புதன், 19 ஜூன், 2013

முதியோர் கொடுமை, மகேந்திர பர்வதம், கல்யாணப் பெண்களின் கண்டிஷன்கள் - வெட்டி அரட்டை


                                                               

செய்தித்தாள்கள் 'ஹெல்பேஜ் இந்தியா' என்கிற தன்னார்வத் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கின்றன.
               
தற்போது இந்தியாவில் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை 10 கோடியாம். இந்திய அளவில் எடுத்த கணக்கெடுப்பில் முதியவர்களைத் துன்புறுத்துவதில் மருமகள்களுக்கு முதலிடமாம்!  39 சதவிகிதம்.  இரண்டாமிடத்தில் மகன்கள். பெரிய வித்தியாசமில்லை. 38 சதவிகிதம்! நாடு முழுவதுமான கணக்கெடுப்பில் 23 சதவிகித முதியவர்கள் துன்புறுத்தப் படுகின்றனராம்.


                                                                  


இந்த வகையில், தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவது நம்ம மதுரையாம்! 63 சதவிகிதம் முதியவர்கள் இங்கு உறவுகளால் துன்புறுத்தப் படுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களாம். அடுத்த இடம் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்! 60 சதவிகிதம்.

                                                         


பெருநகரங்களில் (அப்பாதுரைக்குப் பிடித்த) ஹைதராபாத் முதலிடம் பெறுகிறது.

இப்போதெல்லாம் மாமனார், மாமியார் கொடுமை ரொம்ப, ரொம்பக் குறைந்து விட்டதோ!


======================================================

இந்தச் செய்தி தினமணியில் படித்தேன். மற்ற செய்தித் தாள்களில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை முன்னரேயும் வந்திருக்கலாம்.
                                     


கம்போடியாவில் 1,200 ஆண்டுகள் பழமையான 'மகேந்திர பர்வதம் நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம்.


லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளை இயக்குனர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டதாம். இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப் பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அன்கோவார்ட் அருகே 40 கி.மீ தொலைவில் உள்ள நாம்குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர் அங்கு புதைக்கப் பட்ட கன்னி வெடிகள், காட்டாறு, சதுப்பு நிலங்கள் காரணமாக முழு அளவிலான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத நிலையில் அந்த மலை மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிட்டார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, நாம்குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டு பிடித்தனர்

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் கி பி 802 இல் அன்கோவார் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது.


ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், "தொன்மையான நூல்களின்படி, புகழ்பெற்ற வீரனும் மன்னனுமான இரண்டாம் ஜெவர்மமனுக்கு மலை மீது அமைந்த தலைநர் இருந்ததாகத் தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதம். இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும் கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்" என்றாராம்.  "இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு, மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று அபிப்ராயப்படுகின்றனர்.

இந்த நகரில் இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாம். இது தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப் பட உள்ளனவாம்.


(கஷ்டப்பட்டு சுருக்கி சுருக்கி டைப் அடித்தபின் பார்த்தால் முகநூலில் முழுவதும் படத்துடன் வந்திருக்கிறது!)


=======================================================


                    

ரூபாய் மதிப்பு சரிவால் கணினி வகைகளும் அதனைச் சார்ந்த பொருட்களும், அலைபேசி வகைகளும் இந்த மாத இறுதியில் 10 சதவிகித அளவு விலையேற உள்ளதாம். இவற்றை வாங்கும் எண்ணமுள்ளவர்கள் அதற்குள் வாங்கி விடுங்கள் என்கிறது தினகரன் செய்தி ஒன்று!
 
=============================================

                              

விகடன், கல்கி இரு பத்திரிகைகளிலும் மாப்பிள்ளைப் பையன்கள் கல்யாணச்சந்தையில் பெண் கிடைக்காமல் அல்லாடுவதைக் கட்டுரையாக்கியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் (மணப்) பெண்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறதாம், பெரிதாக இருக்கிறதாம். மாப்பிள்ளையின் பெற்றோர்கள் கூட வசிக்கக் கூடாது, வேண்டுமானால் குழந்தை பிறந்தபிறகு உதவிக்கு வேண்டும் நேரத்தில் வரலாம், மாப்பிள்ளைக்கு சொந்த வீடு, பேங்க்கில் குறிப்பிடத்தக்க அளவு பேலன்ஸ், வெளிநாடு போகும் வாய்ப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக மேட்ரிமோனியல் நடத்துபவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமான பெண்களின் ரேஷியோவும் குறைவாகத்தான் இருக்கிறதாம். 

பாவம் பையன்கள்!!17 கருத்துகள்:

 1. //(கஷ்டப்பட்டு சுருக்கி சுருக்கி டைப் அடித்தபின் பார்த்தால் முகநூலில் முழுவதும் படத்துடன் வந்திருக்கிறது!) //
  இப்படித்தான் சில சமயம் நடந்து விடுகிறது,

  இனிமே பெண்கள் ஆட்சிதான். வரதட்சனை கொடுத்துத்தான் பெண்ணை மணம் செய்து கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. முன்பு கொடுத்த கள்ளிப் பால் இப்போது தன் வேலையை காண்பிக்கிறது...

