ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஞாயிறு - 159:: 22/7 !!


எங்கள் (விஞ்ஞானி) ஆசிரியர், எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

'ஞாயிறு நூற்று ஐம்பத்தொன்பது வருகின்ற தேதியை கவனித்தாயா? 22/7 ! இந்த பின்னத்தை நீ கணக்கில் நூற்றுக்கு சைபர் எடுத்த நாட்களில் அடிக்கடி கேள்விப் பட்டிருப்பாயே!' என்று எழுதியிருந்தார். 

"ஆமாம், ஆமாம்! 'கேள்வி'ப் பட்டிருக்கின்றேன்; ஆனால் பதில்தான் சரியாக சொன்னது இல்லை" என்றேன், அவரைத் தொலைபேசியில் அழைத்து. 

"அதனாலத்தான் நீ நூற்றுக்கு சைபர் எடுத்த நாட்களில் என்று சொன்னேன்" என்றார்.

நான், "இந்த மாதம் பூச்சிகள் மாதம் ஆயிற்றே" என்றேன். 

அவர், "அதனால் என்ன? பையையும், பூச்சியையும் இணைத்துப் படம் போடு" என்றார்! 

போட்டு விட்டேன். 
********************************
ஆனால், அவர் சொன்னது இந்தப் பை இல்லையாம்! 

மேலே கண்ட வரைவு வடிவத்தைப் படித்துப் பார்த்து அவர் சொன்னது, " தம்பீ ! பை தெரியுமா பை?" என்று கேட்டார். "இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு எழுத்துகள்?" என்றும் கேட்டார். 

நான் சொன்னேன்: "3 1 4 1 .."

அவர்: "ஆச்சரியக் குறிக்கு பதில், ஒரு புள்ளி வெச்சுப் பார்த்தால், அது 'பை'யின் அப்ராக்சிமெட் வால்யூ" என்றார். (3.141) 

"அட! இப்படி ஒரு வழி, இருக்கின்றதா! எண்களை நினைவில் கொள்ள ..!" என்று வியந்து போனேன். 

இந்தத் தகவலை எங்கள் மற்ற ஆசிரியர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்ட போது, அவர்,  "அடேடே! வா அனுஷ்கா வா. இப்போதான் இராயலாநகருக்கு ரோடு போட்டாங்களா? போகட்டும் - டிபன் தின்னாச்சா .... தின்னவில்லைன்னா சரவணபவனுக்கு தொலைபேசிவிட்டு ... " என்று சொன்னார். 

"என்ன இதெல்லாம்?" என்று கேட்டேன். 

"இதுவும் 'பை' வால்யூதான். வார்த்தைகளை எண்ணினால் 3.1415926535897 என்று வரும்" என்றார்! 

'பை' யின் முதல் நூறு தசமஸ்தான்ங்களை இங்கே கொடுக்கின்றோம். 


3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510 58209 74944 59230 78164 06286 20899 86280 34825 34211 70679

வாசகர்களின் படைப்பாற்றல் திறமைக்கு தீனி போடுவதற்காக, இந்த பயிற்சி: 


இதை வைத்து, அர்த்தமுள்ள பாரா எழுதவேண்டும். அந்தப் பாராவில் உள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துகளைக் கொண்டு, 'பை' யின் மிக நீளமான மதிப்பை நினைவு கொள்ள வசதியாக இருக்கவேண்டும். நூறு வார்த்தைகளும் வரவேண்டும் என்றில்லை. அர்த்தமுள்ள + அதிக பட்சம் வார்த்தைகள் புனைவோருக்கு பரிசு கொடுப்போம். 
                

44 கருத்துகள்:

 1. count me out! :P:P:P:P கணக்கு, மணக்கு எனக்கு ஆமணக்கு! :))))

  பதிலளிநீக்கு
 2. நீங்களாவது சைபர் எடுத்திருக்கீங்க. எனக்கு என்ன மார்க் போடறதுனு திகைச்சுப்போயிட்டாங்களாக்கும். :D

  பதிலளிநீக்கு
 3. கணக்கா... Bye Bye:)!

  மற்றவர் திறனைக் கண்டு களிக்க மீண்டும் வருவேன்.

