புதன், 30 நவம்பர், 2011

அண்ணே....ஒரு நிமிஷம்ண்ணே...


இந்த சினிமாப் பாட்டெல்லாம் இருக்கு பாருங்க.... அது எதனால நமக்குப் பிடிச்சிப் போச்சுன்னு காரணமே சொல்ல முடியாது. பாட்டு இலக்கியத் தரமா இருக்கணும், அப்பத்தான் பிடிக்கும், அதுதான் பிடிக்கும்னும் ஒண்ணும்  வரையறை யாரும் வச்சிக்கவும் முடியாது இல்லீங்களா.... என்ன சொல்றீங்க...?

இப்பக் கூடப் பாருங்க... இந்தக் கொலைவெறிப் பாட்டு படுத்தற பாட்டை... என்னங்க இருக்கு அதுல... தூ... நானும் டெய்லி நாலஞ்சி தரம் கேட்டுப் பார்க்கறேன்... எத்தக் கண்டு அதை ரசிக்கிறாங்கன்னே தெரியல... இருங்க இன்னொரு தரம் அதக் கேட்டுடறேன்...

ஆனா ஒண்ணுங்க... எனக்கும் இந்த 'அண்ணன் என்னடா தம்பி என்னடா, உன்னைச் சொல்லிக் குத்தமில்லை, சட்டி சுட்டதடா' பாட்டெல்லாம் பிடிக்கும்ண்ணே...


நடுல பேசறதுக்கு சம்பந்தமில்லாம பாட்டெல்லாம் வந்தா  கண்டுக்காதீங்கண்ணே...  இந்த மீனாச்சி மேடம் கவனியுங்கன்னு சொல்லி ஞாபகப் படுத்தினாங்களாம் அதனால சில பாட்டுப் போடலாம்னு... எதாவது பாட்டப் போட்டு சும்மா வெட்டி அரட்டை அடிக்கலாம்னுட்டுதான்....


கர்நாடக சங்கீதம்தான் பிடிக்கும், அதுதான் ஒசத்தின்னு சொல்றவங்களுக்குக் கூட ஒண்ணு ரெண்டு கூத்தாடிப் பாட்டாவது பிடிச்சிருக்கும்..! (அவிங்க அப்படித்தான் சொல்வாங்கண்ணே ) சிமினா ச்சே.. ஸ்லிப் ஆஃப் தி டங்.... சினிமா பாட்டு ரசிக்கறவங்களுக்கும் ஒண்ணு ரெண்டு கர்நாடிக் மியூசிக்காவது பிடிச்சிருக்குமண்ணே கொறஞ்ச பட்சமா ஒரு 'குறை ஒன்றும் இல்லை'யாவது ரசிப்பாங்க...... அதுக்குக் கூட இந்த 'என்னன்னு தெரியாமப் பிடிச்சிப் போறது'தான் காரணம்ண்ணே... எல்லா பய புள்ளங்க மனசுக்குள்ளயும் குறை இருக்கும். அதாண்ணே.ஃபீலிங்கு..... குறை இல்லாத - அட மனக் குறையை சொல்றேண்ணே... - மனுசங்க யார் இருக்கா சொல்லுங்க பார்ப்போம்... அதை மறைச்சிகிட்டு தியாகம் பண்றாங்களாம்.... அதுக்கு இந்த மாரிப் பாட்டு உபயோகமா இருக்குமில்லே... பாசக்காரப் பயலுகளா வேசக்காரப் பயலுகளா... என்ன பார்க்கறீங்க... நான் அப்படித்தான்ண்ணே.. அப்பப்போ நம்ம வாய்ல இப்படி வந்துடும்ண்ணே...


இவரப் பாருங்க... மகாராஜபுரம் சந்தானம் பாடின பாட்டு சேர்த்துடுங்கன்னு  சொன்னா அவர் பாடினது கிடைக்கலை, அதே பாட்டுதான்.. இதான் கெடச்சுது' ங்கறாரு  ...

