Friday, September 27, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130927:: கேள்வியும் பதிலும்... சிவாஜியின் கேள்வியும், தேங்காயின் பதிலும்!


வண்ணத்தில் கேள்வி;
 கருப்பு வெள்ளையில் பதில்!


ரெண்டு ஓவர்ல யார் ரொம்ப ஓவர்? 
 
(அக்டோபர் ஒன்றாம் தேதி, சிவாஜி கணேசனின் எண்பத்தாறாவது பிறந்தநாள்.)  
            

24 comments:

geethasmbsvm6 said...

hahahaha janthegame illama namba jivaji than as usual overo over!

geethasmbsvm6 said...

hehehehe mathiyanam videovai parkiren. :))) ippo velai irukku, poyiduven. :))))

வல்லிசிம்ஹன் said...

தேங்காய்தான் ஓவர். சிவாஜியைச் சொல்லிப் பயனில்லை. அது அவரது ஸ்டைல். இவர் ஏன் காபி பண்ணினார்னுதான் தெரியவில்லை:)

திண்டுக்கல் தனபாலன் said...

கேட்ட கேள்வி தான் ரொம்ப ஓவர்...! ஹிஹி...

அப்பாதுரை said...

கௌரவம் சிவாஜினா எனக்கு சிம்மசொப்பனம். கஷ்டகாலம் பொறக்குதுனு யாரோ காதுல சொல்றாப்புல இருக்கும். ஓடிருவேன்.

VELUMANI Du said...

If any body try to ACT on a stage, they cannot escape to imitate from NATIGAR THILAGAM.

If it is over act or not, he is the one and only man from stage to screen prover original action.

We cannot write a history of Tamilnadu / Cinema / Stage artist / humanbeing ...etc. without him

Ranjani Narayanan said...

கண்டிப்பா சிவாஜி தான். ஓவர்டூ பண்ணுவதில் அவரை மிஞ்ச ஆள் இனிமேல் பிறந்து வரணும். தேங்காய் காப்பியடிக்க நினைத்து பெயில் ஆயிட்டார்!

ஜீவி said...

ஒரு காலத்தில் 'கை வீசம்மா,கை வீசு'வின் தழுதழுப்பு கேட்டு அந்த தளர்ச்சி பார்த்து கண்ணீர் வடித்தது கூட இப்பொழுது அசட்டுத்தனமாகப் படும்.

காலத்திற்கேற்பவான ரசனையின் மாறுபாடுகளுக்குக்கேற்ப நாமும் மாறுபடுவது தான் காரணம்.

Geetha Sambasivam said...

"கைவீசம்மா, கைவீசு" காட்சியையோ, "போனால் போகட்டும் போடா" காட்சியையோ இன்னும் பார்க்கக் கொடுத்து வைக்கலை! :))))) அது என்னமோ அப்போ ஓசிப்பாஸ் கிடைச்சும் அப்பா அநுமதி கிடைக்காமல் பார்க்கவே முடியலை. அதுக்கப்புறமும் ஆர்வம் இல்லை. தொலைக்காட்சியில் போட்ட்ப்போக் கூடப் பார்க்க முடியாமல் போயிடுச்சு!

Geetha Sambasivam said...

இப்போத் தான் வீடியோ பார்க்க உட்கார்ந்தேன். ஜிவாஜி வீடியோ தடங்கல்களோடு வந்தது. தேங்காய் வீடியோ வரவே இல்லை. ஆனாலும் இந்தக் காட்சி ஓரளவுக்குத் தெரியும். படங்களோட க்ளிப்பிங்க்ஸ் பார்த்ததிலே இதையும் பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். சமீபத்திலே விவேக் கூட இதைக் காமெடியாக்கி இருந்தார்னு நினைக்கிறேன். இல்லாட்டி சந்தானம்?? தெரியலை.:)))))

Geetha Sambasivam said...

ஆனால் "கெளரவம்" படம் பார்த்தது மட்டும் நல்லா நினைப்பிருக்கு. அம்பத்தூர் ஃபார்வர்ட் ஆர்ட்ஸ் அகடமி உறுப்பினர்களுக்கு என சிறப்புக் காட்சியாக இந்தப் படம், "ராஜராஜ சோழன்" எல்லாம் அயனாவரம் சயானியில் போட்டாங்க. காலம்பர டிஃபன் சாப்பிட்டுட்டு வீட்டை விட்டுக் கிளம்பினா படம் பார்த்துட்டு மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வந்துடலாம். பேருந்து ஏற்பாடும் சபாக்காரங்களோடது தான். போக, வரப் பேருந்தும் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க.

Geetha Sambasivam said...

ரஞ்சனி, ஜிவாஜியைப் புகழ்கிறாரா? வஞ்சப் புகழ்ச்சியா? :))) பொதுவாவே ஓவர் சென்டிமென்ட் படங்கள் எனக்குப் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸ்ரீராம். said...


அபிப்ராயங்கள் ஆளாளுக்கு மாறுபடும். அப்பாதுரை, கீதா மேடம் கருத்தை மதிக்கிறேன். அதே சமயம் நான் சிவாஜியின் ரசிகன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்! கௌரவம் படம் சிவாஜியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் ஒன்று.

ஸ்ரீராம். said...


இன்று நாகேஷின் பிறந்த தினம். அவர் கூட தமிழ்ப் படவுலகின் மறக்கமுடியாத மனிதர்களில் ஒருவர்.

ஸ்ரீராம். said...


