வெள்ளி, 14 செப்டம்பர், 2012

எல் ஆர் ஈஸ்வரியும் கிரிக்கெட்டும் யூ டியூப் ஆங்கிலமும் - வெட்டி அரட்டை

           

சாதாரணமாகவே நல்ல விஷயங்கள் என் மண்டையில் அவ்வளவு சுலபத்தில் ஏறுவதில்லை.  அப்படியே ஏறினாலும் அங்கேயே நிலைத்து நிற்பதும் இல்லை. காலை உட்கார்ந்து உபாதான காரணம், ஸஹகாரி காரணம் நிமித்த காரணம் என்றெல்லாம் உருவேற்றிக் கொண்டிருந்தால் மனம் அதில் பதியவே இல்லை! மனோவும் எல் ஆர் ஈஸ்வரியும் விட்டால்தானே....  டிவியை அணைத்துத் தொலைத்திருக்க வேண்டும். ஜெயா டிவியில் மனதோடு மனோவில் இருவரும் உரையாடியதில் நினைவில் நின்றவை...

               

பட்டத்து ராணி பாட்டை எம் எஸ் வி இவருக்கு என்றே தெரிவு செய்து வைத்திருந்தாராம். ஸ்ரீதரோ அந்தப் பாடலை பி சுசீலாதான் பாட வேண்டும் என்று சொல்ல, வாதமாம். பி. சுசீலா பாடட்டும், ஆனால் அதற்கு வேறு டியூன் ரெடி செய்கிறேன் என்றாராம் எம் எஸ் வி. கடைசியில் ஈஸ்வரி பாடினாராம். ஹிந்தியில் இதை தர்த்தி என்ற பெயரில் எடுத்த போது இதே சீனில் பாட வேண்டிய லதா மங்கேஷ்கர் இந்த மாதிரி பாட முடியாது என்று சொன்னதையும், தமிழில் பாடியது யார் என்று கேட்டுக் கொண்டு சென்னை வந்தபோது சந்தித்ததையும் பெருமையாகச் சொன்னார். கீழ்ஸ்தாயியில் பாடிய காதோடுதான் நான் பேசுவேன் பாடலை, (அம்மம்மா கேளடி தோழி என்று இவர் பாடிய பாடலைக் கேட்டு விட்டு பாலச்சந்தர் கீழ் ஸ்தாயியில் பாடுவது போல இவருக்கு ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என்று பேசியே, அதனால் தரப் பட்ட பாடலாம் இது) பளிங்கினால் ஒரு மாளிகை பாடல, எல்லா மேடைகளிலும் இன்றும் பாடப் படும் துள்ளுவதோ இளமை பாடல, எலந்தப் பயம், மாரியம்மா பாடல்கள்  என்று எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு பாடலையும் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயம் வைத்திருந்தார்.     


=====================

            
நாம் இதுவரை பார்த்திராதவர்கள் தொலைபேசியில் பேசினால் குரலைக் கேட்கும்போது நம்மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்றும் இல்லையா? தோன்றும்தானே...? எனக்கும் தோன்றும். ஆனால் ஒருமுறை கூட கற்பனையில் தோன்றும் உருவமும், அவர்களை நேரில் சந்திக்கும்போது அவர்கள் இருக்கும் தோற்றமும் ஒத்துவந்ததே இல்லை! உங்கள் அனுபவம் எப்படியோ?             

