செவ்வாய், 24 செப்டம்பர், 2013

உள் பெட்டியிலிருந்து 9 2013



<> எது இழப்பு?
 
மரணம் என்பது பெரிய இழப்பில்லை. உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.


<> பொறுப்பான பதில்!


பதிலெதுவுமே சொல்லாமலிருப்பதுகூட ஒரு பதில்தான்! நாம் செய்யாமலிருக்கும் ஒரு செயலுக்குக் கூட நாமே பொறுப்பு!

                                                    

                                                        

<> வேண்டாமே...!

உங்கள் உணர்ச்சிகளைக் காட்ட கண்ணீரை ஒரு கருவியாக உபயோகிக்க வேண்டாம். உங்கள் கோபத்தைக் காட்ட வார்த்தைகளின் துணையை நாட வேண்டாம்.

முழு புரிதல் உணர்வு இல்லாமல் ஒரு உறவை நெருக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம். சிறு சச்சரவில் ஒரு உறவை முறித்துக் கொள்ளவும் வேண்டாம்.


<> ஜோக் ஜோக்!
                                              

                                                                       
பேஷன்ட் : "நீண்டநாள் உயிர் வாழ வழி ஏதும் இருக்கா?"
டாக்டர் : "கல்யாணம் செய்துகொள்!"
பேஷன்ட் : "அது உதவுமா?"
டாக்டர் : "இது மாதிரி விபரீத எண்ணங்களைத் தடுக்கும்"


<> நட்பு பற்றி இரண்டு விஷயம்!


1) நட்பு என்பதைப் பற்றி எல் கே ஜி மாணவன் சொன்னது : டை இல்லாமல் நான் ஸ்கூல் சென்றபோது என் நண்பன் தான் அணிந்திருந்த டையை அவிழ்த்து எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டதுதான் நட்பு!

                                                              
2) உலகின் வெற்றிகரமான. சந்தோஷமான நண்பர்களுக்கிடையே ஒத்த உணர்வு இருப்பதில்லை. ஆனால் தங்களிடையே இருக்கும் வித்தியாசங்களைப் பற்றிய புரிதல் இருக்கிறது.


<> உண்மைதாங்க...

புன்னகையும் தூக்கமும் மனிதனின் மகிழ்ச்சிக்கு செலவில்லாத மருந்துகள். நிம்மதியாய்த் தூங்கிப் புன்னகையுடன் எழுவோம்.


நம்முடன் ஒத்துப் போகிறவர்களுடன் வாழ்வது நமக்கு வசதியாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் நாம் வளர்வது எதிர்மறைக் கருத்து கொண்டவர்களுடன் பழகும்போதுதான்.

 <> குழப்பாதீங்க...!


"கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி நம்புகிறீர்கள்?"

                                                            
இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியின்மை இல்லை என்பதற்கான அத்தாட்சியில்லை"

 
<> சக்களத்தி!

சிலசமயங்களில் மூளை ஏற்கெனவே அறிந்ததை ஒத்துக்கொள்ள இதயத்துக்கு/மனதுக்கு  சற்று அதிக நேரம் பிடிக்கிறது.


<> சில அறிவுரைகள்..

வெற்றிக்கான ஒரு வரி! "உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே!" அல்லது "உன்னிடமே நீ பொய் சொல்லாதே!"
மனதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சிறந்த தத்துவம். வெற்றி மகிழ்ச்சி தருமோ, தராதோ.. மகிழ்ச்சியான மனநிலை நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்.
                                                        

                                                                    
பல்லிருக்கும் வரை வாய்விட்டு நகைத்து விடுங்கள். புன்னகையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

19 கருத்துகள்:

  1. முதலில் உள்ள அனைத்துமே நல்முத்துக்கள்.

    தூக்கம் பத்திச் சொன்னது என்னமோ உண்மை தான். ஆனால் தூங்கறதுக்குனு படுத்தால் நிம்மதியா எங்கே தூங்க முடிகிறது! :)))

    எதிர்மறைக் கருத்துக் கொண்டவங்களோட பழகும்போது வளர்கிறோமா எனத் தெரியவில்லை. ஆனால் மனதைக் காயப்படுத்தறாங்க :(

    இதயம் வேறே, மனம் வேறே இல்லையோ!

