Saturday, August 2, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்!
1) ‘ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தனிமையில் விடப்படுகிறார்கள். அவர்களுக்கு பொழுது போக்குக்கும் வாய்ப்பிருப் பதில்லை. எங்களது ‘பகல் வீடு’ காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை திறந்திருக்கும். அந்த நேரத்தில், தனிமையை தொலைத்து மனதை லேசாக்கி கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் இங்கு வருகிறார்கள். தாங்களாக வரமுடியாதவர்களை நாங்களே வாகனம் வைத்து அழைத்து வருகிறோம்.." என்கிறார் அதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா.
 
 
 
2) சினேகாவின் அறச்சீற்றம். 
 


 
3) ஃபேஸ்புக் மூலமாக ஊரை சீரமைக்கிறார்கள் தென்காசி இளைஞர்கள்... ( படம் இல்லை)
 
 


 
5) "வேறு எந்த பெரிய ஆசையும் எனக்கு இல்லை." கடந்த, 22 ஆண்டு களாக, வாகனங்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டும் தொழிலை செய்து வரும் லதா:
 


 
6)  அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதா
 


 
7) எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன் (தொடர்புக்கு -9442564078).
  
8) நெகிழ வைக்கும் ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை
  
9) திருச்சியைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கம். பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு முறையான பயிற்சியளித்தால் பல பணிகளை சிறப்பாக செய்யவைக்க முடியும் என நம்பிய அவர், அரசுக்குச் சொந்தமான இடத்தை நீண்டகால குத்தகைக்கு வாங்கி ஆர்பிட் என்ற சிறு தொழிற்சாலையை உருவாக்கினார். ஆர்பிட்டின் சாதனை.
 


 
10) சென்னை செம்மஞ் சேரியில் 6,850 குடும்பங்கள் பாதிக் கப்பட்டு நின்றபோது, நாங்கள் அங்கு சென்று அந்த மக்களுக்கான அடிப்படை உதவிகளை செய்து கொடுத்தோம். எங்களது முயற்சியில், அங்கிருந்த நடுநிலைப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் 15 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.'தோழமை'யும் தேவநேயனும்
 
 

11) விளைநிலம் இல்லாமல் விசாயமாம். எதிர்காலத்தில் இப்படித்தான் ஆகப் போகிறது! சூலூர் ஒன்றியம் 

 

16 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா
எல்லாப்பகிர்வுகளும் பயனுடையவை. பகிர்வுக்கு நன்றி.
என்பக்கம்

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

அப்பாதுரை said...

நாலு நாளா ஆளைக் காணோமே இமெயில் தட்டுவமானு கொஞ்ச நேரம் முன்னால் நினைச்சேன்..

#6 பழைய பாஸிடிவோ?

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த வழிகாட்டிகள்
தொடருங்கள்

படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

ஸ்ரீராம். said...

@அப்பாதுரை... ஆறாவது செய்தி முன்னரே போட்ட செய்தி போலத் தோன்றவில்லை! ஆஹா... நம்மைக் காணோமேன்னு தேடக் கூட ஒருஜீவன் இருக்கா... நன்றி. :)))))

இன்னா மேட்டரு?

வெங்கட் நாகராஜ் said...

அருமையான செய்திகள். ஸ்னேகா போன்றவர்கள் இப்போது மிக அவசியம்.

Bagawanjee KA said...

குழந்தைகளுக்கு பகல் நேர கிரஷ் மாதிரி,முதியோருக்கு பகல் வீடா ,அதுவும் கட்டணம் இல்லாமலா ?
சேவைதொடர வாழ்த்துக்கள் !

‘தளிர்’ சுரேஷ் said...

பகல் வீடு முதல் விளைநிலம் இல்லாத விளைச்சல் செய்பவர்கள் வரை அனைத்துமே சிறப்பான செய்திகள்! அருமையான பகிர்வுக்கு நன்றி!

கீத மஞ்சரி said...

சத்தமில்லாமல் சாதனை புரியும் பலரையும் உங்கள் பதிவின் மூலம் அடையாளங்கண்டு கொள்ளமுடிவதில் மிகவும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

G.M Balasubramaniam said...


சாதனை புரிவோருக்கும் அதனைப் பகிரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

பகல்வீடு அருமையாக இருக்கிறது.
அதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

சினேகா போல் தைரியமாக எல்லா குழந்தைகளும் இருந்தால் நல்லது.பாரதி பாட்டு நினைவுக்கு வருது.

தென்காசி இளைஞ்ர்கள் பணி பாராட்டபட வேண்டிய நல்ல சேவை.
தனுஷின் லடசியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
லதாவின் கனவு நனவாக வேண்டும் அவர் குழந்தைகள் அம்மா கஷடப்பட்டு நம்மை படிக்க வைக்கிறார்களே என்று உணர்ந்து படித்து அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும்.
அனைத்தும் அருமையான செய்திகள்.
வாழ்த்துக்கள்.rajalakshmi paramasivam said...

பகல் வீடு எங்கிருக்கிறது என்று பார்த்தால் மதுரையாம். அணித்து பாசிடிவ் செய்திகளும் அருமை. அதுவும் பெண் தன பள்ளிக் கட்டணக் கொள்ளை பற்றி புகார் கொடுப்பது அவளைப் பற்றிப் பெருமை கொள்ள வைக்கிறது. மாடித் தோட்டம் தகவல் நன்று.

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே அருமையான செய்திகள்!

இந்த வார பாசிட்டிவ் செய்திகளில் நாளைய பாரத்தத்திற்கு நல்ல அஸ்திவாரம் போடும் இளைய பாரதத்தின் சேவைகள்....வாழ்க...வளர வாழ்த்துக்கள்!

சி யானா என்ன தி நா என்ன..நேகாவின் செயல் மிகவும் பாராட்டிற்குரியது! அப்படியாவது இதுமாதிரி பள்ளிகள் திருந்துமா?

அப்பாதுரை said...

வாரத்துக்கு மூணு பதிவாவது போடுவீங்களே.. கிடம்பு சரியில்லாமப் போயிருச்சோனு கவலை.

kg gouthaman said...

உடம்பு சரியில்லாமல் போனது எங்க பி எஸ் என் எல் கனெக்ஷனுக்கு!

kg gouthaman said...
This comment has been removed by the author.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!