வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 09


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...


மூன்றுமே சுஜாதா பதில் சொன்ன கேள்விகள். 
நீங்களும் படித்திருக்கக் கூடும்! 
படித்திருந்தாலும் உங்கள் பதில்கள் எங்களுக்கு முக்கியம். 
வாசக நண்பர்களின் பதில்கள் வந்தவுடன் இந்தக் கேள்விகளுக்கான சுஜாதா பதில்கள் தனிப்பதிவில் தரப்படும்!!


1) விதியை நம்புகிறீர்களா?

2) கடவுளா.... விஞ்ஞானமா?


3) நம்பிக்கைத் துரோகியை மன்னிக்க முடியுமா?

                      

21 கருத்துகள்:

 1. 1) அப்படி என்றால் ....?

  2) இரண்டுமே இல்லை...!

  3) முதலில் ஏன் நம்ப வேண்டும்...?

  பதிலளிநீக்கு
 2. திண்டுக்கல் தனபாலன் சாமார்த்தியமாக சொல்லி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 3. நம்புகிறேன்.அவ்வப்போது பாராட்டும் அவ்வப்போது தள்ளிவிடும்
  2,கடவுள் தான்.விஞ்ஞானத்தைப் படைத்தார்.
  3,முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 4. 1.Yes

  2. There is no difference between the two. only a hairline gap. if you cross the vignanam you will end up into the hands of The Almighty. I am feeling this every minute.

  3. A million dollar question. Of course it hurts me because so many experiences, but I am habituated to live with them.

  பதிலளிநீக்கு
 5. அயம் சாரி யுவர் ஆனர்... எனக்கு கேள்வி கேக்க தான் தெரியும்...:)

  பதிலளிநீக்கு
 6. நான் பதில் சொன்னா எனக்கு ஏதாவது பரிசு அனுப்புவீங்களா?

  பதிலளிநீக்கு
 7. குரோம்பேட்டை குறும்பன்28 செப்டம்பர், 2012 அன்று 1:17 PM

  டி என் முரளிதரன் சாமார்த்தியமாக சொல்லி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 8. 1)விதியை நம்புகிறீர்களா?

  மனதை தேற்றிக்கொள்ள எப்போதாவது . . .

  2)கடவுளா.... விஞ்ஞானமா?

  பொதுவாய் விஞ்ஞானம், அவசரத்திற்கு கடவுள்.

  3)நம்பிக்கைத் துரோகியை மன்னிக்க முடியுமா?

  அவர்களை நினைத்தோ, மன்னித்தோ, நேரம் வீணாக்குவதில்லை, அந்த நேரத்தில் குப்பைக் கவிதை ஒன்றை எழுதினால் கூட புண்ணியம் என்று நினைப்பதால் . . . ஆனால் அவர்கள் கொடுத்த அனுபவத்தை மறப்பதில்லை!

  பதிலளிநீக்கு
 9. 1) பந்தை மேலே எறிந்தால் கீழே விழுகிறது. இயற்கை விதி! டிராபிக்கில் சிவப்பு கண்டால் நிற்கிறேன். போக்குவரத்து விதி! இதுபோல் விதிகளை நம்புகிறேன்.

  2) நிச்சயம் விஞ்ஞானம் தான்.

  3) மன்னிக்க என்னால இயலாது. மறந்து விடுவேன் நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 10. //உங்கள் பதில்கள் எங்களுக்கு முக்கியம்.//

  அப்ப எதுக்கு சுஜாதா?..

  பதிலளிநீக்கு
 11. குரோம்பேட்டை குறும்பன் சாமார்த்தியமாக சொல்லி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 12. //jaisankar jaganathan said...
  நான் பதில் சொன்னா எனக்கு ஏதாவது பரிசு அனுப்புவீங்களா?//
  முதல்ல பதிலை அனுப்புங்க.

  பதிலளிநீக்கு
 13. முதல் இரண்டிலும் நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டில் மருத்துவராக தொழில் செய்தால் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை!

  ஆள் இறந்துட்டா விதி முடிஞ்சு போச்சு!

  ஆள் காட்டாயம் இறந்து விடுவார் என்றால் கடவுள் மேலே பாரத்தை போடுங்கோ! பகவான் பார்த்துப்பன்.

  அகவே முதல் கட்டயம் தேவை!

  மூன்றாவதிற்கு, தவறான ஆள் மீது நம்பிக்கை வைத்தது நம் தவறு; அவரை சரியாக கணிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

  பதிலளிநீக்கு
 14. 1. நான் (fate and not law -@பாலகணேஷுக்காக) விதியை நம்பவில்லை என்றால் நீங்கள் அதுவும் விதிதான் என்றால் நான் எதை நம்புவது ?
  :-)

  பதிலளிநீக்கு
 15. 1.இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அதற்கு என்ன பொருள்?
  2.பொழுது போக இரண்டுமே தேவை
  3.ஒரே ஒரு நம்பிக்கைத் துரோகியைத் தவிர மற்ற ந.துரோகிகளை மன்னிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 16. 1)விதி என்று ஒன்றில்லை !

  2)விஞ்ஞானம்தான் கடவுளைத் தேடுகிறது !

  3)மன்னிக்கமாட்டேன் !

  பதிலளிநீக்கு
 17. முதல் கேள்வி

  கண்டிப்பா நம்பறேன்

  இரண்டாம் கேள்வி

  அவனின்றி "ஓரணுவும்" அசையாது

  மூன்றாம் கேள்வி

  மன்னிக்க நாம் யார் ??? அனைவரையும் சமமாக பாவிக்க பழகிக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கை துரோகியை மன்னித்துள்ளேன்

  பதிலளிநீக்கு
 18. 1) விதியை நம்புகிறீர்களா?

  நம்ம கைல என்று நம்புகிறேன்

  2) கடவுளா.... விஞ்ஞானமா?

  விஞ்ஞானத்தை அறிய அறிவு தந்த கடவுள்

  3) நம்பிக்கைத் துரோகியை மன்னிக்க முடியுமா?

  உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே.. மன்னிக்க முடியாமல் எடுத்த முடிவு..

  பதிலளிநீக்கு
 19. 1. விதியை நான் நம்புவதில்லை.

  2. கடவுள் நிரூபிக்கப்படவில்லை. நமக்கு உதவுவது விஞ்ஞானமே.

  3. அவன் செய்கிற துரோகத்தைப் பொருத்தது.

  பதிலளிநீக்கு
 20. 1) நியுட்டன் விதியையும், தலைவிதியையும் குறிக்கும் -விதி என்ற சொல் பொது சொல்லாகிவிட்டது. அதனால் நிருபிக்கப்பட்ட எந்த விதியையும் நம்பலாம்
  2) கடவுள் என்பவர் நமக்குள் இல்லாமல் எங்கோ இருந்து கொண்டு வேண்டுதலின் போது அருள் வழங்கும் அற்புதம் என்று நினைத்துக்கொண்டால் அல்லது விஞ்ஞானம் என்பது அகக்கருவிகளின்றி, புறக்கருவிகள் கொண்டு மேற்கத்திய அறிஞர்கள் சொல்வதுதான் விஞ்ஞானம் என்றால் இரண்டும் சரியல்ல என்பேன்.
  3) மன்னிக்க மனம் இருந்தால் மன்னிக்க முடியுமே. மனதின் அளவே அதைத் தீர்மானிக்கும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!