வெள்ளி, 11 நவம்பர், 2011

பதினொன்று


இன்றைக்குத் தேதி 11.11.11 நேரம் காலை மணி 11.11. (இந்திய நேரப்படி). 
     
  
இதே மாதிரி ஒரு தேதி, நேரம் அமைய, இன்னும் நூறு வருடங்கள் ஆகும். 


இதையே 0011, 1011, 2011, 3011 என்று ஆயிரக் கணக்கில் ஆண்டுகளைப் பார்த்தால் .... 

11.11.1011 அன்று, இராஜராஜ சோழன் உயிருடன் இருந்து, தென்னகம் முழுவதையும் ஆண்டு கொண்டிருந்தார்.
  
11.11.2011 அன்று, இந்தப் பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். 
   
   
      
11.11.3011 அன்று உலகம் எப்படி இருக்கும்? யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

லெவன்த் ஹவர் என்று ஆங்கில சொற்றொடர் ஒன்று இருக்கின்றது. எதையும் நேரத்தில் செய்து முடிக்காமல், காலம் தாழ்த்தி, கடைசி நிமிடத்தில் செய்வதை, லெவன்த் ஹவர் ரஷ் என்று கூறுவதுண்டு. எதையும் ப்ளான் பண்ணி செய்யணும் - லெவன்த் ஹவர் பதற்றங்கள் கூடாது!

ஆதிகால மனிதன், தன்னுடைய கைவிரல்களின் எண்ணிக்கை அளவாகிய பத்து வரை மட்டும்தான் மனிதர்கள் சுலபமாக எண்ணத் தெரிந்திருந்தார்கள். பதினொன்றைக் கண்டு பிடித்தவன் அந்தக் கால கணித மேதையாக இருந்திருக்க வேண்டும்.

குழந்தைகள் அறிவாற்றல் சம்பந்தமாக கருத்து கூறுகின்ற உளவியல் நிபுணர்கள், குழந்தைகளுக்கு முதலில் ஒன் டூ த்ரீ சொல்லிக் கொடுக்கும் பொழுது, டென்னோடு  நிறுத்தி விடாதீர்கள். அதற்கு மேலும் சொல்லிக் கொடுங்கள். பதினொன்று, பன்னிரண்டு என்று மேலும் மேலும் சொல்லிக் கொடுங்கள். அப்பொழுதுதான் அவர்களுடைய எண்ணிக்கை அறிவாற்றல் எல்லைக்குள் கட்டுப்படாமல் விரிவடையும் என்று சொல்கிறார்கள். 

நவம்பர் பதினொன்று, 1918 ல் நடந்த முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? அன்று காலை பதினொரு மணிக்கு, முதலாம் உலகப் போர் (1914 - 1918) முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் ஒரு முக்கிய தகவல்: எங்கள் ப்ளாக் ரசிகர் மன்ற உறுப்பினர் எண்ணிக்கை, இன்றைக்கு, இப்பொழுது முந்நூற்றுப் பதினொன்று! 
              
மேலும் .... 
      

8 கருத்துகள்:

 1. நாளைக்கு 12
  நாளான்னைக்கு 13
  என்ன ஒரு கண்டுபிடிப்பு

  பதிலளிநீக்கு
 2. இறுதியாக அமைந்த முக்கிய தகவல் இரண்டும் சுவாரஸ்யம்:)!

  பதிலளிநீக்கு
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  பதிலளிநீக்கு
 4. //இதே மாதிரி ஒரு தேதி, நேரம் அமைய, இன்னும் நூறு வருடங்கள் ஆகும். //
  12-12-(20)12 12:12 ?

  பதிலளிநீக்கு
 5. 11.11.11 அழகாய்த்தான் இருக்கிறது.உலக சமாதானம் வேண்டிப் பிரார்த்தனை செய்வோம் !

  பதிலளிநீக்கு
 6. பாலராஜன் கீதா அவர்களே! பதிவாசிரியர் சொல்லி இருப்பது 11.11.11 வலமிருந்து இடம், இடமிருந்து வலம் கூட ஒன்றாக அமையும் தேதி.

  பதிலளிநீக்கு
 7. 11.11.3011 அன்று உலகம் எப்படி இருக்கும்? உலகில் மனிதர்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன். பதின்னொன்று குறித்து நிறைய தகவல்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 8. //தமிழ் உதயம் said...11.11.3011 அன்று உலகம் எப்படி இருக்கும்? உலகில் மனிதர்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன். //

  மனிதர்கள் சுயநலத்தால் எந்தவொரு ஜீவராசியும் இருக்காது என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்வேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!