புதன், 2 நவம்பர், 2011

ஜோக் உலகம்.

                    
பத்திரிகைகளில் இருபது வருடங்களாக வருகின்ற ஜோக்குகளை ஆராய்ந்து, டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு வந்திருக்கின்ற நமது ஆசிரியர்களில் ஒருவர் அவருடைய கண்டுபிடிப்புகளை, இங்கே பகிர்ந்து கொள்கிறார். 
               
வேறு மொழிகள் பலவற்றையும் விட தமிழ் பத்திரிகைகள் சுவாரசியம் அதிகம் என்று தோன்றுகிறது. அதிலும் ஜோக் விஷயத்தில் நம் இதழ்கள் முன்னணி நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம்.  எனினும் சில அடிப்படை கொள்கைகள் சற்று அதைரியப் பட வைக்கின்றன. 

டாக்டர் என்று எடுத்துக் கொண்டால் அவர் கூசாமல் அறுவை சிகிச்சை என்ற பெயரில் கொல்பவர். அது அவரிடம் பணி புரியும் நர்ஸ்களுக்கும் தெரியும். போலி டாக்டர் ஜோக் இல்லாத பத்திரிகைகள் மிகவும் அபூர்வம்.   
    
 

 

 

 
  
எல்லா மருமகள்களும் தம் மாமியாரை வெறிநாய் கடித்தால் அதை வரவேற்பவர்கள் என்பது மட்டும அல்ல, அதற்காக வெறிநாய்களை வாடகைக்கு எடுக்கவும் தயங்காதவர்கள்!

எல்லா கணவன்மாரும் வீட்டு வேலையை ரகசியமாக செய்பவர்கள். வேலைக்காரியுடன் சரசம் செய்பவர்கள். ஆபீசில் தூங்குபவர்கள். 

வேலைக்காரிகள் அக்கம்பக்கத்து வம்புகளில் நாட்டம் கொண்டவர்கள். பிச்சைக்காரர்கள் யாவரும் கோடீஸ்வரர்கள். 

எழுத்தாளர்களின் கதைகள் திரும்ப வந்தே பழைய பேப்பர் வணிகம் சிறக்கிறது. 

எல்லா கட்சி தலைவர்களும் குடிகாரர்கள். தம் கட்சி மகளிர் அணி செயலாளரிடம் தகாத முறையில் நடக்கத் துடிப்பவர்கள். முழு முட்டாள்கள். அரிச்சுவடி கூடப் படிக்காதவர்கள். 

எல்லா நடிகர்களும் பொறுக்கிகள்; நடிகைகள் அழகை இழந்த கிழவிகள். வசதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய / இழக்கத் தயாராக இருப்பவர்கள். 


புறமுதுகிட்டு ஓடும் மன்னர்கள், போர் என்றாலே பயப்படும் தொடைநடுங்கி மன்னர்கள் .... 

இவை யாவற்றையும் பார்க்கும் போது ஏன் எல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றன என்ற சோர்வு ஏற்படுகிறது.  பாசிடிவ் நகைச்சுவை என்பது அவ்வளவு சிரமமானதா?  நாம் ரசித்த எதிர்மறை அற்ற நகைச்சுவைகளை நினைவுக்குக் கொண்டுவர முயல்வோமா? 
                     
வாசகர்கள், தாங்கள் படித்த, நல்ல நகைச்சுவை துணுக்குகளைப் பகிரலாம். 
     

12 கருத்துகள்:

  1. மனவி - காலையில் எழும்பினதும் கணவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யச் சொல்கிறாள் !

    ஆச்சரியப்பட்ட கணவன் - என்னப்பா இண்டைக்கு எல்லாம் புதுசா இருக்கு.என்ர கண்ணையே எனக்கு நம்பமுடியேல்ல.
    என்ன நடந்தது உனக்கு !

