வியாழன், 14 மார்ச், 2013

இப்படி எல்லாம் நடக்குமா?

                      
ஹலோ? எங்கள் ப்ளாக் ஆசிரியர்? ஆமாம். 

இன்றைக்கு போஸ்ட் எதுவும் போடாதீர்கள். 

ஏன்? 

தமிழ் ப்ளாக் கூகிள் இந்திய ஒருங்கிணைப்பு அலுவலகத்திலிருந்து, ஏகாம்பரம் பேசுகின்றேன். உங்கள் ப்ளாக் போக்கு வரத்துகளை பதிவு பண்ணுகின்ற எங்கள் கணினி, உங்கள் ப்ளாக் நண்பர்கள் : வரவுகள் : தரவுகள்: இண்டெக்ஸ் தயார் செய்துள்ளது. அதில் உங்கள் (எங்கள்) ப்ளாக் முதல் இடம் பெற்றுள்ளது. உங்கள் ஜி+, முகநூல், யாகூ, பிகாசோ, இத்யாதி கணக்குகளில், உங்கள் அலைபேசி எண்ணை கண்டு பிடித்து, அதன் மூலமாக உங்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றேன். 
       
அதுக்கும் போஸ்ட் எழுதாமல் இருப்பதற்கும் என்ன அய்யா சம்பந்தம்? 

அது, நீங்க போஸ்ட் எழுதுகின்ற நாட்களில், வைரஸ் ஜுரம் போல அல்லது விலைவாசி போல கவுண்ட்டர் ஓடுகிறது. எங்களால், உங்களுக்கு அதாவது உங்கள் அல்லது எங்கள் ப்ளாக் வலைப் பதிவிற்கு செய்ய நினைக்கின்ற சில மேம்பாடுகளை கவுண்ட்டர் ஓடுகின்ற நேரங்களில் செய்ய முடியவில்லை. அதனால்தான் போஸ்ட் எதுவும் போடாமல் இருக்கச் சொல்கின்றேன். 

மேம்பாடு?  நான் கேட்டேனா? 
            
நீங்க கேட்கலை. நான் ஏற்கெனவே சொன்னபடி எங்கள் கணினி இண்டெக்ஸ் பார்த்து, அதில் முதன்மை இடம் வகிக்கின்ற வலைப் பதிவிற்கு, சில மேம்பாடுகள் மற்றும் சோதனை வடிவ அமைப்புகளை அமைத்து, உங்களிடமிருந்து அவைகளின் செயல்பாடு குறித்து அபிப்பிராயங்கள் கேட்டு, மற்ற பதிவாளர்களுக்கும் அந்த மேம்பாடுகளை அறிமுகப் படுத்துவோம்.

நீங்கள் ஒன்றும் படுத்த வேண்டாம். ஏற்கெனவே இரண்டு மூன்று நாட்கள் போஸ்ட் இல்லையே ஏன்? என்று ஸ்ரீராம் என்னை அலையிலும், தொலையிலும், வலையிலும், (முகநூல்)நிலையிலும், நச்சரித்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஏதேனும் போஸ்ட் போடலை என்றால், என்னை டீ-பிரமோட் செய்துவிடுவேன் என்கிறார். எனவே, நான் நிச்சயம் போஸ்ட் போடுவேன். 
              
சரி. அப்படியானா ஸ்ரீராம் நம்பர் கொடுங்க. நான் அவரிடம் பேசுகின்றேன். 

கொடுத்தேன். 

**************    ***************   ***********   

ஹல்லோ ஸ்ரீராம்? 

ஆமாம். 

ஏகாம்பரம் பேசினாரா? 

ஆமாம். 

என்ன செய்யலாம்? 

அவர் சொல்வது போலவே செய்து விடப் போகின்றேன். 

அலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. 

ஹல்லோ? ஹல்ல்ல்லோ? ????? கீங்க்க் கீங்க்க்..... மௌனம். 

மீண்டும் ஸ்ரீராமை அலைபேசியில் அழைத்தால், "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது." 
             
பிறகு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அதே முயற்சி, அதே போன் குரல், அதே வாசகம். இந்த நாடகம் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நடந்தது. 

அப்பொழுது, தொலைபேசியில் ஒரு அழைப்பு. 

இருங்க அது யார் என்ன என்று கேட்டுவிட்டு வந்து, பிறகு பதிவைத் தொடர்கின்றேன்.  
------------------
               
(பிறகு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் பதியுங்கள்) 
                        

15 கருத்துகள்:

 1. எப்படியோ இன்னைக்கு பதிவு ரெடியாயிடுச்சி... இருந்தாலும் உங்கள் பாசிடிவ் ஆட்டிடுயூட்-க்கு (தமிழில் சரியான வார்த்தை தெரியவில்லை) பெரிய வணக்கம்... சார்.

