வேஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.1.14

மனவரிகள் 01 14

                   
      
எல்லாப் புன்னகையிலும் கொஞ்சம் சோகம் இருக்கிறது
எல்லாச் சோகங்களிலும் லேசான சுகம் இருக்கிறது
எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது
ஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.
எல்லா உறவுகளிலும் கொஞ்சம் போலி இருக்கிறது.
எல்லாப் பாசங்களிலும் கொஞ்சம் வேஷம் இருக்கிறது.


{}{}{}{}}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}



சூரியன் சென்றதில்
மேக ஆடை
மறைவிலிருந்து
வெட்கம் துறந்து
வெளிவருகிறாள்
நிலாப்பெண்!

{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}


யாருமே இல்லாத
சாத்வீகமான
சொர்க்கத்தை விட
சந்தடி மிகுந்த
நரகம் மேலோ...
பழகிப் போகும்
நரகங்கள்!

{}{}{}{}{}}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

இட்டார் பெரியோர்
இடாதார்
இழந்தார் சுவை!

இட்டார் பெரியோர்

சுட்டார் காக்கை!
.........
.........
........
வடாம்!
  
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}