சனி, 1 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 26/8/12 31/8/2012




எங்கள் B+ செய்திகள்! 
 
-விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
    
-கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
            
-தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
              
-நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.  
சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!


சென்ற வாரம் விட்டுப் போன இரண்டு செய்திகள்.

-ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர்-மேட்டூர் பிரிவில் மளிகைக் கடை நடத்தி வரும் முகம்மது அலி என்பவர் ஆறு மாதங்களுக்கு முன் தனது மளிகைக் கடை முன் வந்து நின்ற மனநிலை பாதித்த ஒருவருக்கு சோறிட, அவர் அங்கேயே தங்கியிருந்திருக்கிறார். அவர் ரம்ஜான் நோன்பு அன்று இறந்து கிடந்ததைப் பார்த்த முகம்மது அலி, ரம்ஜான் தொழுகைக்கு செல்லும் நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஆள் உயர மாலை வாங்கி அணிவித்து, முகம் மற்றும் உடலில் சந்தானம் மற்றும் மஞ்சள் பொடி தடவி குளிப்பாட்டி நல்லடக்கம் செய்து விட்டு பின்னர் தொழுகைக்கு புறப்பட்டச் சென்றாராம்.

 
================

-தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் வசிக்கும் அமுதவல்லி தன் உடன் பணியாற்றும் லூர்துமேரி என்பவருடன் (இருவரும் ஆசிரியைகள்) கடம்பங்குடி கிராமத்துக்கு மொபெட்டில் செல்லும்போது வழிப்பறித் திருடர்கள் வழிமறித்து செயினைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடர்களை, இவர்களது சத்தம் கேட்டு வயலில் வேளை செய்து கொண்டிருந்தவர்கள் விரட்ட, புதரில் அவர்கள் மறைந்து கொள்ள, புதருக்கு நெருப்பு மூட்டி, அவர்களை வெளிவரவைத்துப் பிடித்தனர் கிராம மக்கள். 

 
=======================

ஞாயிறு

-சமீபத்தில் இலங்கையில் நடந்த 12 வயதுக்குள்பட்டோர் ஆசிய செஸ் போட்டியில் பட்டம் வென்று திரும்பியுள்ளார். 19 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் ஒரு தோல்வி கூட பெறாமல் பட்டம் வென்று திரும்பியுள்ளார் வைஷாலி. "5 வயதில். அதாவது யுகேஜி படித்துக் கொண்டிருந்தபோது ஆரம்பித்த பயிற்சி. செஸ் பயிற்சியாளர் தியாகராஜன்தான் குரு. இன்று வரை அவரிடமே பயின்று வருகிறேன். இப்போதுதான் செஸ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது போல் தெரிகிறது. 7 வருடம் ஓடிவிட்டது. இப்போது வேலம்மாள் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நூற்றுக்கணக்கான போட்டிகளில் பங்கேற்றுவிட்டேன். ஏராளமான ரொக்கப் பரிசுகள், விளையாட்டுப் பொருள்களை பரிசாக பெற்றுள்ளேன். 5 முறை சைக்கிள்களை பரிசாக வென்றுள்ளேன். சென்னையில் இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்டிஏடி-ஆர்எம்கே 4-வது ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்ட்ர் செஸ் போட்டியில் சிறந்த தமிழக வீராங்கனை விருது வாங்கினேன்"
என்கிறார்.

=========================

-கன்னியாகுமரி மாவட்டம், பெத்தேல்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பெவின், 20. பணி நிமித்தமாக தன் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் உத்தரபிரதேச மாநிலம் செல்ல கடந்த 21ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்றார். பெவின், தனது கல்விச் சான்றிதழ் பையை ரயில் பெட்டி மேல் அடுக்கில் வைத்திருந்தார். விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தபோது, சான்றிதழ் வைத்திருந்த பை காணாமல் போனது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் விசாரித்து வந்தார்.

இந்நிலையில், அன்று இரவு கடலூரிலிருந்து விருத்தாசலம் வந்த (தடம் எண். 219) அரசு பஸ்சில் ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களுடன் கிடந்த பையை, முத்தாண்டிக்குப்பம் டிரைவர் செல்வமணி கண்டெடுத்தார். சான்றிதழில் இருந்த விலாசத்தை வைத்து கன்னியாகுமரிக்கு நேரில் சென்று மாணவர் பெவினிடம் சான்றிதழ் பையை ஒப்படைத்தார்.தனது சான்றிதழ் கிடைத்து விட்டதாக பெவின், விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார். அதையடுத்து ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் மற்றும் போலீசார், அரசு பஸ் டிரைவர் செல்வமணி
யை அழைத்து பாராட்டினர். பையை திருடிய மர்ம நபர், அதில் பணம் ஏதும் இல்லாததால் பஸ்சில் போட்டு விட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

===========================

டயட் என்றால், சில குறிப்பிட்ட பொருட்களை எப்போதுமே சாப்பிடாமல் இருப்பது என்பதாகும். அதாவது அதிக கலோரிகள் நிறைந்த உணவை தவிர்ப்பதே டயட். ஆனால், இதனை சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் பந்தாவாக இருக்குமேத் தவிர, பின்பற்றுவது அதிக சிரமம். நமக்குப் பிடித்த உணவுப் பொருளை சாப்பிடாமல் தவிர்ப்பது எளிதான காரியமா சொல்லுங்கள்.