ஏதோ ரசிக்கிறோம் இல்லை.... விடுங்கண்ணே.. கதை எங்கியோப் போகுது பாருங்க... இதுதான் என் வீக்நெஸு..


பாட்டு பாலிடிக்ஸ் நமக்கு வேணாம்ண்ணே.. மனசுக்குப் பிடிச்சா எல்லாம் நல்ல சங்கீதம்தான்... என்னன்றீங்க... பாட்டு பிடிக்க அது நம் மனச ஏதோ ஒரு விதத்துல, ஏதோ ஒரு இடத்துல தொடணும் இல்லை? இல்லீங்க... சில சமயம் சில பாட்டு அது கூட அவசியமில்லாமப் பிடிச்சிப் போகுத்ண்ணே... என்ன சொல்றீங்க... இருங்க... நான் சொல்ல வந்த விஷயம் வேறண்ணே...


முதல்ல பிடிக்காத பாட்டு ஒண்ணு இருக்குன்னு வச்சிக்கோங்க... அது பிடிச்சிப் போக வேறு ஒரு காரணம் இருக்கும். சில சமயங்கள்ல சில பாட்டுகள்ண்ணே... எப்பவும் இல்ல... சண்டைக்கி வராதீக....

உதாரணத்துக்கு 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது'ன்னு ஒரு பாட்டு இருக்கு இல்லா... அது அதுல வர்ற வசனத்துக்காக முதல்ல பிடிக்காம இருந்ததுண்ணே... ஒரு பௌர்ணமி நாளில் குடியிருப்புல சினிமா போட்ட நாள்ல மணலக் குமிச்சி வச்சி சைக்கிளைப் படுக்க வச்சி படம் பார்ப்போம் பாருங்க... அது மாரி ஒரு நாளுங்க... கரண்டு போயிடிச்சி சனியன்... படத்தை நிறுத்திப் போட்டானுக... 'சட்'டுனு அந்த இடமே அமைதியா இருந்துது பாருங்க.. அப்போ ஒரு பயபுள இந்த டிரான்ஸ்சிஸ்டர் இருக்கு பாருங்க அதை ஆன் பண்ணிட்டான் போல... ஆன் பண்ணவும் அந்த பாட்டு வரவும் செரியா இருந்துச்சிப் பார்த்துக்குங்க... யோசிச்சிப் பாருங்க... நைட்டு பதினோரு மணி... பௌர்ணமி நேரம்... குமிச்சி வச்ச மணல்ல மல்லாந்து படுத்துருக்கீங்க... பக்கத்துல தெரிஞ்சவங்க யாருமில்ல...

நிறையப் பேர் இருக்காங்க.. ஆனா யாருமில்ல... இதெப்படிண்ணே... நான்தான் சொன்னேனே அப்பப்போ இப்படி எதாவது சொல்லிப் புடுவேன்ண்ணே ... நம்ம பெருமையை விடுங்க, அப்ப அந்தப் பாட்டு கேக்குது....

பிடிச்சிடுச்சிண்ணே...


ஃபிரெண்டு ஒருத்தர் சொன்னாரு... அவரு ஆபீசுல மேனஜர் பொண்ணு சும்மா டக்கரா இருக்குமாம்... அல்லாரும் பார்வையாலேயே ரசிப்பாங்களாம்.... அபபடி இருக்கச் சொல்ல ஒருநாள் முதுமலை ஃபாரெஸ்டுக்கு டூரு போயிருக்காங்க... அவிங்க இருந்தது ஊட்டிண்ணே... அங்கன தண்ணி அடிச்சி ஜாலியா இருந்துருக்காங்க... எந்த அளவுன்னா... கர்நாடகா மினிஸ்டர் ஒருத்தரு அங்கன வந்து தங்கியிருந்துருக்காரு... அதென்னங்க... என்னமோ சொல்வாங்களே... ஆ, கெஸ்ட் ஹவுசு... அவருக்கு சோறு போட்டுட்டுதான் உங்களுக்கு போடுவேன்னு சொல்லியிருக்காங்க... இவங்க தண்ணி போட்ட ஜோருல மரியாதை இல்லாம எல்லாம் பேசி எங்களுக்கு முதல்ல போடுங்கன்னு சொல்லியிருக்காங்க... பக்கத்துல ஈசிச் சேர்ல உக்காந்திருந்த ஒருத்தரு 'அவங்களுக்குப் போட்டுடுப்பா..' ன்னு சொல்ல, நம்ம ஈரோங்க 'நீ யார்ரா எங்களுக்கு சிபாரிசு செய்ய'ன்னு எகிறியிருக்காங்க...
   
