திங்கள், 10 பிப்ரவரி, 2014

திங்க கிழமை 140210 :: அப்பளக் கூட்டு!

                             
கட்சிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் கூட்டு பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். சிலர் தனியாகக் குழம்(ப்)பிக் கொண்டிருப்பார்கள்.

நாம் அப்பளக் கூட்டு பற்றி சற்றுச் சிந்திப்போம்!

அப்பளக் கூட்டு செய்ய என்னென்ன பொருட்கள் தேவை?
 
உருளைக்கிழங்கு நூறு கிராம்.

கடலைப்பருப்பு ஐம்பது கிராம்.

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை.

மிளகாய் வற்றல் : மூன்று.

உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்.

மிளகு : பத்து.

கறிவேப்பிலை பன்னிரண்டு இலைகள்.

துருவிய தேங்காய் இரண்டு டீஸ்பூன் அளவு.

உளுந்து அப்பளம் : ஐந்து. / ஆறு.

தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, இரண்டு துண்டு மிளகாய் வற்றல்.

=================
செய்முறை:

# உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, பொடிப்பொடியாய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

# கால் லிட்டர் தண்ணீரில், கடலைப்பருப்பைப் போட்டு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை போட்டு, வேகவிடவும். கடலைப்பருப்பு வெந்ததும், நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு, தேவையான உப்புப் போட்டுக் கிளறவும்.

# மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை, ஒரு வாணலியில் சிறிது நெய்யூற்றி, அதில் இவைகளை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

# வறுத்து எடுத்தவைகளை, ஒரு மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

# அரைத்த இந்தக் கலவையை, ஐம்பது மில்லி தண்ணீரில் நன்கு கரைத்து, உருளைக்கிழங்கு + பருப்பு கூட்டில் இட்டு, நன்றாகக் கிளறவும்.
                   
# கூட்டு பக்குவத்திற்கு வந்ததும், அதில் தேங்காய்த் துருவலை இட்டுக் கிளறவும்.
             
# கூட்டு உள்ள அடுப்பை அணைத்துவிடலாம்.
   
# வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும், ஒவ்வொரு அப்பளத்தையும் எட்டு செக்டார் ஆகக் கிழித்து, எண்ணையில் தனித் தனியாகப் பொரிக்கவும்.
           
# ஒரு கரண்டியில் கொஞ்சம் நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு, இரண்டு சிட்டிகை கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு,  இரண்டு துண்டு மிளகாய் வற்றல் இட்டு, உளுத்தம்பருப்பு பொன்னிறம் வந்தவுடன் தாளிப்புப் பொருட்களை கூட்டில் போடவும்.
               
# பொரித்து வைத்திருக்கும் அப்பளத் துண்டுகளையும் கூட்டில் போட்டு, நன்கு கிளறவும்.
     
       
+ அப்பளக் கூட்டு தயார். 
                     

13 கருத்துகள்:

 1. இதே வேறே காய்களைப் போட்டுச் செய்தால் பொரிச்ச குழம்பு அல்லதுபொரிச்ச கூட்டு டைப்! :))) நாங்க குழம்புக் கறிவடாம் சேர்ப்போம். நீங்க அப்பளம் போட்டிருக்கீங்க. அதான் வித்தியாசம். உ.கி.யில் செய்தது இல்லை. செய்துடுவோம்.

  பதிலளிநீக்கு
 2. அப்பளத் துண்டுகளை போடுவது புதுசாத் தான் இருக்கு... செய்து பார்ப்போம்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. நல்லாருக்கு..

  பருப்புக்குழம்புக்கும் இதே மாதிரி அப்பளம் சேர்க்கலாம். தனியாப்பொரிச்சு சாப்பாட்டில் நொறுக்கிச் சேர்க்கும் வேலை மிச்சம் :-))

  பதிலளிநீக்கு
 4. அப்பளக்கூட்டு நன்றாக இருக்கிறது.
  செய்முறை அருமையாக சொல்கிறீர்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அப்பளக்கூட்டு நன்றாக இருக்கிறது.
  செய்முறை அருமையாக சொல்கிறீர்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அப்பளக்கூட்டு நன்றாக இருக்கிறது.
  செய்முறை அருமையாக சொல்கிறீர்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அப்பளம் போட்டுச் செய்வது புதுமையா இருக்கே அண்ணா...

  செய்து பார்த்திடலாம்...

  பதிலளிநீக்கு
 8. அப்பளத்தை ஒன்பது செக்டாராகப் போட்டால் பரவாயில்லையா?

  பதிலளிநீக்கு
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

  வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

  பதிலளிநீக்கு
 10. அப்பளக் கூட்டு.... புதிதாய் இருக்கிறது. செய்து பார்த்திடவேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 11. // அப்பாதுரை said...
  அப்பளத்தை ஒன்பது செக்டாராகப் போட்டால் பரவாயில்லையா?//

  எட்டு செக்டாரகாப் பிரிப்பது சுலபம். இன்க்லூடட் ஆங்கிள் நாற்பத்தைந்து டிகிரி.

  ஒன்பது செக்டார் கொஞ்சம் கஷ்டம். பாகைமானி வைத்து நாற்பது டிகிரி மார்க் செய்து, கத்தியால் கோடு இழுத்து, கத்தரிக் கோலால் வெட்டி - இப்படிக் கஷ்டப்படுவதைவிட, அப்பளத்தை, அரை, கால், அரைக்கால் பாகங்களாக மடக்கினால் உடனே சுலபமாக அரைக்கால் பகுதிகளாக வந்துவிடும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!