வெள்ளி, 7 அக்டோபர், 2011

இது டம்மி பீஸ்!

           
நான் 3 வருடங்களுக்கு முன்னால், என் வேலை விஷயமாக துருக்கி ( Turkey) செல்ல நேர்ந்தது (எனக்கு ஏழரை நாட்டுச் சனி உச்சத்தில் இருந்த நேரம்).
    
என் அலுவல் எல்லாம் முடிந்தவுடன், வழக்கம்போல் என் கேமராவை எடுத்துக் கொண்டு அங்குள்ள கோட்டை கொத்தளங்களை புகைப்படம் எடுக்கக் கிளம்பினேன். ஏதோ ஒரு காரணத்தால் இஸ்தான்புல்லில் இருந்த அரண்மனையை அன்று மூடியிருந்தார்கள். பொதுவாக, என்னுடைய வெளிநாட்டு பயணங்களில் எனக்கு Shopping  பண்ணப் பிடிக்காது. (இப்படித்தான் என் மனைவியிடம் வெகு நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்).
               

அன்று எனக்கு வேறு வேலை எதுவும் இல்லாதலால், வினையே (??????) என்று அருகில் இருந்த ஒரு பழம்பொருள் அங்காடி (ச்சே...தமிழ் என்னமாய் வருகிறது) ஒன்றுக்குள் நுழைந்தேன். Mr. ஏழரையும் கண்ணுக்குத் தெரியாமல் என்னை புன்னகையுடன் வரவேற்றார். சும்மா பொழுது போக்க நுழைந்த என்னை, தந்தத்தால் செய்த கைத்துப்பாக்கி ஒன்று கண்ணடித்து அழைத்தது (அதுவா அழைத்தது?????? நேரம்.....).

   
மிகவும் அழகான வேலைப்பாடு. கிட்டத்தட்ட 100 வருடத்தைய துப்பாக்கி. அதன் கலை அழகில் மயங்கி அதன் விலை என்ன என்று கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமலேயே என் Credit Card – ஐ எடுத்து நீட்டி விட்டேன். அவனும் விலையைச் சொல்லாமலேயே US$ 450 – ஐ charge பண்ணி விட்டான் (Supply & Demand principle அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது). அந்தத் துப்பாக்கியின் அழகில் அவனுடன் எனக்குப் பேரம் பேசக் கூடத் தோணவில்லை. அதை வாங்கி விட்டு நேரே ஹோட்டலுக்கு வந்து விட்டேன். அன்று இரவு எனக்கு நைரோபி திரும்புவதற்கு ஃபிளைட். 
          அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினேன். நான் ஏர்போர்ட் வாசலை மிதிப்பதற்கும் இஸ்தான்புல்லின் Shopping Complex ஒன்றில் குண்டு ஒன்று வெடிப்பதற்கும் மிகச் சரியாக இருந்தது (ஏழரையின் போது இது எல்லாம் சாத்தியம் என்று பின்னால்தான் புரிந்தது).

இது எதுவும் தெரியாமல் நான் அப்பாவியாக (நெசம்மாலுமே நான் அப்பாவிதாங்க), என் சூட்கேஸை Scanner-இல் போட்டு விட்டு அந்த Security Lady – யைப் பார்த்தேன். ஒரு செகண்டில் அந்த அம்மணியின் முகத்தில் அதிர்ச்சியான ஒரு ஒளிக் கீற்று. வாத் இஸ் திஸ் என்றாள். அவர்களுக்கு "T"  சொல்ல வராது (ஆமா ரொம்ப முக்கியம்....). நான் உடனே அவளை கிண்டல் செய்யும் நோக்கத்தில் ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஆள்காட்டி விரலை அவளைக் காண்பித்து கட்டை விரலை மேல் நோக்கி வைத்து '"திஷ்யூம்" என்றேன். என் கிரகம் கேவலமாக வேலை செய்ய ஆரம்பித்தது அந்த நிமிடம்தான். அவள் என்னிடம் லைசென்ஸ் இருக்கா என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டே வாக்கி டாக்கியை எடுத்து சில பேரை பதட்டத்துடன் கூப்பிட்டாள். Something Wrong என்று உடனே பட்சி சொன்னது (நாங்க செம ப்ரைட்டுல...).