=============================
               
சமீபத்தில் மூன்றாம் முறையும் ஸ்டம்ப் எகிறியதும் சச்சின் ஸ்டம்ப்களை அடிக்கப் போவது போல பேட்டை ஆட்டி வீட்டுச் சென்றார். வேறு யாராவது அபபடி செய்திருந்தால் அம்பயர் சொல்லி ஒழுங்கு நடவடிக்கைக் கூட எடுக்கப் பட்டிருக்கும்! ஏதோ சச்சின் என்பதால் கண்டு கொள்ளாமல் விட்டார்களோ என்னமோ.... முன்பு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 1950 களில் ஒரு பெயர் பெற்ற பேட்ஸ்மேன் (பெயர்தான் நினைவில்லை!) எல் பி டபிள்யூ என்று அவுட் கொடுக்கப் பட,  அது தவறான தீர்ப்பு என்று நினைத்த பேட்ஸ்மேன் கடுப்பானாராம். அம்பயரைய்த் தாண்டிச் செல்லும்போது "உங்கள் கையில் உள்ள குச்சி எங்கே" என்று கேட்டாராம். அம்பயர் புரியாமல் "இல்லையே... என்ன குச்சி" என்று குழம்ப, நாயை உள்ளே அழைத்து வர முடியாது, குச்சியாவது எடுத்து வந்திருக்கலாம்" என்று சொல்லி விட்டுப் போனாராம். அதாவது அம்பயர் கண் தெரியாதவர் என்று குறிப்பிடும் வகையில்!                   

===================
 
யூ டியூபில் வாசித்தது!



Elephant has come to peal ant's skin!



Mud pan hurt me My hand left that

Mind has got corrupted! It's touched my heart!
I found good and bad after everything had taken place!
God was watching half of the heart.
Animal dominated the balance of the heart.
The animal which dominated has got controlled.
Peaceful God stayed in full of my heart!
Shouting devils had run off. Temple bell's sound stayed in my heart!
There is bright light in the temple of charity God!
Heart has taken rest as Peace Peace Peace
Elephant has come to peal ant's skin!
Wisdom has come for me to peal my hearts skin and see
I got the heart which was there before I was born
I've got the peace that I'll get after death!
                     

19 கருத்துகள்:

  1. நில் கவனி காதலி படம் பார்க்கணும் போலத் தோணுதே?

    heart has taken rest as Peace Peace Peace.. ஆகா, சேக்ஸ்பியர் எழுதினதா?

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீதர் செய்த கிறுக்குத்தனங்களில் இன்னொன்றா?

    பதிலளிநீக்கு
  3. அவுட் கொடுத்ததற்கு எதிராக ஏதாவது செய்தால்தான் ஒழுங்கு நடவடிக்கை

    பதிலளிநீக்கு
  4. அதாவது அம்பயர் கண் தெரியாதவர் என்று குறிப்பிடும் வகையில்! /

    பார்த்துத்தான் பேசியிருக்கிறார் !!

    பதிலளிநீக்கு
  5. // உபாதான காரணம், ஸஹகாரி காரணம் நிமித்த காரணம்// என்ன புரிகிறது... மேற் கூறிய வார்த்தைகளை ஆங்கில அகராதிகளில் தேடினேன் விளக்கம் கிடக்கவில்லை...ஹா ஹா ஹா

    //உங்கள் அனுபவம் எப்படியோ? // உங்கள் எழுத்துக்கள் மூலம் உங்களையும் கற்பனை செய்து வைத்துள்ளேன்...விரைவில் உங்களை சந்தித்த பின் அந்த அனுபவத்தை சொல்கிறேன்...#எப்புடி

    // பெயர் பெற்ற பேட்ஸ்மேன் // சூப்பர்

    //யூ டியூபில் வாசித்தது!// இது என்ன புதுமையாகா உள்ளது.. ஒரு வேளை வீடியோவில் வாசிதீர்களோ

    பதிலளிநீக்கு
  6. அடாடா... என்னைப் பத்தி நீங்க என்ன கற்பனை செஞ்சு வெச்சிருக்கீங்களோ... தெரியலையே. நேர்ல சந்திக்கறப்ப சொல்லுங்க. எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள் இப்ப பாக்கும் போதும். கேக்கும் போதும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
  7. /// 1950 களில் ஒரு பெயர் பெற்ற பேட்ஸ்மேன் (பெயர்தான் நினைவில்லை!) எல் பி டபிள்யூ என்று அவுட் /// இந்தியர் தானா...?

