Wednesday, September 19, 2012

'மெய்யாலுமே' எவ்வளவு சுவாரஸ்யங்கள்?"நம்ம ஊர் கர்நாடக இசையில் வயலினுக்கு எந்த அளவு முக்கியத்துவமோ, அதே முக்கியத்துவம் ஹிந்துஸ்தானி இசையில் சாரங்கிக்கு உண்டு. சாரங்கி என்றால் எந்தவிதமான இசையையும் இசைக்கும் தன்மை உடையது என்று பொருள். சாரங்கி என்கிற இசைக்கருவி நேபாளத்தில் மிகவும் பிரபலம். அங்கே மூங்கிலிலிருந்து தயாரிக்கப்படும் இந்த இசைக் கருவி, பஞ்சாபில் மரத்தில் செய்யப் படுகிறது. இரண்டடி நீளமும், அரையடி அகலமும் உள்ள சாரங்கி என்கிற இசைக்கருவியில் மூன்று அறைகள் உண்டு. கீழே இருக்கும் அறையில் வாய்ப் பாகம் செம்மறி ஆட்டின் தோலால் மூடப் பட்டிருக்கும். கீழே இருக்கும் பகுதியையும் மேலே இருக்கும் அறையையும் ஒட்டகம் அல்லது எருமைத் தோலாலான பட்டையான பாலம் போன்ற அமைப்பு இணைக்கிறது.  அதற்கு மேலே 35 அல்லது 37 தந்திகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தந்திகளில் குதிரை வால் முடியாலான வில்லின் மூலம் இசைக்கப்படுவதுதான் சாரங்கி என்கிற வாத்தியம். 

ராக்ஸ்டார் இந்திப்படத்தில் கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடும் 'தும்கோ' பாடலில் ஏ. ஆர்  
ரஹ்மான், தில்ஷத்கான் வாசித்த சாரங்கி இசையைப் பின்னணி சேர்த்திருப்பார்........ 

=========================

புத்த மதத்தைத் தழுவிய இரண்டு இந்தியப் பேரரசர்கள் அசோகரும், ஹர்ஷவர்த்தனரும். 
              
முதலாமவர் கிறிஸ்து பிறப்பதற்கு 304 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்றால், பின்னவர் 590 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர். முன்னவர் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைத் தொடர்ச்சியிலிருந்து குமரி முனை வரை ஆண்ட முதல் சக்கரவர்த்தி என்றால், இரண்டாமவரோ, குஜராத்த்திலிருந்து அஸ்ஸாம் வரை, இமயமலையிலிருந்து விந்தியமலை வரை ஆண்ட மாமன்னன். 
           
முதன்முதல் கடல்கடந்து போய் புத்தமதத்தைப் பரப்ப வழி கோலியவர் அசோகன். முதன்முதலில் கி பி 641 ல் சீனாவுடன் ராஜாங்க ரீதியாக உறவு வைத்துக் கொள்ள வழிகோலியவர் ஹர்ஷவர்த்தனர். இன்றும் பல மாநிலங்களில் இந்த இரண்டு மாமன்னர்களின் பராக்கிரமத்தின் மீதுள்ள மரியாதையால் இருவருடைய பெயரையும் இணைத்துப் பலர் தங்கள் குழந்தைகளுக்குப்பெயர் சூட்டுகிறார்கள்.........


==================
   
மேலே உள்ளது தினமணியில் புதன்தோறும் 'மெய்யாலுமா' என்ற தலைப்பில்  தமிழகத்தின் அரசியல் தகவல்களை மறைமுகமாகச் சொல்லும் பகுதியில் வந்ததன் பகிர்வு!  தகவல்களை என்று சொல்வதை விட ரகசியங்களை என்று சொல்லலாம்! சொல்ல வரும் விஷயம் என்னமோ வேறு. அதை ஆரம்பிக்கும்போது இந்த விவரங்கள் / இத்தனை விவரங்கள்! இதிலிருந்து பின்னர் வரப்போகும் கிசுகிசுவில் வரப்போகும் நபர் யார் என்று அறிந்து கொள்ளக் கொஞ்சம் ஏதுவாக இருக்கும் என்றாலும் இதைப் படிக்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறதே!   


இதில் வரும் தகவல்கள் மிகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து திரட்டப் படுபவை என்று தினமணி எடிட்டர் திரு கே வைத்தியநாதன் அவர்கள் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். தினமணியில் முதலில் இந்தப் பகுதி சனிக்கிழமைகளிலோ, அல்லது ஞாயிற்றுக் கிழமைகளிலோ வந்து கொண்டிருந்தது! இப்போது புதன் கிழமைகளில்.  சுவாரஸ்யமான பகுதி. 

இதே போன்று அந்தக் காலத்தில் கிசு கிசுக்கள் ஆரம்ப காலத்தில் குமுதத்தில்தான் வந்ததாக நினைவு. வேறெதிலும் வந்ததா தெரியவில்லை! கிசுகிசுவில் சொல்லப் பட்டிருக்கும் மறைமுகத் தகவல்களுக்கு சம்பந்தப் பட்டவர்கள் குமுதத்தின் அடுத்தடுத்த இதழ்களில் பதிலும் சொல்லியிருக்கிறார்கள்.