  பதிலளிநீக்கு
 4. ஹய்யோ, ஹய்யோ - எல்லோரும் நல்லா படிச்சுப் பாருங்க!
  கணக்கு இல்லை; கவிதை அல்லது உரைநடைதான்!
  கவிதையிலோ அல்லது உரைநடையிலோ
  வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை பை மதிப்பு
  எண்களோடு ஒத்துப் போகவேண்டும்.
  அவ்வளவுதான்!
  வாங்க போ காதீங்க ஆ! போய்டாங்க (எண்ணிப்பாருங்க .... 3.1415)

  பதிலளிநீக்கு
 5. அப்படியானால் மாதிரிக்கு ஒன்று கொடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 6. குரோம்பேட்டை குறும்பன்22 ஜூலை, 2012 அன்று முற்பகல் 7:41

  முன்பே வா எனன்பே வா பூப்பூவாய் பூத்திருக்குமெனில் ரோஜா செம்பருத்தி சம்பங்கி .....(3.14158265)

  பதிலளிநீக்கு
 7. Example is in the blog post :

  "அடேடே! வா அனுஷ்கா வா. இப்போதான் இராயலாநகருக்கு ரோடு போட்டாங்களா? போகட்டும் - டிபன் தின்னாச்சா .... தின்னவில்லைன்னா சரவணபவனுக்கு தொலைபேசிவிட்டு ... " என்று சொன்னார்.

  "என்ன இதெல்லாம்?" என்று கேட்டேன்.

  "இதுவும் 'பை' வால்யூதான். வார்த்தைகளை எண்ணினால் 3.1415926535897 என்று வரும்" என்றார்!

  பதிலளிநீக்கு
 8. குரோம்பேட்டை குறும்பன்22 ஜூலை, 2012 அன்று முற்பகல் 7:58

  இகட ரா ராமய்யா ரா - பைக்குள்ள உலகமிருக்குன்னு நீயி புரிஞ்சுக்கோ (3.1415926)

  பதிலளிநீக்கு
 9. ஆஹா!!.. மூளைக் கு செமவேலை இ ருக்குமோ?.

  இது எப்டி இருக்கு :-))))))

  பதிலளிநீக்கு
 10. அமைதிச்சாரல் - நல்ல முயற்சி! ஆனால் அப்படி எல்லாம் வார்த்தை / எழுத்துகளைப் பிச்சிப் பிச்சிப் போடப்படாது! :)))

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 12. இன்று, ஓ விடுமுறை! ஆ பாக்கணும் எங்கள்ப்ளாகினில்! அட சூப்பர்தான் விளையாட்டு! நன்றி சொல்கிறோம்! வாசகர்களுக்கு வழங்குவதெல்லாமே புதுமைகள்தான்!


  3.1415926535897

  பதிலளிநீக்கு
 13. ரா ல மேடம்!
  கலக்கிட்டீங்க! 'எங்கள்ப்ளாகினில்' மட்டும் கொஞ்சம் இடிச்சாலும் ..... நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் நிச்சயம், உங்களுக்கு!

  பதிலளிநீக்கு
 14. பை ஆர் ஸ்குவேர் கண்டு கலங்கி ஓடினவளிடம் பை பை பை ஆகக் கொடுத்தால் நான் என்ன செய்வேன் எங்கள் ப்ளாகே:)

  பதிலளிநீக்கு
 15. மனசே ஏ, உள்ளமே, வா, கேட்டுக்கோ ,அம்பத்தூருக்கும் பஸ் போகுதாமுல்ல, வரீங்களா இல்லை ஶ்ரீரங்கம் கோவிலுக்குள்ளேயே போகமுடியுமான்னு பார்த்துடலாமே//3.1415926535897

  ம்ம்ம்ம், பரிசை விட மனசு வரலை, அதான் ஒரு சின்ன முயற்சி. ஏதானும் குத்தம், குறை இருந்தால் கழிச்சுட்டு மிச்சப் பொற்காசை அனுப்பிடுங்க. நன்றி. வணக்கம்.

  பதிலளிநீக்கு
 16. கீ சா அசத்திட்டீங்க ..... போகமுடியுமான்னு ... என்ற வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குது.
  ஆனாலும் உங்களுக்கும் நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் கொடுத்துவிட்டோம்!

  பதிலளிநீக்கு
 17. தின்னவில்லைன்னா சரவணபவனுக்கு தொலைபேசிவிட்டு ..//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதைப் பார்த்துட்டுத் தான் ஆறுதல் அடைந்தேன். என்னங்கறீங்க இப்போ? இடிச்சா அங்கே ஐயோடெக்ஸ் தடவிட்டு நூத்துக்கு நூறு கொடுங்க.

