சனி, 11 மே, 2013

பாசிட்டிவ் மே 5, 2013 முதல் மே 12, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   


- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   


- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) படம் சொல்லும் பாடம். வெட்டிக் காரணங்களுக்கு மரங்களை வெட்டுவோர் மத்தியில் வீடு கட்டியும் அங்குள்ள மரத்தைக் காப்பவர். (முகநூலிலிருந்து)

                           



2) படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார் பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர். 1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிகளை தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகிறாராம்...
                                                 


சொந்தமாக கிளினிக் இல்லை, மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ்டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை,
ஸ்கேன் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்களுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில் தான், இத்தகு எளிமையான, சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டு ரூபாய்தான்...

இவர் ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர், இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத்துவர் திரு. சந்திரவதனனுக்கு பெருமையுடன் ஒரு சல்யூட் அடிப்போம்...!


 

 

13 கருத்துகள்:

  1. டாக்டர் சந்திரவதனன் கோடியில் ஒருவர்தான்.
    நன்றாக இருக்க வேண்டும்.
    மரத்தை வெட்டமல் அதைவைத்தே வீடுகட்டும் குடிசைகளைக் கூடப் பார்த்திருக்கிறேம். அவர்களுக்கு மரமே தாய்.
    மிக நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  2. சென்னை ஆதம்பாக்கத்திலுள்ள எங்கள் உறவினர் வீட்டிலும் தென்னை மரத்துக்காக அதை வெட்டாமல் இம்மாதிரி அமைப்பில் மாடி கட்டி இருந்தார்கள். :))) புதுத்தெருனு நினைக்கிறேன். இப்போப் போய்ப் பல வருடங்கள் ஆகின்றன. :))))

    பதிலளிநீக்கு
  3. இப்போப் போய்ப் பல வருடங்கள் ஆகின்றன. :))))//

    ஹிஹிஹி, நான் அங்கே இப்போ சமீபத்திலே போய்ப் பல வருடங்கள் ஆகின்றன என்று வந்திருக்கணும், பின்னூட்டம் கொடுக்கிறச்சே மின் தடை! :))) அவசரத்தில் கவனிக்கலை. :))))அர்த்தம் மாறிப் போச்சு.

    பதிலளிநீக்கு
  4. மரத்தைக்காப்பவருக்கும் ,

    இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத்துவர் திரு. சந்திரவதனனுக்கு பெருமையுடன் ஒரு சல்யூட் அடிப்போம்...!

    பதிலளிநீக்கு
  5. மரத்தை காப்பது நல்ல பண்பு அவரை வாழ்த்துவோம்.
    டாகடர் சந்தரவதனன் சேவை மகத்தானது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கத்துக்குரியவர் மருத்துவர்.

    மரத்தைப் பாதுகாத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மருத்துவருக்கு சல்யூட் அடிக்க மறந்துட்டேனே! சென்னையிலே கூட ஒரு ரூபாய் ஆஸ்பத்திரினு மயிலாப்பூரில் இருந்தது. என்னோட பெரியப்பா அங்கே தான் வைத்தியம் பார்த்துப்பார். அதுவும் திருவல்லிக்கேணியிலே இருந்து நடந்தே வந்து!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  8. மருத்துவர் திரு. சந்திரவதனனுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    + செய்திகள் ஏன் குறைவு...?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா11 மே, 2013 அன்று PM 5:06

    மனிதருள் மாணிக்கம்..

    பதிலளிநீக்கு
  10. பல வீடுகளில் இதைபோல மரங்களை பாதுகாக்கிறார்கள்.
    மருத்துவர் திரு சந்திரவதனனுக்கு அவரது அரிய சேவைக்கு பாராட்டுக்கள். இரண்டே செய்திகள் ஆனாலும் பாசிடிவ் அலை மோதும் செய்திகள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. பல வீடுகளில் இதைபோல மரங்களை பாதுகாக்கிறார்கள்.
    மருத்துவர் திரு சந்திரவதனனுக்கு அவரது அரிய சேவைக்கு பாராட்டுக்கள். இரண்டே செய்திகள் ஆனாலும் பாசிடிவ் அலை மோதும் செய்திகள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. எங்கே ஞாயிறு படம் இன்னும் வரலையா, எனக்கு வரலையா????????????????????????????????????

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!