சமணர் குகை. உள்ளே இயற்கையான குகைக்குக் கீழேயே கோவில் அமைந்திருப்பது சிறப்பு. மிகச் சிறிய கோவில்.
சிறு கோவில்கள், மற்றும் பெரிய கோவில்கள் என்று சென்று வந்ததில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது.
மூங்கில்
கட்டி வளைந்து வளைந்து செல்லும் வழிகளை ஏற்படுத்தி பக்தர்களைத்
தொல்லைக்குள்ளாக்கும் முயற்சியில் மீனாக்ஷி அம்மன் கோவிலும்!
பழமுதிர்சோலையில் முருகனைப் பார்க்க வேண்டுமென்றால் 5 ரூபாய் மினிமம் கட்டணம்! ஆனால் அழகர் கோவில் கீழே பெருமாளை சௌகரியமாகப் பார்க்க முடிந்தது.
புகைப்படங்களைப் பெரிதாகப் பார்க்க, படங்களின் மேல் கிளிக் செய்யவும்!
கோவில் புனரமைப்பினால் சுவாமியைப் பார்க்க முடியவில்லையா? உங்கள் ஆதங்கம் புரிகிறது.
பதிலளிநீக்குமதுரை பழைய இனிய நினைவுகள்! புகைப்படங்கள் அருமை! இப்போது இப்படி எல்லாம் ஆகிவிட்டதா...அப்போதெல்லாம் இந்த அளவு மூங்கில் தடுப்புகள் எல்லாம் இல்லை....80 களில்....
பதிலளிநீக்கும்ம்ம்ம் நல்லவேளைய மதுரைக்கு இப்போப் போகலை! :( போயிருந்தால் கோயிலோட நிலைமையைப் பார்த்துக் கொதிச்சுப் போயிருக்கும் மனசு! :(
பதிலளிநீக்குநம்மூர் சாமிகளும் இன்றைய நம் தலைவர்களை மாதிரி தான் ஆக்கிவிட்டார்கள்.
பதிலளிநீக்குகாசு கொடுத்தால் தான் நின்று பார்க்க முடியும்.....
பதிலளிநீக்குபோகிற நிலைமையில் மதுரையும் திருமலைபோல் ஆகிவிடும் போலிருக்கிறதே. நாங்கள் மதுரை சென்றிருந்தபோது ஓரளவு தரிசனம் சிரமமில்லாமல் இருந்தது( உபயம் ஒரு நண்பர்)
பதிலளிநீக்குபோகிற நிலைமையில் மதுரையும் திருமலைபோல் ஆகிவிடும் போலிருக்கிறதே. நாங்கள் மதுரை சென்றிருந்தபோது ஓரளவு தரிசனம் சிரமமில்லாமல் இருந்தது( உபயம் ஒரு நண்பர்)
சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சென்றிருந்த போதும் தொலைவிலிருந்தே தரிசிக்க முடிந்தது. இப்போது கோவில் வளாகத்துக்குள் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை எனக் கேள்விப் பட்டேன். நிஜம்தானா?
பதிலளிநீக்குஅதிக கூட்டமில்லாத கோவில்களிலும் கூட தடுப்பு வைத்து கெடுபிடி செய்யும் வழக்கம் பெங்களூரிலும் அதிகரித்து வருகிறது.
படங்கள் அருமை.
படங்களுடன் அழகான ஆலய தரிசனம்.
பதிலளிநீக்குஅழகர் கோவில் குலதெய்வக் கோவில் என்பதால் அங்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.
இந்த முறை ஊருக்கு வந்தபோது அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவில் மனைவியின் அம்மா வீட்டில் தங்கி அருமையான சாமி தரிசனம் பண்ணினோம்.
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்