    மனவி - அப்பிடி ஒண்டுமில்லையப்பா.நேற்று ராசிப்பலன் புத்தகம் வாசிச்சனான்.அதில இண்டைக்கு ஆஞ்சிநேயரிட்ட ஆசீர்வாதம் வாங்கச்சொல்லிப் போட்டிருக்கு.ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போக நேரமில்லை அதுதான்.........!
    (எப்போதோ வாசிச்சுச் சிரிச்சது)

    பதிலளிநீக்கு
  2. ஜோக் பற்றி சொல்லி கூட சிந்திக்க வைத்துவிட்டீர்கள். பாசிடிவ் நகைசுவையை யோசிக்கிறேன். பிறகு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. என் மனைவிதான் என் இல்லத்தின் குலதெய்வம்..

    அப்படியா? உங்கள் குலதெய்வம் எது?

    ஆஞ்சநேயர்..

    பதிலளிநீக்கு
  4. ஆம் ஸ்டீரியோ டைப்பாகவே ஜோக்குகள் வருவதே அதை வாசிக்கும் வழக்கத்தையே நிறுத்தி விட்டது என் வரையில். சின்ன வயதில் ரசித்தவை என்றால் இரட்டைவால் ரெங்குடு,சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, புரோக்கர் புண்ணியகோடி என விகடனில் தொடராக வந்த நடுப்பக்க அல்லது இண்டுபக்க ஜோக்குகள்.

    பதிலளிநீக்கு
  5. ராமலக்ஷ்மி சொன்ன வரிசையில் முன் ஜாக்கிரதை முத்தண்ணா, மிஸ்டர் எக்ஸ் என இன்னும் ஏராளம்.......

    பதிலளிநீக்கு
  6. தமிழ் வாசிக்கத் தொடங்கி நான் வாசித்த முதல் ஜோக் என்று நினைக்கிறேன்.
    : எதுக்கு நான் வீணை வாசிக்கறப்பலாம் எழுந்து வெளில போயிடறீங்க?
    : பெண்டாட்டிய அடிக்கிறவன்னு என்னை யாரும் நினைச்சுடக் கூடாது பாரு.

    இப்போ சிரிப்பு வரமாட்டேங்குது. ஆனா அன்னிக்கு விழுந்து விழுந்து சிரிச்சது நினைவிருக்கு.

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் மதன் ஜோக்ஸ் மற்றும் கார்டூன்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவர் ஏன் இப்பவெல்லாம் ஜோக்ஸ் எழுதுவதில்லை என்று தெரியவில்லை.
    சட்டென்று நினைவுக்கு வந்த ஒரு ஜோக்
    பேஷண்ட்: டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் எனக்கு வீணை வாசிக்க வருமா?
    டாக்டர்: வாசிக்கலாமே
    பேஷண்ட்: ஆச்சர்யமா இருக்கே
    டாக்டர்: இதிலென்ன ஆச்சர்யம்?
    பேஷண்ட்: எனக்குதான் வீணை வாசிக்கவே தெரியாதே!
    (லொள்ளு சக்கரவர்த்தி!!!!)

    பதிலளிநீக்கு
  8. இப்பதிவாசிரியருக்கு 'டாக்டர்' பட்டம் பார்சல்

    // டாக்டர்: வாசிக்கலாமே
    பேஷண்ட்: ஆச்சர்யமா இருக்கே
    டாக்டர்: இதிலென்ன ஆச்சர்யம்?
    பேஷண்ட்: எனக்குதான் வீணை வாசிக்கவே தெரியாதே!//

    அவரு கண் டாக்டர்..
    'வீணை'னு எழுதினத வாசிக்க முடியும்னு சொன்னாரோ என்னவோ ?

    பதிலளிநீக்கு
  9. இந்த ஜோக் எங்க அண்ணன் பண்ண ஜோக்!


    நான் ஆபீசிலுருந்து வீடு வந்ததும்படுக்கையில் படுத்தேன்;என்னைக்காலை வாருவதே தொழிலாகக் கொண்ட என் அண்ணன் என்னைக் கேட்டான்:

    "லலிதா,வீட்டுக்கு வந்தும் ஓவர் டைம் பண்ணனுமா?"

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!