    மகிழ்ச்சியான மனநிலையை நான் வரவழைத்துக் கொண்டுவிடுவேன். ஆகையால் ஒண்ணும் பிரச்னை இல்லை. :)))) இணையத்திலே நாலு பேர் கிட்டே வம்பு பண்ணினால் போதுமே. மகிழ்வு தானே வந்துடும். :))))))))

    பதிலளிநீக்கு
  2. வேண்டாமே!!
    >>
    அவசியம் நினைவில் கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. //உலகின் வெற்றிகரமான. சந்தோஷமான நண்பர்களுக்கிடையே ஒத்த உணர்வு இருப்பதில்லை. ஆனால் தங்களிடையே இருக்கும் வித்தியாசங்களைப் பற்றிய புரிதல் இருக்கிறது.
    //

    To agree to disagree is always a bliss. near disheartens friendship.

    But when u decide to disagree and part ways, see that
    parting be graceful.

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருந்தது ஸ்ரீராம் சார்

    பதிலளிநீக்கு
  5. பல்லிருக்கும்போது சிரித்துவிடலாம். சிறப்பு கருத்து.
    உணர்ச்சிகளும் கண்ணீரும் வார்த்தைகளும் கருவிகள் சிலசமயம்தான். பலசமயம் அவசியம் கூட.
    மௌனம் பொன்னாக இருக்கலாம்.
    கொஞ்சம் இளகினாலே பொன் ஆபரணம் ஆகும்.
    எல்லாமே நல்ல கருத்துகளே.

    பதிலளிநீக்கு
  6. உள் பெட்டியிலிருந்து வந்தவை அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.//

    இது யாருக்கும் ஏற்பட வேண்டாம்.

    //முழு புரிதல் உணர்வு இல்லாமல் ஒரு உறவை நெருக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம். சிறு சச்சரவில் ஒரு உறவை முறித்துக் கொள்ளவும் வேண்டாம்.//

    என் அம்மா அடிக்கடி சொல்லும் வசனம் கடும் உறவு கண்ணை கரிக்கும்.
    அளவோடு பழக வேண்டும் எல்லோரிடமும் என்று.

    நட்புகளிடம் புரிதல் நல்ல விஷயம்.

    நிம்மதியாக தூங்கி புன்னகையுடன் எழுந்தால் நாள் முழுவதும் உற்சாகம் தான்.

    கருத்து வேறுபாடு உடையவர்களுடன் ஒத்து வாழ்வது தான் வளர்ச்சி அருமை.

    பல் இல்லாமல் பொக்கைவாய் சிரிப்பும் நன்றாக இருக்கும், குழந்தையின் சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  7. மரணம் என்பது உறவுகள் பிரிவது அல்ல; நம்முள் இருக்கும் உற்சாகம் மடிவதுதான் என்பது என் தாழ்மையான கருத்து.
    'உண்மைதாங்க' ரொம்ப உண்மைங்க.
    பல்லிருக்கும் போதே வாய்விட்டு சிரித்துவிடலாம் - ரொம்ப சரி.

    நல்ல கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான சிந்தனைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நட்பை பற்றி சொல்லியதை ரசித்தேன் ... அனைத்தும் அவசியமான கருத்துகள்

    பதிலளிநீக்கு
  10. //மரணம் என்பது பெரிய இழப்பில்லை. உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.//

    உன்மை தான்! அன்பு என்று நம்பும் உறவுகள் மரணம‌டைவது உயிருடனிருக்கும்போதே மரண‌மெய்தி விட்ட உணர்வுக்கு ஒப்பானது!

    சிற‌ப்பான, ரசனை மிக்க சிந்தனைக‌ள்!!

    பதிலளிநீக்கு
  11. அனைத்துமே அருமை. சிந்திக்க இரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  12. அனைத்துமே அருமை. சிந்திக்க இரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  13. உள்பெட்டி செய்திகள் அனைத்துமே ரசித்தேன்.....

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பேட்டிஸ் செய்திகள் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன.அறிவுரைகளும் அருமை ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  15. படிப்பதற்கு சாதாரணமாக இருப்பினும், 'வேண்டாமே'யில் காணப்பட்ட நான்கு 'வேண்டாம்'களும் ரொம்பவும் அர்த்தம் பொதிந்த பொன்மொழிகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!