புதன், 26 ஜூன், 2013

உள்பெட்டியிலிருந்து 62013


தத்துவம் நம்பர்........

                                                           

- நிலையில்லா நம் வாழ்வில், எதையும் நிரந்தரமாக அடைய ஆசைப்படுகிறோம்!

- தற்காலிகக் காரணங்களுக்காக நிரந்தர உறவுகள் உடைவதில்லை!

- உங்கள் சந்தோஷத்தை மனம் விட்டுச் சொல்லுங்கள். உங்கள் கஷ்டத்தை உங்கள் மனதில் உள்ளவரிடம் சொல்லுங்கள்.

- கனவுக்கு முயற்சியில்லா உறக்கம் தேவை. இலக்கை அடைய உறக்கமில்லா முயற்சி தேவை.

- நீங்கள் ஒரு நல்ல சந்தோஷமான நாளைப் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனெனில் உங்கள் சந்தோஷம் உங்களைச் சேர்ந்த எல்லோரையும் சந்தோஷத்தில் வைக்குமே...

                                                                 

- மனிதர்கள் நேசிக்கப்படவும், பொருள்கள் உபயோகிக்கப்படவும் படைக்கப்படும் இவ்வுலகில் அப்படியே மாற்றி நடப்பது விந்தைதானே?

- நீங்கள் ரோஜாவைப் போல மலர்ந்து மணம் பரப்ப விரும்பினால் முட்களுடன் அனுசரித்து வாழும் கலையைப் பயில வேண்டும்.


மாணவ சக்தி!

                                                                       

15 மதிப்பெண் கேள்வியாக வந்திருந்தது "எறும்பை எப்படிக் கொல்வது?" என்ற கேள்வி. மாணவன் எழுதினான்.

சர்க்கரையுடன் மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். எறும்பு வசிக்கும் இடத்துக்கு அருகில் அதை வைக்கவும். அதை அந்த எறும்பு சாப்பிட்டதும் தண்ணீரைத் தேடி அலையும். தண்ணீர்த் தொட்டி அருகே அதை விடவும். அது குடிக்கப் போகும்போது அதை அந்தத் தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளி விட்டு விடவும். நனைந்த எறும்பு தன்னைக் காய வைத்துக் கொள்ள நெருப்பின் அருகே செல்லும்போது அதை நெருப்புக்குள் தள்ளி விட்டு விடவும். உள்ளே ஒரு வெடிகுண்டையும் போடவும். காயம் பட்ட எறும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கவும். அங்கு சிகிச்சையில் இருக்கும் எறும்பின் 'ஆக்சிஜன் மாஸ்க்'கைக் கழற்றி விட்டு விடவும். எறும்பு செத்து விடும்.

(மாணவர்களுடன் விளையாடாதீர்கள்! நாங்கள் 15 மதிப்பெண்ணுக்கும் எறும்பைக் கொல்வோம்)

என்ன கஷ்டம்டா சாமி!

                                                                  

அன்பைச் சொல்லிவிட ஒரு நொடி போதும்; ஆனால் அதை நிரூபிக்க ஒரு ஆயுள் வேண்டும்!


பொய்தானே....!

                                                                    

மனசுக்கு ரொம்பப் பிடித்தவர்களிடமிருந்து மெசேஜ் / மெயில் வந்தால் அதை அவர்கள் குரலிலேயே நம் மனம் வாசிக்கும்!!

அடச்சே.... ரொம்பப் பழைய ஜோக்குங்க....!

                                                                      
ஒரு ப்ரெஷர் குக்கர் 15 வது மாடியிலிருந்து விழுந்தும் ஒன்றும் ஆகவில்லை. ஏன் தெரியுமா? அது பட்டர்ஃப்ளை குக்கர்.

அப்படியே அசத்திடுவோம்ல.....

யாராவது என்னை 'உங்கள் வாழ்வில் உங்களுக்கு மிக முக்கியமானவர் யார்?' என்று கேட்டால் 'யார் என்னை அடுத்தவர்களுக்காகத் தவிர்க்காமல் இருக்கிறாரோ அவர்தான்' என்று சொல்வேன்! 

ஏற்கெனவே சொல்லியாச்சோ...

ஆழமான அன்பு வைத்திருப்பவர்களால்தான் அதிகமான வலியும் ஏற்படுகிறது.

கவித...கவித..


                                                     

1) காற்றுக்கும்
மாணவனுக்கும் ஒரே குணம்!
படிக்கப்படாமலேயே 
புத்தகத்தின் பக்கங்கள்
புரள்கின்றன...                                                                  2) இரண்டு மிருகங்கள்
எப்போதும்
மனதில்
ஒன்றுக்கொன்று
முட்டிக் கொண்டே இருக்கின்றன.
நல்லது ஒன்று, தீயது ஒன்று!
எது ஜெயிக்கும்?
எதற்கு நாம்
உண(ர்)வூட்டி வளர்க்கிறோமோ
அதுதான்!