 ஆம், இதே கவலைதான் எனக்கும் என்று சொல்பவர்களுக்காகவே புதிய டயட் முறை அறிமுகமாகியுள்ளது. அதாவது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயட்டில் இருப்பது.இந்த முறையில், வாரத்தில் ஒருநாள் தேவைப்படுவதை விட மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்வது, அடுத்த நாள் நல்ல உணவுகளை சாப்பிடுவது என்பதுதான்.


இதன் மூலம் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தலாம் என்றும், நீண்ட காலம் வாழலாம் என்றும் கூறப்படுவதால் தற்போதைய இளைஞர்களிடையே இது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

==============================

மும்பை :  ஆன்லைனில் ரயில் டிக்கட் முன்பதிவு செய்பவரா நீங்கள்?  அப்படியானால், அதில் நொந்துநூலான அனுபவம் உங்களுக்கு இருக்கும். இதில் உள்ள சிக்கலை போக்க புது திட்டத்தை, ஐஆர்சிடிசி அமைப்பு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் பெயர் ‘ரோலிங் டெபாசிட் ஸ்கீம்’ (ஆர்டிஎஸ்).

இதில் சேர்ந்து டெபாசிட் செய்தால் போதும்; ரயில் டிக்கட் புக்கிங் செய்யும் போது, வங்கி கேட்வேக்கு போக வேண்டாம். பாஸ்வேர்டு பதிவதில் தவறு செய்து மாட்டிக்கொள்ள வேண்டாம். ஆன்லைன் புக்கிங்கில் தாமதமாகி, வங்கி கணக்கில் இருந்து பணமும் ஐஆர்சிடிசி.க்கு மாறி, கடைசியில் டிக்கட் கிடைக்காமல் ‘டிரான்சாக்ஷன் பெயில்டு’ என்று வருவதும் இனி நடக்க வாய்ப்பில்லை. ஐஆர்சிடிசி வெப்சைட்டிலேயே எல்லாவற்றையும் முடித்து கொண்டு விடலாம். இந்த திட்டத்தின் அம்சங்கள்:


* ஐஆர்சிடிசி வெப்சைட்டில் போய் பதிவு செய்ய வேண்டும். 

* ஆரம்பத்தில் குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் பண்ண வேண்டும். 

* ரயில் டிக்கட் முன்பதிவு செய்யும் போது, வங்கி கேட்வேக்கு போகாமல், இதில்  இருந்தே பணத்தை  எடுத்து கொள்ளும். 

* ஒவ்வொரு புக்கிங்கின் போதும் பயன்படுத்த டிரான்சாக்ஷன் பாஸ்வேர்டு, தனி ‘பின்’ நம்பர் தரப்படும். 

* அதை பயன்படுத்தி டிக்கட் முன்பதிவு செய்ய வேண்டும். 

* டெபாசிட் பணம் குறைந்தால், உடனே ‘டாப் அப்’ செய்யும் வசதியும் உண்டு. 

  திட்டத்தின் பலன்கள்:
* டிக்கட் முன்பதிவு செய்யும் போது வங்கி கேட்வேக்கு போகவே வேண்டாம். 

* அதனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மிச்சம். 

* ஐஆர்சிடிசியில் இருந்தே பணத்தை  எடுத்து கொள்வதால் தாமதம் இன்றி முன்பதிவு செய்ய வழி  ஏற்படும். 

