வெள்ளி, 15 மார்ச், 2013

(எனக்கும் பிடித்த) P B ஸ்ரீனிவாஸ்

                                              
                               

சமீபத்தில் இசைவிழா நிகழ்ச்சிக்குச் சென்றபோது மயிலை ஸ்ரீ பார்த்தசாரதி சபாவில் டி. எம். கிருஷ்ணா கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த போது பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் வந்தார். மெல்ல நடந்து வந்தார். அவரை இரண்டு பேர் கைப் பிடித்து அழைத்து வந்தார்கள். கையில் ஏகப் பட்ட நோட்டு, நோட்டிஸ்கள், என்று வைத்திருந்தார். அவரை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்து விட்டுச் சென்றார்கள் அவர்கள். காதிலிருந்த காது கேட்கும் கருவியைச் சரி செய்து கொண்டு கச்சேரி கேட்டார் அவர். 

என்ன இனிமையான பாடல்களை நமக்குத் தந்தவர்...

மெகா டிவி என்று நினைவு.  சமீபத்தில் அங்கு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர், கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாணி ஜெயராம், ஏ. எல். ராகவன், டி. எம். எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ. எல். ராகவன் குரல் தவிர, வேறு யார் குரலும் பழைய மாதிரி இல்லை. 

                                         

பி. பி. ஸ்ரீநிவாஸ் என்றதும் என் நினைவுக்கு உடனடியாக வந்த சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோர் நினைவிலும் இன்னும் பல பாடல்கள் இருக்கும். பாசமலர், சுமைதாங்கி, பொன் ஒன்று கண்டேன் என்று நிறைய இருக்கும்... எனக்கும் அதேபோல பெரிய லிஸ்ட் உண்டு. எனினும் சில பாடல்களை மட்டும் இங்கு உங்களுடன் சேர்ந்து கேட்கிறேன்..


1) பூவரையும் பூங்கொடியே... கைகளால் வரையும் ஓவியமும், கண்களால் வரையும் ஓவியமும்! 

"வடிவங்கள் மறைந்து விடும்... வண்ணங்கள் மறையாதே..: உருவங்கள் மாறி விடும்... உள்ளங்கள் மாறாதே..."2) இளமை கொலுவிருக்கும்..... "பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா.. ஒரு பூவைக்கு மாலையிடும் நாள் வருமா.."

"அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ... ஒரு அணைப்பில் அடங்குவதும் அவள் அல்லவோ.."


"பெண் இயற்கையின் சீதனப் படைப்பல்லவா" // "எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?"
3) துள்ளித் திரிந்த பெண்ணொன்று... "வேலில் வடித்த விழியொன்று மூடிக் கொண்டதே(ன்) இன்று.."
 
"அன்னை தந்த சீதனமோ...என்னை வெல்லும் நாடகமோ.."4) நிலவுக்கு என்மேல் என்னடி கோபம... "சித்திரை நிலவே... அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு..."5) ஏதோ மனிதன் பிறந்து விட்டான...."பெண்ணே தெய்வம், அன்னை கடவுள், பெருமை என்று பேசுகிறான்.... பெண் பேதைகள் தீமைகள் என்றும் அவனே மறுநாள் ஏசுகிறான்..."

"...நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்....ஆறறிவுடனே, பேச்சும் பாட்டும், அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்... அந்த ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்..."


6) ஜாவ்ரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா... "அகப்பட்ட மனிதரைப் பிடிக்கிற வேலைக்கு ஆர்ப்பாட்டம் என்ன ராஜா...."
 
"பம்பம்பம்" என்பதும் அதைத் தொடரும் இசையும்...
"காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ? கழுதைக்குச் சுமக்கிற பொதி சொந்தமோ..."
 
 மிகத் தேடி எடுத்தேன்    வீடியோவை. கட் ஆகி கட் ஆகி வருவது சோகம்.7) நேற்று வரை நீ யாரோ நான் யாரோ... "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்"
 "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே" 


"நேரிலே பார்த்தால் என்ன. நிலவென்ன தேய்ந்தா போகும்? புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்?8) எங்கேயோ பார்த்த முகம்..."இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்...புதுநிலவோ... பூச்சரமோ... மதுமலரோ... மாணிக்கமோ..."

26 கருத்துகள்:

 1. தலைப்பே தப்பு! ‘எல்லோருக்கும் பிடித்த P.B.S.’ என்று வைத்திருக்கணும். எனக்குப் பிடித்த பாட்டுக்கள் அத்தனையையும் இங்கே பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி. ஒண்ணு கவனீச்சிங்களோ... பி.பி.எஸ். பாடினதுக்கு 98% ஜெமினிதான் ஹீரோவா நடிச்சிருக்காரு!

