இந்தியத் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார், ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா நேற்று காலமானார். 69 வயது. (பிறந்த தேதி, டிசம்பர் 29, 1942)
நீண்ட
நாட்களுக்குப் பிறகு வேணுவனம் பதிவுக்குச் சென்று படித்துக்
கொண்டிருந்தேன். அங்கு ராஜேஷ் கன்னா பற்றிக் குறிப்பிட்டு அந்த மின்விசிறி
விளம்பரத்தில் வரும்போது அவர்தானா அது என்று அதிர வைக்கும் உருவம் பற்றிக்
குறிப்பிட்டு 'மூப்பு' பற்றி எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டு வரும்போது
தொலைக்காட்சிச் செய்திகளில் 'காகா' வின் மறைவு பற்றிய அறிவிப்பு.
விளம்பரத்திலும், கடந்த இரண்டு வாரங்களாக சேனல்களில் வரும் அந்த ராஜேஷ்
கன்னா நினைவில் நிற்பதை விட, 'பீகி பீகி ராத்தோன்மே' என்றும் 'ஏக் அஜநபி'
என்றும், 'ரெஹ்னே தோ சோடோ யே ஜானே தோ யார் ஹம நா கரேங்கே ப்யார்' என்றும்
ஆடும் அந்த ராஜேஷ் கன்னா தான் நினைவில்....!
தேவ் ஆனந்த் மறைவுக்குப் பின் மனதில் சோகத்தைக் கூட்டிய இன்னொரு திரையுலக மறைவு.
கிஷோர்
குமார் குரல் இவருக்குப் பொருந்தியதைப் போல வேறு எவருக்கும்
பொருந்தியதில்லை என்று நினைக்கிறேன். அந்தக் கிஷோரும் ஆர் டி பர்மானும்தான்
இவரின் நெருங்கிய நண்பர்களாம்.
வரிசையாகப் பதினைந்து படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்த இவரின் சாதனை
இன்று வரை முறியடிக்கப் படாதது என்கின்றன அனைத்துச் சேனல்களும்.
ஆராதனா, கட்டி பதங், தாக், மேரே ஜீவன் சாத்தி, அப்னா தேஷ், பாவார்ச்சி,
ஆனந்த், சஃபர், ஆப் கி கசம், ஹாத்தி மேரே சாத்தி, சச்சா ஜூட்டா, ஹம
சக்கல்,அமர் பிரேம்,மெஹ்பூபா, துஷ்மன், அஜ்நபி ....தென் இந்தியாவிலும் இவரை
அறிய வைத்து என் போன்ற ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்திய எத்தனை எத்தனைப்
படங்கள்...
இவர் கார் டயரின் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்ட பெண்கள்,
இவர் புகைப்படத்துக்கு மாலையிட்டு தாலி கட்டிக் கொண்டு பைத்தியமான
பெண்கள், கார்க் கண்ணாடி முழுவதும் முத்தமிட்டு லிப்ஸ்டிக் கறையாக்கிய
பெண்கள்.... பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும், தயாரிப்பாளர்/டைரக்டர் சக்தி
சாமந்தாவும் இந்த விஷயங்களை அர்நாபுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
1970, 1971 இந்த இரண்டு வருடங்களும் ராஜேஷ் கன்னாவின் வருடங்கள்.
2009 இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும்போது கூட
கொழுகொழுவென்றுதான் இருந்திருக்கிறார். 'பாபு மொஷாய்' கையால் விருது வாங்கி
உணர்ச்சி வசப்படுவதைக் காட்டினார்கள். .
இன்னும் எவ்வளவோ பாடல்கள் இணைக்க நினைத்தோம். ஆனால் பதிவு ரொம்ப நீண்டுவிட வேண்டாம் என்பதால், அடுத்த காணொளியுடன், பதிவை நிறைவு செய்கிறோம்.
வீ ரியலி மிஸ் யு காகா ....
வீ ரியலி மிஸ் யு காகா ....
இந்திய சினிமாவுக்கு பெரிய இழப்புதான்..
பதிலளிநீக்குஎன் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவுடர் போட்டால் கூட வீட்டில் ‘மனசுல என்ன பெரிய ராஜேஷ்கன்னான்னு நினைப்பா?’ என்று கிண்டலிப்பார்கள். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அழகிய சூப்பர்ஸ்டார். நீங்கள் பகிர்ந்த பாடல்கள் அவரின் இழப்பின அளவை மனதிற்கு தெளிவாய் உணர்த்தின.
பதிலளிநீக்குஆராதனா படத்தை, மதுரை மீனாக்ஷி தியேட்டரில் போய்ப் பார்த்த நினைவுகள். மாட்டினி ஷோ. மற்றபடி ஆனந்த் படம் கொஞ்சம் பிடிக்கும். :))))) அடுத்து பாவர்ச்சி
பதிலளிநீக்குஅவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
//பால கணேஷ் said...என் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவுடர் போட்டால் கூட வீட்டில் ‘மனசுல என்ன பெரிய ராஜேஷ்கன்னான்னு நினைப்பா?’ என்று கிண்டலிப்பார்கள். //
பதிலளிநீக்குAbsolutely true but never had that chance as I look like வழிச்சு வார்த்த மாவு !1
சிறுவயதில் ஆராதனாவை தியேட்டரில் பார்த்திருக்கிறேன் நானும். எங்கள் ஊரில் நன்றாக ஓடிய படம்.
பதிலளிநீக்கு‘ஒரிஜனல்’ சூப்பர் ஸ்டார் இவர்தான்.
நல்லதொரு நடிகர். நீங்க குறிப்பிட்டிருக்கும் லிஸ்டில் ஒன்னோ ரெண்டோதான் விட்டுப்போயிருக்கும். மத்தபடி எல்லாப் படமும் பார்த்ததுண்டு. பாவர்ச்சியில நல்ல நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.
பதிலளிநீக்குஓ பெண்கள் கூட அந்த அளவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்தது உண்டா...மறைய புகழுடன் மறைந்த அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை ஹிட் பாடல்கள். நல்ல நடிகர். அமர் ப்ரேம், ஆராதனா பாடல்கள் கேட்கக் கேட்க அலுக்காதவை.
பதிலளிநீக்கு69 வயது ஒரு வயதா.... ? அவரது ஆன்மா சாந்தியடையட்டும்....
உண்மைதான் .69 வயது ஒரு வயதா.
பதிலளிநீக்குதேவ் ஆஅநந்திற்குப் பிறகு அவரைவிட இன்னும் மனதக் கவர்ந்தவர்.ஆராதனாஅவின் மேரே சப்னோன் கி ரானி மன்சை அள்ளிவிடும்.
ஆனந்தில் வரும் ஜிந்தகி..என்று பலூன்களை பறக்கவிட்டபடிக் கடலோரம் நடக்கும் காட்சி.
அமிதாபும் அவரும் போட்டிபோட்டு நடித்த படம்.
அமர்ப்ரேமில் ஷர்மிளாவும் அவரும்
'சிங்காரி'' பாட்டுக்குப் ப்பிடிக்கும் அபிநயம்.
கூச் தோ லோக் கஹேங்கே.
கிஷோதாவும் இவரும் செய்த மாஜிக் என்றும் மறையாது.
கைவலிப்பதால் மேல எழுதவில்லை. நல்ல கலைஞரை இழந்தோம்.