  பதிலளிநீக்கு
 18. //இடிச்சா அங்கே ஐயோடெக்ஸ் தடவிட்டு நூத்துக்கு நூறு கொடுங்க.//

  ஒரே அடாவடியா இருக்கே! ஏதோ ஒரு படத்துல வடிவேலு அடியை வாங்கிகிட்டு,
  அடி வாங்கினவனுக்குத்தான் கப் என்று சண்டை போட்டு கப்பைப் பிடுங்கிச் செல்வாரே
  அது போலல்லவா இருக்கு. எழுத்துகளை (எங்கள் உதாரணம், மற்றும் உங்கள் வார்த்தை
  எழுத்துகளை) நன்றாக எண்ணிப் பாருங்க மேடம் !! :)))

  பதிலளிநீக்கு
 19. அசடா? ஆ, நானில்லை, ஏ, ஆ"சிரி"யரே, பதிவுகளுக்குள்ளே என் பதிவுகளையே உங்களால் எழுத முடியாதுனு தெள்ளத்தெளிவாக உதாரணங்களாகவே சொல்லணுமாங்க?//

  3.1415926535897


  இது எப்பூடி இருக்கு? ஜாலியாத் தான் இருக்கு இந்த விளையாட்டும்! :)))))

  பதிலளிநீக்கு
 20. கீ சா - அட இது ரொம்ப நல்லா இருக்கு .... என் = ஏன்?
  இப்போ அதிக மார்க்குகள் கொடுத்துவிட வேண்டியதுதான். இதுவரையிலும் நீங்கதான் முதல் மார்க்.
  வேறு யாராவது உங்களைவிட அதிக வார்த்தைகள் பதிவு செய்கிறார்களா என்று பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
 21. இதத் தா நானப்ப வே எழுதினேன் தெரியாதஆசாமிகளே படி
  அப்புறமாக விளங்கும். யம்மா கஷ்டம்டா ரொம்பவேகஷ்டம், இந்தமாதிரிஎழுத.

  பதிலளிநீக்கு
 22. கணக்குன்னா பிச்சு உதறிருக்கலாம் (ம்க்கும்). கவிதைல்லாம் நம்ம ஏரியா இல்லை. (அப்பாடா,எஸ்கேப்)

  (இது கேள்விக்கான பதிலில்லை; ‘உக்காந்து’ எழுத்துகளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்!!)
  :-))))))))))))))))))))))))))

  பதிலளிநீக்கு
 23. மாதவன்
  நீங்க அப்ப எழுதினத அப்பவே படிச்ச ஞாபகம் இருக்கு.
  ஆனால், நீங்க பைக்கு எதுவும் அப்ப உரை எழுதவில்லை.
  இங்க எழுதினது வார்த்தைகளை பிச்சிப் பிச்சிப் போட்டது - ஆட்டத்துக்கு சேத்துக்கமாட்டோம்! :))
  நீங்க ஸ்ரீ மாதவன் ஆ? வணக்கம் (3.1415)

  பதிலளிநீக்கு
 24. ஹுஸைனம்மா!
  சரியான போங்கு !! :))

  பதிலளிநீக்கு
 25. அடியே சீ! உணவில் ஈ மொய்க்கும் சேகரபவனத்தில் நாளை விருந்துக்கு அழைக்கும் உன்னை நிச்சயம் புறக்கணிப்பேன்.(3.14159265358)

  பதிலளிநீக்கு
 26. போங்க பா !.. இப்படி பை கணக்கர் கடுப்பேத்தாதிங்க .. இது சுத்தபடாது ..... 3.1415926

  பதிலளிநீக்கு
 27. கமலா, தை வந்தால் நீ ஊருக்குக் கிளம்பவிருப்பதை நான் மறக்காமல் நினைவில் வைத்து (க்) கொள்கிறேன், கவலையில்லாதிரு . (3.14159265358 )

  பதிலளிநீக்கு
 28. மாதவா, நீ வந்தால் தை மாதத்தில் சங்கரன்கோவிலில் நான் வாங்கியுள்ள நிலத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்குக் காத்திருக்கிறேன், சரியா சொல்.(3.1415926535897932)

  பதிலளிநீக்கு
 29. காத்திருக்கின்றேன் என்று படிக்கவும். எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 30. நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

  ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
  http://www.YahooAds.in/publisher_join.php

  பதிலளிநீக்கு
 31. கீதா சந்தானம் அதிக பட்ச மார்க்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றார்.
  வெல் டன்!