    பதிலளிநீக்கு
  8. நானும் அந்தப் பேட்டியை கவனித்தேன். அந்த 'அம்மம்மா ' பாடல் மிகவும் இனிமையாக இருக்கும். என்னிடமும் உள்ள‌து. கண்ண‌தாசன் தயாரித்த ' கறுப்புப்பணம்' என்ற படப்பாடல் அது!

    சச்சின் மூன்று முறை அவுட் ஆனதும் இம்ரான்கான், இனியாவது சச்சின் தேசீய அணியிலிருந்து விலக வேன்டும் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். இனி இது போன்ற சர்ச்சைகள் தொடரும்!

    சுவாரஸ்யமான பதிவு!!

    பதிலளிநீக்கு
  9. எல் ஆர் பகிர்ந்தவை குறித்த பகிர்வு சுவாரஸ்யம்.

    /உங்கள் அனுபவம் எப்படியோ?/ அதை விடுங்கள். சீனு உங்களை நன்றாக மடக்கி இருக்கிறார்:))!

    பதிலளிநீக்கு
  10. //யூ டியூபில் வாசித்தது!
    Elephant has come to peal ant's skin!//
    http://www.youtube.com/watch?hl=en&v=LqH4N1BsxEU&gl=US
    :-)

    பதிலளிநீக்கு
  11. எல்.ஆர் ஈஸ்வரியின் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.என் அம்மா சொன்ன ஒரு ஞாபகம்.இலங்கை வானொலியில் பட்டத்து ராணிப் பாடலில் எத்தனை சவுக்கடிகள் என்றொரு போட்டி நிகழ்ச்சி நடந்ததாக....எனக்கும் மிகப் பிடித்தபாடல் இது.ஈஸ்வரி அவர்களின் இடத்திற்கு இன்றுவரை யாருமில்லையென்பது என் கணிப்பு !

    பதிலளிநீக்கு
  12. // பி. சுசீலா பாடட்டும், ஆனால் அதற்கு வேறு டியூன் ரெடி செய்கிறேன் என்றாராம் எம் எஸ் வி. கடைசியில் ஈஸ்வரி பாடினாராம்.//
    அதானே மெல்லிசை மன்னரோட speciality. டி.எம்.எஸ். மெல்லிசை மன்னரை பத்தி சொல்லும் போது, 'நான் எங்கப்பா பாடினேன், அவர்தான் என்னை பாட வெச்சாரு' அப்படின்னு நிறைய தடவ சொல்லி இருக்கார்.

    'அம்மம்மா கேளடி தோழி' ராத்திரி நேரத்துல கேட்டா எல்.ஆரோட குரலில் இருக்கும் போதை நம்பள அப்படியே மயக்கிடும். Beautiful song!

    பதிலளிநீக்கு
  13. தொலை பேசியில் மட்டுமே பழகிய மனிதர்களை நேரில் பார்க்க எப்படி இருப்பார்கள் என்று நானும் ஓரளவு கற்பனை செய்வதுண்டு. அதில் நிறைய, நிறைய
    சுவாரசியமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நான் முதல் வேலையே Receiptionist cum telephone operator வேலைதான். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அந்த வேலை. பிறகு accounts assistant ஆக இருந்த போதும் என்னுடைய முன் அனுபவம் காரணமாக பாதி நேரம் telephone operator வேலைதான் இருக்கும்.

