வெள்ளி, 22 மார்ச், 2013

இப்படி எல்லாம் நடக்குமா? ஏகாம்பரம் ஜாக்கிரதை!

             
              
அமவுண்ட் என்ன? எங்கே, யார் கொண்டுபோய் கொடுக்கணும்? போலீசுக்குப் போகலாமா? எலெக்டிரானிக் சாமியாரிடம் சொல்லலாமா? என்று மனம் அவசரம் அவசரமாக, சாய்ஸ் இல்லாத வினாத்தாள் தயாரிக்கத் தொடங்கியது.  பரீட்சை எழுத வேண்டிய ஆளும் நாந்தான். 
             


கூகிள் ஏகாம்பரம் என்னிடம் ஸ்ரீராமின் நம்பர் கேட்டபொழுது நான் கொடுத்திருக்கக் கூடாது. லேட் திங்கிங். இப்போ என்ன செய்யலாம்? அப்படியே விட்டுவிடலாமா? (பல்லாவரம் பாழடைந்த பங்களா, இப்போ ஸ்ரீராம் இருக்கின்ற வீட்டைவிட நன்றாகத்தானே இருக்கிறது?) 
                 
இரு இரு - இப்போ தேவை கிளியர் திங்கிங். தியானம் பண்ணலாமா? ஐயோ ஏதோ தீப்பற்றி எரிந்தபோது யாரோ ஒருவன் வீணை வாசித்தானாமே? சீச்சீ அது வீணை இல்லேடா. ஆமாம் ரொம்ப முக்கியம். அவன் வீணை வாசிக்கட்டும் அல்லது முகர்சிங் வாசிக்கட்டும். இப்போ நீ என்ன செய்யப் போறே?  
               

அந்த சமயத்தில் அலைபேசியில், அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து  அழைப்பு. 
                  
"ஹலோ, குப்புசாமி ஹியர். "
               
"மாமா நான் ஸ்ரீராம் பேசறேன். "
                   
"ஹலோ ஸ்ரீராம்! எங்கே இருக்கே? எப்பிடி இருக்கே? உன்னுடைய மொபைல் எங்கே? பல்லாவரம் பங்களா சௌகரியமா இருக்கா? ஏதேனும் சாப்பிட்டியா?"  
               
"மாமா! என்ன ஆச்சு உங்களுக்கு?"  
                   
"எனக்கு ஒன்றும் ஆகலை! உன்னைக் கடத்திய ஏகாம்பரம் எவ்வளவு பணம் கேட்கிறார்? எங்கே கொண்டு வந்து கொடுக்கணுமாம்? பழைய நோட்டா, அல்லது புது நோட்டா? "
                    
"மாமா - ஒரேடியா குழம்பிப் போயிருக்கீங்க / குழப்புறீங்க ! என்னை யாரும் கடத்தவில்லை. "
                
"அப்போ பணம் வேண்டாமா?" 
               
"பணம் நீங்க கொடுத்தா வாங்கிக்கறேன். உங்களைப் போன்ற (கஞ்சக் கருமி?) ஆட்களிடம் பணம் வாங்கினால், நிறைய பெருகும் என்று சொல்வார்கள்! "
                 
"ஸ்ரீராம் மேலும் குழப்பாம, இன்று காலையிலிருந்து நடந்தவைகளைக் கூறு. "   
*********   ************** 
               
இன்று ஆடிட் என்பதால், வீட்டை விட்டு, சீக்கிரமாகவே கிளம்பி அலுவலகம் சென்றேன். இன்றைய ஆடிட்டுக்காக நேற்று வரை தினமும் அலுவலகத்தில் நானும், எனது நண்பன் ஸ்ரீகாந்தும் இரவு பகல் பாராமல் எல்லா கோப்புகளையும் தயார் செய்தோம்.அப்பொழுதெல்லாம் மானேஜரும் எங்க கூடவே இருந்தார்.  இன்று அலுவலகம் வந்ததும், தலைமை அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. ஆடிட்  அடுத்த வாரத்திற்கு ஒத்திப் போடப்பட்டது. இதைக் கேள்விப்பட்டவுடன், எங்கள் மூவருக்கும் ஒரே சந்தோஷம். மானேஜரிடம், நானும் ஸ்ரீகாந்தும் இன்று ஒருநாள் லீவு கேட்டோம். அலுவலகத்திற்காக ஆடிட்டிற்காக நாங்கள் நிறைய நேரம் ஏற்கெனவே செலவழித்திருந்ததால் அவர், 'ஒ கே என்ஜாய்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். 
          