மழலை இன்பம்                                                        

அம்மா : "கண்ணா... அப்பாவைக் கூப்பிடு"

குழந்தை : "அப்பா...இங்கே வாடா"


அம்மா : "கண்ணா... அப்பாவை மரியாதையாக் கூப்பிடணும்"


குழந்தை : "அப்பா... இங்கே மரியாதையா வாடா..."தத்துபித்துவம் 


                                                                   

உங்களையே நீங்கள் அணைத்துக் கொள்ள முடியுமா?  உங்கள் தோளில் நீங்களே சாய்ந்து அழ முடியுமா? வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வதுதான்! 

                                                                      


நாம் நமது தோற்றத்தைப் பற்றி மிகவும் கவலைப் படுகிறோம். உண்மை என்னவென்றால் நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் அது தேவை இல்லை. நம்மைப் பிடித்தவர்களுக்கும் அது தேவை இல்லை!

23 கருத்துகள்:

 1. நகைச்சுவைகள் உட்பட தத்துவங்கள் அருமை...

  பல்சுவைக்கு வாழ்த்துக்கள்...

  (இரும்பை ---> எறும்பை)

  பதிலளிநீக்கு
 2. காற்றுக்கும் மாணவனுக்கும் இருக்கும் புத்தகத்தினுடனான தொடர்பும், கண்ணனின் அப்பா அழைப்பும் ஓகோ..

  மனிதன்- பொருள் மாறிப்போன நேசம், உபயோகம்... அர்த்தமுள்ள மனித மதம்.

  எத்தனையோ இருந்தாலும், அத்தனையிலும் டாப்..

  உள்ளார்ந்து சொன்ன...

  "மனசுக்கு ரொம்பப் பிடித்தவர்களிடமிருந்து மெசேஜ் / மெயில் வந்தால் அதை அவர்கள் குரலிலேயே நம் மனம் வாசிக்கும்!!"

  அதான்!

  பதிலளிநீக்கு
 3. நம்மை நாமே அணைத்துக் கொள்வது பின்கழுத்து, முதுகு, தோள் வலிகளுக்கு நல்ல விடுப்பு. தினமும் காலையில் எழுந்ததும் செய்தால், எசகுபிசகாக தலையணையில் புரண்ட வலிகளுக்கும் நிவாரணம்.

  பதிலளிநீக்கு
 4. மனசுக்கு ரொம்பப் பிடித்தவர்களிடமிருந்து மெசேஜ்.. இந்தக் கோணம் தோன்றியதே இல்லை.

  பிடிக்காதவர்கள் நம்மைத் திட்டி எழுதினாலும் அதே.

  பதிலளிநீக்கு
 5. //பொய்தானே....!// சாதரணமாக அப்படித் தான் வாசிப்பேன், இப்பொது கூட உங்கள் குரலில் தான் வாசிக்கிறேன் :-)

  பதிலளிநீக்கு
 6. ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன உள்பெட்டியிலிருந்து எடுத்துத் தந்தவை. அனைத்தும் நன்று. குறிப்பாக,
  /- மனிதர்கள் நேசிக்கப்படவும், பொருள்கள் உபயோகிக்கப்படவும்../

  உண்மை:(!

  /பிடிக்காதவர்களுக்கும் அது தேவை இல்லை. நம்மைப் பிடித்தவர்களுக்கும் அது தேவை இல்லை!/

  மிக அருமை!

  அப்படியே அசத்தியதும் அழகு.

  /ஆழமான அன்பு வைத்திருப்பவர்களால்தான் அதிகமான வழியும்/

  வலி?

  பதிலளிநீக்கு
 7. :( இது இதற்கு:

  / அப்படியே மாற்றி நடப்பது /!

  பதிலளிநீக்கு


 8. அம்மாவிடம் குழந்தை வெள்ளந்தியாய் பேசுவது ஒரு அழகு கவிதை!

  //நீங்கள் ரோஜாவைப் போல மலர்ந்து மணம் பரப்ப விரும்பினால் முட்களுடன் அனுசரித்து வாழும் கலையைப் பயில வேண்டும்.//

  அருமை!


  பதிலளிநீக்கு
 9. அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு ரசிக்க வைக்கின்றன...

  உள்பெட்டி செய்திகள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 10. ஜீவி ஸார்... வாங்க...வாங்க... ஊர்லேருந்து வந்தாச்சா? நீங்க படிச்சா, இணைக்கப்பட்ட (குறிப்பா பூனை தன்னை சிங்கமாகக் கண்ணாடியில் பார்ப்பது) படத்தையும் சேர்த்து ரசிப்பீங்கன்னு நினைத்துக் கொண்டேன்!

