சனி, 5 ஜூலை, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.




1) சிவில் சர்வீஸ் தேர்வுக்கான, 90 சதவீத பாடங்கள் ஆங்கில மொழியில் தான் இருந்தன. ஆனாலும், தமிழ் மொழியின் மீதிருந்த ஆர்வத்தால், ஆங்கில பாடங்களை, நானே தமிழாக்கம் செய்து படித்தேன். எனவே, எண்ணிய இலக்கை அடையும் வரை, ஓயாமல் செயல்படுங்கள். ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுதி, தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில், 45வது இடமும் பெற்ற தேனியை சேர்ந்த, ஜெயசீலன் 
 
 
 
3) பாளைச் சிறையில் பசுமைப் புரட்சி.
 

 

5) கோவை கால் டாக்ஸி டிரைவர் முருகன் 
 
 
6) வாயில்லாஜீவன்களின்கருணை தாய், நோய்வாய்பட்ட மற்றும் இறைச்சிக்காக அழைத்து செல்லப்படும் அடிமாடுகளை வாங்கி, அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, பராமரிப்பதற்காக, திருமணமே செய்யாமல் வாழும், 67 வயது,சாதனா
 
 
 


9) 
“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவரின் சகோதரர் குடும்பத்தில் பிரச்சினையால் அவருடைய மூன்று பிள்ளைகளையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். கணவருடன் சேர்த்து இப்போ ஆறு பிள்ளைகளையும் இந்த தொழில்தான் காப்பாற்றுகிறது” என்கிறார். பிசிறில்லாமல் வெட்டுகிற கத்தரிக்கோலைப் போலவே தயக்கமின்றி உறுதியுடன் பேசுகிறார் பெட்ரீஷியா. அந்த உறுதி அவரை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கிறது.
 


10) ........ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி எம்.ஏ. படித்தார், முருகன் பி.பி.ஏ. படித்தார் என்றெல்லாம் சொல்ப வர்கள் அவர்கள் எப்படி படித்தார்கள் என்று கேட்பதில்லை. எங்களது பேராசிரியர்கள்தான் அவர்களை படிக்க வைத்திருக் கிறார்கள்....
 


சிறையில் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இப்போது உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். பாளை சிறையில் இருந்த ஆயுள் கைதி ஒருவர் சிறைக்குள் வந்து எம்.எஸ்சி. படித்தார். அவர் சட்டம் படிக்க வேண்டும் எனச் சொன்னதால் திருச்சி சிறைக்கு மாற்றிக் கொடுத்தோம். திருச்சி சட்டக் கல்லூரியில் ரெகுலர் படிப்பில் சட்டம் முடித்து மீண்டும் பாளை சிறைக்கு வந்து பிஹெச்.டி-யும் முடித்தார். இப்போது அவர் தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதத் துறை தலைவராக இருக்கிறார்........
 
ஓய்வு பெற்ற பேராசிரியரின் ஒப்பற்ற சேவை.நோவா.
 
 
                                                           
 
11) ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், மன உறுதியுடன் போராடி, இன்று சென்னையின் அனுபவமிக்க சிறுதொழில் அதிபராக இருக்கும், ஜெயலட்சுமி
 


12)
தண்ணீர் தேடாத கிராமம்:  மழைநீரை சேமித்து சாதனை
 

13) வக்கீல் தொழிலுக்குப் படித்தும் பெரிய பிரயோஜனமில்லை. யு.பி யில் தன் இரு குழந்தைகளை படிக்க வைக்கும் வழக்கறிஞர் யோகிதா ரகுவன்ஷி எட்டு ஆண்டுகளாக செய்யும் வேலை என்ன தெரியுமா? டிரக் ஓட்டிதான்!
 
 

15) ராஜம்மாவும் பாலசுப்ரமணியமும் 



16) ஆதவ்.



13 கருத்துகள்:

  1. பாசிட்டிவ் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. தன்னம்பிக்கை முத்துக்கள் ஜெயலட்சுமி, வைரமுத்து, ஜெயசீலன் உட்பட அனைத்து தகவல்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. முதலில் உங்களுக்கு அப்ளாஸ்....செய்தித் தாளில் பெரும்பான்மையாக நெகட்டிவ் செய்திகள் வருவதும், அதைத்தான் பெரும்பான்மையோர் பேசுவதுமாக இருக்கும் போது இப்படி அழகான பாசிட்டிவ் செய்திகளைத் தருவதற்கு!