அப்போதான் ஏர்பெல் ஏகாம்பரம் என்று ஒருவர் அலைபேசியில் அழைத்தார். அவர், உங்களிடம் ஏற்கெனவே பேசி, உங்களுடைய அலைபேசியை டூ ஜி யிலிருந்து த்ரீ ஜி யாக மாற்றிவிட்டதாகவும், இப்போ உங்க அலைபேசியில் எல்லாம் மும்மடங்கு வேகமாகவும், கிளியராகவும் வருவதாக நீங்க மகிழ்ச்சியாகத் தெரிவித்ததாகவும் கூறினார். நீங்கதான், அவருக்கு என்னுடைய அலைபேசி என்னைக் கொடுத்ததாகவும் கூறினார். 'அதே போல என்னுடைய அலைபேசியையும் டூ ஜி யிலிருந்து த்ரீ ஜியாக மாற்றலாமா?' என்று கேட்டார். 
             

நான் சந்தோஷ மூடில் இருந்ததாலும், நீங்க ரெகமண்ட் பண்ணின ஆள் என்பதாலும், சரி என்று ஒப்புக் கொண்டேன். அவர் உடனே, உங்க செல் ஃபோனை குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிடுங்கள். செல்ஃபோனுக்கு / செல்ஃ போனிலிருந்து அழைப்பு எதுவும் இரண்டு மணி நேரங்களுக்கு இல்லாமல் இருப்பது நல்லது என்றார். 

செல் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்ய விரல் வைத்த போது உங்களிடமிருந்து கால் வந்தது. நீங்க 'ஏகாம்பரம் போன் செய்தாரா, என்ன செய்யலாம்'என்று கேட்டவுடனேயே 'அவர் சொல்வதுபோலவே செய்துவிடப் போகின்றேன்' என்று சொல்லி, செல்ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். அதுமட்டும் இல்லை. சுவிட்ச் ஆப் செய்த செல்ஃபோனை அலுவலக மேஜை டிராயரிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். 
               

நானும் ஸ்ரீகாந்தும் சினிமா பார்க்க வந்தோம். இப்போ இண்டர்வல். வெளியே வந்ததும், இங்கே உள்ள கடையிலிருந்து, வீட்டுக்கு ஃபோன் செய்து, ஆடிட் ஒத்திப் போடப்பட்டது முதல், சினிமா பார்க்க வந்த விவரங்கள் வரையிலும் சொன்னேன். 
                

அப்போதான், கூகிள் ஏகாம்பரம் பற்றி உங்களிடம் பேசவேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டது தெரிந்தது. யாரு கூகிள் ஏகாம்பரம்? 
               
"அடக் கடவுளே! நடந்து கொண்டிருக்கும் அமளி துமளி எதுவுமே உனக்குத் தெரியாதா! சரி, எல்லா விவரமும் திருக்கடையூர் வரும்பொழுது சொல்கின்றேன். இப்போ நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உடனே மதுரைக்கு போன் செய்து, "ஏற்காடு ஏகாம்பரம் கேட்கின்ற பணம் எதுவும் கொடுக்காதீர்கள்; நான் பத்திரமாக இருக்கின்றேன்.' என்று சொல்லிவிடு"
          
(இனிமேல் இதில் தொடர ஏதாவது இருக்கின்றதா? ஏகாம்பரம் பற்றி துப்பறிய எ சா & கா சோ துப்பறியும் நிறுவனத்திடம் சொல்வோமா,  வேண்டாமா?) 
                          

7 கருத்துகள்:

  1. ஒழுங்கா முதல்லேயே எல்லாத்தையும் கேட்டிருந்திருக்கலாம். போனால் போகுது. ஏகாம்பரத்தை விட்டுடுங்க பாவம், பிழைச்சுப் போகட்டும். :)))))

    பதிலளிநீக்கு
  2. ஶ்ரீராம் அலுவலகத்துக்குத் தொலைபேசி இருந்தால் எல்லாக் குழப்பமும் தீர்ந்திருக்குமே. இனிமேலாவது அலுவலகத் தொலைபேசி எண்ணையும் வாங்கி வைச்சுக்குங்க. :))))

    பதிலளிநீக்கு
  3. ரோம் பற்றி எரியறச்சே நீரோ ஃபிடில் வாசிச்சது மறந்து போச்சா? இல்லாட்டி நீங்க அதைப் பார்க்கலையா? :)))))

    பதிலளிநீக்கு
  4. //பல்லாவரம் பாழடைந்த பங்களா, இப்போ ஸ்ரீராம் இருக்கின்ற வீட்டைவிட நன்றாகத்தானே இருக்கிறது?) // ஹா ஹா ஹா

    ஆனா இப்டி ஒரு சுத்தல்ல விட்டுடீங்களே

    பதிலளிநீக்கு
  5. ஹாஹா, பதிவு போணியே ஆகலை போலிருக்கே! :))))

    பதிலளிநீக்கு
  6. அட இப்படி எல்லாம் நடக்குதா? எச்சரிக்கையா இருக்க வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!