வெள்ளி, 25 மே, 2012

எட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா!


                    

கே வி: "என் மனைவி குழந்தையின் பெயர் 'மாயா' என்று வைக்கலாமா என்று கேட்டவுடன், நான் அதிசயித்துப் போனேன். ஆனால், மாயா, பிங்கி இருவரும் என்னைத் தொடர்ந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை. 'போதும் இந்த மாயா பிங்கி விவகாரங்கள். அவர்களை என் குடும்பத்திற்குள் நான் அனுமதிக்கத் தயாராக இல்லை' என்று நினைத்தேன். மனைவியிடம், 'மாயா - பாயா, பிங்கி - சொங்கி' என்றெல்லாம் எந்தப் பெயரும் வேண்டாம் என்றேன். என் பெண்ணுக்கு கூகிளில் தேடி, விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகையின் பெயரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். "
           
எ சா: "Anushka?"
            
கே வி: "No. ANOOSKA"  
      
எ சா: "சுத்தம்!" 
           
கே வி: "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" 
            
எ சா: "உங்களுக்கு நியூமராலாஜி தெரியுமா?"
               
கே வி: "தெரியாது" 
             
எ சா: "MAAYA, PINKI / PINKY, ANOOSKA - எல்லாப் பெயர்களுக்கும் கூட்டுத் தொகை எட்டு வருகின்றது." 
             
கே வி: "அதனால் என்ன?"
             
எ சா: "இன்று காலை நொச்சூர் வெங்கட்ராமன் என்பவர் கூறிய உபன்யாசம் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் பூஜ்யம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுள்; எட்டு என்பது மாயா, மாயை. என்றார். எட்டு என்பது மாயச் சுழல் - இரண்டு பூஜ்யங்கள், ஒன்று கடிகார சுற்றாகவும், மற்றது அதற்கு எதிர் திசையிலும் அமையும் சுற்றாகவும் அமைந்த உழல் சக்கரம்' என்றார்" 
                   
கே வி: "ஆச்சரியமாக இருக்கின்றதே! மாயாவுக்கும் எட்டுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றனவா?"
             
எ சா: "ஆமாம். நீங்கள் இங்கு வந்து என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே, பல எட்டுகள் இங்கே வந்து விழ ஆரம்பித்தன. KV, 08-08-2008, 8th floor, Desh (Raaga), Maaya, Date of birth: 08-08-1970 8 pm, Date of death: 08-08-2006 08:08 AM, OA, Pinki, Anooska என்று பல எட்டுகள். (ஒருவேளை ஜீவி சார் இன்னும் சில எட்டுகள் கண்டு பிடித்திருந்தால் அவைகளும் சேரும்!)   அதெல்லாம் போகட்டும். நீங்கள் என்னைத் தேடி வந்ததின் காரணம் என்ன? அதைச் சொல்லுங்கள். 
             
கே வி: "மாயாவின் ஆவி கூறிய கதையில், ஒரே ஒரு இடத்தில் உங்கள் பெயரைக் கூறி இருந்தார். ஜோதிட வைத்தியரின் சிஷ்யர் என்றும் கூறினார். அப்புறம் அந்தப் பெயர் மறந்து போயிருந்தது. நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம், என்னை இங்கே கொண்டு வந்தது என்று சொல்ல வேண்டும். "
         
எ சா: "அது என்ன சம்பவம்?"  
      