ஆமாங்க.. அதேதாங்க... அவருதான் மினிஸ்டரு....  
    
மன்னிப்பெல்லாம் கேட்டாங்க அப்புறம்னு வைங்க.. தண்ணி தீந்து போய் பக்கம் இருக்கற கடைல போய்க் கேட்டா டபுள் ரேட் சொன்னவனை எதிர்க்கப் போக 'எதிர்த்தாக்க என்னாகும் தெரியுமா'ன்னு திரையைத் திறந்து காமிச்சாங்களாம்... இந்த எம் ஜி ஆர் படத்துல வருவாரே ஜஸ்டின்.... ஜட்டி போட்டுக்கினு.... ஜாம்பவானா... என்ன சொல்வாங்கண்ணே..     அ ஆங்.. பயில்வான்... இந்த ... மதன்மித்ரா விளம்பரத்துல வருவாங்களே... அது மாதிரி ஒருத்தர் நிக்க, எதுக்கு வம்புன்னு கேட்ட காசக் கொடுத்து  வாங்கிட்டு வந்துட்டாங்களாம்... மறுபடி சைட் டிஷுக்கு ச்சே...மறுபடி ஸ்லிப் ஆஃப் தி டங்... சைட் டாபிக்குல டிராக் மாறிட்டேன்ல... !
      
வீக்நெசுங்க  ...
    
ஆக, மறு படி தண்ணியடிச்சி மட்டையான நேரத்துல பக்கத்து ரூம்ல அந்த தேவதைங்க...! எப்படி இருக்கும் பாருங்க.. அது அவங்க அப்பாவோட ஃ பாரெஸ்ட் பாக்க வந்துருக்குது....! இவிங்க போட்டிருந்த டேப் ரெகார்டர்ல அந்த நேரம் 'நான் உன்னை நினைச்சேன்.. நீ என்னை நினைச்சேன்'ன்னு பாட்டுங்க... அட களுத அந்தப் பொண்ணு அந்தப் பக்கம் போயிடிச்சி... வேற ஒண்ணும் எஃபெக்டும் இல்ல, நடக்கவும் இல்ல... ஆனா பாருங்க.. நம்ம பய புள்ளங்களுக்கு அந்த நாள்லேருந்து இந்தப் பாட்டுன்னா ஒரு ஸ்பெஷலுங்க சிரிச்சிப்பாங்க... ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பாங்க...


இப்போ மேலே நீங்க கேட்ட பாட்டு நண்பர் அப்பாதுரைக்காகங்க....! 

உங்களுக்குக் கூட அப்பிடி சில பாட்டு பிடிச்சிருக்கும்ண்ணே.. ஒத்துக்கோங்க...