சில நிமிடங்களில் ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே வந்திறங்கி Mr. Ali , please come with us என்றது. Mr அலியா?????? அடக் கடவுளே..... (BALAMUR "ALI" – யில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களை மட்டும் வசதியாக எடுத்துக் கொண்டார்கள்). என் அப்பா மட்டும் உயிரோடு இருந்தால் வெறுத்துப் போயிருப்பார். வேறு வழியில்லாமல், 'ஆஹா.. இப்படி மாட்டிக் கொண்டோமே' என்று என்னை நானே நொந்து கொண்டு அவர்கள் பின்னாலேயே சென்றேன் (Yes... .வெற்றிக் கொடி கட்டு' படத்தில் வரும் அதே பலிகடா, அருவா Situation).

நான் என் கம்பெனியில் யார் யாருக்கோ Barbeque Grill பண்ணிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் Grilling  இன் Real Meaning  புரிந்ததில்லை. அன்று தெள்ளந்தெளிவாக புரிந்தது. அவர்கள் அனைவருக்கும் ஏதோ 'அல் கொய்தா'வின் ஒரு பெரிய புள்ளியை பிடித்து விட்ட மாதிரி ஒரு பெருமிதம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் புண்ணியத்தில் அந்த ஏர்போர்ட்டே ஸ்தம்பித்து விட்டது. ஏதேதோ கேள்விகள்....

அந்தக் கடுமையான Interrogation முடிந்த பிறகு அங்கு இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கட்டுரையின் தலைப்பை முணு முணுத்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் அந்தத் துப்பாக்கியைச் சொன்னார்களா... இல்லை, என்னைச் சொன்னார்களா என்று தெரியவில்லை!

வெ.பாலமுரளி.           
                                

29 கருத்துகள்:

  1. நன்றாக இருந்தது. கதையா.. நிஜமா... ./////


    அவர்கள் அந்தத் துப்பாக்கியைச் சொன்னார்களா... இல்லை, என்னைச் சொன்னார்களா என்று தெரியவில்லை!/////

    இரண்டையும் தான் சொல்லி இருக்க வேண்டும் டம்மி என்று. BALAMUR "ALI" போல பல பெயர்கள் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நடிகர் ஜீவாவின் இயற்பெயர் அமர். கோ படத்திற்காக, ஒரு நாட்டுக்காக பயணிக்க இருந்தபோது, அந்த நாடு அமர் என்கிற பெயர் காரணங்களுக்காக விசா தர மறுத்ததாக ஒரு செய்தி வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இதைத்தான் சொந்த செலவுல சூன்யம் வைச்சுக்கிறதுன்னு எங்க ஊருல சொல்வாங்க. நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நேரம் சரியில்லையென்றால்
    இப்படியெல்லாம் நேரும் போல
    நீங்கள் நகைச்சுவையாக சொல்லிப் போனாலும்
    அந்தச் சூழலை நினைக்க பதட்டமாகத்தான் இருந்தது
    சொல்லிச் செல்லும் விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் நேரம். பாலமுரளி அலி ஆனது காமெடிதான். நல்ல ரசனையுடன் சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  5. நகைசுவையாக சொல்லியிருந்தாலும்,படிக்கும் போதே பயமாக இருக்கு.
    அதுசரி இப்ப அந்த துப்பாக்கி எங்க இருக்கு?

    பதிலளிநீக்கு
  6. உண்மையிலேயே நடந்ததா? நகைச்சுவையாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. ”எங்கள்”க்குப் புது ஆசிரியரா? :-)))

    Mr. (Balalamur) Ali - சுவாரசியம்!!
    “Anantharaman Subburaman” இங்கே அரபுநாடுகளில் “Another man Super man" ஆன கதை பிரபலம்!!

    ஒரு டம்மி பீஸைப்போய் US$ 450க்கு வாங்கியதால் கிடைத்த (மனைவி) சாபத்தின் விளைவோ என்னவோ? :-))))

    பதிலளிநீக்கு
  8. Otlichno ! Molodhiyatz ! Zamichatelno ! Panravilsya !