  பதிலளிநீக்கு
 2. இது எதுவுமே தெரியாத ஸ்ரீராம் திருக்கடையூரில் இருந்து அழைச்சிருப்பார். யாரோ விளையாடியது புரிஞ்சு அசடு வழிஞ்சிருப்பீங்க. ஹையா ஜாலி, ஜாலி, ஜாலி, ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா! :)))))))

  பதிலளிநீக்கு
 3. எனக்கு இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலை, நானாக வந்தேனாக்கும்.

  பதிலளிநீக்கு
 4. ஹா.ஹா. இன்னிக்கு பதிவு வெளியாயிடுத்து..

  பதிலளிநீக்கு
 5. ம்க்கும்.. பாத்து.. ஜாக்கிரதை... அப்புறம் மாட்டை விரட்டுறதா நினைச்சு, தயிர்ப்பானையை உடைச்ச கதையா ஆகிடாம!! :-)))

  (ஆமா... எனக்கு யாரும் ஃபோன் பண்ணலையே? நான் பி.ப. இல்லியோ? அப்படித்தானே சொன்னாங்க நம்ம பசங்க...!!) :-)))))))

  பதிலளிநீக்கு
 6. இன்றைக்கு போஸ்ட் எதுவும் போடாதீர்கள். //

  கடைசியில் ஏகம்பரம் சொன்னதை கேட்டு விட்டீர்கள் அவர் சொன்னது போல் பதிவு போடவில்லை.

  பதிலளிநீக்கு
 7. ஏகாம்பரம் , சொன்னது எல்லாம் கணவு? சரிதானே!

  பதிலளிநீக்கு
 8. //சரி. அப்படியானா ஸ்ரீராம் நம்பர் கொடுங்க. நான் அவரிடம் பேசுகின்றேன்.

  கொடுத்தேன். //

  அவங்க தான் கேட்டாங்கன்னா, நீங்க ஒடனே கொடுத்துடறதா?..

  இதே ஸ்ரீராம் நம்பரை நா எத்தனை தபா கேட்டிருப்பேன்?.. ஒரு தடவையானும் கொடுத்திருப்பீங் களா?.. அது ரகசியம்ன்னீங்களே!
  இப்போ என்ன ஆச்சு? ஹாக் ஆச்சு!
  பாருங்க, லேண்ட் லைன் பெல் அடிக்குது பாருங்க! ஸ்ரீராமாத்தான்
  இருக்கணும்.. ஆங்! ஸ்ரீராம் தான்!
  என்ன சொன்னாரு?.. போஸ்ட் போடச் சொல்லித்தானே?.. அப்போ, போட.. ஓ! போட்டாச்சு; அதான் இந்த போஸ்ட்ங்கறீங்களா..

  ஏன், ஸார்?.. முன்னாடியே 'இந்த போஸ்ட்டின் கதை'ன்னு இந்தப் பதிவுக்கு தலைப்புபோட்டிருந்தீங்கனா, இவ்வளவு தூரம் விலாவரியா நானும்
  பேசியிருக்க வேணாமுலே! என்னது, அதைச்சொல்ல எங்கேவிட்டீங்களாவா? சரியாப் போச்சு, போங்க!

  பதிலளிநீக்கு
 9. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ப்ளாக் எழுத? நாமதான் சூதானமா இருக்கணும் போல! ஹா! ஹா! ஹா!

  பதிலளிநீக்கு
 10. // என்று ஸ்ரீராம் என்னை அலையிலும், தொலையிலும், வலையிலும், (முகநூல்)நிலையிலும், நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.// ஹா ஹா ஹா

  //(பிறகு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் பதியுங்கள்) //

  தொடர்கிறேன்

  அதாவது நீங்கள் வந்து அந்த தொலைபேசியை எடுத்து ..........

  தொடரும் பொழுது ஸ்ரீராம் சாரிடம் தொலைபேசி வருகிறது... பேச செல்கிறேன், என்ன பேசி இருப்பேன் என்று பதில் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்....

  பதிலளிநீக்கு
 11. அட இப்படி கூட பதிவு எழுதலாம்... :)

  பிரபல பதிவர்னா இப்படித்தான் தொல்லைகள்!

  நல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை!

  பதிலளிநீக்கு
 12. எல்லோரது ஊகங்களுக்கும் பிறகு உங்கள் பதில் இருக்குமென நினைத்தேன்:)!?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!