அது என்னப்பா வெண்டைக்காய் விஷயம்! என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த *உ கா மா திணி வெண்டைக்காய் விஷயம் சுலபமானது, சுவையானது.
செய்து பாருங்கள்!
தேவையானவை:
இளசான வெண்டைக்காய் பதினைந்து.
கடலை மாவு : நான்கு தேக்கரண்டி.
மிளகாய்த் தூள்: இரண்டு தேக்கரண்டி.
சீரகம் : ஒரு தேக்கரண்டி.
உப்பு: தேவையான அளவு.
ஒரு அகலமான தட்டில், கடலைமாவு, உப்பு, மிளகாய்த்தூள், சீரகம் ஆகியவற்றைக் கொட்டி, ஒன்றோடோன்றாக நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, இந்தக் கலவையை நன்கு பிசைந்து கொள்ளவும். பேஸ்ட் பதம் சரியாக இருக்கும்.
வெண்டைக்காய்களை, நீளவாக்கில் முனையிலிருந்து காம்பு வரை கீறுகின்றாற்போல் வெட்டவும். எச்சரிக்கை: வெட்டப் பட்டப் பகுதிகள் தனியே வரக் கூடாது. அவை வெண்டைக்காயின் காம்புப் பகுதியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.
வெண்டைக்காயின் கீறப்பட்ட பகுதி வழியாக, அவற்றினுள்ளே, மேலே கூறப்பட்ட மாவு கலவையை உள்ளே இட்டு, வெண்டைக்காய்களை ஓரளவுக்கு மூடி வைக்கவும்.
இந்த ஸ்டஃபுடு வெண்டைக்காய்களை, சிறிதளவு சமையல் எண்ணை விட்டு, வாணலியில் வாட்டி எடுக்கலாம்.
அல்லது,
இப்படி தயார் செய்யப்பட்ட வெண்டைக்காய்களை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அப்படியே வைத்து, மைக்ரோ வேவ் ஓவனில் உள்ளே வைத்து, ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடம் ஓவனை இயக்கி, எடுத்துக் கொள்ளலாம்.
(இவற்றை எப்படி சாப்பிடுவது என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றோம்.)
* உ கா மா திணி = "உப்பு, கார, மாவு திணிக்கப்பெற்ற"
ஞாயிறு புகைப்படங்கள் போல திங்கள் சமையல் குறிப்புகள் ஒவ்வொன்றும் சூப்பர்:)!
பதிலளிநீக்குஉ கா மா திணித்து, எண்ணெய் விடாமல் மைக்ரோவேவ் அவனிலேயே செய்து பார்த்து விடுகிறேன். நன்றி!
Naanum appadiye.
பதிலளிநீக்குஉப்பு, கார, மாவு திணிக்கப்பெற்ற வெண்டைக்காய் சமையல் குறிப்பு, வெண்டைக்காய் படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குவித்தியாசமான சமையல் குறிப்பு..
பதிலளிநீக்கு"திங்க"கிழமை வெண்டைக்காய் ஸ்ட்ஃப் பத்தி எழுதணும்னு இருந்தேன். அதுக்குள்ளே போட்டுட்டீங்க. :))))
பதிலளிநீக்குஎன்னோட மாமியார் வெண்டைக்காய் நுனியை மட்டும் நீக்கிவிட்டுக் காம்புப் பாகம் நீக்காமல் இரண்டாய்ப் பிளந்து உப்பு, மஞ்சள் பொடி தடவி வைத்துவிட்டுப் பின்னர் கடலைமாவை பஜ்ஜி மாவு போல் கரைத்து அதில் முக்கி எடுத்துப் போடுவார். இதுவும் முயன்று பார்க்கலாம்.
மராட்டியர் மாதிரி மசாலா வைத்தும் பண்ணலாம்.
பதிலளிநீக்குசெய்து பார்ப்போம்... நன்றி...
பதிலளிநீக்குவெண்டைக்காய் மூளை வளச்சிக்கு நல்லது என்று சொல்வார்கள். இந்தக் காயை சமைத்தாலும் அதை ஒரிஜினல் சுவை போகக் கூடாது என்று எண்ணுபவன் நான். இதைச் செய்து பார்க்கச் சொல்ல வேண்டும் என் மனைவியிடம்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
செய்முறை விளக்கத்துடன் சிறப்பாக சொல்லியுள்ளிர்கள் செய்து பார்க்கலாம்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Stuffed Bindi! நன்றாக இருக்கும்....
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அப்படியே ஒரு ப்ளேட் பார்சல் செய்து அனுப்பினால் வயிறும் வாழ்த்தும்! :)
திங்கக்கிழமைன்னா திங்கிற சமாச்சாரமா!! பேஷ் பேஷ்.. நல்லாவே think செஞ்சுருக்கீங்க.
பதிலளிநீக்குபரேலி பிண்டி ஜூப்பர் :-)