  பதிலளிநீக்கு
 2. மிகவும் இனிமையான பாடல்கள். என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் - ‘நிலவுக்கு என் மேல்’ தான்!

  பதிலளிநீக்கு
 3. அந்தக் குழைவு அந்த நெளிவு அந்த நளினம். இதயத்தைத் தொடும்.
  திரு பிபிஎஸும் நாங்களும் திருச்சியிலிருந்து திரும்பும் போது சந்த்தித்திருக்கிறோம்.

  ஒரு அப்பா தன் பெண்ணைப் பாடச் சொல்லி திரு பிபிஎஸ் சிடம் கேட்கும்படி வேண்டிக்கொண்டார்.
  அவரும் கேட்டுவிட்டு,பாராட்டும் புத்திமதியும் சொன்னார்.
  நிறைய நபர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்றே வருத்தமாக இருந்தது.
  கலைக்கோவில் பட முள்ளில் ரோஜா பாடலைக் கேளுங்கள்:)

  பதிலளிநீக்கு
 4. நிலவே என்னிடம் நெருங்காதே, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா ஆகிய இரு பாடல்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றது!

  பதிலளிநீக்கு
 5. மனதை தாலாட்டும்...

  அதுவும் மெல்லிய இரவில் கேட்கும் போது (நிலவு பாடல்களின் தொகுப்பு) அந்த சொர்க்கமே தனி...

  பதிலளிநீக்கு
 6. பாடகர் பி.பி ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடல்கள் எல்லாம் எனக்கும் மிகவும் பிடிக்கும். நாள் முழுவதும் அலுக்காமல் கேட்கலாம்.

  விருதுநகரில் பொருட்காட்சியில் இவர் பாடலை நேரே கேட்டு ரசித்து இருக்கிறேன்.

  இப்போதும் நிறைய தொலைகாட்சிகளில் பேட்டிக் கொடுக்கிறார் பாடுகிறார். குரல் ஒத்துழைக்கவில்லை.

  நீங்கள் சொன்னது போல் ஏ.எல் ராகவன் அவர்கள் மட்டும் தன் பழைய குரலில் பாடுகிறார்.

  இங்கு நீங்கள் பகிர்ந்து கொண்ட பாடல்கள் எல்லாம் அருமையான பாடல்கள்.
  உங்கள் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 7. பழைய பாடல்கள் என்றாலே தனி ஆர்வம் பிறந்துவிடும் இதில் இவர் பாடல்கள் தனி இடம் பிடித்தவை மனதில் இப்படியும் தொடர்ந்து பதிவிடுங்கள் கேட்டு மகிழ...

  பதிலளிநீக்கு
 8. அனைத்துமே அருமையான பாடல்கள். இருந்தாலும்,நேற்றுவரை யும், ஏதோ மனிதனையும் மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. கணேஷ்...உங்கள் ஆட்சேபணையைத் தொடர்ந்து தலைப்பில் சிறு மாறுதல் செய்துட்டோம். இப்போ ஓகேவா?

  நன்றி வெங்கட்.

  நன்றி வல்லிம்மா. அந்தப் படத்தில் சுசீலாம்மாவுடன் இவர் சேர்ந்து பாடிய 'நான் உன்னைச் சேர்ந்த செல்வம்' கூடப் பிடிக்கும்.

  நன்றி கோவை ஆவி.

  கே ஜி கௌதமன்..நிலவே என்னிடம் ரொம்பவே சோகம் + தன்னிரக்கப் பாடல்! எனவே என் தெரிவில் அதற்கு இரண்டாமிடம்!

  நன்றி DD. நம் ரசனைகள் ஒன்று.

  நன்றி மோகன் குமார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு அழைத்து வந்த பி பி எஸ் பாடல்களுக்கு நன்றி.

  நன்றி கோமதி அரசு மேடம்..

  நன்றி சசிகலா.

  நன்றி ராம்வி.

  பதிலளிநீக்கு
 10. /கையில் ஏகப் பட்ட நோட்டு, நோட்டிஸ்கள், என்று வைத்திருந்தார். /

  சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இப்படி அவரைச் சிலமுறை பார்த்திருக்கிறேன்.

  அருமையான தொகுப்பு.

  ’எனக்கும் பிடித்த’ என மாற்றியது நன்று:)!

