Tuesday, May 8, 2012

என் கேள்விக்கென்ன பதில்! அஞ்சு சான்ஸ்

தொலைக்காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி & வடிவேலு பங்கு பெறும் நகைச்சுவை காட்சி ஒன்று வந்துகொண்டிருந்தது. வெ ஆ மூ, வடிவேலு வாய் திறக்கும் பொழுதெல்லாம், அவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவரிடம் கேள்வி கேட்டு மடக்கும் காட்சி. (டேபிளைக் கண்டுபிடித்தது யாரு, டேபிள் ஃபேன் கண்டுபிடித்தது யாரு')  என்று கேட்டு கலாய்க்க, வடிவேலு, 'ஐயோ போதும்பா' என்று அலறிக் கொண்டு ஓடும் காட்சி. எல்லோரும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் ...
       
மாமா ஃபோன் செய்தார். 
    
"ஆதித்த கரிகாலன் தலைப்புல வந்த புத்தக அறிமுகம் எழுதி இருந்தது படித்தேன்... நன்றாக இருந்தது... மர்மங்கள் என்ன என்று சொல்லாமல் நிறுத்தியிருப்பது நல்ல காரியம்...."
   
"நீங்க படிச்சீங்களா மாமா..?" ஏனென்றால் அவர் இதெல்லாம் படிக்கும் பழக்கங்கள் இல்லாதவர்.
               
"இல்லை.... எனக்கு அபபடி ஃபோன் வந்தது... "
               
"யார் ஃபோன் செய்தது?"
                      
"நீ கண்டுபிடி.."
                  
"எனக்கு எப்படித் தெரியும்... நீங்களே சொல்லுங்க..." 
                   
"நான் எப்போ கேள்வி கேட்டு நானே பதில் சொல்லியிருக்கேன்! உனக்கு அஞ்சு சான்ஸ்"
               
"உங்கள் பையன், பொண்ணுன்னா படிக்க மாட்டாங்க.... மேலும் சொல்லணும்னா என் கிட்டயே சொல்லிடுவாங்க..."
    
"என்னைக் கேட்கறியா... இல்லை பதிலா"
           
"பிரகாஷ்.."
           
"இல்லை... ஒரு சான்ஸ் போச்சு... கேள்வி கேளேன்... கேள்வி கேட்டு கெஸ் பண்ணு"
            
"இந்த ஊரா... வெளியூரா..."
            
"இப்போ வெளியூர்..." அப்போ உள்ளூர்தான்,  இப்போ வெளியூர் போய் இருக்கார் என்று கொள்ள வேண்டுமா அல்லது வேறு அர்த்தமா... கேட்காமல் தொடர்ந்தேன்.
               
"என்னையும் தெரிஞ்சவங்க என் கிட்டயே பேசியிருப்பாங்க.... உங்களை நல்லாத் தெரிஞ்சு என்னை லேசாத் தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட சொல்லியிருப்பாங்க..."
               
"எதாவது சொல்றியா... நீயே பேசிக்கிறியா.. எப்படியும் ரெண்டாவது சான்சும் காலி"
                 
"விடுங்க மாமா... யாரோ சொன்னாங்க... அவ்வளவுதானே... அந்த அளவு போதும்.."
    
".........   "  மௌனம்.
            
"சந்திர சேகரா...." அது அவர் மச்சினர்.
             
"இல்லை... மூணாவது சான்சும் காலி"
              
"விடுங்க மாமா... நான்தான் யார்னு தெரிய வேணாம்கறேன் இல்ல..."
            
"அதென்ன.. காசா பணமா... இன்னும் ரெண்டு சான்சஸ்தானே... ட்ரை பண்ணு"
             
டக் டக்கென வேறு இரண்டு பெயர்கள் சொல்லி 'கிச்சானை'க் காலி செய்தேன்.
             
அப்புறமும் விடை சொல்லவில்லை. சொல்லமாட்டார்! அவர் கேள்வி மட்டும்தான் கேட்பார்! 
    
"கேள்வி கேக்கறதுன்னா என்ன பயம் உனக்கு.... எப்படிக் கேள்வி கேட்டு பதிலை வாங்கறதுன்னு கத்துக்கணும்டா...".
                
வேறு ஏதோ பேசி விட்டு விஷயங்களை எங்கெங்கோ தொட்டுப் பேசிய போது வந்த ஒரு க்ளூவில் ஒரு பெயர் சொன்னேன்.
     