இன்னொரு பாட்டுங்க.... இருங்க... இருங்க.. எங்க ஓடறீங்க...!
                                     

13 கருத்துகள்:

 1. ஆஹா! ஆஹா! பிரமாதம்! ஏதோ கொஞ்சம் கவனிங்கன்னு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே சூப்பரா கவனிசுட்டீங்க. உண்மையா சொன்னா நீங்க இப்போ பதிவிட்டிருக்கற அத்தனை பாட்டும் என்னோட top most favorite songs. எப்படிதான் இதை நீங்க தெரிஞ்சுண்டு போட்டிங்களோ தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி. 'அன்பு நடமாடும் கலைக்கூடமே' பாட்டுதான் நான் முதல் முதல்ல எனக்காக ஆடியோ காஸ்செட்ல ரெகார்ட் பண்ணிண்ட பாட்டு. 'அலங்காரம் கலையாத' பாட்டுல டி.எம்.எஸ். 'அலங்காரம்' அப்படின்னு சொல்ற அழகுக்காகவே எத்தனையோ முறை கேட்டிருக்கேன். என்னோட அண்ணா இந்த பட்டை 'கொலை வெறி' பாட்டுன்னு சொல்லுவான், அவனுக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த பாட்டு. டூயட் பாட்டுல எப்பவுமே எனக்கு சுசீலாவை விட டி.எம்.எஸ்தான் இன்னும் பிடிக்கும். ஒரு சில பாட்டுலதான் நான் டி.எம்.எஸ்சை விட சுசீலாவை இன்னும் ரசிப்பேன். இந்த 'காதல் ராஜ்ஜியம் எனது' பாடல் அப்படித்தான். நான் சுசீலா பாடி இருக்கறதை ரொம்பவே ரசிப்பேன். தூங்க போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ரெண்டு தடவ கேட்டாச்சு. இன்னும் நிறையதடவ நிச்சயமா கேப்பேன்.

  பைரவி என். மளவை பாடினதும் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிவை வழங்கி இருக்கும் விதமும் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 2. அங்க கோகுல் மனதில் வலைப்பூவில் இசை பற்றிய பதிவு, இங்கு உங்கள் வலைப்பூவில் இசை பற்றிய பதிவு... இன்னும் யார் யார் இன்று இசை பற்றி பதிவு போட போறாங்களோ

  பதிலளிநீக்கு
 3. //இப்பக் கூடப் பாருங்க... இந்தக் கொலைவெறிப் பாட்டு படுத்தற பாட்டை... என்னங்க இருக்கு அதுல... தூ... நானும் டெய்லி நாலஞ்சி தரம் கேட்டுப் பார்க்கறேன்... எத்தக் கண்டு அதை ரசிக்கிறாங்கன்னே தெரியல... இருங்க இன்னொரு தரம் அதக் கேட்டுடறேன்...//

  ஹா..ஹா..ஹா..

  இசை ஆராய்ச்சி???

  //மனசுக்குப் பிடிச்சா எல்லாம் நல்ல சங்கீதம்தான்... என்னன்றீங்க... பாட்டு பிடிக்க அது நம் மனச ஏதோ ஒரு விதத்துல, ஏதோ ஒரு இடத்துல தொடணும் இல்லை? இல்லீங்க... சில சமயம் சில பாட்டு அது கூட அவசியமில்லாமப் பிடிச்சிப் போகுத்ண்ணே..//

  உண்மை..

  நீங்க குறிப்பிட்டுள்ள எல்லா பாடலுமே எனக்கு பிடிக்கும் அதிலும் கடைசிபாடல் ரொம்ப பிடிக்கும்,ஆனா அது பிடிக்கறது காரணம் தெரியாது,இசையா அதன் வரிகளா????தெரியலை..

  பதிலளிநீக்கு
 4. //இந்தக் கொலைவெறிப் பாட்டு படுத்தற பாட்டை... என்னங்க இருக்கு அதுல... தூ... நானும் டெய்லி நாலஞ்சி தரம் கேட்டுப் பார்க்கறேன்... எத்தக் கண்டு அதை ரசிக்கிறாங்கன்னே தெரியல... இருங்க இன்னொரு தரம் அதக் கேட்டுடறேன்...//

  :))!

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 5. இதில் வரும் பாடல்கள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். இன்று பார்க்கவும் வைத்தீர்கள்! நன்றி!

