சனி, 1 பிப்ரவரி, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்!











2) 90 வயதில் திருமணம் செய்யக் காரணம்.


3) முன்பு டாக்டர் ஹரிசங்கர் (இவரைப் பற்றி கடந்தவார கல்கியிலும் கட்டுரை வெளியாகி இருக்கிறது) பற்றிப் படித்தோம். இப்போது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, பல் சொத்தை இல்லாத கிராமமாக அதை மாற்றுவது இவரது இலக்குகளில் ஒன்றாக வைத்திருக்கும் வித்யா கிரிசபரி



4) உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கோரியும், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகளை வலியுறுத்தியும் போராடிவரும் ஆர் கீதா.



5) 'பாக்கெட் மணி'யை சேமித்து, தேவைப்படுபவர்களுக்கு உதவும் கல்லுாரி மாணவன், பிரகலாதன்



6) மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் 6-ஆவது படிக்கும் மாணவி அர்ச்சனா அந்த ஊரில் உள்ள பெரியாண்டி என்னும் நூறு வயது மூதாட்டி குளிக்கவும், உணவருந்தவும் உதவி செய்துவருகிறார்.


7) கூழ் விற்கும் பாட்டியின் நேர்மை.


8) அர்ஜுன்... படிப்பது எட்டாம் வகுப்பு... உனக்குள் இப்படி ஒரு உதவும் கருத்தா? அட!





 9)  யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார். இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.


இவரது போன் எண்: 9445170464. (வருகின்ற 4ம்தேதி கேன்சர் தினம், உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.) 





 















10) படிப்படியாக முன்னேறு...





15 கருத்துகள்:

  1. ஒன்றிரண்டு தவிர
    மற்ற எல்லாம் கண்ணில் படாதவையே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கல்லூரி மாணவன் என்றால் பிரகலாதன் போன்று இருக்க வேண்டும்...

    தான் திருந்தியது மட்டுமில்லாமல், மற்றவர்களும் திருந்த வேண்டும் என்று, சிறப்பான எண்ணம் கொண்ட ஏ.சர்புதீன் அவர்களின் சேவை மேலும் மேலும் தொடர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. hit of the week ராதா கிருஷ்ணன் ,ராதா திருமணம்தான் !பெயரிலேயேபொருத்தம் இருக்கிறதே !

    பதிலளிநீக்கு
  4. தன்னலமற்ற சேவை செய்கிற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அர்ஜூனின் கண்டுபிடிப்பு பலருக்கும் உதவும். கூழ் விற்கும் பாட்டி பற்றி மட்டும் முன்னர் வாசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தன்னலமற்ற சேவை செய்கிற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அர்ஜூனின் கண்டுபிடிப்பு பலருக்கும் உதவும். கூழ் விற்கும் பாட்டி பற்றி மட்டும் முன்னர் வாசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வாசிப்பை நேசிக்க சொல்லும் பத்மாவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வலைத்தளபெயர் இல்லையே!

    ஏழை பெண்ணுக்கு உதவ திருமணம் காரணம் அருமை.

    திரு வி எஸ் நடராஜன் அவர்களை குருவாய் கொண்ட டாகடர் ஹரி சங்கர் பற்றி ஏற்கனவே படித்து இருக்கிறேன். அவர் சேவை வாழ்க!.

    மருத்துவம் என்பது வேலையல்ல, சேவை எனச் சொல்லும் வித்யா கிரிசபரிக்கு வாழ்த்துக்கள்.

    எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடும் படும் கீதாவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பிரகலாதன் போன்ற மாணவர்கள் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ஹோப் ஹீரோ விருது பெற்ற குழந்தைகள் வாழ்க! வளர்க!

    உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்று சொல்லும் இந்த பெரிய்அம்மாவின் நேர்மை பாராட்டபட வேண்டிய ஒன்று பாராட்டி மகிழ்வோம்.
    வாழ வளமுடன்.
    அர்ஜூன் அடுத்தவர்களுக்கு உதவும் குறிப்பாக பெண்களுக்கு உதவும் கண்டு பிடிப்புக்கு வாழ்த்துக்கள். அவர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவி மூலம் பேசி சிகரெட் பழக்கத்தை போக்கும் அன்பர் வாழ்க! இவரின் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    உலகம் முழுவதும் கான்சர் எனும் கொடிய அரக்கனிடமிருந்து மக்கள் விடுபட வாழ்த்துக்கள்.
    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கை விதைக்கும் செய்திகள். சர்புதீன் அவர்களின் சேவை நினைத்துப் பார்க்கக் கூட முடியாதது.
    பிரகலாதன்,அர்ச்சுன் அர்ச்சனா முன்மாதிரி இளைஞர்கள். வாழ்த்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. தன்னலமற்ற நெஞ்சத்துடன் மற்றவர்களுக்கு உதவ துடிக்கின்ற மனிதர்கள் கண்டு மகிழ்ச்சி...


    அனைத்துமே அருமையான் செய்திகள். பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  9. பத்மாவதியை முகநூலிலும் பார்த்தேனோ?

    90 வயசுக் கல்யாணம் எந்த தினசரியிலும் வரலையே?? ஆச்சரியம் தான்.

    மற்றச் செய்திகளும் அருமையானவை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நம்பிக்கை ஊட்டும் பாசிட்டிவ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  11. அனைத்து செய்திகளும் சிறப்பானவை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. பாசிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  13. Good. I have stopped smoking before 11 months because of Sriram the great editor of this article. Once again Thanks Sree. Visuweswaran Gopalan.

    பதிலளிநீக்கு
  14. அனைத்துமே அருமையான செய்திகள்... பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!