கலியுகக் கண்ணன் மிகவும் ரசிக்கத் தக்க ஒரு படம். பெயருக்குத்தான் ஜெய்சங்கர் அதில் ஹீரோ. தேங்காய் சீனிவாசன் மிகவும் ரசிக்கும்படி செய்திருப்பார்.

Geetha Sambasivam said...

ஶ்ரீராம், கலியுகக் கண்ணன் வீடியோ எனக்கு வரலை. :( ஆனாலும் பார்த்திருப்பேன்னு தான் நினைக்கிறேன்.விமரிசிக்கிறதுக்காவது ஜிவாஜியைப் பார்க்க வேண்டாமா?

சில நாட்கள் முன்னர் கூட சிவாஜியின் ஒரு படம், "துணை"னோ என்னமோ பேர். ராதா மருமகள், சரிதாவும் அதில் இருந்தார். ராதாவின் கணவனாக சிவாஜியின் பிள்ளையாக வருபவர் யார்னு தெரியலை. பார்த்தேன். :)))))) எனக்குப் பிடிச்ச ஜிவாஜி படம், ராமன் எத்தனை ராமனடி, முதல் மரியாதை. இரண்டு மட்டுமே.

Geetha Sambasivam said...

சிவாஜி ரசிகர்களைப் புண்படுத்த நினைக்கலை. ஆனாலும் அந்த மிகையான நடிப்பில் சிரிப்பு வந்துடும். தவிர்க்க முடியலை! :((((

ஸ்ரீராம். said...


புண் எல்லாம் படவில்லை கீதா மேடம்... ! :)))

கலியுகக் கண்ணன் - தெய்வத்தை நம்பாத தேங்காயிடம் கிருஷ்ணன் கிருஷ்ணனாகவே வந்து திட்டு வாங்குவார்! கடைசியில் தேங்காய் தெய்வம் இருப்பதாக உணரும்போது கண்ணன் வரமாட்டான்!

"கிருஷ்ணன் எப்படி இருந்தார்ப்பா?" என்று தேங்காயிடம் அவர் மகனாக நடிக்கும் ஜெய் கேட்பார். "அப்படியே என் டி ராமாராவ் மாதிரியே இருந்தாருடா" என்பார் தேங்காய்!:))

கோமதி அரசு said...

அவர் அவர் பாணியில் சிறப்பாக செய்து இருப்பார்கள்.
டைரக்டர் என்ன சொல்கிறாரோ காட்சி அமைப்பு அதற்கேற்றார் போல் நடித்து இருக்கிறார்கள்.

கலியுகக் கண்ணன் நானும் பார்த்து இருக்கிறேன்.

தேங்காய் சீனிவாசன் நடிப்பு நன்றாக இருக்கும்.
நாகேஷ் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறும் நீங்கள் அவர் நடித்த காட்சி படமும் பகிர்ந்து இருக்கலாமே !

அப்பாதுரை said...

கமல்ஹாசன்.

வருண் said...

நான், "அப்பாதுரை, ரஞ்சனி, கீதா சாம்பசிவம் கூட்டணிக்கு" எதிரணியைச் சேர்ந்தவன். சிவாஜி எவ்ளோதான் ஓவர் ஆக்சன் பண்ணினாலும், அவர் எப்படி நடிச்சாலும் அவர் நடிப்பை என்னால் எப்போவுமே ரசிக்க முடியும். நேத்து ஜெயாவில் தீபம் படம் போட்டாங்க. அதையும் பார்த்து ரசிக்க முடிஞ்சது! கெளரவம் ரஜனிகாந்த் ரோல் பத்தி கேக்கவே வேண்டாம். ரொம்ப ரொம்பப் பிடிக்கும் எனக்கு..

ஆனால் ஸ்ரீராம் இதில் தேங்காயை கோர்த்துவிட்டதால்தான் வம்பே. தில்லு முல்லு படம் தவிர எந்தப் படத்திலும் தேங்காயைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல்தான் வரும். அடுத்த ஜென்மம் அது இதுனு ஏதாவது இருந்தால் தேங்காயை ரசிக்க முயலுகிறேன். இப்போ கஷ்டம்! :)

kg gouthaman said...

// அப்பாதுரை said...
கமல்ஹாசன்.//
ஆஹா ஆரம்பிச்சுட்டாரையா, ஆரம்பிச்சுட்டார்!

சாய்ராம் கோபாலன் said...

//திண்டுக்கல் தனபாலன் said...

கேட்ட கேள்வி தான் ரொம்ப ஓவர்...! ஹிஹி...//

Correetbaa.....

சாய்ராம் கோபாலன் said...

//ஸ்ரீராம். said... கௌரவம் படம் சிவாஜியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் ஒன்று.//

இந்த படத்தில் நாகேஷ் / நீலு கூட்டணி அபாரம்.

நான் நேற்று பதிமூன்று வருடத்திற்கு பிறகு பெங்களூரில் சுற்றினேன். கெளரவம் படம் தான் நினைவில் வந்தது.

கெளரவம் படத்தில் என்றோ சென்னை வந்த நீர் இன்னும் இங்கேயே இருக்கீர் என்பதற்கு - நீலு நாகேஷிடம் சொல்லுவார் "சென்னை சிட்டி படுவேகமன்னா டெவெலப் ஆறது....அதான் இவ்வளவு நாளாய் இங்கேயே டேரா போட்டேன் என்று".....

86 இல் படித்தே முடிக்காமல் பெங்களூர் வந்தபோது எப்படி இருந்தது....தலையும் புரியவில்லை வாழும் புரியலை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!