    சிறையிலும் பசுமையைப் புகுத்தி கதிகளின் மனதிலும் பசுமையை விதைக்கும் திரு கனகராஜ், மரங்களை நட்டு பூமிய வெப்பமயமாக்குதலில் இருந்து விடுவிக்க அணிலின் சேவை போல் செய்யும் கால் டாக்சி ட்ரைவர் திரு முருகன், கைதிகளுக்கும் வாழ்வுண்டு என்று அவர்களை வாழ்வில் உச்சிக்குக் கொண்டுவரும் ஆசிரிய அமைப்பு, முடித்திருத்தம் செய்வதை கேவலமாக நினைக்காமல் உழைத்து வாழும் திருமதி பெட்ரிஷா, சிறு தொழிலும், பெருந்தொழில்தான் என்று மேம்படுத்தும் திருமதி ஜெயலக்ஷ்மி, 67 வயதிலும் மாடுகளைக் காப்பாற்றி பராமரிக்கும் சாதனா (சாதனைதான்)...எல்லோரும் போற்றுதற்குரியவர்கள்.

    நமது ஊரில் மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள் இருந்தாலும், அவை எல்லாமே அரசு ஆஸ்பத்திரிகள் என்பதால் அங்கு குறிபிட்ட அளவுக்கு மேல் மருத்துவ வசதிகள் இல்லாததாலும், மாடு வளர்ப்பவர்கள் பெரும்பான்மையோர் செலவழிக்கும் சக்தி இல்லாததாலும், சிறு பிரச்சினைகள் வந்தாலும் மாடுகள் கவனிக்கப்படாமல், இறைச்சிக்கு அனுப்பப்பட்டு விடுகின்றன. உலகில் எல்லா நாடுகளிலும் இப்படித்தான் என்றாலும், நமது நாட்டில் சிகிச்சை என்பது குறைவுதான். அவற்றையும் இறுதி வரை பாதுகாக்காத்தான் இப்போது கோ சாலைகள் தொடங்கப்பட்டிருப்பதும். எனவே சாதனா அவர்கள் தனியாகச் செய்வது மிக மிக பாராட்டற்குரியது!

    தசைச் சிதைவிற்கு திருநெல்வேலி அருகில், காரைக்குறிச்சிக்குப் பக்கத்தில் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. நடிகர் நெப்போலியனின் மகனும் அதில் தான் சிகிச்சைப் பெற்று இப்போது இயங்கும் வகையில் இருக்கிறார் என்பதாக அறியப்படுகின்றது.அவரும் அந்த இயற்கை நிலையத்திற்கு உதவுவதாகவும் செய்தி. இதற்கான ஊசிகள் மிகவும் விலை கூடுதாலாக இருப்பதால், தற்பொது வெளிநாட்டிலிருந்து வரும் மருந்து வாரம் ஒரு முறை அந்த ஊசி போட்டால் போதும் என்பதாலும், அதன் விலையை இங்குள்ளவர்களுக்கு ஏற்ப சற்று குறைவாக தங்களது ட்ர்ஸ்ட் மூலம் அளித்து, இந்தக் குழந்தைகளுக்கான பள்ளியும் நிறுவுகின்றார்கள்.

    தங்கள் பகிர்வுகள் எல்லாம் அருமை. மிக்க நன்றி ஸ்ரீராம்...நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. #தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் சகோதரிகள்: ஆதரவாய் நிற்கும் சேலம் அஸ்தம்பட்டி ‘ஆதவ்’#
    இவர்களின் சேவையால் ஊரின் பெயரை 'சொஸ்தம் பட்டி 'என்று மாற்றி விடுவார்கள் போலிருக்கே !

    பதிலளிநீக்கு
  5. சிறந்த நம்பிக்கை ஊட்டும் அறிமுகங்கள்!

    பதிலளிநீக்கு
  6. அனைத்துமே வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி தரும் பக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரச்செய்திகள் அருமை!உங்கள் முகநூல் பக்கத்திலும் சில செய்திகளை வாசித்தேன்! நம்பிக்கை அளிக்கும் செய்திகளை தேடி பகிர்வதற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. நம்பிக்கையூட்டும் செய்திகள்......

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    வெற்றிச் செய்திகள் எல்லாம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. பாஸிடிவ் செய்திகளின் அணிவகுப்பே மனத்தில் பெரும் மகிழ்வை உண்டாக்குகிறது. தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொண்ட மனிதர்களையும் அமைப்புகளையும் பற்றி அறிந்துகொள்ளும்போது நாமும் ஏதாவது சாதிக்கவேண்டும் என்னும் உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழும் என்பது உண்மை. குறைந்தபட்சம் வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமாவது ஈடேறுவது திண்ணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவைக்கும்பாசிடிவ் செய்திகள். பகிர்வுக்கு உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அற்புதமான பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!