    பதிலளிநீக்கு
  9. திகிலான அனுபவம்! நிஜமான அனுபவம் என்னும்போது தப்பித்து வந்ததே ஆச்சரியம்தான்!

    பதிலளிநீக்கு
  10. அட்டகாசமான Narration. சூப்பர்.

    ஸ்ரீராம் சார்! யார் இவரு? :-)

    பதிலளிநீக்கு
  11. சார், ரசித்தேன் சிரித்தேன்...

    பதிலளிநீக்கு
  12. வெ பாலமுரளி அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். அவர் எடுத்த பல புகைப் படங்கள், ஞாயிறு பதிவாக நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
    ---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

    பதிலளிநீக்கு
  14. உண்மை சம்பவமா? பயங்கரம், நல்லா இருந்தது. ..

    பதிலளிநீக்கு
  15. பயங்கரமாக இருக்கு.
    இப்படி ரோடோட போன ஏழரையை விலைக்கு வங்குவார்களோ.!!

    துப்பாக்கிக்கு என்ன ஆச்சு?????????

    பதிலளிநீக்கு
  16. கூடுதல் தகவலுக்கு நன்றி தமிழ் உதயம்

    நன்றி geethasanthanam... எல்லாப் புகழும் பாலமுரளிக்கே...

    நன்றி Ramani சார். அடிக்கடி வாங்க...

    புன்னகைக்கு நன்றி middleclassmadhavi

    நன்றி Lakshmi

    நன்றி RAMVI....துப்பாக்கி பாலமுரளி கிட்டதான் இருக்கணும்!!

    நன்றி HVL, பல சமயங்களில் நிஜங்கள் கற்பனையை விட சுவாரஸ்யமானவை!

    நன்றி வைரை சதிஷ்.

    ஹா...ஹா... நன்றி ஹுஸைனம்மா...

    நகைப்புக்கு நன்றி shanmugavel.

    நன்றி மனோ சாமிநாதன்.

    நன்றி RVS, இவரை முகப் புத்தகத்தில் நீங்கள் சந்தித்திருக்கலாம்.

    நன்றி suryajeeva.

    நன்றி பத்மநாபன்

    நன்றி அப்பாதுரை.

    நன்றி வானம்பாடிகள்.

    நன்றி (?) மாதவன்

    நன்றி பிரணவன்.

    நன்றி வல்லிசிம்ஹன்...துப்பாக்கிக்கு என்ன ஆச்சு என்ற உங்கள் மற்றும் RAMVI கேள்விகளுக்கு பாலமுரளிதான் பதில் சொல்லணும்!

    பதிலளிநீக்கு
  17. // நன்றி (?) மாதவன் //

    (?) -- ம்ம்ம்.. சற்று பொறுத்திருங்கள்.. .. அர்த்தம் விளங்கும்..

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் மிக்க நன்றி.
    KGS சாருக்கு பெரிய நன்றி.

    1. இது உண்மையிலேயே நடந்தது.
    2. Investigation முடிந்தவுடன், அவர்கள் அனைவரும் என்னிடம் மன்னிக்குக் கேட்டு விட்டு அந்த ஏழரையை என்னிடமே கொடுத்தார்கள். அதைத் திரும்ப வாங்குவதற்கு எனக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கு? என் பேரைச் சொல்லி வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டு வந்து விட்டேன். அதை நைரோபிக்குள் மட்டும் கொண்டு வந்திருந்தால்..சங்குதான்.

    By the way, இதைத்தான் சொந்த செலவுல சூன்யம் வைச்சுக்கிறது....ரொம்பவே ரசித்தேன்...எப்படித்தான் யோசிப்பாய்ங்கெ
    ளோ?

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப நகைச்சுவையா எழுதி இருக்கீங்க. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  21. எங்கள் blog பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு,அறிமுகப்படுத்தியிருக்கிறேன், நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ப்ளாக்19 நவம்பர், 2011 அன்று 6:30 PM

    வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி ராம்வி மேடம். வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!