஷ்ஷ் செய்யவில்லை. அது ஏன் இங்கு வெளியாகவில்லை என்பதும் எங்களுக்குப் புதிராக உள்ளது!
அது எவ்வளவு பெரிய தத்துவம்! ரெண்டு வரில விளக்கிட முடியுமா?
பதிலளிநீக்குகுரோம்பேட்டை குறும்பன் நல்ல சிரிப்புசாமி.
பதிலளிநீக்குவருக தமிழ் உதயம் ரமேஷ்...கருத்துரைக்கு நன்றி
பதிலளிநீக்குவருக அனானி....கருத்துரைக்கு நன்றி.
வருக Chitra...வாழ்த்துகளுக்கு நன்றி.
வருக வல்லிசிம்ஹன்...'குடிப்பக்கம் போகாதேய்யா...' வரிகளை ரசித்தோம். கருத்துரைக்கு நன்றி.
வருக மாதவன்...அனுபவப் பகிர்வா...!! கருத்துரைக்கு நன்றி.
வருக suryajeeva... கருத்துரைக்கு நன்றி
வருக குரோ குறு....! உங்க வழி எப்பவுமே தனி வழிதான்...கருத்துரைக்கு நன்றி.
வருக RAMVI...... கருத்துரைக்கு நன்றி.
வருக ஹேமா....அனானி கருத்து சரிதான் என்றுதான் எங்களுக்கும் படுகிறது. கருத்துரைக்கு நன்றி.
வருக shanmugavel..... கு.கு சொல்லியிருப்பதை ரசித்து, அனானியை ஆதரிப்போம்! கருத்துரைக்கு நன்றி.
வருக meenakshi.... உங்க கமெண்ட் ஏன் 'காக்கா ஓஷ ஆனதோ...! உங்கள் கருத்தும் பொருத்தமானதாக, அழகாக இருக்கிறது. கருத்துரைக்கு நன்றி.
வருக அப்பாதுரை.. ரசனைக்கும் (குரோ.குறு) கருத்துக்கும் நன்றி.
அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.