  டைப் செய்வதற்கு முன், முக்கியமான வரியை இணையத்தில் தேடினால் வேலை சுலபம்...

  பல செய்திகளுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 3. முன்பு கொடுத்த கள்ளிப் பால் இப்போது தன் வேலையை காண்பிக்கிறது...

  டைப் செய்வதற்கு முன், முக்கியமான வரியை இணையத்தில் தேடினால் வேலை சுலபம்...

  பல செய்திகளுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 4. எல்லாச் செய்திகளுமே படித்தவையே. மகேந்திர பர்வதம் குறித்து தினமலர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வந்திருந்தது. கடைசிச் செய்தியும் படித்தேன்.

  மாப்பிள்ளைக்கு அம்மா, அப்பா இல்லை எனில் பெண்ணும், பெண்ணின் பெற்றோரும் 5 நக்ஷத்திர அந்தஸ்து அந்தப் பிள்ளைக்குத் தருகின்றனர். பென்ஷன் வாங்கிக் கொண்டு தனியாக வசித்தால் 4 நக்ஷத்திர அந்தஸ்து. கூடவே வசித்தால் பென்ஷன் இருந்தால் 3 நக்ஷத்திரம், மற்றவைகளை அவர்கள் திரும்பியே பார்ப்பதில்லை.

  இதே பெற்றோருக்குப் பெண்ணைத் தவிர பிள்ளையும் இருந்து அந்தப்பிள்ளைக்குப் பார்க்கும் பெண்ணும் இதே போல் கண்டிஷன் போட்டால் என்ன சொல்வாங்கனு தெரிஞ்சுக்க ஆவல்.

  சமீபத்தில் என் சொந்தக்காரப் பெண் திருமணம் செய்து கொண்ட போது போட்ட கண்டிஷன் நாத்தனார் இருக்கக் கூடாது என. அவளோட அண்ணாவுக்குத் திருமணம்னு பார்க்க ஆரம்பிக்கையில் இதே கண்டிஷன்களே பெண் வீட்டாரிடமிருந்து வர, இவங்க கொதிச்சுப் போனாங்க. நம்ம பெண்ணும் இப்படித் தானே சொன்னானு நினைக்கக் கூட இல்லை. :(((((( இன்னும் என்ன என்ன பார்க்கப் போகிறோமோ! :(((((

  பதிலளிநீக்கு
 5. //இப்போதெல்லாம் (மணப்) பெண்களின் எதிர்பார்ப்பு அதிகமாக//

  யானைக்கொரு காலம் வந்தா,
  பூனைக்குமொரு காலம்!!

  தன்வினை தன்னைச் சுடும்.

  பிறர்க்கின்னா முற்பகல்.....

  வினை விதைத்தவன் வினை...
  திணை விதைத்தவன்...
  ________________________

  அப்படின்னெல்லாம் ஒரு பெண்ணாக, குரூரச் சிரிப்பு சிரிக்கணும்னு ஆசையா இருந்தாலும், ரெண்டு பையங்களுக்கு அம்மாவா பயம் வருது. இப்பவே மகள்கள் வச்சிருக்க சொந்தக்காரங்ககிட்ட இருக்க பரிசம் போட்டுக்கலாமான்னு தோணுது... அவ்வ்வ்வ்...

  :-)))))))))))))

  Jokes apart, இன்னிக்கு சமூகத்தில் எல்லாமே முன்பு நடந்தவைகளின் விளைவுகள்தானே! ஒருகாலத்தில் வேலைக்காரர்களை மதிக்காததன் விளைவு, இப்போ பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் வேலைக்கு யாரும் வரமாட்டேங்கிறாங்க. அப்போ மாமியார்கள் கொடுமைகள் செய்தார்கள், இப்போ மருமகள்களின் turn.

  என்ன ஒண்ணு, பாவம் ஓரிடம் பழி ஓரிடமா, செஞ்சவங்க போய்ட்டாங்க; இருக்கவங்க படுறோம்!! :-(((((

  பதிலளிநீக்கு
 6. //தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவது நம்ம மதுரையாம்!//

  :-((((((

  பதிலளிநீக்கு
 7. முதியோர்களின் நிலை, மணப்பெண்களின் எதிர்பார்ப்பு ஆகியவை திடுக்கிட வைக்கின்றன....:((


  பதிலளிநீக்கு
 8. மகேந்திர பர்வதம் குறித்து முகநூலில் படித்தேன்! திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. பெண்கள் போடும் கண்டீசன்களும் அதிகமாக உள்ளது. சுவையான பகிர்வு!

  பதிலளிநீக்கு


 9. // இவற்றை வாங்கும் எண்ணமுள்ளவர்கள் // நல்லவேளை வாங்கிவிட்டேன்

  // மாப்பிள்ளையின் பெற்றோர்கள் கூட வசிக்கக் கூடாது, வேண்டுமானால் குழந்தை பிறந்தபிறகு உதவிக்கு வேண்டும் நேரத்தில் வரலாம், மாப்பிள்ளைக்கு சொந்த வீடு, பேங்க்கில் குறிப்பிடத்தக்க அளவு பேலன்ஸ், வெளிநாடு போகும் வாய்ப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக மேட்ரிமோனியல் நடத்துபவர்கள் கூறியிருக்கிறார்கள். //

  FACTU FACTU FACTU .... சீனு உன் நிலமைய நினைச்சா கொஞ்சம் பாவமா இருக்கு டா... !