    தொலை காட்சி தயாரிப்பதில் பிரபலாமாக இருந்த ஒரு கம்பெனியில்தான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது கம்பெனியின் சர்வீஸ் டிபார்ட்மென்டில் இருந்த முரளி என்பவருடன் ஒரு நாளைக்கு ஒரு பத்து முறையாவது பேச வேண்டி இருக்கும். அவருடைய குரல் மிகவும் தெளிவாக, இனிமையாக, பேசும் விதமே மிகவும் இயல்பாக நட்புடன் இருக்கும்.
    வேலைக்கு சேர்ந்து ஆறேழு மாதங்கள் ஆகி இருக்கும். ஒரு நாள் என்னுடைய cabin அருகே ஒருவர் வந்து 'ஹலோ எப்படி இருக்கீங்க என்றார்?' நான் 'யாரு இவரு' என்ற யோசனையுடன், உங்களுக்கு இங்க யாரை பாக்கணும், appointment இருக்கா என்றேன். அவர் நான் உங்களைதான் பாக்கணும், ஆனா appointment வாங்கலை என்றார். எனக்கு காலம்பற நேர பிஸி, டென்ஷன். வந்த செம கோவத்தை கண்ட்ரோல் பண்ணிண்டு, சாரி, நீங்க யாருன்னே எனக்கு தெரியாது,
    எதுக்காக உங்களுக்கு என்னை பாக்கனும்னு கேட்டேன். அதுக்கு அவரு என் பேரை சொல்லி, எனக்கு உங்களை நல்லா தெரியும்ங்க, அதான் appointment இல்லாமலே உங்களை நேராவே பாக்க வந்துட்டேன். அப்ப எனக்கு நிஜமாவே ரொம்ப டென்ஷன் ஆயிடுத்து. உடனே அவர் நான் தவிப்பதை பாத்து, ரிலாக்ஸ், ரிலாக்ஸ், எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆறீங்கன்னு சொல்லி சிரிச்சார். அப்படி அவர் நட்புடன் பேசிய விதம் எனக்கு அவர் யாரென்று கொஞ்சம் காட்டி கொடுத்தது. அதுக்கு மேல என்னை தொந்தரவு செய்யாமல் அவரே தான் யாரென்று சொல்லி விட்டார். பிறகு அவரே, என் குரலை வெச்சு உங்களால என்னை அடையாளம் காண முடியறதான்னு பாக்கதான் இப்படி கொஞ்ச நேரம் உங்களை படுத்தினேன்னு சொன்னார். எதுக்கு நான் இதை இவ்வளவு பெரிய கதையா சொல்றேன்னா, அந்த முரளிய பத்தி நான் ஓரளவு கற்பனை பண்ணித விடுங்க, அது கூட பரவாயில்லை. ஆனா அவர் குரலுக்கும் அவர் உருவத்துக்குமே துளி கூட சம்மந்தமே இல்லாம போனதுதான் எனக்கு பயங்கர ஆச்சரியம். அதுக்கு அப்பறம் கொஞ்ச நாள் எனக்கு குரலுக்கேத்த உருவத்தை
    கற்பனை பண்ணி பாக்கவே 'ஐய்யோன்னு' இருந்துது. :) ஆனாலும் அந்த விளையாட்டை நிறுத்த முடியல.

    இப்போ, ஸ்ரீராம் உங்க கூட போன்ல மட்டும்தான் பேசி இருக்கேன். இதுவரை உங்களை நேர சந்திச்சது இல்லை. உங்க குரலை வெச்சு நீங்க எப்படி இருப்பீங்கன்னு ஒரு கற்பனை இருக்கு. கூடிய சீக்கிரம் உங்களை நேர பாத்து, என் கற்பனை சரிதானான்னு பாத்துக்கறேன். :)

    பதிலளிநீக்கு

  14. //நாம் இதுவரை பார்த்திராதவர்கள் தொலைபேசியில் பேசினால் குரலைக் கேட்கும்போது நம்மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்றும் இல்லையா? தோன்றும்தானே...? எனக்கும் தோன்றும். ஆனால் ஒருமுறை கூட கற்பனையில் தோன்றும் உருவமும், அவர்களை நேரில் சந்திக்கும்போது அவர்கள் இருக்கும் தோற்றமும் ஒத்துவந்ததே இல்லை! உங்கள் அனுபவம் எப்படியோ? //