 


                                                         


1972 களில் குமுதத்தில் வந்த, பேராசிரியர் க. அன்பழகனின் கடிதம் ஒன்று கீழே! இது கிசுகிசுவில் சம்பந்தப் பட்டது இல்லையென்றாலும், 'சொன்னார்கள்' என்ற பகுதியில் வந்த இது சுவாரஸ்யம் கருதிக் கீழே பகிரப் படுகிறது!


"குற்றச்சாட்டுகளுக்கு பதில் தந்தால் இவ்வளவு பெரிய விளக்கமா என்று கேட்கிறார் எம் ஜி ஆர். உன் முட்டாள்தனமான மூளைக்கு உரைக்கும்படியாகவே பதிலைத் தந்திருக்கிறோம்!"

துகுறித்து சொல்லியிருக்கிறார் என்று சொல்லத் தேவையில்லை!! 

எதுவும் புதுசு இல்லை போல!  
                   

13 comments:

ஹுஸைனம்மா said...

வயசாகிறதாலே எனக்குத்தான் அறிவு கொஞ்சம் குறைஞ்சிடுச்சா இல்லை நீங்க இலக்கியவாதி ஆகிட்டு வறீங்களான்னு தெரியலை.

தினமணியில் வந்த சாரங்கி, அசோக-ஹர்ஷவர்த்தனர் செய்தியில் என்ன கிசுகிசு இருக்குதுன்னு ......

சாரங்கி தலைமைச் செயலாளர்; ரிடையராகப் போறார். இதுக்கும் அதுக்கும், அடுத்ததுக்கும் என்ன சம்பந்தம்னு மீ தலையப் பிச்சிங்...

பதிலச் சொல்லிடுங்க!! :-)))))))

மோகன் குமார் said...

அன்பழகன் இம்புட்டு சூடா எழுதிருக்காரு !!

RVS said...

அன்பழகன் கழக பாணியில் பதிலலித்திருக்கிறார்.

எங்கள் ப்ளாக் said...

ஹுஸைனம்மா...

பதிவில் சொல்ல வந்த விஷயம் சரியாகச் சொல்லப் படவில்லை என்று தோன்றுகிறது. கிசுகிசு அங்கு முக்கியமில்லை. அது சாரங்கி அவர்களைப் பற்றி சொல்ல வந்ததாக இருக்கலாம். அங்கு சாரங்கி என்ற வாத்தியத்தைப் பற்றி எவ்வளவு விவரங்கள் பாருங்கள்... அதே போல வேறு ஏதோ விஷயம் சொல்ல வரும்போது அசோகரையும் ஹர்ஷவர்தனரையும் பற்றி விவரங்கள்...! இந்த 'மெய்யாலுமா' பகுதியிகுள் இது போன்ற விவரங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன என்று சொல்ல வந்தேன். இப்போதும் முழுசாக சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி விட்டேனா... தெரியவில்லை! மற்றபடி இலக்கியமாவது ஒன்றாவது.... வெட்டி அரட்டைதான்!! :))

நன்றி மோகன் குமார், நன்றி RVS.,... மெய்யாலுமா.... நீங்கள்தானா?! இழுத்து வந்து விட்டதோ?!

ஹேமா (HVL) said...

ம்ம்ம் . . .
மெய்யாலுமா- புரிந்துக் கொள்ள சிரமமா இருக்கு.
எனக்கு general knowledge கம்மியா இருக்கா, இல்லை நான் அவ்வளவு அப்பாவியா?

ராமலக்ஷ்மி said...

உங்கள் விளக்கத்தினால் மெய்யாலுமே ‘கொஞ்சம்’ புரிந்து கொண்டேன்:).

RVS said...

ஸ்ரீராம்... மெய்யாலுமே நாந்தான்.... என்னுடைய எழுத்துப் பிறந்தகத்துக்கு வந்துவிட்டேன்... :-)

குட்டன் said...

இந்தக் கிசு கிசுவெல்லாம்,எனக்குப் புரிவதே இல்லை
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

ஹேமா said...

’மெய்யாலுமே’ ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படும் ஒரு வழக்குச் சொல்.உண்மையாவே என்று அதிசயத்துக் கேட்பதற்கொத்த சொல் !

சொன்னதெல்லாம் மெய்யாலுமோ.மெய்யா ரசித்தேன் !

சீனு said...

சாரங்கியின் படம் இணைத்திருக்கலாமே சார்... நமக்கு இசை அறிவு எல்லாம் கிடையாது.. கேட்பதோடு சரி மெய்யாலுமே சார்

மாதேவி said...

சுவாரஸ்யம்.

Geetha Sambasivam said...

meyyaluma? chennai tamil illaiyo! ellame interesting, kadaisi kisu kisuvukku unmaiyave puriyalai. :(

Geetha Sambasivam said...

to continue

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!