  பதிலளிநீக்கு
 11. நன்றி ராமலக்ஷ்மி... யாராவது ஜாவ் ரே ஜாவ் பாட்டைக் கேட்டு ரசித்து கமெண்ட் சொல்வார்கள் என்று பார்க்கிறேன்.... ஊ....ஹூம்!

  பதிலளிநீக்கு
 12. ஜாவ் ரே ஜாவ் பாட்டு குமரி பெண் என்று நினைக்கிறேன். ரவிசந்திரன் குடுமி வைத்துக் கொண்டு கொட்டாகச்சி பிடில் வைத்துக் கொண்டு பாடுவார் முன்பு பின் கிராப் வைத்துக் கொண்டு ஜெயலலிதா வேண்டுகோள் படிஜெயலலிதவை காதலிப்பது போல் நடிக்க வருவார்.
  வருஷத்தை பாரு 66 என்ற ரயில் பாடல் வரும் . 1966லில் வந்த படம்.
  வேறு என்ன விஷேசம் எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு

 13. ஜாவ்ரே ஜாவ் பாடல் காலையில் நன்கு கேட்ட பாடல் இப்போது சரியாக கேட்க மாட்டேன் என்கிறது . ஏதாவது விஷேசம் இருக்கா என்று மறுமுறை கேட்டு பார்க்கலாம் என்றால் கேட்க மாட்டேன் என்கிறது.

  பதிலளிநீக்கு
 14. அருமையான பாடகர்! அருமையான பாடல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 15. வாவ்..P.B.Sபாடலை அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.எனக்கும் அவரது வீட்டிற்கு சென்று என் வலைப்பூவுக்காக அவரிடன் போய் பேட்டி ஒன்று எடுக்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.

  என் தளத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களைப்பற்றிய இடுகையுடன் அவரது தேன் பாடல்களுக்கான லின்கும் பகிர்ந்துள்ளேன்.இப்பொழுது உங்கள் பார்வைக்காக.

  பதிலளிநீக்கு
 16. //யாராவது ஜாவ் ரே ஜாவ் பாட்டைக் கேட்டு ரசித்து கமெண்ட் சொல்வார்கள் என்று பார்க்கிறேன்.... ஊ....ஹூம்!//

  அந்தப் படம் வெளிவந்த காலத்தில் தெருக்களை காவல் காத்த கூர்க்காக்களுக்கு இந்த பாட்டில்
  'இரவினில் தினம் தூங்கிவிட்டு' என்று வரும் வரிகள் பிடிக்கவில்லை. அதற்காக ஒரு போராட்டம் கூட நடந்தது. பாட்டைக் கேட்காமலே நினைவிலிருந்து எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. முள்ளில் ரோஜா பாட்டு defines பிபிஸ்ரீ. or vice versa.
  உங்கள் ரசனைக்கு ஒரு சபாஷ், வல்லிசிம்ஹன்!

  பதிலளிநீக்கு
 18. நன்றி ஸாதிகா... நீங்கள் கொடுத்துள்ள லிங்க் பார்க்கிறேன். ஏற்கெனவே பார்த்த நினைவு இருக்கிறது.

  ஆஹா ஜீவி சார்.... தோன்றாமல் போனதே இது எனக்கு... தலைப்பாக்கியிருப்பேனே....!

  நன்றி அப்பா ஜி...

  பதிலளிநீக்கு
 19. ஸ்ரீராம் ஜாவ்ரே ஜாவ் எங்கள் மகனார் பாடுவார். அதுவும் அவனுக்குப் பிடிக்காத மாமிகள் யாராவது வந்துவிட்டால்.....:)

  பதிலளிநீக்கு
 20. துரை ரொம்ப நன்றி. உங்கள் ப்ளாகிலும் இந்தப் பாடலைக் கேட்டேன்.
  மது அருந்தாமலே அந்தக் குரலில் பாடுவது அதுவும் அந்தக் கலைஞனின் குரல் ராகம் வழுவாமல் பாடுவதுஇயக்குனரின் முயற்சியாக இருக்க அதற்கு உயிர் கொடுத்தவர் பிபிஎஸ்.
  அதனாலேயே பிடிக்கும்.
  திருச்சி லோகநாதனனின் அடிக்கிற கைதான் அடிக்கும் போல.
  வாஸ்ட் டிஃபரன்ஸ்
  பட் இந்டென்ஷன் சேம்.:)

  பதிலளிநீக்கு
 21. எல்லாமே இனிமையான பாடல்கள்.

  எனக்கு மிகவும் பிடித்த பாடல் ”சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ”

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்
  இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கும், இங்கு தகவலுக்கும் மிக்க நன்றி ரூபன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!