திங்கள், 24 பிப்ரவரி, 2014

திங்க கிழமை 140224 :: இ எ மி கா ஊறுகாய்.

                    
ரொம்ப சிம்பிள் ஊறுகாய் இதுதான்.

குறுகிய நேரத்தில் தயாரிக்கலாம்; ஒன்றிரண்டு நாட்களுக்குள் உபயோகித்து விடுதல் நலம். 
    

காரட் கால் கிலோ. 

குருத்து இஞ்சி ஐம்பது கிராம்.
  

எலுமிச்சம்பழம் அரை மூடி. 
   

பிஞ்சு பச்சை மிளகாய் பதினைந்து. 
  

நல்ல காரட், தலைப்பக்கம் பச்சை இல்லாமல், தலைப்பகுதி பருத்தும், நுனி வரை சீராகக் குறுகியும் இருக்கும். நல்லா ஆரஞ்சு வர்ணத்தில் இருக்கும். காரட்டை நன்றாக ஓடுகின்ற தண்ணீரில் சுத்தமாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும். 

நறுக்கிய காரட் துண்டுகளில், உப்புத்தூள் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை இட்டுக் கலக்கி, எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழியவும். தேவையானால், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்க்கலாம். 

குருத்து இஞ்சி கிடைத்தால், அதை அப்படியே கழுவி, சிறு துண்டுகளாக செய்து கொள்ளலாம். சாதாரண இஞ்சிதான் கிடைத்தது என்றால், அதைக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். 

பச்சை மிளகாய்களையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இஞ்சி + பச்சை மிளகாய் துண்டுகளை, காரட் துண்டுகளோடு சேர்த்து ஊறவிடவும். 

(சிலர், இதோடு சாம்பார் வெங்காயத்தை உரித்து, சிறு துண்டுகளாக செய்து சேர்ப்பார்கள்) 
    

சுவையான ஊறுகாய் தயார். 
         
  


            

10 கருத்துகள்:

 1. சும்மா ஜிவ்வென்று இருக்கு... நன்றி... செய்து பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
 2. காரட், சிவப்பாத் தான் இங்கே கிடைக்குது, பரவாயில்லையா? :)

  பதிலளிநீக்கு
 3. காரட்டோட இஞ்சி, மாங்காய், சேர்த்து, மிளகாய்ப் பொடி, கடுகுப் பொடி, முழு வெந்தயம் போட்டு நல்லெண்ணெய் ஊத்திக் கடுகு தாளித்து ஊறுகாய் போட்டு பாருங்க. இலவச டிப் . :)

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  நல்ல செய்முறை விளக்கம் செய்து பார்த்திடலாம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. பார்க்கவே சுவையாக இருக்கு செய்து பார்த்திடுவோம்

  பதிலளிநீக்கு
 6. பார்க்க நல்லா இருக்கு..... கலர்ஃபுல்....

  செஞ்சுடுவோம்!

  பதிலளிநீக்கு
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!