"தப்பாச் சொல்லும்போதெல்லாம் தப்பு,  தப்புன்னு சொன்னேன்... சரியாச் சொல்லும்போது சரின்னு சொல்லிடறதுதானே நியாயம்..."
      
"உங்க விருப்பம் மாமா..." மேற்கொண்டு கேள்விகளில் மாட்டிக் கொள்ளாதிருக்க முடிந்தவரை ஜாக்கிரதையாக பதில் சொன்னேன். 
               
"ஓகே...கரெக்ட்..." அப்புறம் அவர் எதற்கு ஃபோன் செய்யும்போது இதைப் பற்றி என் பேச்சு வந்தது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த போது என்னை அறியாமல் மீண்டும் ஒரு கேள்வி வந்து விழுந்துவிட்டது! 
    
"அவர் உங்களுக்கு என்ன வேண்டும்... எந்த ஊர்ல இருக்கார் இப்போ..?"
   
"உனக்கு அஞ்சு சான்ஸ்..."
             
"மதுரை.."
            
"இப்போதானே சொன்னேன்... எடுத்த உடனே விடையைச் சொல்லலேன்னா அடிக்கவா போறேன்.... கேள்வி கேட்டு கெஸ் பண்ணிச் சொல்லு..."
               
"அவர் எந்த ஊர்"
               
"உதைக்கப் போறேன்.."
                  
"நம்ம ரிலேஷன்ஸ் யார் இருக்கா அந்த ஊர்ல.."
               
"அவர்தான்... அவர் நம்ம ரிலேஷன்தானே..."
             
"சரி... அந்த ஊர்ல என்ன ஸ்பெஷல்..."
      
"கேலண்டர்...."
     
"சிவகாசி.."
          
"ஓகே.... எப்படியோ உடனே சொல்லிட்டே...." 
              
"மாமா... கேள்வியா கேக்காம பேசலாமா...?"  
             
"நீ மட்டும் கேள்வி கேக்கலாமா?"  
              
"நீங்க கேள்வி கேட்டுட்டு யாருக்குமே நீங்க பதிலே சொன்னதில்லையா மாமா..."
               
"ஏன் சொல்லணும்? பதிலை நீங்க தேடணும்... அப்போதான் அது மனசுல நிற்கும்..."
          
"உங்களுக்கு பதில் தெரியாதுன்னு வச்சிக்கலாமா...?"
            
"வச்சிக்கோ... நஷ்டம் எனக்கு இல்லை... உன் கேள்விக்கு ஒரு பதில் சொல்றேன். ஒருத்தருக்கு பதில் சொல்லியிருக்கேன். அதுவும் வேற வழியில்லாமன்னு வச்சிக்கலாம்.. ம்... சொல்லப் போனா ரெண்டு பேருக்குச் சொல்லியிருக்கேன்.."
    
"அட....! யார் அது?" 
                    
"ஐ... அதெப்படி நான் சொல்வேன்? உனக்கு அஞ்சு சான்ஸ்..."
      
"ஐயோ! நான் வரலை இந்த விளையாட்டுக்கு..." 
   "அவ்வ்வ்வ்வ்" 
    

30 comments:

மோகன் குமார் said...

Kadaisi photo vadivel nilamai thaan engalukkum (Ungalukkum kooda??)

RAMVI said...

நானும் வரலை இந்த விளையாட்டுக்கு. தலையை சுத்துது.

Geetha Sambasivam said...

ஜாலியா இருப்பார் போல மாமா. நல்ல மாமா. எஞ்சாயிங். :))))))

Geetha Sambasivam said...

மிச்சதெல்லாம் அப்புறமா.

இராஜராஜேஸ்வரி said...

எப்படிக் கேள்வி கேட்டு பதிலை வாங்கறதுன்னு கத்துக்கணும்

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

வல்லிசிம்ஹன் said...

தலை சுத்தறது ஸ்ரீராம். உங்க மாமாவை வரச் சொல்லுங்க நான் பார்த்துக்கறேன்!!!!!

ராமலக்ஷ்மி said...

சிறப்பான விமர்சனம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது:)! மாமாவை அழைச்சிட்டு வந்தாலும் வந்தீங்க. கடைசி வரிய ரிபீட் செஞ்சபடி எல்லோரும் ஓடறாங்க பாருங்க:)!

HOTLINKSIN.COM திரட்டி said...

நாங்களும் வரலை இந்த விளையாட்டுக்கு...

உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

krishy said...

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

Madhavan Srinivasagopalan said...

// "நம்ம ரிலேஷன்ஸ் யார் இருக்கா அந்த ஊர்ல.."