    ம்ம்ம்ம் உண்டு. அம்பி என்னோட போன்லே பேசறச்சே, அப்புறம் மெயில் கொடுக்கிறச்சே எல்லாம், தான் ரொம்ப உயரம், அதுக்கேத்த பெண் வேணும்னு சொல்லிட்டு இருப்பாரா! அப்போ அம்பிக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துட்டு இருந்தாங்க. சரினு, நானும் ஒரு gigantic figure கற்பனை பண்ணி வைச்சிருந்தேன். 2006--லே பெண்களூருக்கு வரோம்னு சொல்லிட்டுப் போனப்போ, பெண்களூரிலே இறங்கினதும் அவங்களைத் தேடறேன்; தேடறேன்; தேடிக் கொண்டே இருக்கேன். எங்களுக்கு எதிரே இரண்டு சிறு பையர்கள் நின்னுட்டுச் சுத்திச் சுத்திப் பார்த்துட்டு இருந்தாங்க. அவங்களும் யாரையோ எதிர்பார்த்து வந்திருக்காங்க போலனு நினைச்சோம். அப்புறமா ஏதோ ஒண்ணு மனசிலே இடிக்க, அவங்களைப் போய்க் கேட்டால் அதான் அம்பியும், தக்குடுவும்னு சொல்றாங்களே பார்ப்போம். நான் நினைச்ச உருவமே வேறே. இது என்ன சின்னப் பையர்! சே, சப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புனு ஆயிடுத்து எனக்கு. அதுக்கப்புறமாக் கற்பனையே வேண்டாம்னு வைச்சுட்டேன். :)))))

    பதிலளிநீக்கு
  15. அவங்க கற்பனையும் சுவாரசியம் தான். நாங்க அதிகம் வட இந்தியாவிலேயே இருந்ததாலே, அவங்க கற்பனை பண்ணி வைச்சிருந்தது ஒரு மாடர்ன் நவநாகரிகப் பெண்மணி. ஆனால் மடிசஞ்சி மாதிரியான காட்டன் புடைவையோடும், மேக்கப் இல்லாமலும், நான் போய் இறங்கினதும், அவங்களும் இது வேறே யாரோனு நினைச்சிருக்காங்க. :)))))))

    பதிலளிநீக்கு
  16. சட்டி சுட்டதடா கை விட்டதடா.. ஆங்கிலத்தில் படிக்கும் போது காமடி ஆகிவிட்டது..

    பதிலளிநீக்கு
  17. யூ-ட்யூப் ஆங்கில வரிகள், என்ன பாட்டாக இருக்கும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. அதிலும், ”Elephant has come to peal ant's skin” என்ற வரி ரொம்பவே ஈர்த்தது. “எறும்பு தோலை உரித்துப்பார்க்க (உரித்துப்பார்த்தால்) யானை வந்ததடா” என்பதன் “முழி”பெயர்ப்பு அது!! குட் ஜாப்!! :-)))))

    தொலைபேசி உருவகம் - ரொம்பவே டேஞ்சராக்கும். இதுல, பார்க்காம எபப்டி (ஃபேஸ்புக், சாட்டிங், ராங் கால்) காதலிக்கீறாங்கன்னு ஆச்சர்யம்தான்!!

    //என்றெல்லாம் உருவேற்றிக் கொண்டிருந்தால்//
    உருவேத்துறது - மனப்பாடம்தானே? எதும் பரீட்சையா?

    பதிலளிநீக்கு
  18. எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவரிகள் ஹுசைனம்மா.
    பட்டத்துராணியையும் பளிங்கினால் ஒரு மாளிகையையும் ரீங்கரிக்க யாராலும் செய்யமுடியாது.
    கற்பனை சுவாரஸ்யம் நேரில் கிடைக்காது:)

    பதிலளிநீக்கு
  19. ஓ சாட்டிசுட்டதடா பாட்டோட ஆங்கிலவரிகள்.:0
    ஏன் துரைக்கு நில் கவனி காதலி நினைவுக்கு வருகிறது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!