முன்பே சொன்னது...
காலங்கள் சிலரை மறக்கச் செய்து விடும். ஆனால் சிலரின் நினைவுகள்தான் காலங்களையே மறக்கச் செய்து விடுகின்றன.
============================== ==
துண்டாய் வந்தாலும் அன்பின் துடிப்பைச் சொன்னது...
*some text missing
*Dear....
=============================
நீ எப்போது விழுந்தாலும்
தூக்கி விட
நான் இருக்கிறேன்..
ஆனால்
சிரித்து முடித்து விட்டுத்தான்...
===========================
என்ன கொடுமை சார்...
ஒரே ஆசிரியர் எல்லாப் பாடத்தையும் கத்துக் கொடுக்க மாட்டாராம்... ஆனால் ஒரு மாணவன் எல்லாப் பாடத்தையும் எழுதணுமாம்...
============================
சண்டையில் ஆதாயம்
முதல் நபர் : "நான் அடிச்சா அமெரிக்காவுல போய் விழுவே..."
இரண்டாம் நபர் : "நான் அடிச்சா ஆப்பிரிக்கால போய் விழுவே..."
அருகாமை நபர் : " என்னைக் கொஞ்சம் லேசா அடிங்க சார்... நான் டெல்லி வரை போகணும்.."
============================== =======
அப்பவே அப்படித்தானா ...!
எந்த மனிதனும் பெற்றதற்கு கௌரவிக்கப் படுவதில்லை. கொடுத்ததற்குத்தான் கௌரவிக்கப் படுகிறார்கள்! - கால்வின் கூலிட்ஜ்.
============================== =====
தாமதமாக எடுக்கப் பட்டால் சரியான முடிவும் தவறாகலாம்! - கார்ல் மார்க்ஸ்.
============================== =
யார் பெரியவர், யாரைக் கேட்க?
நேரு மாமா சொல்றார், 'சோம்பேறித்தனம் பெரிய எதிரி'ன்னு. காந்தி தாத்தா சொல்றார் 'எதிரியை நேசியுங்கள்'னு! நீங்களே சொல்லுங்க.. மாமா சொல்றதைக் கேட்கவா, தாத்தா சொல்றதைக் கேட்கவா...?
========================
தூங்குவதற்கு மட்டுமா இரவு? இன்றைய தவறுகளை மறக்கவும் நாளைய கனவுகளை நினைக்கவும்தான்!
============================
உறவின் ரகசியம்
தெரியாதவரிடத்து அறிவாளியாய் இருந்தாலும் அன்புடையவர்களிடம் முட்டாளாகவே இருங்கள்!
நாம அடுத்தவங்களுக்கு செஞ்ச நல்லதையும், அடுத்தவங்க நமக்கு செஞ்ச கெடுதலையும் மறந்துடறது நல்லதுங்க...
வெற்றியும் வேதனையாகும், பாராட்ட நம்மில் அன்புடையார் யாருமில்லாத போது! தோல்வியும் சுவைதான், தாங்கிப் பிடிக்க நம்மில் அன்புடையார் நம்முடன் இருக்கும்போது!
============================== =
உதடு ஒட்டணும்!
உறவின் வெற்றி நான் என்பதை நாம் என்றாக்கும் ஒரேழுத்து வித்தியாசத்திலிருக்கிறது!
===============================
நெனச்சது ஒண்ணு...
ரெயில் பெட்டியில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த அந்த 24 வயது வாலிபன் அப்பாவை அடிக்கடி கூவிக் கூவி அழைத்து, மரங்கள் பின்னால் ஓடுவதையும், வானம் கூடவே வருவதையும் சத்தமாக சொல்லி ரசித்தான். உடன்பயணிகள் இருவர் தந்தையிடம் அனுதாபத்துடன், "ஏன் அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பிக்கக் கூடாது?" என்று கேட்டனர். புன்னகையுடன் தந்தை சொன்னார், "மருத்துவ மனையிலிருந்துதான் வருகிறோம். பிறவியிலிருந்து கண்கள் இல்லாமலிருந்த என் மகனுக்கு இப்போதுதான் பார்வை கிடைத்துள்ளது"
=============================
// நெனச்சது ஒண்ணு...//
பதிலளிநீக்குInteresting...
நெனச்சது ஒண்ணு அருமை. மாமா சொல்றதை கேக்கவா, தாத்தா சொல்றதைக் கேக்கவா பிரமாதம். ஒரே ஆசிரியரும் நல்லாவே இருந்துச்சு. மொத்தத்துல உள் பெட்டி சூப்பர்ப்.
பதிலளிநீக்குபெட்டியிலிருந்து ரத்தினங்கள் கொட்டி இருக்கின்றன. அதுவும் கடைசி ரத்தினம் அருமை. ஏற்கெனவே தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் வந்திருந்தாலும்.
பதிலளிநீக்குஹிஹிஹி, இந்த ஒரு விஷயத்திலே மட்டும் தாத்தா சொல்வதையே கேட்கலாம்னு தோணுது எனக்கு! :)))))))
' நெனச்சது ஒண்ணைப்' படிச்சதும் நெனச்சது..
பதிலளிநீக்குஇது ஒரு வாரப்பத்திரிகையில் வந்த ஒரு பக்கக் கதை மாதிரி இருக்கே!. அதுதானோ!!!
மாமா தாத்த ரெண்டு பேரு சொல்றதையும் கேகலாம்:)
பதிலளிநீக்குதனி தனியா. நெனச்சது ஒண்ணு நல்லா இருக்கு.
ரொம்ப சுவாரஸ்யம்.
1 & 3 class
பதிலளிநீக்குதத்துவங்கள் அருமை.
பதிலளிநீக்குசண்டையில் ஆதாயம், என்ன கொடுமை இவை சிரிக்க வைத்த வேளையில் நினைக்கவேயில்லை ‘நினைச்சது ஒண்ணு’ இப்படி நெகிழ வைக்குமென்று.
//ஒரே ஆசிரியர் எல்லாப் பாடத்தையும் கத்துக் கொடுக்க மாட்டாராம்... ஆனால் ஒரு மாணவன் எல்லாப் பாடத்தையும் எழுதணுமாம்...//
பதிலளிநீக்குஅதானே??