  பதிலளிநீக்கு
 10. முதல் செய்தி வருத்தம் தருகிறது.

  மகேந்திர பர்வதம் சுவாரஸ்யம்.

  கல்கியில் கண்டிஷன்கள் வாசித்தேன் நானும்.

  பதிலளிநீக்கு
 11. முதியோர் நிலைமை பரிதாபம் தான்.

  பெண்கள் போடும் கண்டிஷன்கள் படித்தேன். ஹப்பா!என் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகிவிட்டது!


  தனபாலனின் பதில் யோசிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. (கஷ்டப்பட்டு சுருக்கி சுருக்கி டைப் அடித்தபின் பார்த்தால் முகநூலில் முழுவதும் படத்துடன் வந்திருக்கிறது!)//
  இருந்தாலும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 13. இந்தியாவெங்குமா நகரங்களில் மட்டுமா இந்த நிலை? இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? 

  பதிலளிநீக்கு
 14. //The city of Madurai in Tamil Nadu, and Kanpur in Uttar Pradesh recorded the highest level of abuse against elders and the main perpetrators of the abuse were daughters. Among the metropolitan cities, Hyderabad recorded the highest form of such abuse with daughters–in–law being the main perpetrators.//
  ஹெல்பேஜ் தந்த செய்தியை தந்து இருக்கிறேன்.

  மதுரையில் முதியோரை கொடுமை படுத்துவது மகள்கள். மருமகள்கள் அல்ல.

  இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

  நமது நாட்டில் குடும்ப அமைப்பு 1950 முதல் பார்த்தோமானால், குறிப்பிடத்தக்கவாறு கடந்த 20 ஆண்டுகளாக, கூட்டு குடும்பம் என்ற நிலையைக் கடந்து வெகு தூரம் சென்று விட்டது.

  கூட்டு குடும்பத்தினை வருகிற மருமகள் மட்டு மல்ல, பெற்ற பையனே விரும்புவது இல்லை. முதிய வயதில் பொருளாதார நிலையில் உதவி செய்யும் மகனோ மகளோ இருந்தால் அது அதிருஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.

  சில குடும்பங்களில், இன்னமும், வருகின்ற பெண் தன சொல்லை கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று பையனைப் பெற்ற அம்மா மட்டும் அல்ல அப்பாவுமே நினைக்கிறார்கள்.

  அண்மையில் என் வீட்டுக்கு சோதிடம் பார்க்க வந்த ஒரு தந்தை தன மருமகளைப் பற்றி புகார் சொல்லியது மட்டும் விந்தையாக இல்லை, அவரது புகாரின் அடிப்படையே வேதனையாக இருந்தது.

  வயதானோர் மனம் துன்புராதவாறு மருமகள் நடக்கவேண்டும் எனின், வீட்டுக்கு வரும் மருமகளையும் தன மகள் போல் எண்ண வேண்டும். அதே அளவு கோளை தன பெண்ணை எடை போடும்போதும் உபயோக்கிக்கவேண்டும் .

  நாம் வாழ்ந்தாயிற்று. இனி குழந்தைகள் நல்லபடி இருக்கவேண்டும், என்று விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், எல்லா வீடுகளிலுமே இனிமை இருக்கும்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 15. தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவது நம்ம மதுரையாம்! 63 சதவிகிதம் முதியவர்கள் இங்கு உறவுகளால் துன்புறுத்தப் படுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களாம். //

  கேட்கவே வருத்தமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவது நம்ம மதுரையாம்! 63 சதவிகிதம் முதியவர்கள் இங்கு உறவுகளால் துன்புறுத்தப் படுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களாம். //

  கேட்கவே வருத்தமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. பெண்திருமணத்தில் கூட நான் துன்பங்கள் அனுபவிக்கவில்லை கடவுள் புண்ணியத்தில்.

  பசங்களுக்குப் பர்க்க ஆரம்பித்த போது ஏன் ஜாதகம் நமக்குப் பொருந்துகிறது அவர்களுக்குப் பொருந்தவில்லை என்று பார்த்தால் ,பின்னால் வருகிறது சேதி அவன் இந்தியாவில் இருப்பதால். பிறகு வெளிநாட்டுக்கு மாறியதும் ஏகப்பட்ட ஜாதகங்கள் ஒத்துவந்தன.:)
  மதுரையில் இப்போது மதுரை மக்கள் மட்டும் இல்லையே. வேறு வேறு ஜில்லாக்காரர்கள் வந்து அவர்கள் பழக்கவழக்கங்கள் ,பெண்களின் மனமற்றங்கள், மிகைப்படுத்தப்பட்ட மாமியார் கொடுமை சீரியல்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!