  பதிலளிநீக்கு
 32. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான வசனங்கள்! ))) அடிச்சு ஆடறாங்க.

  பதிலளிநீக்கு
 33. கீதாவா, வா, சேகரோடு நீ வரச்சேயே மதுரைக்காரங்களை ஆஹா சாதாரணமாக நினைக்கவா என்று நினைச்சேனே அதுவே உண்மையாக இருந்திருக்குமா இருந்திருக்கலாமா என்று கூறு.(3.1415926535897932)

  இந்தக் கணக்குக்கு இது! புத்தப் புதுசு! :))))) நல்லவேளையா அப்பாதுரை இல்லையோ பிழைச்சேன்; இல்லைனா சான்சே இல்லை! :)))))

  பதிலளிநீக்கு
 34. ஷா பாஷ்! சரியான போட்டி என்று சொல்ல வந்தால்.....
  3.1414926535**3589**32.... 35 is repeated and 79 missing.
  சாரி பாஸ் ....

  பதிலளிநீக்கு
 35. மாதவா, நீ வந்தால் தை மாதத்தில் சங்கரன்கோவிலில் நான் வாங்கியுள்ள நிலத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்குக் காத்திருக்கிறேன், சரியா சொல்.(3.1415926535897932) //

  grrrrrrrrrrrrrrrrrrrrகீதா சந்தானம் போட்டிருந்ததாலே தைரியமாக் களத்திலே இறங்கினேன். ஏமாத்திட்டீங்களே? அநியாயமா இல்லை?:P

  பதிலளிநீக்கு
 36. 3.1415926535897

  ஹேமாவா, ஓ, எனக்கு நீ உதவினாய் அதிருஷ்டவசமாக ஓர் அதிசயமாக பலருக்கு உதவ முடிந்தது என்றென்றுமாக எடுத்துக்காட்டாக இருந்திடுவாய்.

  இது எப்பூடி???? பழைய கணக்கே! :P

  பதிலளிநீக்கு
 37. 3.14159 2653589793

  பரிசு, நோ இப்போது நீ மாத்திரம் எடுத்துக்காட்டாக இரு, அப்புறமாக உன்னிடமே பரிசை அளிப்பது அதிர்ஷ்டவசம் தொந்திரவில்லாதது என்பதெல்லாம் பதிவுலகிலிருந்து வரும்

  பதிலளிநீக்கு
 38. இரண்டு கீதாக்களும் முதல் பரிசு பெறுகின்றார்கள்.
  விடா முயற்சியுடன் போட்டி போட்டு வென்ற இருவருக்கும்
  எங்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 39. அப்பாடா, ஆயிரம் கட்டி வராஹன்? அல்லது ஆயிரம் பொற்காசுகள்?? எதுவோ ஒண்ணு உடனடியா அனுப்பிடுங்க. வெயிட்டிங். நிறையக் கல்யாணமெல்லாம் வருது. காசு மாலையாச் செய்து போட்டுக்கலாம்னு இருக்கேன். :)))

  பதிலளிநீக்கு
 40. நன்றி. Rசுவாரயமான உங்கள் போட்டிகளில் பங்கு பெறுவதே மனதுக்கும் முளைக்கும் உற்சாகம் தருகிறது.

  பதிலளிநீக்கு
 41. அர்த்தமுள்ள + அதிக பட்சம் வார்த்தைகள் புனைவோருக்கு பரிசு கொடுப்போம். //
  என்னமோ பரிசு மழை கொட்டப்போகுதுனு நினைச்சா ஒண்ணையும் காணோமே? :P:P:P:P

  பதிலளிநீக்கு
 42. //என்னமோ பரிசு மழை கொட்டப்போகுதுனு நினைச்சா ஒண்ணையும் காணோமே? :P:P:P:P//

  பொறுமை! பொறுமை!!
  பரிசு நிச்சயம் அனுப்புவோம்!
  இன்னொரு கீதா மேடம் (கீ ச)
  எந்த விலாசத்திற்கு பரிசு அனுப்பவேண்டும்
  என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
  ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பரிசு
  அனுப்பிவைக்கப்படும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!