கே வி: "எனக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். பெரியவன் பெயர் அர்விந்த். அடுத்துப் பிறந்தவள்தான், அநூஷ்கா. இப்போ அநூஷ்கா ஆறுமாதக் குழந்தை. நேற்று ஆபீசில், இந்தூர் ஆபீஸ் பற்றி, பாட்டியா விசாரணை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். எம் டி இந்தூர் கோர்ட்டில் ஆஜராகி, பாட்டியா சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. எம் டி யுடன், அவருடைய பி ஏ, ஸ்ரீவத்சன் என்ற என் நண்பரும் இந்தூர் சென்றிருந்தார். ஸ்ரீ வத்சனிடம், நான், மாயா ஹோட்டல் பற்றியும், பெரியவர் கோவிந்தராஜன் எனக்கு உதவியதையும் (மட்டும்) கூறி, அங்கு அவரைச் சந்தித்தால், அவரை நான் மிகவும் கேட்டதாக சொல்லவேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தேன். ஸ்ரீவத்சன் இந்தூரிலிருந்து என்னுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசும்பொழுது, 'கோவிந்தராஜன் தினமும் ஜெயிலுக்குப் போய் வருவதாகவும், அவருடைய முதலாளி ஓ ஏ என்பவர் ஜெயிலில் இருப்பதாகவும், அவர் மீது, பிங்கி என்பவரை விஷ மாத்திரை கொடுத்து கொன்றதாக வழக்கு என்றும், பிங்கி இறந்ததற்கான காரணம், அவர் குடித்த கோக்க கோலா பானத்தில் விஷம் கலந்து இருந்தது, அதே விஷ மாத்திரை, ஓ ஏ வின் அறையில், கண்டெடுக்கப்பட்டதால், ஓ ஏ கைது செய்யப் பட்டு, சிறையில் இருக்கின்றார்' என்றும் சொன்னார். " 
     
எ சா: "என்னது? கோக்க கோலாவை பிங்கி குடித்தாளா! அதே மாத்திரை ஓ ஏ ரூமில் ..... ஓ! அது மாயா கையிலிருந்து விழுந்து மாயமாக மறைந்த மாத்திரையா!! அடக் கடவுளே!" 
    
(தொடரும்)  
         

8 கருத்துகள்:

  1. அடக் கடவுளே, என்னங்க இது? எட்டெட்டு மாயானு தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க?

    இன்னும் போணியே ஆகலையா? ரொம்ப போரடிக்குது போல, அதான் யாரையும் காணோம். நான் தான் மாட்டினேனா? :P:P:P

    பதிலளிநீக்கு
  2. இதை எழுதினவர் பெயரை ரகசியமா வைச்சிருக்கீங்க போல. கண்டு பிடிப்போமுல்ல. ஆட்டோ அனுப்பத் தாவல??

    பதிலளிநீக்கு
  3. அந்த எச்சூர் வெங்கட்ராமன் இருக்கிறரே, எமகாதகர்! என்னமாய் எல்லாத்தையும் பிட்டு பிட்டு (கவனிக்க எட்டு-எட்டு அல்ல) வைக்கிறார் என்கிறீர்கள்! "அந்த
    கடைசி எட்டு -தேதி, நேரத்தில் மட்டும் கூட்டுத்தொகையில் எட்டு வரலையே?.. என்ன ஸ்வாமி, இது அதிசயம்?" என்று அவரைப் பார்த்த போது நானும் என் பங்குக்குக் கேட்டேன்.

    அதிசயித்த அவரும் ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமிஷம் தான்!
    படக்கென்று ஒரு கணக்கு சொன்னார்: "ஐஞ்செட்டு போனால் வந்துவிடும் பாருங்கள்", என்றாரே பார்க்கலாம்!

    ஆமாம்!.. வந்திட்டதே! சும்மாச் சொல்லக்கூடாது, ஞானி தான் அவர்1
    அவர் சொன்ன உழல்சக்கர தத்துவம் சிந்தையில் சுற்றோ சுற்றென்று சுற்றிக் கொண்டே இருக்கிறது!...

    பதிலளிநீக்கு
  4. எச்சூர் இல்லே அவர் ஊர்; நொச்சூர் என்று பின்னாடித் தான் தெரிஞ்சது! அதனால் நொச்சூர் வெங்கட்ராமன் என்பதே சரி; ஓக்கேவா?..

    பதிலளிநீக்கு
  5. போணி கமெண்ட் பண்றவங்களுக்கு என்ன ஆகும்னு மொதல் வாரமே எட்டு தடவை சொல்லியிருந்தாரே கவனிக்கலீங்களா?

    எட்டு எண்ணின் மாயம் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  6. எல்லா சான்ஸையும் நீங்களே வச்சுக்குங்க.. விஷயத்தை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!