"அவர்தான்... அவர் நம்ம ரிலேஷன்தானே..." //

போட்டு எடுக்கலாம்னு பாத்தா...
போட்டதே திரும்ப வருதே .. !! :-)

அமைதிச்சாரல் said...

வெளையாட்டு தலையச் சுத்த வைக்குதே... :-))

ஹேமா said...

நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ் சொல்லிக்கொண்டே ஓடிப்போயிடறேன் !

Ramani said...

நல்ல தலைய சுத்த விடுறீங்க
யோசித்து யோசித்து ம்ண்டை காஞ்சதுதான் மிச்சம்
ஆனாலும் பதிவு மிக மிக சுவாரஸ்யம்
தொடர வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

தலையை சுற்ற வைப்பது என்பது இதுதானா?


ஐயோ! நான் வரலை இந்த விளையாட்டுக்கு..."
///

ஐயையோ ... நானும் வரலே இந்த விளையாட்டுக்கு....

கணேஷ் said...

சுத்திச் சுத்திப் பேசி கடைசியில ஒண்ணும் புரியலை எனக்கு, நானும் எஸ்கேப்ரா சாமி...

எங்கள் ப்ளாக்கை தங்களோட இணைக்கச் சொல்லி எல்லாத் திரட்டிகளும் விண்ணப்பம் வெச்சிருக்காங்களே... பேஷ்... பேஷ்...

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரே குழப்பமா இருக்கே !

middleclassmadhavi said...

:-))((!!

அப்பாதுரை said...

இதைத்தான் எண்ணுறீங்களா?

Ranjani Narayanan said...

நீங்கள் கொடுத்த இணைப்பிலிருந்து வந்து இதைப் படிச்சாச்சு!
எல்லோரும் பெற்ற இன்பம்(தலை சுற்றல்!) நானும் பெற்றேன்!

Geetha Sambasivam said...

நல்ல விளையாட்டு, மறுபடியும் ரசிச்சேன். கேள்வியின் நாயகன் பிரமாதம். அவர் பதில் சொல்லி இருக்கக்கூடிய இரண்டு பேர்களில் ஒருத்தர் அவர் மனைவி,இன்னொருத்தர் படிக்கிறச்சே டீச்சரா இருக்குமோ?? கேட்டுச் சொல்லுங்க.

வெங்கட் நாகராஜ் said...

அட இப்படிக் கேள்விக்கணைகளா தொடுக்க வேண்டியிருக்கே.....

interesting personality தான்.... :)

Geetha Sambasivam said...

அட! நான் இதுக்கு 3 கமென்ட் கொடுத்திருக்கேனே!

நெ.த. said...

*நல்லாத்தான் இருக்கு படிக்க*

ஸ்ரீராம். said...

அதாவது...

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது...

அவர் கேள்வி மட்டும்தான் கேட்பார்! தருமி மாதிரி!

ராமலக்ஷ்மி said...

நாங்களும் வரலை இந்த விளையாட்டுக்கு :).

Angel said...

இந்த கேள்வியின் நாயகன் :) புதன் கிழமை பதிவுகளில் வராரா ??

இவர் எவ்ளோ பெட்டர் என் பொண்ணு ஒரே சான்ஸ் யெஸ் இல்லைன்னா நோ இப்படித்தான் பதில்சொல்லணும்னு மிரட்டுவா :)

ஸ்ரீராம். said...

// இந்த கேள்வியின் நாயகன் :) புதன் கிழமை பதிவுகளில் வராரா ??//

உங்களுக்கு அஞ்சு சான்ஸ் அஞ்சு...

Angel said...

https://gallery.yopriceville.com/var/albums/Free-Clipart-Pictures/Cartoons-PNG/Angry_Jerry_Free_PNG_Clip_Art_Image.png?m=1447991701

Kamala Hariharan said...

ஆகா.. இங்கேயும் ஒரு குழப்பம் இருப்பதை புரிந்து கொண்டேன். இதற்கு படங்கள் எடுத்தவர் எவராயிருக்க கூடுமென்ற சந்தேகமே பரவாயில்லை என தோன்றுகிறது. இவர்தான் அன்று எடுத்த புகைப்படங்களுக்கு சொந்தகாரர் என நம்புகிறேன். இங்கெல்லாம் கேள்வியே கேட்க கூடாது. புரிந்ததை சொல்லி விட்டு வந்த சுவடு தெரியாமல் விலகி விட வேண்டும். நன்றி. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!