Sunday, March 31, 2013

ஞாயிறு 195 - முதிய இல்லம்

வாழ்ந்து களைத்த வீடு                                     உடைந்த ஓடுகள்
வயதான வீடு                                                      மேலும் கீழும் ...
                                                                                  நடுவே
                                                                                  நொடித்த வீடு


ஓடு போலத்                                                          வாழ்ந்த வீட்டின் 
தேயலாம்                                                              வீழ்ந்த ஓடுகள்
ஓடே தேயுமோ...


முன்பு...                                                                    நீளும் நிழல்
புதிய இல்லம்                                                        மூட வருகிறது
இப்போது                                                                 மிச்சமிருக்கும்
முதிய இல்லம்                                                     வெளிச்சத்தையும்..

20 comments:

கோமதி அரசு said...

வாழ்ந்து களைத்த வீடு
வயதான வீடு //

ஆம், வாழ்ந்து களைத்து தான் இருக்கிறது.

முன்பு
புதியைல்லம்
இப்போது
முதிய இல்லம்//

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

முன்பு... நீளும் நிழல்
புதிய இல்லம் மூட வருகிறது
இப்போது மிச்சமிருக்கும்
முதிய இல்லம் வெளிச்சத்தையும்..

காலம் செய்த கோலம் ...

sury Siva said...

என்னைப் எக்ஸ்..ரே ஃபோட்டோ எடுத்து போட்டிருக்கிறீர்களோ ?
அப்ஜக்ட் யுவர் ஆனர்.

சுப்பு தாத்தா.

sury Siva said...


//நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!! படிச்சுகிட்டே...இருங்க! //

இப்பதான் கவனிச்சேன். இந்தக் கிழவனை நைஸா உள்ளே கொண்டு வந்து வச்சு
ஊட்டுக்கு வாடகை ஐயாயிறம் பத்தாயிரம் அப்படின்னு கணக்கு போடறீகளோ என்னவோ
தெரியல்லையே !!

குடி தண்ணி வசதி, அப்படின்னா, கேணி எதுனாச்சும் பின் பக்கத்துலே இருக்குதா ?
கார்ப்பொரேசன் வாட்டர் வருதா ? கரென்ட் எப்பப்ப போகுது ? வருது.?
எல்லாத்தயும் விவரமா எழுதுங்க... வந்து பாத்தப்பறம் அட்வான்சு தாரேன்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
,

Geetha Sambasivam said...

போட்டிக்கு வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? :))))

middleclassmadhavi said...

Muthiya or illam -muthiyor illam??
Varigal poruththam.

Trainl pogumpodhu track oram immathiri veedugalaip paarthu ivai tham kathai sonnal eppadiirukkumnu ninaippadhundu!

Ramani S said...

வாழ்ந்து களைத்த வீடு
வயதான வீடு //

மனம் கவர்ந்த அருமையான வாசகம்
மனம் தொட்ட கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

rajalakshmi paramasivam said...

இந்த மாதிரி வீடுகளைப் பார்ப்பதே அரிதாகத்தான் இருக்கிறது.
வீடு நிறைய தேங்காய் இருக்கு
கண்டிப்பாக பத்தாயம் நிறைய நெல் இருக்கும்.மா, பலா கண்டிப்பாக உண்டு.

எனக்கு கூட இந்த வீட்டைப் பார்க்க வேண்டும் போல் இருக்கு.

அமைதிச்சாரல் said...

படத்துக்கேத்த அருமையான வாசகங்கள்..

ராமலக்ஷ்மி said...

PiT போட்டியில் கலந்து கொண்டிருந்த போதே எனை மிகவும் கவர்ந்த படம். கைவிடப் பட்ட வீடென்பதால் கேட்க ஆளில்லையெனக் குவிக்கப்பட்டிருக்கின்றன இளநீர் மட்டைகள். நல்ல லைட்டிங். வீட்டு வராந்தா சுவற்றில் பிரிந்த ஓடுகளின் வழியே சூரியன் போட்டிருக்கும் கோலத்தைப் பாருங்கள்! உங்கள் வரிகள் நெகிழ்வு.

வல்லிசிம்ஹன் said...

செப்பனிடக் கூடிய வீடுதான்.
ஓடுகளைத்தாங்கி நிற்கும் ஒன்றே சாட்சி.
சுப்பு அண்ணா, கீதா எல்லாரும் சேர்ந்து வீட்டைச் சரி பண்ணிக் குடிபோகலாமா. கற்பனையிலாவது!!!

s suresh said...

போட்டோக்கவிதை அருமை! என் பங்கிற்கு ஒன்று! ஆடை கலைந்ததும் அழகிழந்தது வீடு! பகிர்வுக்கு நன்றி!

ஸாதிகா said...

முதிய வீடு.முதிர்ந்த கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... (இரண்டும்)

ஹேமா (HVL) said...

படம் மனதை நெகிழச் செய்கிறது. கவிதையும் . .

மனோ சாமிநாதன் said...

முதிர்ந்த வீடு! புகைப்படத்தை விட, உங்களின் கவிதை மனதை கனக்கச் செய்கிறது!!

ஜீவி said...

முதிய இல்லங்களும் அவற்றின் சொந்தக்காரர்களின் பராமரிப்பும் கவனிப்பும் அற்று..

அப்பாதுரை said...

படமே கவிதை. நீளும் நிழல்.. உச்சம்.

Ranjani Narayanan said...

முதிய இல்லமாக இருந்தாலும் கம்பீரம் குலையாமல் நிற்கிறதே!

எத்தனை கதைகளைத் தன்னுள் இன்னும் உயிருடன் வைத்திருக்கிறதோ?

மாதேவி said...

களைத்தாலும் இன்னும் நிலைத்து நிற்பது ஆச்சரியம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!