*  டிக்கட் கேன்சல் ஆனாலும், பெயில்டு என்று வந்தாலும், மறுநாளே ரீபண்ட் பணம் இந்த டிபாசிட்டில் சேர்ந்து விடும்.
(தினகரன்)

15 கருத்துகள்:

  1. அநியாயத்துக்கு ஈஸியாக இருக்கிறது.
    மிகவும் நல்ல செய்தி. இரயில் பயணம் இனி சுகமே
    டயட் பற்றிய செய்தியுமினிமை.திருடர்களை ந்நெருப்பு வைத்துக் கொளுத்தி வெளியே கொண்டுவந்தது அற்புதம் நினைத்தாலே இனிக்கும்
    பெவினுக்கு வாழ்வு திரும்பக் கொடுத்த பஸ் ட்ரைவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
    வே டு கோ வைஷாலி.:)

    பதிலளிநீக்கு
  2. முகம்மது அலிக்கு சல்யூட், அமுதவல்லிக்கும் வைஷாலிக்கும் கைதட்டு,செல்வமணிக்கு பாராட்டுகள்,டயட் -ஹை!,ரோலிங் டெபாஸிட் ஸ்கீம் - அப்பாடா!உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ரொலிங் டெபாசிட் - நல்ல ஸ்கீமா இருக்கே... பார்க்கிறேன்..

    இனிய செய்திகள். பாசிட்டிவ் செய்திகளுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. பாசிட்டிவ் செய்திகள் கொடுப்பதற்கு பாராட்டுக்கள்.
    ரயில்வே புக்கிங் பற்றிய தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    மாதம் தவறினாலும் நாங்கள் சென்னை வருவது தப்பாது. ஒவ்வொரு முறையும் டிக்கெட் ஆன்லைனில் வாங்குவதற்குள் நான் படும் பாடு.....
    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல செய்திகள்.

    பலே கிராம மக்கள்!

    வைஷாலிக்கு சபாஷ்!

    பையைத் திருப்பிக் கொடுத்த பெவின் மட்டுமல்ல அழைத்துப் பாராட்டிய இன்ஸ்பெக்டரும் மதிப்பில் உயருகிறார்கள்.

    ஐஆர்சிடிசி - மிக உபயோகமான தகவல்!

    பதிலளிநீக்கு
  6. எத்தனையோ செய்தி சொன்னீங்க ஆனாலும் கடைசியா
    ஒன்னு சொன்னீங்களே அது தான் டாப்பு...
    எப்பா எத்தன தடவை வாங்கி இருக்கேன் ஆப்பு

    பாசிடிவ் செய்திகள் தொடர்க சார்

    பதிலளிநீக்கு
  7. பாசிட்டிவ் செய்திகளைப் படிக்கும்போதேஒரு ஏக்கம்.....!

    டயட் விளக்கமும் அருமை.செஸ் குட்டீஸ்க்கு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  8. ஐஆர்சிடிசி பற்றி இப்போ ஒண்ணும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் ஆன்லைனில் நாங்க டிக்கெட் வாங்கிடுவோம். ஆனால் பாருங்க, எனக்கு எப்போவுமே அப்பர் பெர்த் தான் கொடுப்பாங்க. :P:P :P :P


    //ஆம், இதே கவலைதான் எனக்கும் என்று சொல்பவர்களுக்காகவே புதிய டயட் முறை அறிமுகமாகியுள்ளது. அதாவது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயட்டில் இருப்பது.இந்த முறையில், வாரத்தில் ஒருநாள் தேவைப்படுவதை விட மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்வது, அடுத்த நாள் நல்ல உணவுகளை சாப்பிடுவது என்பதுதான்.//

    அநேகமா இம்முறையைத் தான் கடைப்பிடிக்கிறேன். அப்படி ஒண்ணும் பலன் தெரியறதில்லை. :((((( வாரம் நான்கு நாட்கள் கொஞ்சமாய்ச் சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
  9. அது சரி, ஸ்ரீராம், ரங்கனை வந்து பார்க்கவே இல்லையே??? பிசி?????? :))))

    பதிலளிநீக்கு
  10. சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.
    “கோவை காந்திபுரம் பகுதியில் சாலையோரமாக 'முகமது அலி' என்பவர், நான்கு நாட்களாக உடல் நோய்வாய் பட்ட நிலையில் விழுந்து கிடந்தார். அவரை ஒரு இல்லத்தில் சேர்த்து, அவர் இறந்ததும் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர்” ‘ஈர நெஞ்சம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த ‘மகி’ என்பவர்.

    மழை பெய்யும் என்ற நம்பிக்கை தருபவர்கள்!!

    பதிலளிநீக்கு
  11. ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயட் ..இது நல்லாருக்கே

    பதிலளிநீக்கு
  12. ரோலிங் டெபாசிட் உங்க பணத்தை கொள்ளை போடற திட்டம் சாமி... அருகும் இந்த ஐ ஆர் டி சிக்கும் நோ ரிலேஷன்... அனேகமா இது இந்தியாவின் அடுத்த மிக பெரிய ஊழலாக வாய்ப்பு இருக்கு

    பதிலளிநீக்கு
  13. பாஸிடிவ் நியூஸ் கொடுத்ததற்கு பாராட்டுகக்ள்.தொடர்ந்து எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  14. அறிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!