  நன்றி அப்பாதுரை. அப்படிச் செய்தால் சிலசமயம் முதுகில் சுளுக்கிக் கொள்கிறது! :))

  நன்றி சீனு! (இதையும் என் குரலில்தான் படிப்பீங்கன்னு எனக்குத் தெரியும்!!!)

  நன்றி ராமலக்ஷ்மி... 'வலி'தான்! திருத்தி விட்டேன்!

  நன்றி மனோ சாமிநாதன் மேடம்...

  நன்றி வெங்கட்...

  பதிலளிநீக்கு
 11. தத்துபித்துவம் அருமை.

  வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வதுதான்!
  உண்மை.

  நாம் நமது தோற்றத்தைப் பற்றி மிகவும் கவலைப் படுகிறோம். உண்மை என்னவென்றால் நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் அது தேவை இல்லை. நம்மைப் பிடித்தவர்களுக்கும் அது தேவை இல்லை! //
  உண்மை, உண்மை மிக அருமை.
  உள்பெட்டியிலிருந்து வந்த அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது. .
  பதிலளிநீக்கு
 12. உள்பெட்டி சேகரித்துத் தந்த யாவையும் அருமை. மிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 13. முதுகு சுளுக்கிச்சின்னா பிடிச்சவங்களை அணைச்சுக்கணும்.

  பதிலளிநீக்கு
 14. சிந்தனைக்குக் கொஞ்சமும் ரசனைக்குக் கொஞ்சமுமாக பகிரப்பட்ட அனைத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. //மனிதர்கள் நேசிக்கப்படவும், பொருள்கள் உபயோகிக்கப்படவும் படைக்கப்படும் இவ்வுலகில் அப்படியே மாற்றி நடப்பது விந்தைதானே?

  - நீங்கள் ரோஜாவைப் போல மலர்ந்து மணம் பரப்ப விரும்பினால் முட்களுடன் அனுசரித்து வாழும் கலையைப் பயில வேண்டும்.//

  ரசித்தவை..

  15 மார்க் கேள்விக்கான பதில் செம. ஆனா இதையே நுணுக்கி நுணுக்கி எறும்பு மாதிரி எழுதாம கட்டெறும்பு சைஸில் பெரூசா நல்லா இடைவெளி விட்டு எழுதுனா இன்னும் மார்க் கிடைக்கும். :-))))

  பதிலளிநீக்கு
 16. //குறிப்பா பூனை தன்னை சிங்கமாகக் கண்ணாடியில் பார்ப்பது)//

  பூனைக்கும் சிங்கத்திற்கும் எப்படி முடிச்சு போட்டாங்களோ, தெரிலே!
  புலிப் படம் இருந்திருந்தா பொருத்தமா இருந்திருந்திருக்கும்!

  பொதுவா பூனையின் சிந்தையில் எலி -- நாய் இந்த இரண்டும் தான் என்னேரமும் பதுங்கியிருக்கும்ன்னு சொல்வாங்க.. முதல் குஷிக்கு, இரண்டாவது பயத்திற்கு!

  பதிலளிநீக்கு

 17. அப்படியே அசத்திடுவோம்ல.....

  அசத்தலான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 18. அன்பு எங்கள் ப்ளாக் , மனம் நிறைந்த வாழ்த்துகள்
  இந்த நாளில் என்னையும் கௌரவித்தற்கு மிக மக ந ன்றி.

  --
  அன்புடன்,
  ரேவதி.நரசிம்ஹன்

  பதிலளிநீக்கு

 19. அத்தனை தத்துவங்களும் எண்ணங்களும் அருமை.
  பூனை தன்னை சிங்கமாக நினைத்துக் கொள்ளுகிறதே :) பேராசை

  பதிலளிநீக்கு
 20. மழலை இன்பம் ரசிக்க வைத்தது.

  ப்ரஷர் குக்கர் அரதப் பழசு! :)))

  வலி ஏற்கெனவே சொன்னாலும் உண்மை உண்மைதானே!

  நமது தோற்றத்தைப் பற்றிக் கவலைப் பட்டுத் தான் ஆகணும். ஏன்னா பிடிக்காதவங்க அதை வைச்சே கேலி செய்வாங்க தெரியுமா? சொந்த அனுபவங்களே நிறைய இருக்கு! :(

  பதிலளிநீக்கு
 21. 15 மார்க் கேள்வியைப் பார்த்துட்டு அசந்துட்டேன்னா பதிலைப் படிச்சுட்டு மயக்கமே வந்துடுச்சு! :)

  பதிலளிநீக்கு
 22. அரியர்ஸ் க்ளியர் பண்ணிட்டேனா? :)))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!