வியாழன், 27 செப்டம்பர், 2012

உள் பெட்டியிலிருந்து 09 12


தத்துபித்துவங்கள் 

காலிப் பர்ஸ் பல கோடி அனுபவப் பாடங்களைத் தரலாம். பணம் நிரம்பிய பர்சோ பல கோடி வகைகளில் உருப்படாமல் அடிக்கலாம்/கெடுக்கலாம்!
உங்களுக்குள்ளேயே நீங்கள் செய்யும் பயணம்தான் உங்களுக்கு ஆழ்ந்த அமைதியைத் தரும்! 
எல்லா முயற்சிகளும் வெற்றியாக மாறுவதில்லைதான்...ஆனால் வெற்றிக்கான அஸ்திவாரமாக/படிக்கட்டாக அமையலாம்.
ஆணின் மௌனம் பெண்ணின் இதயத்தை உடைக்கும். பெண்ணின் மௌனம் ஆணின் இதயத்தை அமைதியாக்கும்.
கடவுள் நம் கையிலிருந்து எதையாவது பறித்து விட்டாரோ என்று கவலைப் படுவதை விட, அடுத்து ஒரு சிறந்த பொருள் கிடைக்க கையைக் காலி செய்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தப்பாயிடுமோ என்று பயந்து ஒண்ணும் செய்யாமலிருப்பதை விட முயற்சி செய்து தப்பானாலும் கத்துக்கறது பெட்டருங்க....
தோல்வி இதயத்துக்கு போகக் கூடாது. வெற்றி தலைக்கு போகக் கூடாது.
=============================
 
சத்தியமா ஜோக்குதாங்க.... (ஏற்கெனவே படிச்சதுதான்...)

அவன் : "சார், என் மனைவியை ரெண்டு நாளாக் காணோம்!"

போஸ்ட் மாஸ்டர் : "மிஸ்டர்...இது போஸ்ட் ஆபீஸ்...நீங்கள் இதை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லணும்..."

அவன் : "ஐயோ சந்தோஷத்துல எங்க போறதுதுன்னே தெரியலையே..."

--------------------------

தத்துபித்துவத்துல சேர்த்திருக்கணுமோ...!

கோபம் என்பது அடுத்தவர் தவறுகளுக்கு நம்மைத் தண்டித்துக் கொள்வது!

===================================

புத்தம்புதுக் காலை...
ஒரு புதிய தொடக்கம்...
புதிய ஆசீர்வாதங்கள்...
புதிய நம்பிக்கைகள்...
கண் விழிக்கும்
ஒவ்வொரு நாளும் 
இந்தப் புதிய காலைகள்
கடவுளின் கொடைகள்
===================================

இந்த உலகம் இருக்கே... உலகம்...
போராடும்வரை வீண் முயற்சி என்பார்கள்...வெற்றி பெற்றவுடன் விடா முயற்சி என்பார்கள்...(ஃபி. கேஸ்ட்ரோ)

=================================
கடவுள் மீது சந்தேகம்...!!
 
இதயத்தில் மட்டுமல்ல நாக்கிலும் கடினம் இருக்கக் கூடாது என்பதை உணர்த்தத்தான் கடவுள் இவ்விரண்டு அவயங்களையும் எலும்பில்லாமல் படைத்தாரோ...

================================
நம்பிக்கைங்க... நம்பிக்கை!
 
ஒரு சின்னக் குருவி/பறவை கிளையின் மீது உட்காருவது கிளையின் மீதுள்ள நம்பிக்கையால் அல்ல, தன் சிறகின் மீதுள்ள நம்பிக்கையால்...

=============================

 படங்கள் : நன்றி இணையம்!

11 கருத்துகள்:

 1. அருமையான கருத்துக்கள் அடங்கிய உள்பெட்டி

  பதிலளிநீக்கு
 2. நானும் என் கையைக் காலியாக வைக்கப் பழகுகிறேன்.
  தத்துவங்கள் அனைத்துமே அருமை.

  பதிலளிநீக்கு
 3. தத்துவ்க்களும் படங்களும் மிகவும் அருமை.ஜோக் செம செம..

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமான தத்துவங்கள்...

  ஜோக்ஸ் கலக்கல்...

  பதிலளிநீக்கு
 5. அவன்: “என் மனைவியை ரெண்டு நாளாக் காணோம்!”

  போஸ்ட் மாஸ்டர்: ஹலோ! நான் யோக்கியமானவன். வேறயார்கிட்டயாவது கேளுங்க.. அப்படீன்னு போஸ்ட் மாஸ்டர் சொன்னா ஜோக்கு வேற மாதிரியா ஆகியிருக்கும்.
  :-))))))))

  பதிலளிநீக்கு
 6. எல்கே

  சீனு

  அமைதிசாரல்,

  மோகன் குமார்,

  வல்லிசிம்ஹன்,
  ஸாதிகா,
  திண்டுக்கல் தனபாலன்,
  RVS,

  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

  அப்பாதுரை... பார்டரில் பாஸ் செய்யவைத்ததற்கு நன்றி!! :))))

  பதிலளிநீக்கு
 7. தத்துவங்கள் அருமை.
  --

  /தத்துபித்துவத்துல சேர்த்திருக்கணுமோ...!/

  ஜோக்கைதானே:)?
  --

  ‘நம்பிக்கை’ அழகு!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!