Friday, August 22, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140822:: தோசை சுடுவோம்!கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  

எங்கள் ப்ளாக் வெள்ளிக்கிழமை வீடியோ பகுதிக்கு ஒரு நிமிட வீடியோ / ஆடியோ வரவேற்கப்படுகின்றன. 

உங்கள் மொபைலில் பிடிக்கப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ - எந்த பார்மட்டில் இருந்தாலும் அதை engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 

அது பாட்டு, ஜோக், பன்ச் டயலாக், அல்லது வீட்டு விலங்குகளின் வினோத செயல் என்று எதுவாக இருந்தாலும் ஓ கே. 

அனுப்புபவர்கள், முகநூலில் விவரம் பதிந்து, என்னை tag செய்துவிடுங்கள்.
உதாரணத்திற்கு, இதோ ஒரு டயலாக். இதை உணர்ச்சிபூர்வமாக படித்து / நடித்து / பதிவு செய்து கூட அனுப்பலாம். சொந்த டயலாக் ஆக இருந்தாலும் ஓ கே. 

" ஏய் ஏய் ஏய் - இங்கே பாரு - நான் ஒன்னு சொல்றேன்!
கட் செய்தால்தான் பேஸ்ட் செய்ய முடியும்னு நெனக்காதே - காபி செய்தாலும் பேஸ்ட் செய்யலாம்; ஆனா பேஸ்ட் கொண்டு பிரஷ் செய்யாம காபி குடிக்கறவன் நான் இல்லே!" 

(அழாதீங்க - இது ஒரு சாம்பிள்தான்!)
நடிக்க / படிக்க / (படம்) பிடிக்க தயக்கமாக உள்ளவர்கள், மற்றவர்கள் படிக்க / நடிக்க பன்ச் டயலாக் இங்கே பதியுங்கள்! 

நன்றி.

17 comments:

ராமலக்ஷ்மி said...

தோசை புராணத்தின் தொடர்ச்சியாகப் பாகம் 4. அருமை. தட்டையான கரண்டி. குறித்துக் கொண்டேன்:)!

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
வீடியோவும் நன்று சொல்லி கருத்தும் நன்று பகிர்வுக்கு நன்றி த.ம 1வது கருத்து

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajalakshmi paramasivam said...

தோசை பற்றிய விடியோ பார்த்தேன்.
மொரு மொரு தோசை யாருக்குத் தான் பிடிக்காது? கரண்டி டிப்ஸ் கிடைத்தது.நன்றி.

அப்பாதுரை said...

கரண்டியில் இருக்குதா முறுகல் கியாரண்டி? விடியோவுக்கு நன்றி.
ஹ்ம்.. விடியோவிலந்து நேரா என் தட்டுக்கு அப்படியே போர்ட் ஆச்சுன்னா நல்லாயிருக்கும். எத்தினியோ கண்டுபிடிக்கறாங்க..

அப்பாதுரை said...

பார்க்க அழகாயிருக்குமே தவிர முறுகலாயிருந்தா எனக்கு அவ்வளவா சாப்பிடப் பிடிக்காது. சில ஓட்டல்களில் அப்பளம் மாதிரி தோசை வார்க்கிறாங்க...கொடுமை. (ஓ.. வார்ப்பது சரியான சொல். சுடுவது சென்னையின் அவசரத் தமிழ்?)

G.M Balasubramaniam said...


தோசை சுடும் ( i am sorry )வார்க்கும் போது அடுப்பில் flame ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இல்லையா. ? வேண்டிய விதத்தில் தோசை தரும் என் தர்ம பத்தினி, சரியாக வராவிட்டால் மாவுமுதல் அரிசி வரை எல்லாவற்றையும் குறை கூறுவாள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஸோ தோசையாயணத்தின் தொடர்ச்சியாக தோசை வார்ப்பது வீடியோவா....சூப்பர்...ஹோட்டலில் தட்டையான டபரா வைத்துத்தான் மாவை இழுக்கின்றார்கள். அது போல் வீட்டிலும் தட்டையான குழி கரண்டி அதற்கென்றே வாங்கி வைத்து இழுக்கும் போது சமமாக மெலிதாக வருகின்றது.

உங்க டயலாக் ஃபொர் வீடியோ ரொம்ப ரசிச்சோம்.....

வீடியோ நல்லதாக அமைந்தால் கண்டிப்பாக அனுப்புகின்றோம். நண்பரே!

Bagawanjee KA said...

மொறு மொறு தோசை ரகசியம் தெரிந்தது ,செய்துபார்க்க ஆசைதான் .ஆனால் பயமாய் இருக்கிறது தோசைக் கரண்டி நிரந்தரமாய் என் கைக்கு வந்து விடுமோவென்று !

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் தோசை வீடியோவை இன்னிக்குத் தான் பார்க்கிறேன். உங்க பதிவுகளே எனக்கு அப்டேட் ஆவதே இல்லை. :)

வெறும் புழுங்கலரிசி போடுவதை விட அதோடு ஒரு கரண்டி பச்சரிசியும், உளுத்தம்பருப்பில் ஒரு டீஸ்பூன் து.பருப்பும் சேர்த்தால் (வெந்தயம் உண்டு) தோசை நிறம் பொன் நிறமாக இருக்கும். கரண்டி தட்டையாகவெல்லாம் நான் வைச்சுக்கிறதில்லை. எல்லாக் கரண்டியிலும் சரியாகவே வரும். :((( சொல்லப் போனால் தட்டைக்கரண்டியே இல்லைனு சொல்லலாம். :)

ராமலக்ஷ்மி said...

@ கீதாம்மா,

உண்மைதான். நேற்று இரண்டு கடைகளில் விசாரித்து விட்டேன். தட்டை வடிவில் கிடையாதென்றே சொல்கிறார்கள்:). கவனமாகச் செய்தால் குழிக்கரண்டியே போதும்தான்.

Geetha Sambasivam said...

பெண்களூரில் கிடைக்குமோ என்னமோ! மின்சாரம் அவுட்! :(

Geetha Sambasivam said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

விசாரித்தது பெங்களூரில்தான்.

Geetha Sambasivam said...

ஹிஹி, பாதி எழுதுகையிலேயே மின்சாரம் போயிடுச்சு. இந்த அளவுக்கு பப்ளிஷ் ஆகி இருக்குன்னா ஆச்சரியம் தான். பப்ளிஷே கொடுக்கலை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:)))))

நான் சொல்ல வந்தது பெண்களூரில் பெரிய மால்களில் உள்ள கடைகளில் கிடைக்கலாம் என்பதே! அல்லது சென்னையில் ரத்னா ஸ்டோர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய கடைகளில் இருக்கலாம். எனக்குக் குழிக்கரண்டியே வசதியா இருக்கு. நேத்து ரவாதோசை வார்த்தேன். மெலிதாக முறுகலாக, சே படம் எடுக்க மறந்து போகுது! :)))))

Madhavan Srinivasagopalan said...

//எங்கள் ப்ளாக் வெள்ளிக்கிழமை வீடியோ பகுதிக்கு ஒரு நிமிட வீடியோ / ஆடியோ வரவேற்கப்படுகின்றன. //

HA.. Ha.. Ha.. ஏன் சார்.. உங்க காமிரா ரிப்பேரா ?

Madhavan Srinivasagopalan said...

// எந்த பார்மட்டில் இருந்தாலும் அதை engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். //

Do you accept 'ASCII' format also ?

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!