  லேபிலை ரசித்தேன் - ஓ, நீங்க பாட்டைச் சொன்னீங்களா, ஸாரி! :-))

  அண்ணனைக் கூப்பிட்டாலும் எவ்வளவு சகோதரிகள் வந்திருக்கோம் பாருங்க....

  பதிலளிநீக்கு
 6. டிசம்பர் சீசனுக்கா? நல்லாயிருக்கு சார்!

  பதிலளிநீக்கு
 7. // இப்பக் கூடப் பாருங்க... இந்தக் கொலைவெறிப் பாட்டு படுத்தற பாட்டை... என்னங்க இருக்கு அதுல... தூ... நானும் டெய்லி நாலஞ்சி தரம் கேட்டுப் பார்க்கறேன்... எத்தக் கண்டு அதை ரசிக்கிறாங்கன்னே தெரியல... இருங்க இன்னொரு தரம் அதக் கேட்டுடறேன்... //

  அது சிதம்பர ரகசியம் மாதிரி..
  -- என்னத்தான் இருக்குனு தெரியாதவரைக்கும் திரும்பத் திரும்ப பாத்து / கேட்டு ஹிட்ஸ் ஏத்திக்கறாங்க ..

  பதிலளிநீக்கு
 8. 7 சுரம் போல 7 முத்தான பாடல்கள்
  அருமையான பகிர்வு சார்

  பதிலளிநீக்கு
 9. இப்பத்தான் வந்து கணணி போட்டுத் தளங்கள் உலாவந்தால் உங்க பக்கத்திலேயே ரொம்பநேரம் நிக்க வச்சிட்டீங்க.எதை அழுத்த எதைக் கேட்கன்னு கேட்டுக்கிட்டே இருக்கேன்.பாட்டு முடிஞ்ச அப்புறமும் பாட்டு வந்துகொண்டேயிருக்கே !

  பதிலளிநீக்கு
 10. பதிவும் கொடுத்துள்ள பாடல்களும் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  பதிலளிநீக்கு
 11. இதில் வரும் பாடல்கள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். இன்று பார்க்கவும் வைத்தீர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. சிவாசின்னா அம்புட்டு பிரியமா? சிவாசி பாட்டா தள்ளியிருக்கீயளே? காதுக்குள்ளாறயே சுத்திட்டு இருக்குத்துங்கோ..

  ஆயிரந்தடவ கேட்டிருந்தாலும் இப்பத்தான் படம் பாக்குறங்கோ.. அலங்காரம் பாட்டுல வர பொம்பிள யாருங்கோ?

  அட நம்மளையும் மதிச்சு ஒரு பாட்டு போட்டிருக்கீயளனு பாத்தா பயாஸ்கோப்பைக் காணமே? இருந்தாலும் சூப்பரு.. தேங்சு. 'கோடு வட்டம் எல்லாம் கடவுள் போட்டதல்லடி' இப்பக் கேட்டாலும் நச்சுனு இடிக்குதே?

  ஆமா.. நடுவுல ரெண்டு பேருங்க சப்பளமா ஒக்காந்து என்னவோ பாடுறாங்களே... அவங்க புடவைக் கலர் என்னாங்க? ராமர் ப்லூவா?

  பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கலாம்.. ரொம்ப தேங்சுங்கோ.

  நல்ல பாட்டுக்கு நடுவுல கருப்புல கட்டம் கட்டி வுட்டிருக்காகளே மாடர்னுகாரங்க, அவுங்களை செருப்பால அடிக்கணும்னு துருதுருன்னுதுங்க.. அற்றஸ் சொல்றீயளா?

  பதிலளிநீக்கு
 13. //அலங்காரம் பாட்டுல வர பொம்பிள யாருங்கோ?//
  வாணிஸ்ரீ -
  http://74.208.147.65/movies/Kollywood/Rojavin_Raja/6862

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!